புதன், 8 அக்டோபர், 2014

அப்பாவுக்கு- ஆனந்தமாய்!
எல்லாரும் எழுதறாங்களேன்னு ஆரம்பிச்சாச்சு!
இந்த எண்ணித்துணியற கருமம்லாம் பரம்பரைக்கே கிடையாது!

கால்காசு உத்தியோகத்தையும் கல்யாணத்தன்னிக்கு கடாசிட்டு வந்தவரு எங்க ஐயா!
நாம கொஞ்சம் பரவால்ல! தலைதீபாவளிக்குத்தான்
வேலயகாலிபண்ணிட்டுவந்து மாமனார் வயத்துல தீ வெச்சோம்!
அந்த பாபாதுனி இன்னும் எரியுது!

சே! இது நைனா கதை!
இதுல சுயபுராணம்!

MA BEd படிச்சு, அரசு வாத்தி!
தறிப்பட்டறை உபதொழில்!
உபரி வருமானம் தேசசேவைக்கு தொரத்த, ரண்டாவது தடவை resignation!
இப்ப கைவசம் நாலு கொழந்தைங்க!
MLC election, பட்டதாரி தொகுதி, சுயேட்சை!
வேற என்ன, அரசாங்கத்துக்கு டெபாசிட் டொனேஷனாச்சு!

வாத்தியார் தோத்ததுல, நாடே கொந்தளிச்சு, இன்னொரு வாத்தியாரு நம்ம MGR மேல்சபையவே தூக்கிட்டாரு! இந்த வெண்ணிறஆடை நிர்மலால்லாம் எதிர்க்கட்சிக்காரன் சதி!

வேல என்ன பெரிய ம.. ன்னுட்டு, கோபால் பல்பொடி போற நாடெல்லாம் போயி வியாபாரம்! 

கோபால் பல்பொடி இன்னம் இருக்குது!

இதுல திடீர்னு VV கிரி, ஜனாதிபதியா இருக்கறப்பவே அப்பாவ வந்து பாத்ததும், 
நம்ம RV president ஆனதும் phoneல டெல்லிக்கு வரவெச்சதும், 
மொரார்ஜி பாய் வீட்டுக்கு கூப்பிட்டு, குடிக்க.... சீ அதில்லைங்க, ஜூஸ் குடுத்ததும், 
இந்த சிலோன்ல ஏதோ ஒரு துங்கா, அந்த அகலமா ஒரு அம்மா இருந்ததே, சந்திரிகா, அட, சோப்பில்லைங்க! அதோட அப்பா Rado watch present பண்ணதும் இடைக்காலம்! 

அப்ப, தமிழய்யா பொண்ண இம்ப்ரஸ் பண்ண சைக்கிள்ள குட்டிக்கரணம் போட்டுட்டிருந்ததில இதெல்லாம் நமக்கு ஏறல! 

திடீர்னு சொந்தக்காரன்லாம் சுருட்டல்காரனாகி நொந்தகதை முடிஞ்சு,
இப்ப வேலூர்ல நம்ம விஜயலட்சுமி தாயார் கூட மல்லுக்கட்டு வாழ்க்கை!

இப்ப எதுக்கு இந்த தலபுராணம்? அதான?

வர்ர ஜூலை 14, தலைக்கு 80 விழா கொஞ்சம் தாமதமாக, நாள் பார்த்து!

மாப்ள கல்யாணப்பரபரப்புல!


நீங்களும் குடும்பத்தோட அட்சதய வீட்லயே போட்டு
வாழ்த்தவோ வணங்கவோ செய்யுங்க!
வந்தே தீருவேன்றவங்க DMல address வாங்கிட்டு வந்து
என்னையும் சேவிச்சுட்டுப் போங்க!

நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக