சித்திரையில்
நிலாச்சோறு,
தைப்பூசப் பால்க்குடங்கள்,
ஆடி மாதம் முளைப்பாரி,
காதோலை கருகமணி !!
அம்மனுக்கு நீராட்டு,
பங்குனியில்
தீர்த்தக்குடம் !
கரையோர நாகருக்கு
குடம்குடமாய்
அபிஷேகம் !!
இலையோடு பூச்சொரியும்
கரையோர அரசமரம் !!
தலைவணங்கித்
தற்காக்கும்
நாணல்களும், கோரைப் புல்லும் !
கடமைக்கு காக்கைக்
குளி !
உற்சாக எதிர்நீச்சல் !
கரையோர இடுகாட்டில்,
கண்ணீரில் தணல் தணித்து
கரைக்கப்படும் துயரங்கள் !!
குடும்பச்சண்டை,
காதல் தோல்வி,
பரீட்சை பயம்,
கணவனுடன் வேறுபாடு -
தற்கொலைத் தர்ப்பணங்கள் !!
அத்தனைக்கும் சாட்சி
சொல்லி,
நில்லாது ஓடும் நதி!
No comments:
Post a comment