SYDNEY - AUSTRALIA
அனெஸ்தடிஸ்ட் மரியா, கட்டைவிரலை உயர்த்திப் புன்னகைத்தாள்.
சர்ஜிகல் கத்தியை கையில் எடுத்த ரவிக்கு கைகள் சற்றே நடுங்கின.
படிக்கும் காலத்திலேயே, நண்பர்கள்
அவன் நீளமான விரல்களைக் குறித்துச் சொல்வதுண்டு,
“நீ ஒரு அபாரமான
சர்ஜனாக வருவாய் ரவி.”
அது அப்படியே பலித்தது.
ரவிக்கு ஆரம்பத்திலிருந்தே ஒரு கார்டியோ சர்ஜன் ஆகவேண்டும்
என்பது கனவு.
அப்படி ஆகியிருக்க வேண்டாமே என்று தோன்ற ஆரம்பித்து ஒரு வாரம்
ஆகிவிட்டது.
இந்த நான்கு நாட்களாக,மரியா
பலதடவை கேட்டுவிட்டாள்.
“என்னாச்சு ரவி?”
என்ன
ஆச்சு?
ஏதேதோ
ஆகிவிட்டது. இனி எதையும் திருத்தி எழுத முடியாது.
வலுக்கட்டாயமாக, தலையை உலுக்கி அந்த
நினைப்பை உதறினான்.
ரவி, சிட்னியின் மிகப் பிரபலமான சிட்னி
அட்வெண்டிஸ்ட் ஹாஸ்பிடல் தலைமை இதய அறுவை நிபுணன்.
மிகக் குறைந்த காலத்தில், அந்தப் பொறுப்புக்கு
வந்த முதல் இந்தியன்.
இதுவரை, ரவி கை வைத்த எந்த ஓப்பன் ஹார்ட் சர்ஜரியும்
தோற்றதே இல்லை.
அவன் இன்சிசன் போட ஆரம்பிக்கும்போதே, ஒரு திறமையான
கலைஞனின் லாவகததோடுதான் ஆரம்பிப்பான்.
ஒரு மில்லி மீட்டர் கூட தேவையில்லாமல் கோடு
போட்டதில்லை.
அதன்பின், எல்லாமே ஒரு லயத்துடன் நடக்கும்.
ஐந்து மணி
நேரம் கூட இழுக்கும் அறுவை சிகிச்சையில், ஒரு சிறு பிசிறோ, தயக்கமோ
இல்லாமல், அவன் அந்த டேபிளை விட்டு நகரும்வரை ஒரு ஒழுங்கும் நேர்த்தியும் இருக்கும்
இன்றைக்கு இருக்கும் மனக்குழப்பத்தில், இந்த
சர்ஜரியை எடுத்துக்கொண்டிருக்கவேண்டாமோ?
தன்னைவிட மூத்த மருத்துவர் ராபர்ட்டிடம் கேட்டுப் பார்த்தான்.
ஆனால், அவன்தான் இதைச் செய்ய வேண்டும் என்று அவனுக்கே தெரியும்.
இதோ, டேபிளில், செயற்கை சுவாசத்தோடு
கிடக்கும் நாற்பது வயது மனிதனுக்கு, இதயத்தில்
ரத்தக்குழாய் அடைப்பு.
கெட்ட ரத்தத்தை வெளியேற்றும் வால்வ் பழுதாகி, வெளியே போகும்
அசுத்த ரத்தம் மீண்டும் உள்ளே வரும் நிலை.
உடனே, அந்த வால்வை
மாற்றியாகவேண்டிய கட்டாயம்.
அந்தவகை அறுவை சிகிச்சையில் ரவி மன்னன்.
ஆனால் இன்றைக்கு மண்டையே
வெடித்துவிடும் குழப்பத்தில் எவனோ சாகட்டும்
என்று தோன்றிய மனதை இழுத்துப் பிடித்து வந்திருந்தான்.
இப்படித்தான்
ஆகிவிடுகிறது எல்லாமே.
கெட்ட ரத்தத்தை இதயத்துக்குள்ளே திருப்பி அனுப்பும் வால்வை மாற்றுவதுபோல் மனிதர்களையும் மாற்றிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
கெட்ட ரத்தத்தை இதயத்துக்குள்ளே திருப்பி அனுப்பும் வால்வை மாற்றுவதுபோல் மனிதர்களையும் மாற்றிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
எண்ணங்களை உதறி, கவனத்தை இழுத்துவந்த
ரவிக்கு, தன்னையே எல்லோரும் உற்றுப் பார்ப்பது புரிய, நோயாளியின், இடது
மார்பில், முதல் கோடு கிழித்தான்.
அதன்பின் மூன்று மணி நேரமும், அவன் படிப்பும்
அனுபவமும் அவனை இயக்க, விலா எலும்பை அறுத்து, இதயத்தை
நிறுத்தி, பைபாஸ் மிஷினுடன் இணைத்தபின், எல்லாமே
வரிசைக்கிரமமாக நடந்தது.
வால்வை மாற்றி, இதயத்தை சுற்றி
தேங்கும் திரவம் வடிக்க, கதீட்டர் பொருத்தி, மார்பெலும்புகளை
மறுபடி S.S. ஒயரால் இணைத்து நிமிரும்வரை எங்கோ ஓடியிருந்த நினைவுகள் மறுபடி
தலைக்குள் ஏற ஆரம்பித்தன.
இனி, மற்றவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்ற நிலை
வந்ததும், தளர்வாக வெளியே வந்த ரவி, வாட்சைப்
பார்த்தான்.
இந்தியாவில்
இன்னும் விடிந்திருக்காது.
ஆனந்தன் அவனே கூப்பிடுவதாக சொல்லியிருந்தான்.
ஆனந்தன் அவனே கூப்பிடுவதாக சொல்லியிருந்தான்.
இப்படி, முழு முட்டாளாகத் தன்னை எது
வைத்திருந்தது?
கொஞ்சம்கூட ஆராயாமல் அம்மா
சொல்வதையெல்லாம் அப்படியே நம்பியிருக்கிறோம் என்ற நினைப்பே கொஞ்சம் அவமானமாக
இருந்தது.
பெற்றவள்
பிள்ளைக்கு நல்லதுதான் செய்வாள் என்றாலும்,
இப்படியா?
இப்படியா?
இது உண்மையிலேயே தன் நன்மைக்கு செய்ததா?
அப்பட்டமான சுயநலம் அல்லவா இது?
அப்பட்டமான சுயநலம் அல்லவா இது?
நினைக்க நினைக்க மண்டை வலித்தது ரவிக்கு.
காபி மேக்கரில் ஒரு
ப்ளாக் காபியை எடுத்துக்கொண்டு மேஜை விளிம்பில் உட்கார்ந்தான்.
இப்போது மரியம் கூட இருந்தால் நன்றாக இருக்கும்.
ஆனால் நோயாளி
ரெகவர் ஆகும்வரை மரியம் வெளியே வரமுடியாது. எப்படியும் இன்னும் அரைமணி ஆகும்.
மரியம் அந்த மருத்துவமனையில் அனஸ்தடிஸ்ட்.
இலங்கைத் தமிழச்சி.
இலங்கைப் பெண்களுக்கே உள்ள குறும்பு முகம், கோலிகுண்டு கண்கள்
என ரவியை சுலபத்தில் வசீகரித்தவள்.
அவளுக்கு, ரவி மீது ஈர்ப்பு அவன் அறுவைசிகிச்சை
திறமையைப் பார்த்து.
இந்த வசீகரமும், ஈர்ப்பும் காதலாய் மாறி
சில மாதங்கள் ஆகின்றன.
அம்மாவிடமும் அவளைப் பற்றி கோடிகாட்டியிருந்தான்.
இனி
அதெல்லாம் தேவைப்படுமா என்று தெரியவில்லை.
மறுபடியும்
தன்மீதே ஆத்திரம் வந்தது ரவிக்கு.
காப்பியை மீறிக் கசந்த வாயைக் கொப்பளித்து, சேரில்
சாய்ந்தவன், யாரோ நெற்றியை வருட விழித்தான்.
மரியம், கண்களில் வழியும் பிரியத்தோடு அவனைப்
பார்த்தபடி நின்றாள்.
அதுவே அவனுக்குப் பெரும் வேதனையாக இருந்தது.
ஆனந்தனிடமிருந்து
கால் வந்தபின் முதலில் மரியத்திடம் பேசவேண்டும் என்று நினைத்தவாறே புன்னகைத்தான்.
ICCU விலும் மற்ற வார்டுகளிலும் இருந்த போஸ்ட் ஆப் நோயாளிகளை
மரியத்தோடே போய்ப் பார்த்துவிட்டு, மேலும் உட்கார
மனமின்றி, காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
மரியம் தானும் வருவதாக
ஒட்டிக்கொண்டாள்.
எலிசபெத் ஸ்ட்ரீட் ஸ்டோன் அவென்யு வந்து சேரும்வரை சன்னமாகக்
கசிந்த கன்னியாகுமரி வயலின் இசை தவிர எந்தப்
பேச்சும் இல்லை.
வீட்டுக்கு வந்ததும், கொஞ்சம் டீயும்
சேண்ட்விச்ம் எடுத்துக்கொண்டு பக்கத்தில் உட்கார்ந்தாள் மரியம்.
சொல்லு ரவி, What’s bothering you ? இப்படி மனதுக்குள்
போட்டு உழட்டிக்கொண்டே இருந்தால் எந்தத் தெளிவும் வரப்போவதில்லை.
“இல்லை மரி, இந்த ஒருவாரத்தில் நான் நிறையத்
தெரிந்துகொண்டேன். சுயநலம் எவ்வளவு தூரம் மனிதர்களைக் கொண்டுபோகும், பாசம்
எவ்வளவு முட்டாளாக்கும் என்று.
ஆனால் எல்லாமே காலம் கடந்த தெளிவோ என்று படுகிறது.
ஆனால் எல்லாமே காலம் கடந்த தெளிவோ என்று படுகிறது.
இன்றைக்கு ஆனந்தன் போன் வந்தால்தான் இதுபற்றி உன்னோடுகூட
என்னால் பேசமுடியும். ப்ளீஸ் புரிஞ்சுக்கோ!”
“டேக் சம் ரெஸ்ட் ரவி, நான் ஈவினிங்
வர்ரேன். உன் காரை எடுத்துட்டுப் போறேன். ரிலாக்ஸ், உன்னால எதையும்
சமாளிக்க முடியும்.
பை”.
மரியம் போனதும் கதவை
அடைத்துவிட்டு வந்து படுத்தவன், போன்
சத்தத்துக்குத்தான் திடுக்கிட்டு விழித்தான்.
ஆனந்தன்தான்.
அவன் பேசியது எல்லாமே, ஓரளவு
எதிர்பார்த்ததுதான்.
“சரி ஆனந்தா, நான் இன்னும் நாலு நாளில் புறப்பட்டு வருகிறேன்,
நான் வரும்
தகவல் அம்மாவுக்குக்கூடத் தெரியவேண்டாம். ஆனால், நீ எனக்காக சில
வேலைகளை செய்து வை.
இது எதற்கு என்று உனக்குத்தெரியும்.
ஆனால், எந்தக்
கேள்வியும் கேட்காதே”.
தொடர்ந்து பேசியபோது, மறுமுனையில் ஆனந்தன்
அதிர்ந்தது அவன் மௌனத்தில் தெரிந்தது.
ஒரு நீண்ட பெருமூச்சுக்குப் பின், “சரி” என்ற ஒற்றை
வார்த்தையுடன் போனை துண்டித்தான் ஆனந்தன்.
அவ்வளவு ஆப்த நண்பன்.
அவன் சொல்லாவிட்டால் இன்னும் பல விஷயங்கள் தனக்குத் தெரியாமலே போயிருக்கும்.
அவன் சொல்லாவிட்டால் இன்னும் பல விஷயங்கள் தனக்குத் தெரியாமலே போயிருக்கும்.
நிம்மதியாக ஒரு தூக்கம் போட்டு எழுந்தபின், மரியத்தை
வரச் சொன்னான்.
நீண்ட டின்னர் உரையாடல் இன்னும் கொஞ்சம் தெளிவைத் தர, மறுநாளே, அடுத்த
வாரத்தில் இருந்த ஒரு சர்ஜரியை அடுத்த மாதத்துக்கு மாற்றிவைத்துவிட்டு, நாலாவது
நாள் சென்னை விமானத்தில் ஏறி அமர்ந்தபோது, ரவிக்கு என்ன
செய்யவேண்டும் என்பது தெளிவாகியிருந்தது.
இதற்கு அம்மாவின் ரியாக்சன் எப்படி இருக்கும் என்று
யோசித்தபோது, இதழ்க்கடையில் ஒரு புன்னகை நெளிந்தது அவனுக்கே ஆச்சரியமாக
இருந்தது.
சரி, ரவி சென்னை வந்து
சேரட்டும்.
அந்த பயணநேரத்தில்
கொஞ்சம் பழைய கதை!
KANTHAMPALAYAM – TAMILNADU,
INDIA.
தமிழக வரைபடத்தில் தேடினாலும் கிடைக்காத குக்கிராமம்
கந்தம்பாளையம்.
அதில் விவசாயம் செய்து ஓரளவு செழிப்பாக வாழ்ந்துவந்த குடும்பம்
பரமசிவத்துடையது.
ஒருநாள் தன் ஒன்றுவிட்ட தங்கை காமாட்சி குறைபட்டுப் போனாள்
என்று சென்னைக்கு துக்கம் கேட்கப் போனபோது, அந்த அவலம் அவர் கண்ணில் அறைந்தது.
ஏதேதோ வியாபாரம் செய்வதாய், இருந்த
எல்லாசொத்தையும் இழந்த காமாட்சியின் கணவன் ஒரு திடீர் விபத்தில், ஊரைசுற்றிக்
கடனையும், ஆறுவயது
மகன் ரவியையும் விட்டுவிட்டு இறந்துபோயிருந்தான்.
தாய் தந்தை, கூடப் பிறந்தவர்கள் யாருமில்லாத காமாட்சி, அவசரம் அவசரமாக
விலகி ஓடும் சொந்தங்களை விக்கித்துப் பார்த்துக்கொண்டு தவிப்போடு நின்றபோது, பரமசிவம்தான்
முன்னால் நின்று, எல்லாக்
கடன்களையும் ஒழுங்கு செய்து, மிஞ்சிய கொஞ்சம் பாத்திரபண்டங்களை அள்ளிப்
போட்டுக்கொண்டு கைப் பிடியாய் ஊருக்குக் கூட்டிவந்தார்.
அவர் மனைவி
லட்சுமி அவருக்கு ஏற்ற குணவதி.
இருவரும் எவ்வளவோ வற்புறுத்தியும், அவர்களோடு
தங்க மறுத்த காமாட்சி, அண்ணன் வீட்டுக்கு
எதிரிலேயே ஒரு சின்ன வீட்டில் வாடகைக்குக் குடி புகுந்தாள்.
அப்போதுதான் பிறந்து ஆறு மாதமாகியிருந்த பரமசிவத்தின் குழந்தை
மலருக்கு, குளிப்பாட்டுவது முதல் எல்லா
வேலைகளையும் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்த காமாட்சி, தன்னால்
முடிந்த வயல் வேலைகளுக்கும் போய்க்கொண்டு, எப்படியோ
காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தாள்.
அவளுடைய ஒரே லட்சியம், தன மகனை எப்படியாவது ஒரு உயர்ந்த நிலைக்குக் கொண்டுவருவதாகவே இருந்தது.
அவளுடைய ஒரே லட்சியம், தன மகனை எப்படியாவது ஒரு உயர்ந்த நிலைக்குக் கொண்டுவருவதாகவே இருந்தது.
மாமா, அத்தை என்று
எந்நேரமும் அவர்கள் வீடே கதியாகக் கிடப்பான் ரவி.
கிராமத்து வெள்ளந்தி மாமனும் அத்தையும் வாங்க மருமகனே
என்றுதான் அழைப்பார்கள். “என் மகள் மலரைக் கல்யாணம்
பண்ணிக்கறீங்களா மாப்பிள்ளை” என்று
சிரித்துகொண்டே கேட்கும் கேள்விக்கு, தலை குனிந்து
வெட்கச் சிரிப்போடு ஓடிவருவான் ரவி.
அம்மா ஆசைப்பட்டபடியே, படிப்பில்
சூரனாய் இருந்தான் ரவி.
எந்தப் பாடமானாலும், ஒரேதடவையில்
பிடித்துக்கொள்ளும் கற்பூர புத்தி.
காலம் வேகமாய் உருண்டது.
இடையில், மலருக்கு
மூன்று வயதாக இருக்கும்போதுதான் அந்த இடி பரமசிவம் தலையில் விழுந்தது. அப்போது
காமாட்சிதான் அவர்களுக்கு எல்லா ஆறுதல்களையும் சொல்லித் தேற்றினாள்.
அப்போதிருந்து, ஒன்பது வயதுப்
பிள்ளையிடம், அடிக்கடி காமாட்சி சொல்லுவாள்,
“ரவி, எந்தக்
காரணம்பற்றியும் மலரைத் தவிர வேறு பெண்ணை மனதால்கூட நினைத்துவிடாதே, இவள்தான்
உன் பெண்டாட்டி”.
என்ன புரிந்ததோ, ஆனால், மலர் மீது
ஒரு தனிப் பிரியத்துடனே வளர்ந்தான் ரவி.
உள்ளூர் நடுநிலைப் பள்ளியில் எட்டாவது முடித்தவனை, என் மருமகன்
டாக்டர் ஆகணும் என்று சேலத்தில் ஒரு பள்ளியில் சேர்த்து ஹாஸ்டலில் தங்கவைத்தார்
பரமசிவம்.
அவனுக்கு மாதம் எவ்வளவு செலவாகிறது என்றுகூட காமாட்சிக்குத்
தெரியாது. எல்லாமே மாமாதான்.
+2 தேர்வில் மாநிலத்தில் எட்டாவதாக வந்து, வெகு
சுலபமாக சென்னை மருத்துவக் கல்லூரியில் இடம்பிடித்தான் ரவி.
அதன்பின் நாட்கள் பறக்க ஆரம்பித்தன.
எப்போதும் விடுமுறைக்கு ஊருக்கு வந்தால், மாமா வீடே
கதி என்றே கிடப்பான். மலரைப் பார்க்கும்போதெல்லாம் மனதுக்குள் அதே வாஞ்சை, பாசம்.
அத்தை, மாமா, அம்மா
எல்லோருமே இப்போதெல்லாம் பழையபடி கல்யாணம் பற்றிப் பேசுவதில்லை. ஒருவேளை வளர்ந்த
பிள்ளைகள் உள்ளம் தடுமாறக்கூடாது என்று நினைத்தார்களோ என்றிருந்தான் ரவி.
உள்ளூர்ப் பள்ளி மேல்நிலைப் பள்ளி ஆனதில், அங்கே +2
முடித்த கையோடு படிப்புக்கு மூட்டை கட்டிவிட்டாள் மலர்.
மாமாவுக்கும் அத்தைக்கும் அவளை வெளியூர் அனுப்பிப் படிக்கவைக்க
விருப்பம் இல்லை.
ரவிக்கு அது ஒரு பெரிய குறையாகவே இருந்தாலும், அவன்
இயல்பான கூச்சசுபாவம் மாமாவிடம் அதைப் பற்றிப் பேசத் தயக்கமாக இருந்தது.
M.B.B.S. முடித்தகையோடு, அவன் விரும்பிய இதய
அறுவைசிகிச்சைத் துறையிலேயே மேல்படிப்புக்கு இடம் கிடைத்தது ரவிக்கு.
அரசு உதவித்தொகை, மாலை வேலையில் தனியார் மருத்துவமனைப்பணி
என்று, மாமன்
கையைக் கொஞ்சமும் எதிர்பார்க்காததோடு, ஊருக்கு அம்மாவுக்கும் பணம் அனுப்பும் அளவு
வருமானமும் பெருக,
படிப்பு படிப்பு என்றே மூழ்கிக் கிடந்தான் ரவி.
மேல்படிப்பின் முதலாண்டு விடுமுறை.
ஊருக்கு வந்த ரவிக்கு என்னவோ வித்தியாசமாகப் பட்டது.
வழக்கம்போல் குளித்து முடித்து, அத்தை என்று
அழைத்துக்கொண்டே, எதிர்வீட்டுப்
படி ஏறினான் ரவி. முற்றத்தில் உட்கார்ந்திருந்த மலர், அவசரமாக அறைக்குள்
நகர்ந்ததைப் பார்த்தபோது கொஞ்சம் சுருக்கென்றிருந்தது.
எப்போதும், “வாங்க டாக்டர்” என்று
பூரிப்பாய் சிரிக்கும் மலர், அப்படி அறைக்குள் நகர்ந்தது உறுத்தியதுபோலவே, அத்தையும், மாமனும், ஒரு மலர்ச்சியே
இல்லாமல் கடனே என்று பேசுவது புலப்பட, போன கொஞ்சநேரத்திலேயே வீட்டுக்கு
வந்துவிட்டான் ரவி.
இட்லி எடுத்துவைத்த அம்மாவிடம் ஆற்றாமையோடு கேட்டான் ரவி.
“ஏம்மா அத்தையும் மாமாவும் என்கிட்ட சரியாகவே
பேசல?
மலர்கூட என்னைப் பார்த்ததும் ரூமுக்குள் புகுந்தவள், நான் கிளம்பறவரைக்கும்
வெளியிலேயே வரவில்லை?”
புலம்பும் மகனிடம் வாஞ்சையோடு சொன்னாள் காமாட்சி.
“இனி அங்கே அதிகம் போகவேண்டாம் ரவி, அதேபோல் மலரைப் பற்றி
அதிகம் கனவுகளை வளர்த்துக்கொள்ளாதே. அவர்கள் வசதிக்கு, நம் வீட்டில் பெண்
கொடுப்பார்கள் என்று கனவு காணவேண்டாம். பணம்தான் உலகில் பிரதானம் ரவி.”
அரைகுறையாக சாப்பாட்டை முடித்துக்கொண்டு, பள்ளி நண்பன்
ஆனந்தனைப் பார்க்கப் போனான் ரவி.
ஒற்றைப் பார்வையில் ரவியின் முக வாட்டத்தைப் படித்த ஆனந்தன், வயலுக்கு நடுவில்
இருந்த சாலைக்குள் கூட்டிப்போய், ஒரு இளநீரை உடைத்துக் கொடுத்து, கயிற்றுக் கட்டிலில்
உட்காரவைத்தான்.
“நானும் அரசல்புரசலாகக் கேள்விப்பட்டேன் ரவி.
இப்போதெல்லாம் அம்மா, மாமா வீட்டுக்கு அதிகம் போவதில்லை. ஒருவகையில்
பணம், எப்போது
மனிதர்களைப் பிரிக்கும் என்று புரியவில்லை. ஆனால் இதையெல்லாம் நீ மனதில்
எடுத்துக்கொள்ளாதே,
உன் லட்சியம் இனி, உன் அம்மாவை இந்த ஊரில் தலை நிமிர்ந்து வாழவைப்பதாக் இருக்கட்டும்”.
வெகுநேரம் நண்பனுடன் சுற்றிவிட்டு, வீட்டுக்கு வந்தவன்
பார்வையில் தூரத்தில் வரும்போதே மலர் பட்டாள்.
நடையை எட்டிப்போட்டு வேகமாய் வந்தபோது, எதிர்வீட்டுக் கதவு
அடைக்கும் சத்தம்தான் கேட்டது.
உள்ளுக்குள் சுத்தமாக உடைந்துபோனான் ரவி.
அதன்பின் முள்ளில் நகர்ந்த ஒரு வாரத்தையும் நண்பனோடே கழித்தான்
ரவி.
அதன்பிறகு எந்த விடுமுறைக்கும் ஊருக்குப் போவதைத் தவிர்த்தான்
ரவி.
அவன் இறுதியாண்டு பரீட்சை சமயம், மாமன் கையெழுத்தில் பத்திரிக்கை வந்தது.
மலருக்கும், பக்கத்து ஊரைச் சேர்ந்த மிராசுதார் மகனுக்கும் கல்யாணம்.
மலருக்கும், பக்கத்து ஊரைச் சேர்ந்த மிராசுதார் மகனுக்கும் கல்யாணம்.
அம்மாவுக்குத் தேவையான பணத்தை அனுப்பி, நிறைவான சீர்
செய்யச் சொன்ன ரவி,
கல்யாணத்துக்குப் போகவில்லை.
மலரை இன்னொருவனுடன் பார்க்கும் உறுதி அவனுக்கில்லை.
படிப்பை
முடிக்குமுன், வெளிநாடு
போவது என்ற முடிவோடு எல்லாப் பக்கமும் தேடியதில், ஆஸ்திரேலியா, அவனுக்கான கதவை
அகலத்திறந்தது.
பத்துநாள் ஊருக்குப் போய் இருந்தபோது, ஏதோ வேலையாய் வெளியூர்
போயிருந்த ஆனந்தன் இவன் புறப்படும் நாளுக்கு முன்தினம்தான் வந்தான்.
ஊரில் எல்லோரிடமும், தான் ஆஸ்திரேலியா போவதைச் சொன்ன ரவிக்கு ஏனோ, எதிர் வீட்டுப்
படியேறி அதைச் சொல்ல மனம் கூசியது.
மலர் கல்யாணம் முடிந்த பின் இன்னும் அவன் அந்த வாசற்படியை
மிதிக்கவில்லை.
மாலை, ஆனந்தனோடு தோப்பில் உட்கார்ந்திருந்தபோது ஆனந்தன் கேட்டான்.
“மாமாகிட்ட சொல்லிட்டயா ரவி?”
“இல்லை ஆனந்தா, எனக்கு என்னவோ அங்கு
போகப்பிடிக்கவில்லை.
இன்றைய என் வாழ்க்கை அவர் போட்ட பிச்சை. ஆனால் அவர் இப்படி
மாறியதை நான் எதிர்பார்க்கவில்லை”.
“ரவி, நடந்ததை யாரும் மாற்றி எழுதமுடியாது. இனி நீ
எத்தனை வருடம் கழித்து வர்ப்போகிறாயோ, அப்படி வரும்போது யார் இருப்பார்களோ இல்லையோ, மேலும், நான்
கேள்விப்பட்டவரை……”
என்று ஏதோ ஆரம்பித்த ஆனந்தன்,
“சரி அதை விடு. பழையதைப் பேசி யாருக்கு என்ன
லாபம்.
வா, நாம் இரண்டுபேருமே மாமா வீட்டுக்குப் போவோம். ஒருவார்த்தை
அவர்களிடம் சொல்லிவிட்டுப் போ.”
நண்பன் சொன்னதைத் தட்டமுடியவில்லை,
ரவிக்கும் உள்ளூர மாமாவைப் பார்க்கும் ஆசை இருந்ததும் ஒரு காரணம்.
ரவிக்கும் உள்ளூர மாமாவைப் பார்க்கும் ஆசை இருந்ததும் ஒரு காரணம்.
வீட்டுக்குள் நுழைந்தபோது முதலில் எதிர்பட்டது அத்தைதான்.
ரவி, என்று கூவலோடு
நெருங்கியவள், அவன் கையைப் பிடித்து, மாலை
மாலையாய் கண்ணீர் விட்டாள். சத்தம் கேட்டு வெளியே வந்த மாமா, கண் கலங்கப்
பேசாமல் நின்றார்.
மாமா, நான் நாளைக்கு
ஆஸ்திரேலியா போகிறேன், என்னை
ஆசிர்வதியுங்கள் என்று சொன்னவன் அப்படியே அவர் காலில் விழுந்தான்.
எல்லாம் ஒரு நொடிக்குள்தான், அவனைக்
குனிந்து எடுத்தவர் குமுறி அழுதுவிட்டார்.
அடுத்தகணம், அத்தை
கழுத்திலிருந்த சங்கிலி, ரவி கழுத்தில் விழ, “மகராசனாய்ப்
போய்வாப்பா” என்று கண் கலங்கியவர் சட்டென்று அறைக்குள்
போய்விட்டார்.
உதடு துடிக்க வெளியே வந்த ரவி, முற்றாகக்
கலங்கிப் போயிருந்தான்.
கூடவே வந்த ஆனந்தன் வெகுநேரம் அவன் கையை விடவே இல்லை.
இரவு அவனோடே,சாப்பிட்டு, காலை நான்கு மணிக்கு கார்
கொண்டுவருவதாகச் சொல்லி எழுந்துபோனான் ஆனந்தன்.
மறுநாள் காலை புறப்பட்டு ஏர்போர்ட் வரும்வரை பத்துமுறையாவது கேட்டிருப்பாள்
அம்மா-
“மாமா ஏதாவது சொன்னாரா?”
இனிச் சொல்ல என்ன இருக்கிறது என்று விரக்தியோடு நினைத்தவன், இல்லை என்று தலையை
மட்டும் ஆட்டினான்.
இங்குவந்த மூன்று வருடங்களில், சம்பாதிப்பது
அத்தனையும் அம்மாவுக்கு அனுப்பி, மாமா வீட்டைவிடப் பெரியதாக ஒரு வீட்டைக்
கட்டவைத்தான் ரவி.
அது எல்லாவற்றுக்கும் ஆனந்தன்தான் துணை.
ஆஸ்திரேலியா வந்த முதல் மாதமே
போன் செய்த ஆனந்தன், மலருக்கு ஆண் குழந்தை பிறந்திருப்பதைச்
சொன்னான்.
அவனிடம், இனி அவளைப் பற்றிப் பேசுவது என்றால், போனே செய்யவேண்டாம்
என்று கடுமையாகக் கூறி லைனைத் துண்டித்தான் ரவி.
அதற்குப் பின் எப்போது
பேசும்போதும் மாமா,
அத்தை, மலர் என்று யாரைப்பற்றியும் ஆனந்தன் பேசவில்லை - போனவாரம் வரை.
சரியாகப் பதின்மூன்று நாட்களுக்கு முன் , ஒரு பேஷண்டைப்
பார்த்துக்கொண்டிருக்கையில் போன் அடித்தது.
ஆனந்தன்.
புருவம் சுருங்க போனை எடுத்தான் ரவி. இந்தியாவில் இது அகால
நேரம்.
யாருக்காவது ஏதாவது? அம்மா, மாமா, அத்தை என்று மனசுக்குள் ஏதேதோ ஓட, பதட்டத்தோடே, சொல்லு ஆனந்தா
என்றான்.
என்னத்தைச் சொல்ல?
ஆனந்தன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் இடியாய்
இறங்கியது.
எப்படித் தன அறைக்குள் வந்தான் என்றே புரியாமல் அறைக்கு
வந்தவன், முகத்தை
அலம்பிக்கொண்டு ஆனந்தனைக் கூப்பிட்டான்.
மலரின் கணவன் இறந்துபோயிருந்தான்.
இரண்டு வருடக் கைக்குழந்தையோடு மனைவியை விட்டு, குடியால்
ஈரல் கெட்டு இறந்துபோனான்.
அதைத்தொடர்ந்து ஆனந்தன் சொன்னதுதான் அவன் தலையில் நெருப்பை
அள்ளிக் கொட்டியது.
ஒரு நிமிடம் நிதானமாய் யோசித்திருந்தால் எத்தனை விஷயங்கள் புரிந்திருக்கும்?
படிப்பு மட்டுமே தெளிவைத் தராது என்பது எவ்வளவு நிஜம்!
எல்லாவற்றுக்குமேல், அம்மாவா இப்படி என்ற
அதிர்ச்சிதான் அவனை உறைய வைத்தது.
எத்தனை சுயநலம்?
தான், தன பிள்ளை
என்று மட்டுமே யோசிக்கும் மனம் எவ்வளவு குரூரமானது?
தான் நன்கு படித்து பெரிய மருத்துவர் ஆனதுதானே அம்மாவை இவ்வளவு
விபரீதமாக யோசிக்கவைத்திருக்கிறது?
மாமாவுக்குத் தான் செய்த நம்பிக்கைத் துரோகமாகத்தானே அவர்
நினைத்திருப்பார்?
அம்மா செய்த தவறுக்கு அவர்மேல் கோபித்துக்கொண்டு அவரைப்
பார்க்காமலே விட்டது எவ்வளவு மடமை?
தன் மேலேயே கசந்து வழிந்தது ரவிக்கு!
ரவிக்கு P.G கிடைத்தவுடன், மாமா
வீட்டுக்குப்போன அம்மா, அவரிடம், நேரிடையாகவே
கேட்டிருக்கிறாள்.
“அண்ணா, உங்களுக்கு
ரவியைப்போல் ஒரு பையன் இருந்து,
அவனுக்கு மலரைப்போல் ஒரு
பெண்ணைக் கட்டுவீர்களா?
நானும் என் பிள்ளையும் உங்களுக்குக் காலமெல்லாம் நன்றிக்
கடன் பட்டிருக்கிறோம் ஆனால் ஒரு எல்லைக்குமேல் என் மகன் வாழ்க்கை எனக்கு முக்கியம்”.
“மலருக்கு,
உங்கள் வசதிக்கு ஏற்ற
இடமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். ரவிக்காகக் காத்திருக்கவேண்டாம்”.
“இது விஷயமாக படிக்கும் பையனுக்கு போன செய்து தொந்தரவு
செய்யவேண்டாம். ரவியின் அபிப்ராயமும் இதுதான்”.
மாமாவும் அத்தையும் எவ்வளவு கலங்கிப் போயிருப்பார்கள்!
வளர்ந்தவுடன், ஏணியை எட்டி
உதைக்கும் குரூர சுயநலம் அல்லவா இது.
எத்தனை நல்லவர் மாமா? ஒரு
வார்த்தை என்னிடம் இதைப் பேசியிருப்பாரா?
மலருக்கு எத்தனை வலி?
அவள் என்னைப் பார்த்ததும் உள்ளே போனதே அவ்வளவு வலித்ததே, அவள்
வாழ்க்கையை விட்டே நான் வெளியே போகிறேன் என்பது எவ்வளவு வலித்திருக்கும்?
உடைந்து நொறுங்கிப் போனான் ரவி
எவ்வளவுதான் சுயநலமாக யோசித்தாலும் ஒரு தாய்க்குத் தன மகனைக்
கூடவா புரியாது?
எவ்வளவு பெரிய இழப்பு எல்லோருக்கும், தான் உட்பட.
அன்றைக்கு விடைபெறப் போனபோது அத்தையும் மாமாவும் கலங்கிய
காரணம் இப்போதுதான் புரிந்தது ரவிக்கு.
இருநூறு பவுன் நகையும், இன்னோவா காரும் சீதனமாய் வாங்கிப்போன மலரின்
புருஷன், ரவி பேரைச்
சொல்லிச்சொல்லியே தினமும் அடித்து உதைத்திருக்கிறான்.
குடியும் கூத்துமாகக் கெட்டழிய இது அவனுக்கு ஒரு சாக்காய் இருந்திருக்கிறது.
குடியும் கூத்துமாகக் கெட்டழிய இது அவனுக்கு ஒரு சாக்காய் இருந்திருக்கிறது.
இவையெல்லாம், அதற்குப்பின் ஒருவாரத்துக்குள் ஆனந்தன் விசாரித்துச்
சொன்ன தகவல்கள்.
அந்தக் கடைசி போன் வந்தபிறகுதான்,
ரவி, மரியத்தை
அழைத்துப் பேசியதும், இன்று ஊருக்குப் பறப்பதும்.
அதிகாலை நேரத்தில் ரவியைச் சுமந்துகொண்டு அந்தக் கார் ஊருக்குள்
நுழைந்தபோது, ஊரே உறங்கிக்கொண்டிருந்தது.
மாமா வீட்டு வாசலில் இன்னும் பிரிக்கப்படாத பந்தல்.
எதிரில்
பிரம்மாண்டமாக நின்ற புதுக் கட்டிடம்.
அழைப்புமணி கேட்டு எழுந்துவந்த காமாட்சி
அம்மா கண்ணில் அத்தனை ஆச்சர்யம்.
காரை அனுப்பிவிட்டு, உள்ளே வந்த ரவி,
“நல்லா இருக்கீங்களா அம்மா? எனக்கு ஒரு காபி
வேணும். முகம் கழுவிட்டு வர்ரேன்” என்றவாறே ரூமுக்குள் நுழைந்தான்.
பல் தேய்த்து, முகம் கழுவி வந்து காப்பியைக் கையில்
வாங்கியவன், அம்மாவின் முகத்தைப் பார்த்தவாறே மெதுவாகக் கேட்டான்.
“மாமா வீட்டில் என்னம்மா விசேஷம், பந்தல்
போட்டிருக்கிறது?”
அப்போதுதான் அது நடந்தது.
காமாட்சி அப்படியே மடங்கி உட்கார்ந்து கதறி அழ ஆரம்பித்தாள்.
என்னை மன்னித்துவிடு ரவி, அந்தப் புள்ளையை
நான் கொன்னுட்டேன்!
எதிர்பாராத வாக்குமூலத்தில் உறைந்துபோனான் ரவி.
உன்மேல் இருந்த பாசம் கண்ணை மறைத்துவிட்டது ரவி.
என் மகனுக்கு
வேறு நல்லபெண் பார்க்கும் ஆசையில் அவள் வாழ்வில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டேன்.
என்னை தண்டிக்காமல் கடவுள் அந்தப் பெண்ணைத் தண்டித்துவிட்டானடா!
நான் சொன்னதுபோல் உன் மாமன் உனக்குப் பெண் தர மறுக்கவில்லை.
நான்தான் பேராசைப்பட்டுக் கெடுத்தேன்.
மகராசன், இத்தனை துக்கத்திலும், என்னைச் சீ
என்று ஒருவார்த்தை சொல்லவில்லை.
நான்தான் மருகிக்கொண்டு உள்ளேயே
செத்துக்கொண்டிருக்கிறேன்.
அம்மா அழுது ஓயக் காத்திருந்த ரவி மெதுவாகச் சொன்னான்.
எனக்குத் தெரியும்
அம்மா!
ஆனந்தன் சொன்னான்.
அதனால்தான் நான் வந்தேன்.
“உன் மாமா முகத்தில் எப்படி விழிப்பாய் ரவி?
அந்தப்பிள்ளை
கையில் குழந்தையோடு நிற்பதைப் பார்க்க
இருபத்தைந்து வருடத்துக்குமுன் என்னைப் பார்த்ததுபோலவே இருக்கிறது.
இந்தப் பாவத்தை நான் எங்குபோய்த் தொலைப்பேன்?”
துயரத்திலும் இந்தத் திருப்பத்தை ரவி எதிர்பார்க்கவில்லை.
இனி, தன
திட்டம் இன்னும் சுலபம் என்று ஒரு மகிழ்ச்சி கூட மனதில் ஓடியது.
அவன் சொன்ன எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட காமாட்சி
சொன்னாள்.
"நான் எவ்வளவு மோசமானவளாக இருந்தாலும், என்
பிள்ளையை உயர்வாய் வளர்த்திருக்கிறேன் ரவி.
இதற்காக யார் காலிலும்
விழ நான் தயார்"..
நன்கு விடிந்தபின், அம்மாவை
அழைத்துக்கொண்டு மாமா வீட்டுக்குள் நுழைந்தான்.
அப்போதும் முதலில் எதிர்பட்டவள் மலர்.
என்னவென்றே தெரியாத திகைப்பு, அதிர்ச்சி, என்று
சாய்ந்து
விழப்போனவளை அப்படியே தாங்கிக்கொண்டாள் காமாட்சி.
அதன்பின் சொல்ல என்ன இருக்கிறது?
அண்ணன் காலில் விழுந்து அம்மா கதற, பிரமை
பிடித்தவளாக அத்தை நிற்க,
ஆனந்தன் செய்துவைத்த ஏற்பாட்டின்படி
தொடர்ந்துவந்த வெள்ளிக்கிழமை, சார்
பதிவாளர் அலுவலகத்தில், ரவிக்கும், மலருக்கும்
திருமணம்!
பத்தாவது நாள் மகனைக் கையில் ஏந்தி King Ford
Smith Airport ல் இறங்கிய ரவியை எதிர்கொண்ட மரியத்துக்கு அறிமுகம் செய்தான்
ரவி.
இது என் மகன் ஆனந்தன்.
மலர்?
சக்கர நாற்காலியில் இருந்தவளைக் காட்டிச் சொன்னான் -
“இது என்
மனைவி மலர் - மூன்று வயதில் போலியோ பாதிப்பில் கால்களை இழந்தவர்!”
ரவியின் கன்னத்தில் இதழ் பதித்துச் சொன்னாள் மரியம்.
Ravi, you are great!!
No comments:
Post a comment