தாது வருடத்துப் பஞ்சமும், நில ஆக்கிரமிப்புச் சட்டமும்!
தாது வருஷத்துப் பஞ்சம் பற்றிப் பலரும்
படித்திருப்பீர்கள்.
இன்றைக்கு, பற்றியெரியும் கிரிக்கெட் பிரச்னைகளுக்கு நடுவே, அது எத்தனை பேருக்கு நியாபகம் இருக்கும் என்று
தெரியவில்லை.
அன்றைக்கு அந்தப்
பஞ்சத்துக்கு எவ்வளவோ காரணங்கள் இருந்திருக்கலாம்.
ஆனால் இன்றைக்கு நம்மை அதை
நோக்கி நகர்த்திச் செல்ல, எல்லா
அரசியல் கட்சிகளும் கைகோர்த்துக்கொண்டு செயல்படுவதாகவே தோன்றுகிறது.
அதிலும், இன்றைய மிருகபல பாஜக அரசு நிறைவேற்றியுள்ள நில
கையகப் படுத்தும் சட்டத்தில் கொண்டுவந்துள்ள திருத்தங்கள், அதை நில ஆக்கிரமிப்புச்
சட்டமாகவே பார்க்கத்தூண்டுகின்றன.
இதுபற்றிப் பலரும்
எழுதி, விவாதித்த நிலையில், என் இனிய நண்பர் பாலு அவர்கள் என் கருத்தையும் அறிந்துகொள்ள
விரும்பியதுவும், அவர் சொன்னதுபோல், நமக்கு சோறு போடும் விவசாயிகளுக்கு நம்மாலான ஒரு சிறு ஆதரவுக்குரல்
என்பதுவுமே இதை எழுதத்தூண்டியது.
பிரிட்டிஷ் அரசு
கொண்டுவந்த சட்டங்களைவிடவும் கடுமையான சட்டம் இது.
அரசுக்கு எல்லா அதிகாரங்களையும்
கொடுத்து, விவசாயிகளின் கோவணம் வரை உருவிக்கொள்ளும் உரிமையை
அரசுக்குக் கொடுக்கும் சட்டத்திருத்தம் இது.
இதன் முக்கியமான சில
அம்சங்களை மட்டும் அலசுவோம்.
1. அந்தப் பகுதியிலிருக்கும் 80% விவசாயிகள் அனுமதி பெற்றே நிலம் கையகப்படுத்தமுடியும் என்ற கட்டுப்பாடு
விலக்கிக்கொள்ளப்படுகிறது.
2. நிலம் கையகப்படுத்த உரிமையுள்ள தொழில்களின்
பட்டியல் விரிவுபடுத்தப்பட்டு, அரசாங்கத்தின் பங்களிப்பே இல்லாத முழுமையான
தனியார் தொழிற்சாலைகளுக்கும் இந்த விலக்கு வழங்கப்படுகிறது.
3. ஐந்து ஆண்டுகளுக்குள், திட்டம் முடிக்கப்படாவிட்டால் விவசாயிக்கே நிலத்தை
திருப்பிக்கொடுக்கவேண்டும் என்ற அம்சம் விலக்கிக்கொள்ளப்படுகிறது.
4. ஏதோ ஒரு காரணத்தால், அந்த தொழிற்சாலை தொடங்கப்படாவிட்டால், நிலத்தை
திருப்பிக்கொடுக்க வேண்டியதில்லை.
5. தொழிற்சாலைக்கு என்று கையகப்படுத்திய நிலத்தை
விற்பனை செய்யத் தடை ஏதும் இல்லை.
6. நீர்வளம் மிக்க விளைநிலங்களை கையகப்படுத்த
இருந்த தடை விலக்கிக்கொள்ளப்படுகிறது.
7. இரண்டாண்டுகளுக்குள் இழப்பீட்டுத் தொகை
வழங்கவேண்டும் என்றவிதி தளர்த்தப்படுகிறது.
8. இதுகுறித்து எந்தவிதமான முறையீட்டுக்கும்
நீதிமன்றத்தை அணுகமுடியாது.
மொத்தத்தில்,
நீங்கள் போட்டிருக்கும் வேஷ்டி சட்டை ஒரு பெருமுதலாளிக்குப்
பிடித்திருந்தால்,
நீங்கள் எந்தக்கேள்வியும் கேட்காமல்
கழட்டிக்கொடுத்துவிட்டு,
கையை வைத்து மறைத்துக்கொண்டு
வீட்டுக்கு ஓடிவிடவேண்டும்.
அதை, அவன் போட்டுக்கொள்கிறானா,
வண்டி துடைக்க வைத்துக்கொள்கிறானா
என்பதெல்லாம் உங்களுக்குத் தேவையில்லாதது என்பதைவிட, உரிமையில்லாத விஷயம்
என்பதுதான் இந்தச் சட்டம் சொல்வது.
India's per capita
availability of agricultural land has shrunk to 0.3 hectare per farmer compared
to over 11 hectares in the developed world.
(இந்தியாவில், ஒரு குடிமகனுக்கான விலை
நிலம், 0.3 ஹெக்டேர் அளவுக்கு சுருங்கியிருக்கிறது, இது, வளர்ந்த நாடுகளில், 11 ஹெக்டேர் என்ற அளவில் இருக்கிறது.)
At the same time
population has more than doubled since 1970s to 1122 million, putting India's
food security in question.
(அதே நேரத்தில், இந்தியாவின் ஜனத்தொகை
1970 லிருந்து இரண்டு மடங்காகி, நம் உணவுப் பாதுகாப்பை
கேள்விக்குறி ஆக்கியிருக்கிறது!)
The per capita
consumption of food has increased since independence, but the country still
compares poorly when it comes to nutrition intake.
(உணவு உட்கொள்ளும் அளவு சுதந்திரத்துக்குப்பின்
உயர்ந்திருந்தாலும், சத்துள்ள உணவு என்பதில் நம் நாடு மிகவும்
பின்தங்கியே உள்ளது!)
இவை, பாராளுமன்றத்தில், அன்றைய விவசாயத்துறை அமைச்சர் சரத் பவார் சமர்ப்பித்த அதிகாரப்பூர்வமான அறிக்கையின் சில விபரங்கள்!
ஜனத்தொகைக்கு ஏற்ற விளைநிலங்களின்
பட்டியலில், ஒரு சுவாரஸ்யமான ஒப்பீடு.
நாடு
|
ஒரு மனிதனுக்கு விவசாய நிலம், ஹெக்டேரில்
|
ஆஸ்திரேலியா
|
2.07
|
கனடா
|
1.32
|
அமெரிக்கா
|
0.49
|
தென்னாப்பிரிக்கா
|
0.23
|
தாய்லாந்து
|
0.3
|
இங்கிலாந்து
|
0.1
|
சவூதி அரேபியா
|
0.11
|
எத்தியோப்பியா
|
0.17
|
இந்தியா
|
0.13
|
ஜப்பான்
|
0.03
|
மலேசியா
|
0.03
|
சிங்கப்பூர்
|
0
|
இது 2012 ம் வருட ஒப்பீடு.
இது இப்போது சுருங்கியிருக்குமா, வளர்ந்திருக்குமா என்பதை, உங்கள் யூகத்துக்கே விட்டுவிடுகிறேன்.
இப்படியிருக்கும்
நிலையில், இந்தச் சட்டம், பசியோடு காத்திருக்கும்
பணமுதலைகளிடம் நம் நலிந்த விவசாயிகளை சிக்க வைக்கத் துடிக்கிறது.
இந்த சட்டத்தை
முதலில் ஆதரித்துக் குரல் கொடுத்தவர்கள் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் என்பதும்
கவனிக்கத் தக்கது.
கேரளத்தில் அடித்து
விரட்டப்பட்ட கோகோகோலா கம்பெனிக்கு பெருந்துறையில் ரத்தினக் கம்பளம் விரித்ததும்,
நோக்கியா செய்த நம்பிக்கை துரோகம் கண்டுகொள்ளாமல் போனதும்,
விளைநிலங்களை வளைத்துப்போட்டு, தரிசாக்கிப் பின் பிளாட் போடும் அரசியல் முதலைகள் கட்சிப் பாகுபாடின்றி நிறைந்திருப்பதும்,
விளைநிலங்களை வளைத்துப்போட்டு, தரிசாக்கிப் பின் பிளாட் போடும் அரசியல் முதலைகள் கட்சிப் பாகுபாடின்றி நிறைந்திருப்பதும்,
தமிழகத்தை இந்தச் சட்டம் எப்படி பாதிக்கும் என்பதற்கு கவலை தரும் காரணிகள்.
வங்காளத்தில் அடித்து
விரட்டப்பட்ட நானோ கார் தொழிற்சாலையை குஜராத்துக்கு வலிந்து இழுத்துவந்தவர் இன்றைய
பாரதப் பிரதமர்.
அந்த நானோ கார்
முயற்சி தோல்வி என்று டாடா இப்போது திருவாய் மலர்ந்திருக்கிறார்.
ஒரிசாவில் வேதாந்தா
நிறுவனத்தின் விதி மீறல்கள் குறித்து எழுத ஆரம்பித்தால் அது பல கதைகளாய் விரியும்.
தொழிலதிபர்களின்
அடிவருடிகளாய் அரசியல்வாதிகள் இருக்கும் நாட்டில் இந்த சட்டத்திருத்தம், குரங்கு கையில் எரியும் கொள்ளியைக் கொடுப்பது போல!
நிலம்
கொடுப்பவருக்கும், அங்கிருக்கும் விவசாயத் தொழிலாளர்களுக்கும்
வீட்டுக்கு ஒருவருக்கு வேலை என்பது இன்னொரு ஏமாற்றுவேலை.
குடும்பமே வயல்வேலை
செய்யும் இடத்தில், ஒருவருக்கு மட்டும் அவரது படிப்பறிவை வைத்து
அடிமட்ட ஊழியர் வேலை கொடுப்பது என்னவிதமான இழப்பீடு?
இதிலும் எத்தனை
குளறுபடிகள் செய்யமுடியும் என்பதற்கு நோக்கியாவே உதாரணம்.
இத்தனை
வில்லங்கத்தோடு இந்த அவசரச் சட்டத்தை ஏன் விவாதமே இன்றி நிறைவேற்றத் துடிக்கிறது
மத்திய அரசு என்பது, அம்பானிகளுக்கும் அதானிகளுக்குமே வெளிச்சம்.
இதை ஊருக்குமுன்
ஆதரிக்க அதிமுக வுக்கு என்ன அவசியம் என்பதற்கு விளக்கமே தேவையில்லை.
தேர்தலின்போது, பிரதமர் வேட்பாளர் என்று பிரகடனப் படுத்தப்பட்ட தானைத் தலைவி, பாஜக கூட்டணிக் கட்சிகளே ஆதரிக்க மறுத்து விளக்கம் கேட்டுக் கொடிபிடிக்கும்
சட்டத்தை, ஊருக்குமுந்திப் போய் தாங்கிப் பிடிக்க நேர்ந்தது
அப்பட்டமான சுயநல பேரம்.
ஏற்கனவே, விவசாயம் மரித்துவருகிறது.
இந்த நிலையில்,
இது குழிக்குள் தள்ளி
விவசாயி தலையில் மண்ணைப் போடும் சட்டம்.
இதற்கு எதிராக
வாய் திறக்க யோசிக்கும் நாம்,
அநேகமாக, பசிக்கும்போது, உணவுக்கு பதிலாக, பன்னாட்டு நிறுவனங்கள் தயாரித்துக் கொடுக்கும்
வயிறு நிரப்பி மாத்திரைகளுக்கும்,
பாட்டிலில் அடைத்து விற்கும்
சாயத் தண்ணீருக்கும் மட்டுமே வாய் திறக்க நேரும்!
எதற்கும் கொஞ்சம்
அரிசி, பருப்பு காய்கறிகளை புகைப்படம் எடுத்து நம் ஸ்மார்ட்
போன்களில் சேமித்து வைப்போம்.
நம் பேரன் பேத்திகளுக்குக் காட்டிக் கதை சொல்ல
உதவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக