காதல் தூதர்கள் ஏனோ
அழகாயிருப்பதில்லை!
பூக்களுக்கே
வண்டுகள்தானே!
கூடி முயங்கும்
சுகமறியாமலே
பெற்றுத்தள்ளுகின்றன
மலர்கள்!!
பல்லியின் வாலாய்
துண்டித்துப்போட்டாலும்
மீண்டும் வளர்ந்து தொலைகிறது
உன் நினைவு!
எதைத்தின்பது
எதை வளர்ப்பது?
பகுக்கத் தெரிகிறது
மண்ணுக்கு!
ஆசீர்வதித்துப் பெறும் காசும்
யாசகம்தான் என்பதறியும்வரை
யாசகம்தான் என்பதறியும்வரை
கம்பீரம் குலைவதில்லை
கோவில் யானையும்-
கடவுளும்!
மழை, பெருமழை, மழையில்லா வெறுமை,
மீண்டும் மழையென கடக்கநேரும் நெடும்பயணம் அமையப்பெற்ற காலை அழகு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக