முதலில் ஒரு நல்ல
விஷயம்!
இனி CC போட்டுப் பதிவு எழுதுவதில்லை என்று முடிவு!
என் வாழ்வில் என்னை
பாதித்த சிலரின் ஆளுமைகளை, அவர்கள்
பற்றிய நல்லவை, கெட்டவற்றை,
வேண்டாம்,
கெட்டவை தெரிந்து
ஆவதென்ன?
நல்லவற்றை மட்டும்-
சில தொடர் பதிவுகளில்
எழுத ஆசை!
என் மகளுக்கும்
மகனுக்கும்
நான் அறிமுகப்படுத்தவேண்டிய மனிதர்களின் வாழ்க்கைப் பதிவு|
இது ஏன்
பொதுத்தளத்தில்?
நியாயமான கேள்வி!
உட்கார்ந்து கதை
கேட்குமளவு
அவர்களுக்கு
நேரமிருக்கையில், எனக்கும்,
எனக்கு
நேரமிருக்கையில் அவர்களுக்கும் அமைவதில்லை!
என்னோடு சில கதைகள்
முடிந்துபோவது எனக்கு சம்மதமில்லை!
எனவே, இங்கு பதிந்துவைத்தால், நேரமிருக்கையில் படித்துக்கொள்ளட்டும்!
ஏன் பொதுத்தளத்தில்?
இதுவரை நான் எழுதிய
எல்லாமே, நான் அறிந்த மனிதர்களின்
கதை, சற்றே கற்பனை கலந்து!
(கல்லூரிச் சாலை
விதிவிலக்கு - 100% உண்மை)
இனி எழுதப்போகும், முழுக்க உண்மையான வாழ்க்கைப் பதிவுகள், நிச்சயம் என்னைத் தொடரும் அடுத்த தலைமுறையினருக்கு ஒரு சேதி
சொல்லும் என்ற நம்பிக்கை காரணம்!
சரி, ஏன் CC போடாமல்?
என் சொந்தக் கதையைக்
கேள் என்று யாரையும் கையைப்பிடித்து இழுக்க விரும்பாமல்!
எப்போது?
அடுத்த வாரத்திலிருந்தே!
(முடிந்தால்
சம்பந்தப்பட்டவர்கள் புகைப்படத்துடன்)
முதல் பதிவு?
நூறாண்டு கடந்து
வாழும் ஒரு உயிரின்,
எண்பது ஆண்டு காதல்
கதை!
No comments:
Post a comment