புதன், 8 அக்டோபர், 2014

ஜேம்ஸின் திருமண நாளும் காஸா போரும்!!

காலையிலிருந்தே ஜேம்ஸின் மனம் ஒரு நிலையில் இல்லை! இன்று அவனுக்கு பதினொன்றாவது திருமணநாள்!


லாராவும் குழந்தையும் இஸ்ரேலின் கடைக்கோடி கிராமத்தில்! 
ஜேம்ஸ் கட்டாய போர்ப்பணியில் காஸா போர்முனையில்!

அதிகாலையிலேயே தயார்நிலையில் இருக்கச்சொல்லி உத்தரவு. இப்போதுவரை மறு ஆணைக்கு காத்திருப்பு.

ஹமாஸ் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்ளாத நிலையில் போர் நிறுத்தம் சாத்தியமில்லை! மேலும் வில்லியம்ஸ் போன்ற பலருக்கும் சமாதானத்தில் நம்பிக்கையில்லை!

வில்லியம்ஸ்?
ஒரே பட்டாலியன், ஒரே கேடர்! 
கண்ணில் பட்ட குழந்தைகள் பெண்கள் அப்பாவி ஆண்கள் அஅனைவரையும் சுடும் போரில் கேடர் என்ன வாழுகிறது?
கொல்லும் இச்சையும் மதவெறியும் வில்லியம்ஸின் ரத்தத்தில் ஊறியிருக்கிறது. 
ஒரு நாளில் பத்து இஸ்லாமியனைக் கொல்லாமல், 
ஆறு பெண்களை புணர்ந்து ஒரு குழந்தையையாவது ஓடவிட்டு சுடாவிட்டால் அவன் தினம் கழியாது! 

சிலருக்கு வாழ்க்கை உணர்வுச்சிக்கல் ஏதுமின்றி அமைந்துவிடுகிறது! 
ஒரு இஸ்லாமியனைக்கொல்ல குற்றவுணர்ச்சி தேவையில்லை என்பதும், அவர் குலப் பெண்கள் வன்புணர்ச்சி கொள்வதற்கே என்பதும் அவன் சித்தாந்தம்!

எதற்காக இந்த வெறி? ஆறடி மண்ணில் அடங்கும் வாழ்க்கையில் எதற்கு இத்தனை மண்ணாசை? அடுத்தவன் பூமியில் என் மதம் விதைத்து என்ன சாதிக்கப்போகிறோம்? 
கேள்விகள்! பதிலற்ற கேள்விகள்!

சுடு! அல்லது சுடப்படுவாய்! 
கொல் அல்லது கொல்லப்படுவாய்! யுத்த தர்மம்! 
ஆயின் பெண்கள் குழந்தைகள் மீதான வன்மம் கலங்க வைக்கிறது!

ஜேம்ஸுக்கும் லாராவுக்கும் இந்தியா ஒரு கனவு தேசம்!
என்ன ஒரு அற்புதமான தேசம்!
புத்தனும் காந்தியும் பிறந்த புண்ணியதேசம்!

எத்தனை மொழிகள்! எத்தனை மதங்கள்! 
எத்தனை நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள்! அத்தனை நெருக்கமான ஜனத்தோகைக்கு எத்தனை இணக்கமான வாழ்க்கை! 
எந்த நாட்டின்மீதும் மண்ணாசையால் போர் தொடுத்த வரலாறே இல்லாத அஹிம்சை தேசம்! 
ஞானியரும், சித்தரும் முனிவரும் உலவும் புனிதபூமி! 
கடந்த ஐம்பதாண்டுகால வரலாற்றில் அடுத்தவர் விடுதலைக்காய் போரில் குதித்ததன்றி போர்க்குணம் இல்லாத நாடு!

விண்ணுக்கும் மண்ணுக்குமான பொருளாதார வேற்றுமையிலும் அமைதி தவறாத ஜனநாயகம்!
கடவுள் வழிபாடு முதல் ராணுவப்பணிவரை எதுவும் கட்டாயமில்லை!
 கெடுபிடியான சட்டங்களும் சர்வாதிகாரங்களும் என்றுமே வெல்லாமல் அன்பு விளையும் பூமி!

அந்த நாட்டு வரலாறு படித்ததிலிருந்து கலைகளும் கலாச்சாரமும் நிகரற்ற அந்த மண்ணில் ஒருமுறை முத்தமிட ஆசை.

கர்த்தர் எம்மை அங்கு அடுத்ததாய் பிறக்க ஆசீர்வதிக்கட்டும்- இது அவர்கள் பிரார்த்தனை!

நினைவு எங்கிருந்து என்ன ஆகப்போகிறது? இதோ உத்தரவு வந்ததில் பீரங்கிகள் வகுத்துக்கொடுத்த பாதையில் பொறியாய்ப் பாயும் பட்டாலியன்!
கையில் கனக்கும் ஆயுதம் போல் இரும்பாய் இறுகிய மனம்!

திரும்பிய திசையெல்லாம் சிவிலியன் ஓலம்! 
வேற்று மதத்தில் பிறப்பதும் அதன் வழி நடப்பதும் அத்தனை பாவமா?

கர்த்தரே, எம்மை இந்தப் பாவங்களிலிருந்து விடுவியும்!

திடீரென்று சீறிய வில்லியம்ஸின் தோட்டாக்கள் சல்லடையாய் துளைத்த இரு ஆண்கள்- அப்பாவும் மகனும்! 
வாய் வழிந்து தாடி நனைத்த ரத்தம்! திறந்த விழியில் உறைந்த மரணம்!

வெறிக்கூச்சலோடு வீடு புகுந்த வில்லியம்ஸ் தெருவில் எறிந்த பெண்ணுக்கு லாரா வயது! 
தகிக்கும் வடிவ வனப்பு! கூடவே இளமைப்பதிப்பாய் பத்துவயது மகள்!
வில்லியம்ஸ்க்கு இது ஏழாவது அன்றைக்கு! 

இவன் என்ன மிருகமா, மனிதனா? எதைத்தேடுகிறான் அவர்களுக்குள்? 
கொல்வதற்குள் எத்தனை கொடூரம்?

அந்தப் பெண்ணின் வடிவம் போதையேற்றியது! 

திடீரென எங்கிருந்து ஜேம்ஸுக்கும் அந்த வெறி வந்தது?

பாய்ந்து அந்தப் பெண்ணின் கூந்தல் பிடித்து தூக்கிய ஜேம்ஸின் இடது கரம் ஒரே இழுப்பில் அவள் ஆடை கிழிக்க, 
முக்கால் நிர்வாணம்!
தாயின் வெட்டவெளிச்சம் பார்த்துக் கதறிய சிறுமி வலக்கையில் வசமாய்-
"இன்று இவர்கள் என் இரை" வெறியில் அலறிய ஜேம்ஸ் அப்படியே வீட்டுக்குள் அள்ளிப்போக, 
நம்பிக்கையின்றி ஆச்சர்யமாய் வில்லியம்ஸ்!


அந்தச் சிறுமியை அடையும் ஆவல் உந்தினாலும், அந்தப் பெண் மீது ஜேம்ஸ் ஆக்ரோஷமாய் பரவுவதைப் பார்த்து 
"முடிந்ததும் இருவரையும் சுட்டுவிடு! வேற்றுமத விதை சுமந்து இரண்டும் சாகட்டும்!" என்று கதவைச்சார்த்தி நடந்தான்.

பத்து நிமிட பேரமைதிக்குப்பின் தோட்டாக்களின் சீறலும், பெண்களின் மரண ஓலமும்அடங்கியபின் 
சட்டையின்றி கதவு திறந்து தள்ளாடி வந்த ஜேம்ஸ் முகமெல்லாம் நகக்கீறல்- திருப்திப் புன்னகை!
ஆசுவாசமாய் அமர்ந்திருந்த வில்லியம்ஸ் தோள் பற்றி விரைந்து நடந்த ஜேம்ஸ் வாய் முணுமுணுத்தது
" என்னை மன்னித்துவிடு லாரா"

என்னதான் நடந்தது வீட்டுக்குள்? 

பின்னால் கதவடைத்த சத்தம் கேட்டு துள்ளி எழுந்த ஜேம்ஸ், தன் மேல்சட்டை களைந்து கும்பிட்ட கையோடு அந்தப் பெண்ணிடம் நீட்டினான்- "என்னை மன்னித்துவிடு சகோதரி! உன்னைக்காப்பாற்ற என்க்கு வேறு வழி தெரியவில்லை" என்றவன், 
லாரா பரிசளித்த தங்கச்சங்கிலியை கழற்றி அந்த சிறுமி கையில் வைத்தான்!

அமைதியான ஐந்து நிமிடங்களுக்குப்பின். சட்டென்று துப்பாக்கி எடுத்த ஜேம்ஸ் சுவர் நோக்கி சரமாரியாக சுட, விபரம் புரியாத பெண்கள் அலற, 
புன்னகையுடன் வெளியேறினான்.

கூப்பிய பெண் கரத்தில் 
சங்கிலியில் சிலுவை சுமந்த ஈசனின் கருணைப்புன்னகை!

உலகம் இன்னும் சுழன்றுகொண்டிருக்கிறது- மானிடம் வாழும் நம்பிக்கையில்!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக