உரையாடல்களால் ஒரு காதல் கதை!
ரவி, லாவண்யா!
ரவி, இது எமோஷனலா முடிவெடுக்கற விஷயம் கிடையாது.
ஒரு
கல்யாணம்ங்கறது உனக்கு அவ்வளவு விளையாட்டா?
மொதல்ல
காபி குடி!.
கொஞ்சம் நிதானமா யோசி,!!
கொஞ்சம் நிதானமா யோசி,!!
நமக்கு
இன்னும் எத்தனை நாள் பாக்கி இருக்கு?
ரெண்டு
பேருக்கும் விசா formality எல்லாம் முடிஞ்சு, இன்னும் சரியா நாப்பது நாள்தான்
இருக்கு. இன்னும் அம்மாஞ்சி மாதிரி பேசாதடீ!
ரவி, இதுல உங்க அம்மாவோட சம்மதம் எனக்கு ரொம்ப
முக்கியம்.
இத்தனை நாள் அவங்க அனுபவிச்சதெல்லாம் போதாதா?
நமக்கென்ன, கலிபோர்னியா போய் செட்டில் ஆய்டுவோம்.
ஸ்கைப்லயே அவங்களுக்கு பேரன் பேத்திய காட்டி சமாதானம்
பண்ணிட்டு காலத்த ஒட்டீருவோம்.
இங்க எல்லோரையும் face பண்ணவேண்டியது
அவங்கதான்.
நீ இல்லை.
லாவண்யா, ப்ளீஸ், உனக்கு
வேணும்னா அந்த ஆசை இருக்கலாம்.
அதை என் தலையில திணிக்காதே, ரெண்டு
வருஷம் காண்ட்ராக்ட் முடிஞ்சவுடனே, அடுத்த ப்ளைட் பிடிச்சு ஊர் வந்து
சேந்துருவேன்.
இந்த டயலாக் பேசிய
பலபேர் அங்கேயே பேரன் பேத்தி பெத்தாச்சு.
அங்க வந்து
இதுமாதிரிதான் நீ பேசப்போறேன்னா, நான் இப்பவே விலகிக்கறேன். இந்த
கண்டிஷனுக்கு ஓகே ன்னா பேசு. இல்லே, நீ ஜாலியா கிளம்பு, என்னை
மறந்துடு!
Do you think this
is the thing we ve to discuss NOW?
Grow up Ravi,
இப்போ இஷ்யு இது இல்ல டியர், கல்யாணம்!
அதைப்பத்திப் பேசுடா முட்டாள்!
சுரேஷ், ஜானகி!
இப்படியே உட்கார்ந்திண்டிருந்தா எப்படி ஜானு?
எனக்கு
உன்னை கண் கொண்டு பார்க்க முடியல,
இந்த முப்பது வருஷம் நம்ம வாழ்க்கைல
இல்லாமல் போயிருந்தா, எவ்வளவு நன்னா இருக்கும்!
உனக்கு நான்
எனக்கு நீன்னு சொல்லிச்சொல்லித்தானே வளர்த்தா,
ஒரு சின்ன மனஸ்தாபத்துல
கோபிச்சுண்டு ஊர விட்டுப்போன உங்க அப்பா, உன் கல்யாணத்துக்குக்கூட எங்களுக்குப் பத்திரிக்கை அனுப்பல,
எங்களுக்கு விஷயம் தெரிய வரும்போது எல்லாமே முடிஞ்சிருந்தது.
இன்னைக்கும் இந்த வலி என் மனசுல இருக்கு
ஜானு.
அதெல்லாம் இப்போ பேசி என்ன ஆகுது
சுரேஷ்?
நான் உன்னை அப்படிக் கூப்படலாமோன்னோ?
ஜானு, ப்ளீஸ், இத்தனை வருசத்துக்கப்புறமும் என்னைக் கொல்லாதே. உனக்கு கல்யாணம் ஆய்டுத்துன்ற
வேகத்துல எங்காத்துல சொன்ன லச்சுமிய கட்டிண்டேன்.
மகராசி, சந்தோஷமாத்தான் என்னையும் வெச்சுண்டிருந்தா.
மஹாலட்சுமி மாதிரி ஒரு பொண்ணையும் பெத்துக்கொடுத்தா.
பதினஞ்சு வருசத்துக்கப்புறமா வந்த மொதல் ஜுரத்துல போய் சேந்துட்டா.
பரவால்ல சுரேஷ், நோக்காச்சும் அப்படி ஒரு லைப் வாய்ச்சது,
ஒத்தப்பையனை பெத்தவள சந்தேகத்துலயே கொன்னு,
சந்தேகத்தோடவே ரெண்டே வருஷத்துல போய் சேந்துட்டார் மனுஷன்
எதோ, அப்பா தயவுல பையன வளர்த்து ஆளாக்கிட்டன்.
அப்பாவும் போய், இப்போ, அவனும் கலிபோர்னியா போறேன்னு சக்கரம்
கட்டிண்டு நிக்கறான்.
பகவான் இனி என்ன பாக்கி வச்சிருக்கான்ன்னு தெரியல.
ப்ளீஸ், அழாதே
ஜானு!
எனக்கு உன் மேல இருந்த பிரியம் இத்தன நாளும் குறையலன்னாலும், அவளோடையும் நான் ஒரு போலி வாழ்க்கை வாழலை.
பிரியமாத்தான் இருந்தா, பகவானுக்குப் பிடிக்கல, அழைச்சுண்டார்.
இப்போ நான் சொன்ன விஷயம் யோசிச்சயா,
இன்னைக்கு சொல்றேன்னு சொல்லியிருந்தே!
எது?
ரவி, லாவண்யா மேட்டர்தானே?
அவாதான் புரியாம பேசறான்னா, நீயும் அவாளோட
சேர்ந்துண்டு பேசினா நான் என்ன
சொல்றது?
நமக்குள்ள இருந்த ஸ்நேகமோ, நேசமோ இவாளுக்குப் புரியாது சுரேஷ்.
பஹவான் சித்தம், நமக்குள்ளே கல்யாணம்ன்னு ஆகியிருந்தா,
இப்போ இவா ரெண்டுபேரும் இப்படிப் பேசறத எப்படி எடுத்துப்பே ?
அவா ரெண்டுபேரும் சொல்றது நியாயமா படறது ஜானு,
இன்னும் எத்தனை நாளைக்குத்தான் அவாளுக்கு பதில் சொல்லாம இழுத்துண்டே
போகப்போறே?
இது கண்டிப்பா, ரெண்டு ஒடம்பு சம்பந்தப்பட்ட பிணைப்பா எனக்குத் தோணலை, பார்க்கறவாளோட பார்வைக்கெல்லாம் பதில் சொல்லிண்டு இருக்கமுடியாது.
தூரதேசம் போற கொழந்தைகள் சந்தோஷமா
போகட்டுமே,
நமக்கும் இங்க ஒருத்தருக்கு ஒருத்தர் துணையா, இருக்கற
காலமாவது நிம்மதியாப் போகட்டுமே.
பழைய உரிமையோட, இனி சொச்சம் இருக்கற காலத்தையாவது நிம்மதியா ஓட்டிடலாம்.
கொஞ்சம்
யோசி ஜானு.
இது எனக்குத் தப்பா படலே.
அந்தக் காலத்து மனுஷா இத எப்படிப்
பார்ப்பா?
நம்மள நன்னாத் தெரிஞ்ச யாராச்சும் இந்தக் கல்யாணம் பத்திக்
கேட்டா, என்னல்லாம் பேசுவான்னு புரியாத மாதிரியே பேசறேளே சுரேஷ்,
சரி, உன்னோட வழிக்கே வர்ரேன்,
இப்போ
கல்யாணத்தைப் பண்ணாமலே ரெண்டுபேரையும் அனுப்பிட்டு, நான் எந்த உரிமையோட உன்னைப் பார்க்க வரமுடியும்?
அப்போ அவாள்லாம் பேசறது என்னவா இருக்கும்?
எந்த உரிமையோட நாம சந்திச்சுக்க முடியும்?
பிள்ளைகளுக்கு இருக்கற துணிச்சலும்,தெளிவும் உனக்கு இல்லையே ஜானு!
இத்தனை நாள் எதிர்நீச்சல் போட்டு
வாழ்ந்து தன்னைக் கரை சேர்த்த பெத்தவாளை இந்த அளவு கொண்டாடற குழந்தைகள் அபூர்வம்.
நல்லா யோசி,
நான் போய் உனக்கு காப்பி போட்டு எடுத்துண்டு வர்றேன்.
நான் போய் உனக்கு காப்பி போட்டு எடுத்துண்டு வர்றேன்.
ரவி, லாவண்யா!
ரவி, இன்னைக்கு அப்பா, உங்க அம்மாகிட்டே ரெண்டுல ஒன்னு
கேட்டு சொல்றேன்னு சொல்லிட்டார்.
அம்மாவோட பதில்தான் என் பதில்.
அவங்க சொல்றத மீறி, நீ இழுக்கற இழுப்புக்கு என்னால ஆடமுடியாது.
இன்னும் நீ உங்க
அம்மா, எங்க அப்பான்னு பிரிச்சுத்தான்டி பேசறே. கொஞ்சம்கூட
இரக்கமே இல்லாத கழுதை.
இங்க பார்
ரவி, எங்க அப்பாவும் உங்க அம்மாவும் ஒரு
காலத்துல எவ்வளவு நேசிச்சாங்கன்னு உன்னைவிட எனக்கு நல்லாத் தெரியும்.
அது
தெரிஞ்சப்புறம் அவங்க ரெண்டு பேரையும் நினைச்சு நான் எத்தனை நாள் அழுதிருப்பேன்னு எனக்குத்தான்டா
தெரியும்.
உன்னை மாதிரி முட்டாளா யோசிக்க, என்னால
முடியாது.
எனக்கு
அம்மாவோட சம்மதம் முக்கியம்
லாவண்யா, கொஞ்சம் யோசி முட்டாளே!
நீயும் நானும் எதற்கு
ஒரே ஆபீஸுல வேலைக்கு சேரணும்?
இத்தனை பேர் இருக்க, உன்கூட நான் ஏன் நெருக்கம் ஆகணும்?
ஒரு எதேர்ச்சையான
சந்திப்புல, உங்க அப்பா, எங்க அம்மா கதை அத்தனை
வருஷம் கழிச்சு எதுக்கு நமக்குத் தெரியணும்?
அதுக்கப்புறம் நமக்குள்ளே
இப்படி எதுக்கு ஒரு பிரியம் வளரணும்?
நம்மை
ஒண்ணா எதற்கு கலிபோர்னியா அனுப்பணும்?
முட்டாள்ப் பெண்ணே,
இது எல்லாமே
இந்த உறவுக்கும்,கல்யாணத்துக்கும்தான்.
இது நடக்கும், யார் சம்மதம் இல்லாட்டாலும்.
சுரேஷ், ஜானகி!
ஜானு, இன்னும் எத்தனை வருஷம் பகவான் நம்ம கணக்குல எழுதியிருக்கார்ன்னு தெரியாது.
இருக்கற காலத்துல, பழைய
தப்புக்குப் பிராயச்சித்தமா இந்தக் கல்யாணம் நடக்கட்டும்.
புரிஞ்சவா வந்து
அட்சதை போடட்டும், புரியாதவா நமக்கு வேண்டாம்.
இந்தப் புது
நேசத்தோட, இருக்கற
கொஞ்சநாள ஓட்டுவோம்.
தயவு செஞ்சு
புரிஞ்சுண்டு சரி சொல்லு
ப்ளீஸ்.
ப்ளீஸ்.
உங்களுக்கு இது சரின்னு பட்டா, நான் சொல்லறதுக்கு ஒண்ணுமே இல்லை
சுரேஷ்,
அந்த மனுஷனோட ஒட்டாமையே
வாழ்ந்த வாழ்க்கைக்கு எம்புள்ளயைத் தவிர வேற ஒன்னுமே இல்லை.
அவனுக்கு இது
சந்தோஷம் தரும், உனக்கும் இதுதான் சரின்னு பட்டா, நடத்துங்கோ.
நேக்கு ரவிகிட்டப் பேச
தயக்கமா இருக்கு,
நீயே பேசிடு சுரேஷ்.
நான் கிளம்பறேன்.
நான் கிளம்பறேன்.
ரவி, லாவண்யா!
இப்போ அப்பா போன்ல
பேசுனது கேட்டுச்சா?
இனி உனக்கு ஒன்னும்
பிரச்சனை இல்லையே?
அதிகம் கூட்டம்
சேர்க்கவேண்டாம்!
வர்ற வெள்ளிக்கிழமை நல்ல முகூர்த்த நாள்.
வடபழனி முருகன் சன்னதியில கல்யாணம்,
அன்னைக்கு
ராத்திரி ரிசப்ஷன்.
ஒருமாசம், அப்பா அம்மாவோட சந்தோஷமா கழிக்கிறோம்,
நம்ம சண்டையெல்லாம்
கலிபோர்னியா போய் ஆரம்பிச்சுக்கலாம்.
தேங்க் யூ
ரவி.
அம்மா
சம்மதம் கிடைச்சது எனக்கு யானை பலம் வந்தமாதிரி.
என்
பிரண்ட்ஸ் கொஞ்சம்பேர மட்டும் நான் பார்த்து அழைக்கணும்,
நைட்
டின்னருக்கு பூரி கிழங்கு அம்மாவைப் பண்ணிவைக்கச் சொல்லு, நானும் அப்பாவும் வர்றோம்.
பை!
அடுத்த
வெள்ளிக்கிழமை, ஆரவாரம் இல்லாமல்
வடபழனி
முருகன் சன்னதியில் நடந்தது
ஜானகி, சுரேஷ் திருமணம்.!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக