புதன், 8 அக்டோபர், 2014

ஷரபோவாஆஆஆஆஆ
மரியா ஷரபோவாவுக்கு சச்சினைத் தெரியவில்லை!
போதாக்குறைக்கு அவர் ஒரு பெண்!
போதாதா இந்தக் கிரிக்கெட் கடவுளின் பக்தகோடிகளுக்கு!

இந்த வெள்ளைக்காரத்..... வுக்கு என்ன திமிர் என்று ஆரம்பித்த அஷ்டோத்திர ஆத்திரம் இன்னும் அடங்கவில்லை!

அவரது உடை, உள்ளாடை, நடத்தை எல்லாவற்றையும் சகட்டுமேனிக்கு சாடிக்கொண்டிருக்கும் இவர்களில் எத்தனை பேருக்கு முதலில் கிரிக்கெட் தெரியும்?

டெஸ்ட்மேட்ச் மாமியார் 20:20 கட்டெறும்பான போதே, அது தன் நேர்மையை இழந்தது!
கட்டையை தூக்குமுன் ஒரு வார்த்தை- இதை சொன்னவர் உங்கள் கடவுள்.

தாய்ப்பாலோடு குழுமனப்பான்மை, ஹீரோ ஒர்ஷிப் ஊட்டி வளர்க்கப்பட்ட நம் இந்தியக் குடிமகனுக்கு சாய்ந்தால் சாயும் செம்மறி குணம்!

விஞ்ஞானிகளும், சமூக சேவகர்களும், பொருளாதார மேதைகளும் இன்னும் ரத்தினங்களாகாத நாட்டில், நீர்த்துப்போன ஒரு விளையாட்டின் கடவுள் பாரத ரத்னா!
அந்த அரசியல் இதில் வேண்டாம்!

ஒரே ஒரு செட் விளையாடும் டென்னிஸ், பத்து நிமிட ஃபுட்பால் பார்த்ததுண்டா?
மழை பெய்தால்  ஐந்து ஓவர் மேட்ச்!
பணம் பார்க்கும் வெறி!
இது கோக்குக்கும் பெப்சிக்கும், ரிலயன்ஸ் க்கும் சஹாராவுக்குமான விளையாட்டு!
இதில் வெறியேறிய ரசிகன் ஒரு பகடை!

ஷரபோவாவுக்கு சச்சினைத் தெரியாதது குற்றமில்லை.
உலகில் ஏழெட்டு நாடுகள் மட்டுமே விளையாடும் விளையாட்டின் காவல் தெய்வத்தை அவர் அறியாதற்கு அவரது கற்பு வரை பேசும் எத்தனை பேருக்கு இந்தியாவைப்பற்றி, தன் தாய், தகப்பன் தேவைகளைப்பற்றித் தெரியும்?

உங்களிடம் என்ன இருக்கிறது உங்களைப்பற்றிப் பேச?

சானியா மிர்ஸாவுக்கு முன் இந்திய டென்னிஸ் வீரர்கள் எத்தனை பேரை நியாபகம் வைத்திருக்கிறீர்கள்?

சானியா பிரபலமாக வேறு காரணங்கள்!

இப்போது தலாய்லாமா அதே பதிலைச்சொல்லியிருக்கிறார்
அவர் உடையையும் ஒழுக்கத்தையும் சாடுவீர்களா நண்பர்களே?

சாயங்காலம் சாராயக்கடை போய் சீரழியாமல் வீட்டிற்குப் போய் குடும்பத்தைப்பாருங்கள்!

ஷரபோவாவுக்கு தன்னைப் பார்த்துக்கொள்ளத் தெரியும்!

உங்கள் உடை பற்றிய ஒழுக்கவிதிகளை உங்கள் நடிகைகளுக்குச் சொல்லிக்கொடுங்கள்!

உலகம் அதன் தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கும்!

நீங்கள் எங்கிருக்கிறீர்கள் என்பதை கவனியுங்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக