புதன், 13 மே, 2015

ஜெ விடுதலை - ஒரு குதர்க்க சிந்தனை!

இப்படி இருக்காது என்று தோன்றுகிறதா?எனக்கென்னவோ, இவ்வளவு அனுபவம் வாய்ந்த ஒரு உயர் நீதிமன்ற நீதிபதி இப்படி ஓர் அப்பட்டமான  தவறைத் தெரியாமல் செய்திருப்பார் என்று தோன்றவில்லை!
அவர் தெரிந்தே இதைச் செய்தார் என்ற நோக்கில் சிந்திக்கையில் என் மனதுக்குப் பட்டதை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

இது நிச்சயம் ஒரு குதர்க்கவாதமே!

ஆனால், நம் பண நாயகத்தில் எதுவும் சாத்தியம் என்பதால் இந்த யோசனை.

ஜெ விடுதலைக்கு சட்டப்பூர்வமாக ஏதும் வாய்ப்பு இல்லை என்பது குமாரசாமிக்கும் தெரிந்து, "எப்படியாவது" விடுதலை செய்ய நிர்பந்திக்கப் படுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.

(ஏற்கனவே, ஆச்சாரியா பா ஜ க அரசால் தனக்கு நேர்ந்த நிர்பந்தங்களை புத்தகமாகவே எழுதியிருக்கிறார்)

எனவே, இல்லாத, முடியாத, விடுதலைக்கு வாய்ப்பு, தவறுதலான விடுதலையே.

நாளை உச்ச நீதிமன்றம் இந்த அறியாமல் செய்யப்பட்ட பிழைக்கு, கண்டனம் மட்டுமே தெரிவிக்க முடியுமே ஒழிய, நீதிபதி குமாரசாமியை தண்டிக்க முடியாது. 
அந்த சமயத்தில் அவர் ஓய்வுபெற்று எங்காவது சந்தோஷமாக செட்டில் ஆகியிருப்பார்!

என் அறிவுக்குப் புரிந்தவரை, சட்டப்படி ஜெயலலிதா இப்போது விடுவிக்கப்பட்டுவிட்டார். 
இனி, கர்நாடக அரசு அப்பீலுக்குப் போவது என்று முடிவெடுத்து, அதை தொண்ணூறு நாட்களுக்குள் செய்யுமானாலும், ஜாமீன் கொடுத்த அதே விரைவில் அதை உச்ச நீதிமன்றம் அணுகும் என்று உறுதி சொல்லமுடியாது.

ஏற்கனவே லாலு உட்பட பல அப்பீல் மனுக்கள் நிலுவையில் உள்ளன.
எனவே,உச்ச நீதிமன்றம்  சிலவருடங்கள் தாமதப் படுத்துவதை சட்டப்படி யாரும் தடுக்க முடியாது.

கடைசியாக வந்த தீர்ப்பின்படி, ஜெயலலிதா, நிரபராதியாகவே வலம் வருவார். 

அவர் முதல்வராக எந்தத் தடையும் இல்லை.

இப்போது அவர் சட்டசபையைக் கலைத்து, பொதுத் தேர்தலுக்குக் கோரலாம்.

இந்த இடைப்பட்ட காலத்தில், 2G வழக்கை விரைந்து முடித்து, தேர்தல் அறிவிப்புக்குமுன், "தேவையான" தீர்ப்பை வெளியிடச் செய்வது ஒன்றும் மோடிமஸ்தான் அரசுக்கு முடியாத செயல் இல்லை.

ஏற்கனவே பல்வேறு குழப்பங்களால் பாதாளத்தில் இருக்கும் திமுகவை இதன்மூலம் தலை தூக்கவிடாமல் அடிக்கலாம்.

அந்தத் தேர்தலில் வெல்லும் அதிமுக இன்னொரு ஐந்து வருடங்களுக்கு ஆட்சியில் இருக்கும். 
ஜெ தலைமையிலோ, அல்லது ஏதாவது ஒரு அடிமை தலைமையிலோ!

உச்ச நீதிமன்ற தீர்ப்பு வருவதற்குள், தெனாலிராமன் சொன்ன குதிரையே பறக்கலாம்!

இதற்கு, சன்மானம், M.P.க்கள் கண்மூடித்தனமான ஆதரவும்
ஒரு கை விரல் எண்ணிக்கை அளவு MLA சீட்டும்!

மக்களுக்கு? 
இருக்கவே இருக்கிறது இலவச பீரோ கட்டில்!
காசா இல்லை சாராய முதலாளிகளிடம்?

இது சாத்தியம் இல்லை என்று படுகிறதா நண்பர்களே?கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக