தலையா, தளபதியா?
விஜயாவுக்கும்,
அஜய்க்கும் அன்று காலைதான் திருமணம்
முடிந்திருந்தது!
பெற்றவர்கள் பார்த்துச் செய்துவைத்த திருமணம் ஆனாலும் ஒருவர் புகைப்படம் பார்த்த மற்றொருவர் கிறங்கிப்போய் ஏறத்தாழ சொர்க்கத்தில் மிதந்துகொண்டிருந்தார்கள்!
அஜய் அமெரிக்காவில்
கை நிறைய சம்பாதிக்கும் எஞ்சினீயர்.
விஜயா குவைத் வாழ் சாப்ட்வேர்
எஞ்சினீயர்.
இருவரும்
ஒருவருக்காகவே மற்றவர் படைக்கப்பட்டதுபோல அத்தனை பொருத்தமான அழகு.
நகரின் பிரபலமான
ஐந்து நட்சத்திர ஹோட்டலில் முதலிரவுக்கான ஏற்பாடு!
சுவீட் ரூம் தேவலோகம்போல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
சுவீட் ரூம் தேவலோகம்போல் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அறைக்கதவை தாளிட்ட
விஜயா, “கொஞ்சநேரம்
பேசிக்கொண்டிருக்கலாமே ப்ளீஸ்” என்றாள் கொஞ்சலாக! - அஜய் கண்ணில் வழிந்த காமத்தைக் காணாதவள் போல்!
சிறிதுநேரம் ஒருவரைப்
பற்றி மற்றவர் விசாரித்து, பின்
மெல்ல, ஆவலோடு அவள் கையைப் பற்றிய
அவன் கேட்டான்
உனக்கு எந்த ஹீரோ
பிடிக்கும்!
சட்டென்று தயங்காமல்
அவள் சொன்னாள் - அஜீத்!
அவன் முகம் மெல்ல
இருண்டது
அதை கவனிக்காமல் அவள்
கேட்டாள் - உங்களுக்கு?
கொஞ்சம் வேகமாகவே
பதில் வந்தது- விஜய்தான் எப்போதும் என்
உயிர்.
தீயைத் தொட்டதுபோல்
கையை உருவிக்கொண்ட அவள் அவனை ஒரு வினோதமான ஜந்துவைப் பார்ப்பதுபோல் பார்த்தாள்.
விஜய்யா? அவனெல்லாம் ஒரு நடிகனா?
அவன் குரல்
உயர்ந்தது ------ குஞ்சு, உனக்கென்னடி தெரியும் விஜய்யைப் பற்றி?
டீயா?
-----------குஞ்சுதானே நீ, உன் புத்தி அப்படித்தான் இருக்கும்!
அறிவு கெட்டவளே
என்னைப் பற்றி எது வேண்டுமானாலும் பேசு. என் தளபதியை ஏதாவது சொன்னால் நான் மனுசனா
இருக்கமாட்டேன்!
போடா, இப்போ மாத்திரம் நீ மனுசனா என்ன, ஸ்கூல் பாய்!
என்னடி வாய் நீளுது?
அஜீத் பிடிக்கும்ன்னு வெட்கமில்லாமல்
சொல்லுற நீயெல்லாம் நல்ல குடும்பத்திலிருந்தா வந்திருக்கமுடியும் ?
போடா கேடு கெட்டவனே?
உனக்கு கல்யாணம் ஒரு கேடா? உங்க அம்மா எவ்வளவு கேவலமானவன்னு போய்ப் பாரு!
போடி நாயே, உங்க அப்பன் மாதிரி ஊர் மேயுற புத்தி எங்க
பரம்பரைக்கே கிடையாது!
நீ அமெரிக்காவுல
பிச்சைதானே எடுக்கிறாய் பரதேசி நாயே!
இன்னொரு தடவை ஏதாவது
பேசினா, உன் பல்லு உடையும்
பொறுக்கி மு---
-------------------------
--------------------------
பழம் நறுக்க வைத்த
கத்தி அவள் கையில், லைட் ஸ்டாண்ட்
அவன் கையில்!
சத்தம் கேட்டு
ஓடிவந்த ஹோட்டல் சிப்பந்திகள் கதவைத் தட்ட, மேற்கொண்டு அசம்பாவிதம் தடுக்கப்பட்டு,
மறுநாள் பரஸ்பர விவாகரத்து
கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது!
இது நடக்காதா என்ன?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக