வியாழன், 8 ஜனவரி, 2015

தேசியக் கட்சிகளும் எங்கள் கோவணமும்!



தமிழகத்தில் மது கடைகளை திறந்து இளைய தலைமுறையை கெடுத்த பெருமை திமுக மற்றும் அதிமுகவையே சேரும்:



இது நேற்று திரு. E.V.K.S. இளங்கோவன் அவர்களின் பதிவு.
இனி அது தொடர்பான ஒரு விவாதம்.


அந்தக்கட்சிகளின் தோளில் மாறிமாறிப்பயணம் செய்த கேவலம் காங்கிரஸையே சாரும்- பொதுஜனம்!

தமிழக அரசியலில் கூட்டணி தவிர்க்கமுடியாததாகிவிட்டது.அவர்களுக்கும் காங்கிரஸ் தேவைப்படுகிறது


பிறகென்ன இப்போதுதான் மதுக்கடைகளைப்பார்ப்பதுபோல் வேஷம்? மதுவிலக்கை கூட்டணி நிபந்தனையாக்கியிருக்கலாமே?


ஏதோ காங்கிரஸ் மட்டுமே பாவம் செய்தது போலும் மற்றவர்கள் குறிப்பாக பிஜேபி உத்தமர்கள் என்பது தவறு

இப்போது யார் BJP பற்றிப் பேசியது? இது ஜெ பாணி பதில்! காங்கிரஸ் "மட்டும்"என்று யார் சொன்னது?


ஐயா இன்று காங்கிரசை குறை கூறத்துடிப்பது அவர்கள் மட்டுமே


இந்த உரையாடல் திரு. இளங்கோவன் குற்றச்சாட்டு பற்றியது மட்டுமே! இதில் ஏன் மடைமாற்றம்?


சார் காங்கிரஸ் தோளில் தான் திராவிட கட்சியினர் இவ்வளவு நாட்களாகள பயணம் செய்துள்ளார்கள்


இது பரஸ்பரம் நடந்ததே! கூட்டாளிகளுக்குள் தற்காலிகப்பகை வரும்போதுதான் மக்கள் குடிகாரர்கள் ஆனது கண் தெரிகிறது!



1981 திருப்புத்தூர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வேண்டும் என்பதற்காக திமுக, அதிமுக இரண்டு திராவிட கட்சிகளும் போட்டி போட்டு "காங்கிரஸ்" கட்சிக்கு பணியாற்றியதை மறந்து விட்டார்களா???



இந்த விவாதம் அதுபற்றி அல்ல நண்பரே! கூட்டணிக் கட்சிகளின் குறைகள் கூடியிருக்கும்போது ஏன் தெரிவதில்லை என்பதே! யார் தோளில் யார் என்பதற்கல்ல! கூட்டணிகள் சுயலாபம் கருதியே! 
முறிவிற்குப்பின் மக்கள் நலன்பற்றிய நாடகம் எதற்கு என்ற கேள்வியை விட்டு,  யார் தோளில் யார் என்று திசை திருப்பவேண்டாம்! உங்கள் வியாபாரத்தில் யாருக்கும் மக்கள் நலனில் அக்கறையில்லை

தமிழ்நாட்டில் மதுக்கடைகள் இப்போதுதான் இளங்கோவன் கண்ணில் படுகிறதா என்ற கேள்விக்கு இது பதிலில்லை நண்பரே!


மதுவிலக்கு பற்றி பேசினால் பிஜேபி மதவாதிகள் ஏன் பதட்டமடைகிறார்கள்?
பூரண மதுவிலக்கு தான் காங்கிரஸ் கொள்கை. இதை தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறோம். மதவாதிகள் செய்திதாள் படிச்சாதானே


காங்கிரசை விமர்சிப்பவன் மதவாதி என்பது நகைப்புக்குரிய மனோவியாதி. கொள்கைக்கு விரோதமான கூட்டணி மக்கள் நன்மைக்கா என்ற கேள்விக்கான பதில்கள் நேற்றிலிருந்தே காங்கிரசைத் தோலுரித்துக்கொண்டிருக்கிறது! உடனே மற்றவர்களுடையது கொள்கைக் கூட்டணியா என்று ஆரம்பிக்காதீர்கள்! கேள்வி உங்களுக்கு மட்டும்தான். கேள்வி கேட்பவன் எக்கட்சியும் சாராதவன்!


மதவாதிகளின் சரித்திரமே எங்களுக்கு தெரியும் புதுசா ட்ரை பண்ணுங்க.


கேள்வி கேட்பவனை மதவாதி என்பவர்களின் சரித்திரம் முடிந்துபோயிற்று! நேர்மையான பதில் இருப்பவன் திசைமாற்றித் தப்ப மாட்டான். நன்றி!!


மதுவிலக்கு வேண்டும் எனும் கோரிக்கையை நீர்க்க செய்ய முனையும் அறிவிலிகள் மதவாதிகளை விட கேவலமானவர்கள்.


ஓட்டுக்காய்ப் பல்லிளித்து, இன்று கையறுநிலையில் போலியாய் கொள்கைவீரம் பேசும் கொள்கையில்லாக் கொள்ளைக்கூட்டப் பிதற்றல் இது!
இத்தனைநாள் உறக்கத்தில் இருந்ததா உங்கள் மதுவிலக்குக்கொள்கை? ஓட்டுப்பொறுக்கிகளும் கொள்கையை அடகுவைத்தவர்களும்தான் அறிவிலிகள்!


செய்தித் தாள்கள் கூட படிக்காத அரைகுறைகளுக்கெல்லாம் புரிய வைக்க முடியாது.


அதேதான் நானும் சொல்கிறேன் முழுமையானவரே! நன்றி! வளரட்டும் உங்கள் கொள்கைப்பற்று!!

இந்த விவாதம் நடுநிலைவாதிகளின் பார்வைக்கு.

இனி சில எளிய கேள்விகள்!

1. காங்கிரஸை கேள்வி கேட்பவன் எல்லோருமே மதவாதியா? 

2. எந்தக் கட்சியையும் சாராதவன் கேள்வி கேட்க உரிமை இல்லாதவனா? 

3. மதவாதி என்பவன் இந்து மட்டும்தானா? 

4. முஸ்லீம் லீக் என்பது மதம் சாராத கட்சியா? அவர்களுடன் கூட்டணி வைக்கையில் எங்கே போனது மதச் சார்பின்மை?

5. சாராயம் விற்ற காசில் தரும் எந்த இலவசமும் வேண்டாம் என்ற கொள்கை முடிவோடு எல்லா இலவசங்களையும் தவிர்த்த என்போல் உள்ளவர்கள் கேள்வி கேட்கும் உரிமை அற்றவர்களா?

6. இதுவரை மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி காங்கிரஸ் ஏதாவது சிறு துரும்பை அசைத்திருக்கிறதா?

7. இனிமேலாவது மதுவிலக்கை ரத்து செய்யும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டு என்று இந்தத் தியாகிகள் அறிவிப்பார்களா, அல்லது ஒற்றை இலக்கத் தொகுதிக்காய் மீண்டும் திமுக, அதிமுக விடம் திருவோடு ஏந்துவார்களா?

8. கூட்டணி முறிந்தபின் போலி வீரம் பேசும் நாடகம் கேள்விக்கு அப்பாற்பட்டதா?

9. தேசியக் கட்சிகள் ஒவ்வொரு மாநிலத்திலும் போடும் பச்சோந்தி நாடகம் கேவலமான ஏமாற்று வேலை இல்லையா? 
( காவிரி, முல்லைப் பெரியாறு போன்றவை)

10. இந்த தேசியக் கட்சிகளின் பின்னால் போனால், மாநில உரிமைகள் காற்றில் பறக்காதா?

இவை எல்லாம் என்போல் பாமரர்களின் அரைகுறை ஞானக் கேள்விகள்! 

பாஜக, காங்கிரஸ் அறிவாளிகள் எங்கள் அச்சம் தீர்ப்பார்களா?

அவர்கள் தெளிவாய் எங்கள் அறிவுக் கண்களைத் திறக்கட்டும். 

அதன்பின், மிஸ்டு கால் கொடுப்பதா, குஷ்புவிடம் அரசியல் கற்பதா என்று நாங்கள் முடிவு செய்துகொள்கிறோம்.

அதுவரை, பிராந்தியக் கட்சிகளின் பின்னால்போய், எங்கள் கோவணத்தையாவது காப்பாற்றிக்கொள்கிறோம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக