ஒரு
மிகப்பிரபலமான பெண் ID இலிருந்து
நேற்று (26.4.2015 ஞாயிறு) ஒரு TL
காண நேர்ந்தது.
ஷாக் வேல்யுவுக்காகவோ,
கவன ஈர்ப்புக்காகவோ (இந்த இரண்டு
தேவைகளையும் அந்த ID கடந்து
பலநாட்கள் ஆகிறது) சமயங்களில் போடும் பதிவுகளையும் மீறி பல கவிதைத்தனமான பதிவுகள்
அதில் வருவதுண்டு.
அந்த TLக்கு எதிர்வினையாக எழுத நினைத்து,
பின் அது தேவையற்றது,
வழக்கமான நம் பாணியில் அந்தக்கருத்தை ஒட்டி ஏதோ எழுதி, நம்மை விரும்பியோ, விரும்பாமலோ cc வரும் கட்டாயத்துக்காகப் படிக்கும் தலையெழுத்துக் கொண்ட ஒரு சிறு குழுவுடன்
பகிர்ந்துகொள்ள முடிவு செய்து எழுதும் பதிவு இது!
பெண்களுக்கு
- ஒரு ஆணின் பார்வையில்!
டிஸ்கி ஏதும் இல்லை- எல்லாப் பெண்களுக்கும் -
ட்விட்டரில் இருக்கும் என் மகள் உட்பட!
ஆணுக்குப்
பெண் மேலும் பெண்ணுக்கு ஆண் மேலும் பாலினக்கவர்ச்சி தவிர வேறு நட்போ, மரியாதையோ சாத்தியமே இல்லை.
அதிலும், ஆண், படுக்கை ஒன்றே நோக்கமாகக்கொண்டு, மகாத்மா வேடம் வரை பூண்டு எந்நேரமும் காம வெறியில் அலையும் ஜந்து.
அவனுக்குப் பெண் என்பவள் அவன் வக்கிர இச்சைகளை எப்பாடு பட்டேனும் தீர்த்துக்கொள்ள தேவைப்படும் ஒரு போகப்பொருள்.
பெண்ணும்
ஒன்றும் உயர்ந்தவள் அல்ல. அவளுக்கும் காம இச்சைகள் தவிர ஆணுடன் பகிர்ந்துகொள்ள
ஏதுமில்லை.
அப்படி
ஒரு ஆண் பின்னால் போவதைவிட, சுய
இன்பம் காணுதல் மேலானது மட்டுமல்ல. 18 வயதுக்குமேல் அது அவசியமானதும் கூட!
இது, பெண்களுக்கு, பெண் பெயரால்
பிரபலமான ஒருவர் சொல்லும் செய்தியின் சாரம் - என் கீழான ஆண் புத்திக்கு எட்டிய
வரையில்.
காதல் புனிதமானது
என்று காதலைத் தாங்கிப்பிடிக்க எனக்கு விருப்பமில்லை! என் சான்றிதழ் காதலுக்குத்
தேவையில்லை!
உருகி உருகிக்
காதல் பதிவுகள் எழுதியவர்களுக்கே இன்று காதல் என்பது காமம் மட்டும் தீர்க்கும்
கருமமாய்ப் படும்போது, அதில் நம் கருத்துக்கு வேலை இல்லை.
ஆனால் ஒட்டுமொத்த
ஆணும், இருபத்தைந்து வயதுப்பெண்ணும் என்ற பொதுப்படைக்
கருத்து வியக்கவைக்கிறது. என்னவொரு தெளிவு, இந்தக் காமாந்திர
ஆண்களைப்பற்றியும், காமம் தணிக்க வழி தெரியாத பெண்களைப்பற்றியும்!
இந்தப் பார்வை
முற்றிலும் தவறு என்ற புரிதலுடனும், எனக்கிருக்கும்
அரை நூற்றாண்டு “ஆணிய” அனுபவத்துடனும்
இது!
///////////////////////////////////
ஆணும் பெண்ணும்
வேறுவேறு கிரகவாசிகள் அல்ல. ஒருவரை ஒருவர் அடித்துத் தின்னப்பார்க்கும்
விரோதிகளும் அல்ல.
ஒரு சின்ன க்ரோமோசோம்
வேறுபாட்டால், இனவிருத்திக்குத் தேவையாக இருவேறு பால்களாகப்
பிறந்த சக உயிரினங்கள்.
மனிதன் ஏதோ அறிந்து, எழுத ஆரம்பித்த காலத்திலிருந்தே காதல் என்பது காமத்திலிருந்து
வேறுபடுத்தியே பார்க்கப்பட்டு வந்துள்ளது.
மட்டுமல்லாமல்,
காமம் என்பதில் காதல்
இல்லை என்று வன்மையாக மறுத்த எந்த ஆணும் பெண்ணும்,
காதல் என்பதில்
காமமே இல்லை என்று மறுத்ததில்லை!
ஒரு பெண்ணுக்கும்
ஆணுக்குமான உடல், இனக்கவர்ச்சியும் இணைந்த நட்பின் முதிர்ச்சியே காதல்.
இல்லையேல், நட்பைத் தாண்டி ஒரு வார்த்தை தேவையே இல்லை அந்த உறவைக் குறிக்க!
காதல், பள்ளிப் பருவத்திலோ, அல்லது கல்லூரிக் காலத்திலோ வருகையில் காமம், இனக்கவர்ச்சி சார்ந்து மட்டுமே வரமுடியும்.
25 வயதுக்கு மேல் வருகையில் மட்டுமே அது
வாழ்க்கைத் துணை என்ற எண்ணத்தையும்,
திருமணம், எதிர்காலம் என்ற பல புரிதல்களுடன், இவன்/ இவள் நம்மோடு
வாழ்நாள் முழுக்கத் துணைவர சரியான இணை என்பதைப் புரிந்துகொள்ளும் பக்குவத்தோடு
வரும்.
இன்றைய வாழ்க்கைச்
சூழல் அன்றுபோல் இல்லாமல், ஓரளவுக்கு ஆணையும் பெண்ணையும் நட்போடு பழக
அனுமதித்திருக்கிறது!
அந்த நட்பு, காலம் முழுவதும் தொடரவும்,
காமம் உட்பட எல்லாம் பகிரவும்
இவர்தான் ஏற்றவர் என்று அறியும் பக்குவத்தையும், அந்தப் பழக்கமும், அது தந்த புரிதலும் தரும்.
மேலும் அப்படி ஒருவரை
மத, ஜாதி,
இன மொழி மாறுபாடுகளை மீறியும்
தேர்ந்தெடுக்க அவர் கொண்ட கல்வியும், அவர் வளர்ந்த சூழலும்
கண்டிப்பாக உதவும்.
அப்படி இல்லாமல்
வெறும் காமத்தை உங்கள் விரலின் நுனியில் தேக்கிக்கொண்டுதான் உங்கள்
எதிர்ப்பாலினத்தை அணுகமுடியும் என்றால், உங்கள் கல்வியும், வளர்ப்பும் அவ்வளவு உயர்வானதில்லை என்றுதான் பொருள்.
காமம் என்னும் ஆயுதம் தாங்கிப் பெண் வேட்டையாடும்
ஆணினத்தைச் சேர்ந்த என் பார்வையில்,
இன்றைய பெண்கள் செய்ய வேண்டியவை.
1. முதலில், சொந்தக்காலில் நின்று
உங்களை நீங்களே பொருளாதார ரீதியாகக் காப்பாற்றிக்கொள்ளும், தாய் தகப்பன் உட்பட யாரையும் சார்ந்து நிற்க வேண்டாத, நிலைக்கு உயர்த்திக்கொள்ளுங்கள். அதற்கு, கல்வி என்ற வலுவான
ஆயுதத்தை முடிந்தவரை கைக்கொள்ளுங்கள்.
2. ஆண் என்பவன் உங்கள் ரட்சகனுமல்ல, விரோதியுமல்ல - வெறும்
உடற்கூறால் மாறுபட்ட சக உயிரினம் என்பதை உணருங்கள்.
3. உங்களை ஜஸ்ட் presentable என்ற
நிலைக்குமேல் அலங்கரித்துக்கொள்ளும் அடிமை நிலையை மாற்றுங்கள். அது ஒரு ஆணை
என்னைப்பார் என்று கெஞ்சும் கவன ஈர்ப்பு மட்டுமல்ல, என் சொத்து இந்த
உடல்தான் என்பதை நீங்களே ஒப்புக்கொள்ளும் வாக்குமூலம் என்பதை உணருங்கள்.
4. உங்கள் முகமோ, அழகோ, நிறமோ உங்களுக்கு அறிவைத் தருவதில்லை. இவற்றால் வராத அந்த அறிவே உங்களுக்கு
வேலை வாங்கித் தரும் உண்மைக் காரணியாகும் என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள்.
உங்கள் நிறமும், முகப்பொலிவும் உங்களை வாழ்வில் உயர்த்தும் என்ற வணிக விபச்சார விளம்பரங்களைப் புறம்
தள்ளுங்கள்.
நிச்சயம் உங்கள்
நிறமோ, அழகோ,
ஒருமுறை உங்களைத் திரும்பிப் பார்க்கவைக்கலாம். ஆனால் உங்கள் பண்பும் நடத்தையுமே மற்றவரை நிரந்தரமாக
ஈர்க்கும்.
5. உங்கள் அலுவலிடத்திலும், வீட்டிலும் உங்கள் சம ஆற்றலுள்ள ஆணுக்கு நீங்கள் எந்த வகையிலும்
தாழ்ந்தவரில்லை என்பதை தெள்ளத்தெளிவாக எல்லா வாய்ப்புகளிலும் உணர்த்துங்கள்.
6. பெண் என்பதற்காக வலிந்து தரப்படும் சலுகைகளை, உங்களால் முடிந்தவரை புறக்கணியுங்கள். அதேசமயம், ஒரு பெண் என்பதற்காக மட்டும்
மறுக்கப்படும் மறுதலிக்கப்படும் உரிமைகளை, பதவி உயர்வுகளை, சம்பளத்தைத் தயக்கமே இல்லாமல் போராடிப் பெறுங்கள்.
“ஆணுக்குப்பெண் இளைப்பில்லை காண்” என்று படித்ததை உண்மை என்று முதலில் நீங்கள் நம்புங்கள்.
7. இந்த உடை அணிந்தால் ஆண் உங்கள்மேல் வந்து விழுவான், இந்த நிறம் இருந்தால் உங்களுக்கு வேலை கிடைக்கும் என்றவகை விளம்பரங்களையும், பெண்கள் என்றாலே வஞ்சகிகள் என்று பேசும் சீரியல்களையும் முற்றாக ஒதுக்கும்
மனநிலையைப் பெறுங்கள்.
8. உங்கள் முகமும், நிறமும், சுருக்கமில்லாத தோலும் எடுப்பான மார்பும்தான் உங்களை ஒரு ஆணை அடைய உதவும்
என்றால், அவை எல்லாமே கட்டாயம், காலப்போக்கில்
மாறும்போது அந்த ஆண் உங்களை என்ன காரணத்துக்காக சகித்துக்கொள்ளுவான் என்பதை சற்றே
யோசியுங்கள்!
9. எப்போதும் ஒரு காமம் தீர்க்கும் வடிகாலாக
நீங்கள் ஒரு ஆணைப் பார்ப்பதையும்,
உங்களை ஒருவன் அப்படிப்
பார்ப்பதையும் அனுமதிக்காதீர்கள்.
10. உங்களைப்போலவே, புரிதலுக்கும் அன்புக்கும் ஏங்கும் ஒரு சக ஜீவனாகவே
ஆணைப் பாருங்கள். உங்கள் மனச் சலனங்களை உங்கள் பெற்றோரிடமும், உங்களைப் புரிந்துகொள்வோரிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
ஆரம்பத்தில் இவை
எதிர்ப்பையோ, அதிர்வையோ ஏற்படுத்தினாலும், உங்கள் நியாயங்களை அவர்கள் புரிந்துகொள்ளுமளவு உயர்வானவை ஆக்குங்கள்.
11. உங்களுக்குக் கூறப்படும் அறிவுரைகளையும், உங்கள் நியாயங்களுக்கான மறுதலிப்புக்களையும், அவற்றின் அன்பின் பின்னணியைக் கருத்தில் கொண்டு மதிப்பிடுங்கள்.
12. ஜாக்கிரதை உணர்ச்சி என்பது பெண்களுக்கு
இயல்பாகவே உள்ள ஒன்று. அதன் எல்லைகளை மீறி எல்லோரையும், எல்லாவற்றையும் எதிர்மறையாகவே எதிர்கொள்ளும் மனநிலையை
வளர்த்துக்கொள்ளாதீர்கள்.
13. சில மில்லிகிராம் சதை இடமாற்றம் ஆணையும்
பெண்ணையும் ஒருவருக்கொருவர் பார்த்து சந்தேகமோ, வெறியோ, வெறுப்போ கொள்ளவைக்கும் ஆதிமனித மனநிலையிலிருந்து நாம் விடுபட்டுக்கொண்டிருப்பதை
உணருங்கள்
14. எங்காவது நடக்கும் சில விரும்பத்தகாத
அசிங்கங்களை எல்லோர் மீதும் பொருத்திப் பார்க்காதீர்கள்!
15. நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிமுறைகள்
ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவானவையே.
உங்கள் சுதந்திரத்தையும், சமத்துவத்தையும் உங்கள் அறிவிலும் திறமையிலும் உழைப்பிலும் தேடுங்கள்!
16. கிளுகிளுப்புக் கதையோ, பூச்சாண்டி கதையோ சொல்லி,
15 நிமிடங்கள் விரல் நுனியில்
இன்பம் தேடச்சொல்லும் அறிவுரைகளைப் புறம் தள்ளி, அந்த சில நிமிடங்களைத்
தாண்டியுள்ள மீதி 23.45 மணிநேரத்தை உங்களை உயர்த்தச் செலவிடுங்கள்.
17. காதலித்துத் திருமணம் புரிய நேர்ந்தாலோ, பெற்றவர் உங்கள் சம்மதத்துடன் திருமணம் முடிக்க
நேர்ந்தாலோ, அந்த உறவுக்கு உண்மையாய் இருங்கள்! உங்கள்
இணையும் அவ்வாறே இருக்க வற்புறுத்துங்கள்.
கணவன் மனைவி உறவில்
மட்டுமல்ல, எல்லா உறவிலும் நேர்மையோடிருங்கள்.
உங்கள் வாழ்வு வளமாய்,
மகிழ்வாய் இருப்பதை நீங்களே உணர்வீர்கள்!
அச்சில் பதித்து, ஒவ்வொரு வளரும்
பதிலளிநீக்குபெண்ணிடம் தரவேண்டிய அவசிய பதிவு! அருமை!
தரவேண்டிய
அச்சில் பதித்து, ஒவ்வொரு வளரும்
பதிலளிநீக்குபெண்ணிடம் தரவேண்டிய அவசிய பதிவு! அருமை!
தரவேண்டிய