மறைவாய் முகிழ்த்த காதல்.
“நீ ஒரு ஹிப்போக்ரேட் ரவி! உனக்கு எல்லாமே ஒரு
விளையாட்டு. எனக்குப்புரியவில்லைன்னு சொல்லிக்கற அளவுக்கு நீ ஒன்னும் முட்டாள்
இல்லைன்னு உனக்கே தெரியும்.”
“ஒரு பெண்ணோட உணர்ச்சிகள வார்த்தையாக்
கேட்டுத்தான் புரிஞ்சுக்கமுடியும்ன்னு நீ சொல்லாதே! உன்னோட எல்லா செயல்களுக்கும்
அடுத்தவங்கள இம்ப்ரஸ் பண்ணனும்ங்கற நோக்கமே இல்லையா? இத என்னை நம்பச்சொல்றியா ? யூ ஆர் எ கிரிமினல் பாஸ்டர்ட்!”
கோபத்தில் குரல்
உடைந்துபோனது சுதாவுக்கு.
ரவி,ஒரு சாதாரணன்.
நேருக்குநேர் நடந்து வந்தால்கூட,
திரும்பிப் பார்க்கத் தோன்றாத, கூட்டத்தில் ஒருத்தன்.
சுதா, இன்றைக்கு, நின்றால், நடந்தால், பேசினால், எல்லாமே
செய்தியாகக்கூடிய ஒருவரின் மனைவி. இந்த உரையாடல் நடந்த காலகட்டத்தில், கல்லூரி மாணவியாயிருந்து,
ஒரு மிகப்பெரிய ஆளுமையைக் கை பிடித்த
பேரழகி.
இருவருக்கும் இடையே
கிடந்தது ரவியின் கல்யாணப்பத்திரிக்கை!
எளிமை, வித்தியாசம் - இதுதான் ரவி எப்போதும்
சொல்லும் விஷயம்.
அதைத்தான் அந்த அழைப்பிதழும் சொன்னது. இது இத்தனை பெரிய விமர்சனத்துக்கான பொருளாய் மாறும் என்று ரவியும் நினைக்கவில்லை.
அதைத்தான் அந்த அழைப்பிதழும் சொன்னது. இது இத்தனை பெரிய விமர்சனத்துக்கான பொருளாய் மாறும் என்று ரவியும் நினைக்கவில்லை.
அந்த ரெஸ்டாரென்ட்
இருளான மூலை இருக்கையில் சுதாவின் சீற்றம், நிச்சயம் தூரமாய் நின்று கவனித்துக்கொண்டிருந்த சர்வர்
காதில் விழும். அது, சுதாவைப்
பற்றி புரளி கிளப்பப் போதுமான விஷயமாக இருக்கும். இதுவரை பலமுறை அவர்கள் இதே
ரெஸ்டாரென்ட்க்கு வந்திருந்தாலும், அப்போது
சுதா இவ்வளவு கவன ஈர்ப்புக்கு உரியவள் அல்ல, ஒரு திருமணம், அவளை வேறு உயரத்தில் உட்காரவைத்து, கவன ஈர்ப்பை அதிகப்படுத்தியிருந்தது.
இத்தனை
பிரச்சனைக்கும் மையப்புள்ளியான லலிதா இல்லாமல் இந்தப்பேச்சு தொடர்வதில் அர்த்தமே
இல்லை. ஆனால், ரவியைத் தனியே
சந்திக்க விரும்பியது சுதாதான்.
ரவிக்கு திருமணம்
நிச்சயமான நாளிலிருந்து கடந்த மூன்று மாதமாக நடந்துவரும் இந்த விவாதம்
முடியப்போவதில்லை.
வழக்கமான, கதகதப்பான
ரவியின் கைப்பிடியில் தெரிந்த சிறு
நடுக்கம் அவன் உணர்ச்சிவசப்பட்ட நிலையைப் புரிய வைத்தது.
தன்னுடைய கோபத்தில்
நியாயம் இல்லை என்பது சுதாவுக்கும் தெரிந்தே இருந்தது. ஏற்கனவே, ரவியின் திருமண விஷயம் அவனுக்கு எப்படிப்பட்ட
மன உளைச்சலை தந்துகொண்டிருந்தது என்பது அவளுக்கும் தெரியும். இதில் தானும் இப்படி
அவனைக் குற்றம் சாட்டுவது தவறு என்பதுவும் அவளுக்குத் தெரியும்.
காரணம் லலிதா.
இவர்கள் இருவரையும்
நட்பால் இணைத்தவள் லலிதா. ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரியில் படித்துவந்த சுதாவின்
நெருங்கிய உறவுக்காரத்தோழி லலிதா.
C.A. படித்துவரும் அவளது உற்ற தோழன் ரவி.
அடிக்கடி, லலிதாவைப் பார்க்க வரும்போதெல்லாம் ரவி
இல்லாமல் அவளைப் பார்க்க முடிந்ததில்லை
என்னுமளவு ரவியும், லலிதாவும் நெருக்கம். இருவருக்கும் பல
விஷயங்களில் ஒத்துப்போன ரசனை, தினமும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளாமல்
தூங்க விட்டதில்லை.
இன்ஸ்டிட்யூட் லைப்ரரியில் மூச்சுக் காற்றுகூட இடைஞ்சல் செய்யும் பேரமைதிக்கு, ரவியையும் லலிதாவையும் கண்டால் பயம். இருவருக்கும், பேசாமல் படிக்க முடியாது.
C.A.
என்பது ஒரு பூதம்போல்
உருவகிக்கப்படும் இடத்தில், நினைத்த நேரத்தில் வருவதும், வண்டியை எடுத்துக்கொண்டு மகாபலிபுரம் ரோட்டில் நேரம் காலமின்றிப் பறப்பதும், நள்ளிரவில் ஐஸ் க்ரீம் கடைதேடி அலைவதும், நட்பு என்பது தாண்டி வேறு
ஏதாவது இருக்குமோ என்ற சந்தேகம் எல்லாருக்கும் உண்டு. ஆனால் அது நட்பு மட்டுமே
என்பது அவர்களின் தெளிவு.
பலமுறை, சுதாவே கேட்டதுண்டு. “உங்களுக்கு இடையில் வேறு ஏதாவது?” என்று..
நடந்தது எல்லாமே,
அவளிடமும், லலிதாவிடமும் ஒரு வார்த்தை விடாமல் பகிர்ந்துகொண்டவன்தான்
ரவி.
இந்தத் திருமணத்துக்கு, ஒருவகையில்
சுதாவின் தூண்டுதல்தான் காரணம்.
ஆனால், லலிதா ஏன்
இப்படி மாறிப்போனாள் என்பதுதான் புரியவே இல்லை. வெறும்
படிப்பு தாண்டி, எவ்வளவோ விஷயங்களைப் பேசக்கூடியவன் ரவி. அது
மட்டுமல்ல, B.S. என்ற பட்டப்பெயருக்குக் காரணமான அந்த சுறுசுறுப்பும், தனக்கு சரி என்று படுவதை தயங்காமல் செய்துவிட்டு, விமர்சனங்களை நின்று கேட்காமல் நகரும் ஆண்மையும், அனைவரையும் அவனை நோக்கி இழுப்பது தெரிந்த விஷயம்.
கை பிடித்துப்
பேசுவதும், தோளணைத்து சிரிப்பதும்,நெற்றியிலோ, கன்னத்திலோ முத்தமிட்டு வாழ்த்துவதும், ரவியின் வழக்கம்.
எனக்கென்னவோ ஆயிரம் வார்த்தை சொல்லாத அன்பை ஒரு தொடுதல்
உணர்த்திவிடமுடியும் என்பது ரவியின் தியரி.
அவன் தொடுகையில்
பிரியத்தை சுதாவே உணர்ந்திருக்கிறாள். காமம் கலவாத நட்பு என்றால் அநேகமாக
எல்லோரும் கை காட்டுவது ரவியையே.
ரவி
நிச்சயதார்த்தத்துக்கு புறப்பட்டுப் போகும் முன்னிரவுகூட மூவரும் பாலிமர் ஹோட்டல்
மூலை இருக்கையில் அதன் சாதகபாதகங்களை விவாதித்திருந்தனர்.
நிச்சயம் முடிந்து
வந்த ரவி, முற்றிலும் மாறிப்போன
லலிதாவைப் பார்க்க நேர்ந்தது. “என் மனதில் இருக்கும் காதல் உனக்குப்
புரியவில்லையா, எல்லாமே சொல்லித்தெரியுமளவு
நீ முட்டாளுமல்ல. உனக்கு வேண்டுமானால் பெண் ஒரு விளையாட்டுப் பொருளாக இருக்கலாம்.
ஆனால் இனி, என் சாவு வரை எனக்கு
வேறு துணை இல்லை!” என்று கதறும் தோழியை எப்படித் தேற்றுவது என்று
ரவிக்குப் புரியவில்லை.
ஏற்கனவே இருபத்தைந்து வருட நட்பைக் காவு வாங்கியிருந்தது
இந்தத் திருமண ஏற்பாடு.
இப்போது இது வேறு.
நட்பின் கதை!
ரவியும், சிவாவும், அண்ணன் தம்பி முறை.
ஆனால், ஒரே ஒரு வயது மூத்த சிவா, ரவிக்கு உற்ற தோழன்.
இருவரும், வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஆரம்பப் பள்ளிக்கு
சேர்ந்து போவதில் இருந்து, இரவு படுக்கப்
போவதுவரை இருவரையும் தனித்தனியே யாரும் பார்த்ததில்லை.
முதல் பத்து வருடங்களில்.
சென்னிமலையில் பாட்டி வீட்டில் சித்திகள் அரவணைப்பில் வளர்ந்த ரவி, பெரியப்பா மகன் சிவாவுடனே
சுற்றிக்கொண்டிருப்பான்.
ஐந்தாம் வகுப்பு முடித்து, அப்பா அம்மாவிடம் போகநேர்ந்த சூழலில், அவன் அழுதது, சிவாவைப் பிரியும் துயருக்கு மட்டுமே.
அதன்பின் வந்த
சின்னச்சின்ன விடுமுறைகளிலும் இருவரும் சேர்ந்தே சுற்றுவது வழக்கம் , லவனும் குசனும் போல.
மருத்துவப்
படிப்புக்கு சிவா சென்னை சென்றதும், அடுத்த வருடம் ரவி ஈரோட்டில் B.Sc சேர்ந்ததும், இருவருக்கும் வேறு வேறு நட்பு வட்டங்களை அறிமுகப்படுத்தியபோதும், இருவருக்குமான நட்பு சிறிதும் மாறவில்லை.
விடுமுறைகளில் ஊருக்கு வரும்
நாட்களில் சிவா இருக்குமிடத்தில் ரவியோ, ரவி இருக்குமிடம் தேடி
சிவாவோ ஓடிப்போய்விடுவார்கள். போன ஜென்மத்தில் புருஷன் பெண்டாட்டியாகப்
பிறந்திருப்பார்கள் என்று எல்லோருமே வியக்குமளவு, இருபது வருடம்
ரத்தத்தில் ஊறிய நட்பு.
டிகிரி முடித்து, C.A. சேர்ந்து, மூன்றே மாதத்தில்
சென்னைக்கு மாறுதல் வாங்கியபோது,
சிவாவிடம் போகிறோம் என்பதே
ரவியின் சந்தோசமாக இருந்தது.
அதன்பின், சென்னை வந்ததும், சிவாவின் நண்பர்கள் வட்டம், ரவியை அணைத்ததும், ஒன்றாய் மீண்டும் காலம் களித்ததும், ஒரு காதலின் சுழலில் சிக்கி, காலம் சிரித்ததும் இன்றுவரை ஆறாத்தழும்பு.
இருவருக்கும்
முறைப்பெண் ராதா.
இவர்கள் கூடவே, ஓடி
விளையாண்ட சிறுமி. சிவா, சென்னை
வந்த இடைக்காலத்தில் பூத்தவள், ரவியின்
தாய் மாமன் மகள்.
"கிட்டுமாமா, பட்டுமாமி" என்று, உறவும், மாமனும் செய்த கேலியோ, இல்லை, எப்போதும்
பெண்களிடத்தும், குழந்தைகளிடத்தும்
ஈர்க்கப்படும் ரவியின் குணமோ, விடுமுறை
தவறாது சந்தித்து முகிழ்த்த அன்போ, ஏதோ
ஒரு புள்ளியில், கிள்ளைக் காதலாக
முகிழ்த்தது.
இது, ஒருவகையில் சிக்கலில்லாமல் முடியப்போகும் காதல்
கதையாகவே இருந்திருக்கக்கூடும்- ஒருநாள் சிவாவின் நண்பன் சபேசன் அந்தப் பேச்சை
எடுக்கும் வரை!
“என்ன சிவா, எனக்கென்னவோ, ராதாவுக்கு ரவி சரியான ஜோடியாக இருப்பான் என்று படுகிறது. நீயானால் இங்கே
காதல் பாட்டுப் பாடிக்கொண்டிருக்கிறாய்” என்று ஒரு குண்டை அறியாமல் எடுத்து வீசி
சிரித்தான் சபா.
இதுவரை, ரவி அறியாத சிவா மனது, ரவியின் ராதா மீதான மெல்லிய ஈர்ப்பை அந்தக் கணத்தில்
துடைத்து எறிந்தது.
ஏற்கனவே, அது
ஒரு பிள்ளைக்காதல் என்ற புரிதலுக்கு வந்திருந்த ரவி, இந்த எதிர்பாராத் திருப்பத்தை மகிழ்வோடே எதிர்கொண்டான்.
சென்னை, ஏற்கனவே,
ரவியின் மன நிலையில் பெரும் மாறுதலைக்
கொண்டு வந்த்திருந்தது.
படிப்பு தந்திருந்த நட்பும், முதிர்ச்சியும், ஆயிரம் அழுத்தம் இருப்பினும், மாலை தோறும் வேடம் மாறி, ஜோல்னாப் பையும், கதர் ஜிப்பாவுமாக, கணையாழி அலுவலகம், சிற்றரங்க நாடகங்கள், அடையாற்றில் ஜே.கிருஷ்ணமூர்த்தி உரையாடல்கள் என்று, ஏற்கனவே கனன்றுகொண்டிருந்த இலக்கியதாகம்
விசிறிவிடப்பட, ராதாவுடனான அன்பு,
காதல் இல்லை என்ற ஒரு புரிதலுக்கு வர
வைத்திருந்த நிலையில், சிவாவின்
மன நிலை வெளிச்சத்துக்கு வந்தது ரவிக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது.
மேலும், எல்லாவகையிலும், சிவா ராதாவுக்கு தன்னை விடவும் நிச்சயம் நூறுமடங்கு
பொருத்தமாய் இருப்பான் என்பதில் ரவிக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை.
மாமாவும்
மருத்துவர், சிவாவும் மருத்துவன்.
தன்னை விட, மாமனுக்கு
நெருக்கமானவன், அன்பு வெள்ளமான
எளியவன். ராதாவுக்கேற்ற எளிய ரசனைக்காரன் என்று ஆயிரம் காரணிகளுக்கு மேல், சிவாவின் ஆழமான காதல்.
இதில், ரவி செய்த ஒரு மாபெரும் பிழை, ராதாவுக்கு அவன் மீதான நேசத்தை எளிதாக எடைபோட்டதுடன், அது சிவாவிடம் சொல்லுமளவு முக்கியமில்லை என்று
நினைத்தது.
எப்போதும் வெளிப்படையாய்ப்
பேசும் மாமா வந்தபோது, வழக்கம்போல்
அவரைத் தனியே பீச்சுக்கு அழைத்துச்சென்ற ரவி, ராதாவின் மீதான சிவாவின் நேசத்தை நேரிடையாக அவரிடம்
சொல்ல, அவருக்கும் அதுவே உவப்பான
விஷயம் என்பது புரிந்தது.
ஊருக்குப் போனவுடன், உறுதிப்படுத்தும் வேலைகளை ஆரம்பிக்கச்சொல்லி அவரை
அனுப்பிவிட்டு, சிவாவுடனும் இந்த
மகிழ்வைப் பகிர்ந்துகொண்டு ஓடிய இருநாட்களுக்குப்பின் கடிதவடிவில் வந்தது முதல்
புயல்.
முழுக்க ரத்தத்தில்
எழுதப்பட்ட அதிர்ச்சிக் கடிதம் ராதாவிடமிருந்து.
தன்னுடைய நேசம்
மாறாது என்றும், இதில் ஏதும்
மாறுதல் எனில், உயிர் இருக்காது
என்ற வழக்கமான சினிமா காதல் கடிதம்.
இத்தனை நேசத்துக்கும்
தான் ஏற்றவன் இல்லை என்பதோடு, அவளுக்கு
சிவா மிகப் பொருத்தமான இணை என்றும் உறுதியாக நம்பிய ரவி, அன்றே, நேரில்
புறப்பட்டுப்போனான், ராதாவிடம்
பேச.
தான் மிகவும் நேசிக்கும் இரண்டு உயிர்கள் ஒன்று சேர்வதே தனக்கும் உவப்பான விஷயம் என்பதிலும், She deserves a better person than him என்பதிலும் மாற்றுக்கருத்தே இல்லாத ரவிக்கு, அன்றைய சந்திப்பு ஒரு மிகப்பெரிய ஏமாற்றம். ராதா தன் நிலைப்பாட்டில் மிக உறுதியாக இருந்தாள்.
அன்பை மறுதலிக்கும் உறுதி இருந்த
ரவிக்கு, அதை அவளுக்கு உணர்த்தும்
வலிமை இல்லை. சென்னை வந்த அவன், இந்த
இக்கட்டை முதலில் சொன்னது சபாபதியிடமும், அன்று மாலையே லலிதாவிடமும்தான்.
அன்பைத் தூண்டும்
வழிமுறைகளைச் சொல்லி, பரிசுகளோடு
சிவாவை ராதாவைப் பார்க்க அனுப்பிவைத்தனர் சபாவும் ரவியும்- நடக்கப்போகும் அசம்பாவிதம்
புரியாமல்.
ஊருக்குப் போய் வந்த
சிவா, இருபது வருடங்களில் முதல்
முறையாக ரவியை சந்திப்பதைத் தவிர்த்தான்.
முகம் இருண்டு வாடிய சிவா, சபாவிடம் ரவியின் துரோகம் பற்றிப்
புலம்பித்தீர்த்தான்.
உண்மையை உதாசீனம்
செய்து மறைத்தது, துரோகமாகப்
புரிந்துகொள்ளப்பட, நட்பு
காயப்பட்டது.
துடித்துப்போன ரவி, ஒரு
விஷயம் மட்டும் தீவிரமாய் முடிவு செய்தான். எத்தனை உயிர் போனாலும், சிவாவுக்கு துரோகம் செய்யமுடியாது என்பதே அது.
ஆனால் விதி, வேறொரு பாதையை வகுத்து
வைத்திருந்தது.
மலருக்கும், முருகனுக்கும் முகிழ்த்த காதல்.
இயற்கை இடைஞ்சல்களை
ஏற்படுத்துவது என்று முடிவு செய்துவிட்டால், அதை எப்படியும் செய்தே தீரும் என்பது மீண்டும் ஒருமுறை
நிரூபணமானது.
இத்தனை சிக்கலான
பிரச்னைகளை எப்படி முடித்து, சிவாவுடனான
உறவை மீட்டெடுப்பேன் என்று லலிதாவிடமும், சுதாவிடமும் புலம்பிக்கொண்டிருந்தான் ரவி.
"நீ ஒரு எமோஷனல்
இடியட். உனக்கென்று வாய்க்கிறது பார்" என்று அவர்கள் ஓட்டிக்கொண்டு இருந்தபோது, "உடனே உன்னோடு தனியாகப் பேசவேண்டும்" என்று
அழைத்தான் அழைத்தான் சபாபதி.
அன்றைக்கு
ஊரிலிருந்து வந்த அம்மாவின் கடிதம், பிரச்னைக்கு வேறொரு வடிவம் தந்தது.
ரவியின் தங்கை
மலரும், ராதாவின் அண்ணன்
முருகனும் கொண்ட காதல் பற்றி அம்மாவின் கடிதம் சொன்னது.
மகளின் மனம் புரிந்த தாய்,
தன் அண்ணன், ராதாவின் தந்தையிடம் பேச, அவர் தன் கருத்தை உறுதிபடச் சொல்லிவிட்டார்.
தான் பெண்
எடுக்கும் இடத்தில்தான் பெண் கொடுப்பது என்பதில் உறுதியாக இருப்பதாகவும், ரவியோ, ரவியின் தங்கை மலரோ, தன
வீடு புகுவதில் தனக்கு மறுப்பில்லை, ஆனால், இரண்டும்
நடக்கட்டும் அல்லது சிவாவுக்கும், சிவாவின்
தங்கைக்கும் பெண் கொடுத்து, பெண்
எடுப்பதிலும் தனக்கு மறுப்பில்லை என்பதோடு, ரவியின் விருப்பமும் அதே என்பதையும் தெளிவுறச்
சொல்லிவிட்டார்.
"உனக்கு யார் மீதாவது
காதல் இருக்கிறதா?" - கேட்டது,
சபாபதியும், ரவி பெரிதும் மதிக்கும் தோழி சங்கீதாவும்.
சங்கீதா, சிவாவின் கிளாஸ்மேட், ரவிக்கும் மரியாதைக்குரிய தோழி.
"இல்லை" என்பதே ரவி
சொல்லக்கூடிய பதிலாக இருந்தது.
"ராதாவின்மேல் உனக்கு
ஏதும் வெறுப்பு உள்ளதா?"
இதற்கும் "இல்லை" என்றே பதில்.
பிறகு உனக்கென்ன
தயக்கம்?
சிவாவின் மனம் புண்பட
எனக்கு விருப்பமில்லை.
முட்டாளே, உன் தங்கை விருப்பம் உனக்கு முக்கியம் இல்லையா?
மூன்று பேரின் காதலை முறித்து, உன் முட்டாள் நட்பை வாழவைக்கப் போகிறாயா?
மௌனப் பார்வையாளனாக
சபா.
"இல்லை. எனக்கு சிவா
எல்லாவற்றுக்கும் மேல். இதில் மாற்று யோசனைக்கே இடமில்லை.
தேவைப்படும்
பட்சத்தில், நான் ராஜியையும்
பயன்படுத்தத் தயங்கமாட்டேன்."
ராஜி?
இடையில் முளைத்த
சிறுகதை.
நள்ளிரவில் படிப்புக்கு இடையே, தேநீர் அருந்தப் போகும்போது, சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், இரவுப்பணியில் இருக்கும் சிவாவின் நண்பர்களை அழைத்துச்
செல்வது ரவியின் பழக்கம்.
நாளடைவில் ரவிக்காகவே ராஜி காத்திருக்க ஆரம்பித்தாள்.
இந்தப் பேச்சுக்கு சிலதினங்கள் முன்பான இரவில்தான், ரவி மீதான தன் மையலை சொன்னாள் ராஜி.
இது தன் நண்பர்கள்
அனைவருக்கும் தெரியும் என்று ராஜி சொன்னதை உடனே மறுதலித்திருந்தான் ரவி.
இப்போது அதை
சொன்னதும், முகம் சிவந்த சங்கீதா, அனிச்சையாய் ஓங்கி அறைந்தாள்.
"உன்னுடைய கோழைத்தனம்
எல்லை மீறிப் போகிறது ரவி.
எல்லாப் பெண்களையும்
பகடையாகப் பயன்படுத்துமளவு உங்கள் நட்பு உயர்ந்ததென்றால், சிவாவை மாற்ற முயற்சி செய். இனிமேலும் சுயநலமாக
யோசிப்பதென்றால் இனி என் முகத்திலேயே விழிக்காதே" என்று கோபமாக எழுந்துபோன சங்கீதா,
ராதாவோடு திருமணம் என்றால் மட்டும் என்னை
நீ சந்திக்கலாம். இல்லையேல் என் நட்பை நீ மறந்துவிடு என்று சொல்லிப்போனாள்.
முடிவாய் ஒரு வழி!
அன்றிரவு, லலிதா வீட்டு மாடியில் விடிய விடிய நடந்த
பேச்சுவார்த்தையில், கதறி அழுத
ரவிக்கு ஆறுதல் சொல்ல வழியற்று அமர்ந்திருந்தனர் சபா, லலிதா மற்றும் சுதா.
இறுதியில், தங்கையின் வாழ்க்கை, ராதாவின் உயிர் என எல்லாவற்றையும் பணயம் வைப்பதைவிட,
சிவாவுக்குப் புரிந்துகொள்ள அவகாசம்
கொடுப்பது மேல் என்ற ஏகோபித்த முடிவை எடுக்கும்போது, விடிந்திருந்தது.
அதற்குப்பின்
சம்பவங்கள் துரிதமாக நடந்தன.
சிவாவின் மனதும் மாறவே இல்லை.
ரவி மீதான வெறுப்பு, தீரவே இல்லை.
ஊருக்குப் போனதும்,
நிச்சயம் ஆனதும், கனத்த வருத்தத்துடன் நடந்துமுடிந்து, தங்கைக்கும் தனக்கும் ஒரே நாளின் அடுத்தடுத்த
முகூர்த்தங்களில் திருமணம் என்று முடிவு செய்து, திரும்பிவந்தபோது,
லலிதாவின் வலி மிகுந்த காதல் குற்றச்சாட்டு.
"ரவி, உனக்கும் எனக்கும் லலிதாவின் பிடிவாதம் தெரியும். இதை, அவள் உன் நிச்சயதார்த்ததுக்கு முன் என்னிடமாவது சொல்லியிருந்தால், இதை எப்படியாவது மாற்றியிருக்கலாம். இப்போது வேறு வழியே இல்லையா" என்று சுதா பேசிக்கொண்டிருக்கும்போதே, லலிதா வந்து சேர்ந்தாள்.
“விடு சுதா, அவன் C.A.படிப்பதற்கு மட்டும் என்னை உபயோகித்துக்கொண்டது
எனக்கு இப்போதுதான் புரிகிறது. என் தாயின்மீது ஆணையாய்ச் சொல்கிறேன். இனி என்
வாழ்வில் எந்த ஆணுக்கும் இடமில்லை”.
இதைச் சொன்ன லலிதா,
அத்தனை நாட்களும், அவள் வீட்டில் இருந்த ரவியின் சர்டிபிகேட்டை அவன் மீது
எறிந்தாள்.
“இதைக் காட்டித்தானே, அந்தப் பெண்ணை மயக்கினாய், மகராசனாக இனி அவளோடு வாழ்” என்று, ஆக்ரோஷமும்,
அழுகையுமாய், எழுந்த லலிதாவை, தோளைப் பிடித்து வலுவாய் அழுத்தி உட்கார வைத்தான் ரவி.
“என் இந்தப் பட்டத்தை மூலதனமாய் வைத்துப்
பிழைக்கும் பிழையை என் வாழ்வில் நான் செய்யமாட்டேன். இதில் பாதிக்குமேலான உழைப்பு உன்னுடையது”
அவர்கள் சுதாரிக்குமுன் தன் C.A. சர்டிபிகேட்டை சுக்கல் சுக்கலாய் கிழித்து லலிதாவின் கையில் வைத்தவன், சுதாவின் முன் நெற்றியில் முத்தமிட்டு, வெளியேறி இருளில் கலந்து போனான்.
அவர்கள் சுதாரிக்குமுன் தன் C.A. சர்டிபிகேட்டை சுக்கல் சுக்கலாய் கிழித்து லலிதாவின் கையில் வைத்தவன், சுதாவின் முன் நெற்றியில் முத்தமிட்டு, வெளியேறி இருளில் கலந்து போனான்.
அதன்பின்
இருபத்தைந்து ஆண்டுகள் முடிந்தே போனது.
சிவா இன்றுவரை ரவி
முகத்தில் விழிக்கவே இல்லை.
ரவி, இன்னும் சிவாவின் அன்பை மறக்கவில்லை.
சாவதற்குள் ஒருநாள் தன் பழைய சிவா, தனக்குக் கிடைப்பான் என்று இருபத்தைந்து வருட நேசத்தைத் தேக்கி
வைத்திருக்கிறான்.
என்றாவது அந்த சந்திப்பு
நிகழும்போது, அந்த எமோஷனல் இடியட் இருபத்தைந்து வருட நட்பை
எண்ணி, கதறி அழக்கூடும்.
ராதாவைப்பற்றி, ரவியின் மனம் சொல்வது,
இன்றும் அதே,
அன்பைப் பொருத்தவரை,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக