இன்றைக்கு எல்லோரும்
பாரதியைப் பற்றி எழுதியே ஆகவேண்டும் என்பது என் பள்ளிக் காலத்திலிருந்து இன்றைய
இணைய காலம் வரை பொது விதி.
சரி, எல்லோரும் போறவழிலயே போய்டலாம்னு பார்த்தா,
வழக்கம்போல இன்னைக்கும் ஏதும் ஓடமாட்டேங்குது.
எல்லோருமே நல்லா எழுதற
இடத்துல நம்ம எழுத்து நிக்காதுன்னு தெரிஞ்சா என்ன பண்ணனும்?
தனியா, குறுக்குச்சந்துல பூந்தறனும்!
எல்லாரும் பாரதி
பத்தி எழுதுனா, நம்ம நம்மளப்பத்தி
எழுதவேண்டியதுதான.
வழக்கம்போல, நாலு cc போட்டா, ஒரு பத்து RT ஆயிடும். நாமும், பாரதியார் வாழ்கன்னுட்டு, ரஜினி படம் பார்க்கப்போகலாம்.
நுங்கம்பாக்கம்
ஹைரோட்ல இருக்கற இன்ஸ்டிடுட்ல இருந்து, அப்படியே, பொடிநடையா நடந்து, ராதாகிருஷ்ணன் ரோடு வழியா, பீச் ரோடு போய், காந்தி காலடியில உட்காரும்போது, நாக்கு தள்ளீரும். ஆனாலும் தினசரி அந்த ஆறு கிலோமீட்டர் நடக்கறது நம்ம
சாயங்கால கடமை.
ஸ்டெல்லா மாரிஸ்ல இருந்து லேட்டா வர்ற பொண்ணுங்கல்லாம் நம்மள
பத்துப் பைசாவுக்கு மதிக்காதுங்கன்றதுனால, அந்தப் பக்கமெல்லாம்
திரும்பறதில்லை. நமக்கு எத்திராஜ்தான் செட் ஆவும்.
கெரகம், பாரதியார்ல ஆரம்பிச்சாலும் கந்தனுக்குப் புத்தி....
சரி, பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடான்னு அந்த ஆள்தான சொன்னாரு.
அன்னைக்கும்
அப்படித்தான் மெதுவா, பட்டிக்காட்டான் முட்டாயப் பாக்கறமாதிரி தாஜ்
ஹோட்டல்ல இருந்து வந்த வெள்ளக்காரிங்களப் பாத்துக்கிட்டே, கொஞ்சதூரம் வந்தா, மியூசிக் அகாடமி வாசல்ல வெறும் காரா நிக்குது.
அதைவிடக்கொடுமை, அங்க வெளியில வெச்சிருந்த cc
டிவில ஒரு ஆளு
பாடிக்கிட்டிருக்கறத, நம்ம மயிலாப்பூர் பார்ட்டிங்க கால் கடுக்க நின்னு கேட்டுக்கிட்டிருக்குதுங்க.
அப்பல்லாம் சிங்காரச் சென்னைக்கு டிவி வராத காலம்.
டயனோரா டிவி வாங்கி, (Black&
White) shutter போட்டு
மூடிவெச்சிருப்போம். என்னைக்காவது ரூபவாஹினி தெரிஞ்சா அன்னைக்கு அதிர்ஷ்டதினம்
அதனால, கொஞ்ச நேரம் டிவி பார்க்கலாம்ன்னு நின்னேன்.
நமக்கு அதுவரைக்கும் கர்னாடக சங்கீதமெல்லாம் கொஞ்சம் ஏலியன் சமாச்சாரம்.
ஆனா, அன்னைக்கு அந்த டிவில
பார்த்த ஆளு ஒருமாதிரி சிங்கம் மாதிரி தெரிஞ்சாரு.
கொஞ்சம் மூக்கு
அடைச்சமாதிரி ஒரு குரல்.
கணீர்ன்னு
ஆரம்பிச்சாப்ல, "சுட்டும் விழிச் சுடர்தான் கண்ணம்மா, சூரிய சந்திரரோ."
இது நம்ம தமிழய்யா
பொண்ணுக்குன்னு மீசைக்காரன் எழுதுன பாட்டாச்சேன்னு கொஞ்சம் ஜெர்க் ஆச்சு.
அந்தப் படுபாவி
மனுஷனுக்கு என்னவோ ஒரு வசீகரம் குரல்ல. ஒரு பத்து நிமிஷம், நான் சென்னைல டிசம்பர் குளிர்ல தெருவுல நிக்கறதே மறந்துபோச்சு.
இந்தப் பாட்டை
இப்படித்தான் பாடணும்போல, இந்த ஆள் பாடறதுக்குன்னே பாரதி
பாடியிருக்கான்னு புரிஞ்சுது.
பக்கத்துல நின்ன மாமிகிட்ட, யாருங்க இந்த ஆளுன்னு கேட்டேன்.
ஒரு மூணுபைசா பார்வை
பாத்துட்டு, நீயெல்லாம் எதுக்குடா இங்க வந்தேன்ற தொனியில
மகாராஜபுரம் சந்தானம் அப்படின்னு சொல்லிட்டு ஒரு அரை மைல் தள்ளிப்போய்
நின்னுக்கிச்சு.
அதுக்குள்ளே, அடுத்த பாட்ட ஆரம்பிச்சுது சிங்கம். “புழுவாய்ப் பிறக்கினும்
புண்ணியா” அப்படின்னு.
சத்தியமா கண்ணுல இருந்து
தண்ணியா கொட்டுது. இப்படியுமா ஒரு மனுஷப் பிறவி பாடும்? அந்த நிரவல் ஸ்வரம் முடிச்சு, ரேவதி ராகத்துல ஒரு டாப்
கியர் போட்டாரு பாருங்க, அத வார்த்தைல சொல்ற அறிவு இன்னும் நூறு வருசம்
நமக்கு கிடைக்கப் போறதில்லை.
அடுத்த அரைமணி நேர
துக்கடால மூணு பாரதி பாட்டு.
அன்னைக்கு காந்தி
காலடி கேன்சல். அப்படியே மிதந்துக்கிட்டே, government எஸ்டேட்
சித்தப்பா வீட்ல வந்து படுக்கற வரைக்கும், பாக்கற பொண்ணுங்க
எல்லாம் செல்லம்மா!
மறுநாள் லலிதா கிட்ட
விசாரிச்சா, அந்த ஆளுதான் கர்னாடிக் மியூசிக் ல சூப்பர்
ஸ்டார்ன்னு சொல்லி, ஒரு நாலு கேசட் கொடுத்து விட்டா. விடியற
வரைக்கும் மோகத்தைக் கொன்றுவிடு,
ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று
அலையும் அறிவிலிகாள் மட்டும் ஒரு ஐம்பது தடவைக்குமேல் கேட்டிருப்பேன்.
அதுக்கப்புறம், பாட்டு கத்துக்கவும், வயலின் கத்துக்கவும் போய் பொண்ணுங்க முன்னாடி
திட்டு வாங்கப் பிடிக்காம பாதியில விட்ட சொந்தக்கதையை விடுங்க.
பாரதியார் பொம்பளையா
வந்தமாதிரி ஒரு உருவகம். என்ன ஒரு தேன் குரல், காவடிச் சிந்திலிருந்து
ராகமாலிகா வரைக்கும், பாரதியை பிரிச்சு மேஞ்சிருந்தாங்க அந்த அம்மா.
"நின்னையே ரதிஎன்று
நினைக்கிறேனடி கண்ணம்மா"!!
ஒருபக்கம் சினிமா
பாட்டுல மொட்டை, இங்க இந்தம்மா,
பாரதிய வச்சு நம்மள
பைத்தியமா அடிச்சுதுங்க ரெண்டும்.
ஊருல எந்தப் பொண்ணப்
பார்த்தாலும், அந்த சௌமியா பாட்டும், மியூசிக் அகாடமியும் மனசுக்குள்ள ஓடுது.
பாரதிக்கு அந்தம்மா அபாரமான கூட்டணி!
இந்தப் பித்து
இன்னைக்கும் தொடருது.
நடுவுல, ஒரு சிடி பாரதியார் பாட்டும், மத்ததும் கலந்து, கர்னாடிக் ராகத்துல கொழந்தைங்கள பாடவச்சு, அதே சௌம்யா கையால ரிலீஸ் பண்ண வெச்சதோட, என் கையால சமைச்சு அவங்கள் நம்ம வீட்ல சாப்பிட வச்சு பழி வாங்க பாரதி
ஹெல்ப் பண்ணாரு.
அன்னைக்கு எங்க
வீட்டுல சௌம்யா பாடிய, நின்னையே ரதியென்று பாட்டுக்கு எழுதிவைக்கற அளவுக்கு நமக்கு
அந்த ஆண்டவன் சொத்து எதுவும் கொடுக்கலை!
அதுக்கு பதிலா, அவங்களுக்கு என்னோட உருப்படாத ஆயுள்ல ஒரு பத்து வருஷத்த ஆண்டவன் transfer பண்ணிக்க வேண்டிக்கிட்டேன்.
முழுசா பாரதி
பாடல்கள வைச்சு சேலத்துல ஒரு வாரம் விழா கொண்டாடுன மாதிரி, மியூசிக் அகாடமில எல்லாப் பாடகர்களையும் சேர்த்து ஒருவாரம் விழா
எடுத்தறனும், சாகறதுக்குள்ள!
பார்க்கலாம்,
கைவசமாவது விரைவில்
வேண்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக