விஷ்ணுப்ரியா - தற்கொலை?????
ஒரு ஜாதி சார்ந்த
கொலைக் குற்றத்தை (கோகுல்ராஜ்) விசாரித்துவந்த பெண் DSP, தற்கொலை செய்வதற்கு இரண்டு மணிநேரம் முன்புவரை மறியல்
போராட்டக்களத்தில் தன் கடமையைச் செய்கிறார்!
அதுவரை தோழிகளுடன்
வாட்ஸ் அப் தொடர்பில் இருக்கிறார்!
அதன்பின்,
தன் முகாம் வசிப்பிடத்துக்குப்
போய் “பன்னிரெண்டு பக்கங்களுக்கு” கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கு மாட்டி செத்துப்போகிறார்!
மூன்றாம்தர தமிழ்
சினிமாவில் கூட இவ்வளவு லாஜிக் மீறல்கள் இருக்காது!
கொங்கு மண்டலத்தில்
வலிமையோடு ஆட்டம்போடும் ஆதிக்க ஜாதி பற்றி அறிமுகம் இல்லாதவர்களுக்கு மட்டும் - அடுத்த
பத்தி!
அதிகாரிகள் மட்டத்திலும், காவல் துறை உயர் அதிகாரிகளிலும், அரசியல்தலைவர்களிலும் நம்ம ஆள் என்று இருந்த நிலை இன்று நீதித்துறை வரை இந்த ஜாதியினர்
செய்யும் அதிகார துஷ்ப்ரயோகம் அளவற்றது!
என் கண்ணெதிரே, ஒரு பணக்காரர், ஒரு செஷன்ஸ் ஜட்ஜுக்கு
போன் செய்து, இன்னைக்கு ...... கேஸ்
உன் கோர்ட்டுக்கு வருது மாப்ள! அவன் நம்ப ஆள் மேல கைய வச்சுட்டான்! நான் சொல்றவரைக்கும்
ஜாமீன் கொடுக்காதே என்று பேசியதை நான் அறிவேன்!
(அப்படித்தான் ஆயிற்று -
நீதி!)
இந்த ஆதிக்க ஜாதி பற்றிப்பேச
எல்லோருக்குமே பயம்- காரணம் அவர்களின் பணம், ஒற்றுமை மற்றும் முரட்டுத்தனம்!
தனியரசுகளும், யுவராஜாக்களும், காவல், நீதித்துறை கவசம் இல்லாமல்
இத்தனை ஆட்டம் போட முடியாது!
எனவே, விஷ்ணுப்ரியா சாகாமல்
"உயிரைக்கொடுத்து" உழைத்திருந்தாலும் இந்த கேஸ் முடிந்திருக்கப்போவதில்லை!
நிச்சயம் ஒரு விரும்பத்தகாத உண்மையை அவர் கண்டுபிடித்திருக்க வேண்டும்!
அதுவே, அவர் தற்"கொலை"க்குக்
காரணமாக இருக்க முடியும்!
இது தற்கொலை என்று நம்பமுடியாததற்குக காரணங்கள்!
1. உளவியல் ரீதியாக, தற்கொலை செய்துகொள்பவர்
நிச்சயம் ஒரு தடுமாற்ற மனநிலையில் இருப்பார்! ஆனால் இவர், மிகத் தெளிந்த மனநிலையில் இருந்திருக்கிறார் - சம்பவம் நடக்கும்வரை!
2. சூசைட் நோட் என்று தலைப்பிட்டு, அதை அழகாக அண்டர்லைன் செய்து, கடிதம் ஆரம்பிக்கிறது!
3. மிகத் தெளிவான பிசிறில்லாத
கையெழுத்து - ஒரு அடித்தல் திருத்தல் இல்லாத நிதான, அழகிய கோர்வை!
4. தமிங்கிலிஷ், ஆங்கிலம் என்று பயணப்படும்
கட்டுரை கடைசிவரை தற்கொலைக்கான காரணத்தை சொல்லவே இல்லை!
5. ஆனால், இதற்கும் நான் விசாரிக்கும்
கொலைக் கேசுக்கும் சம்பந்தம் இல்லை, அப்படிச் சொல்வது முட்டாள்தனம். உயர் அதிகாரிகள் ஏதும் தொந்தரவு செய்யவில்லை, போலீசுடன் பிரச்சனை செய்யவேண்டாம், போஸ்ட்மார்ட்டம் முடிந்தவுடன்
அமைதியாக உடலை வாங்கிச் சென்றுவிடவும். பத்திரிக்கைகளிடம் ஏதுவும் பேசவேண்டாம் என்று
அடுக்கடுக்கான வேண்டுதல்கள்!
6. குடும்பத்தில் எல்லோரையும்
விசாரிக்கும் கடிதம் யாரையும் குறை சொல்லவில்லை! எனவே, சொந்தக் காரணங்களும் இல்லை!
7. இப்படிக் காரணமே இல்லாமல் தற்கொலை செய்துகொண்டால் மனநிலை
பிறழ்ந்தவராகத்தான் இருக்க முடியும். -ஆனால் அந்தக் கடிதத்தின் நடை அப்படிச் சொல்லவில்லை!
8. அவரது தோழியும் இன்னொரு
காவல்துறை உயர் அதிகாரி (DSP)யுமான மகேஸ்வரி, விஷ்ணுப்ரியா ஒரு ரூபாய்
லஞ்சம் வாங்கியதாக நிரூபித்தாலும் பதவியை ராஜினாமா செய்து விடுகிறேன் என்று சொல்லியிருக்கிறார்!
9. அவரது தோழிகள், குடும்ப உறுப்பினர்கள்
அனைவரும், அவர் நல்ல மனநிலையில் இருந்ததாகவும், தற்கொலை செய்துகொள்ளுமளவு
கோழையல்ல என்றும் உறுதியாகச் சொல்கிறார்கள்!
10. அவருக்கு உயர் அதிகாரிகளிடமிருந்து
அழுத்தம் இருந்ததாக மகேஸ்வரி இன்றைய நாளிதழில் உறுதியாகச் சொல்கிறார்!
இத்தனைக்குப் பிறகும் அதை தற்கொலை - அதுவும் காரணமே இல்லாத தற்கொலை என்று நம்புவோம்!
சிபிஐ விசாரணை கேட்டதை திட்டவட்டமாக மறுத்த அன்னையின் ஆட்சி (அவர்தான் காவல்துறைக்கு
அமைச்சர்) சிபிசிஐடி விசாரணைக்கு "பெருந்தன்மையாக" உத்தரவிடுகிறது!
சிபிசிஐடி தமிழக காவல்துறையின்
இன்னொரு பிரிவு! அவ்வளவே!
அவர்கள் தங்கள் சகாக்கள் மீது குற்றம் இருக்கிறது என்று அறிக்கை
தருவார்கள் என்று நம்புவது உங்கள் சொந்த விருப்பம்!
திருச்செந்தூர் வைரவேல் காலத்திலிருந்து
சிபிசிஐடி விசாரணையின் போக்கையும் முடிவையும் அறிந்தவர்களுக்கு இது எத்தனை பெரிய
கண்துடைப்பு என்று உறுதியாகத் தெரியும்!
அந்த சிபிசிஐடி குழுவில் இருவர் ஏற்கனவே அங்கு பணி புரிந்தவர்கள் என்பது இன்னொரு
நல்ல தகவல்!
நாமக்கல் எஸ்பி நேற்றே திருவாய் மலர்ந்துவிட்டார்- விஷ்ணுப்ரியாவுக்கு துறை ரீதியில்
எந்த அழுத்தமும் இல்லை என்று!
இனி நடக்கப்போகும் நாடகங்களுக்கு நல்ல ஆரம்பம்!
மகேஸ்வரி மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்! அவரை கைது செய்யவும்
அவர்களுக்கு முகாந்திரம் இருக்கிறது!
எனவே, மகேஸ்வரி தற்கொலை செய்துகொள்ளத்
தேவையான சட்டப்படியான காரணங்கள் இருக்கின்றன!
அதனால் அவர் ஒரு பொருட்டில்லை!
அடுத்த சில நாட்களில் அட்டாக் பாண்டியோடு ஸ்டாலின் பேசியது என்ன? - திடுக்கிடும் தகவல்கள்!!!
- என்று எட்டுக்காலம் செய்திகள்
போட ஊடகங்கள் ரெடி!
அதன் பின்னணியைப் பொறுத்தே திமுகவின் அடுத்த நிலைப்பாடு அமையும்!
மற்ற கட்சிகளின் கூச்சலை யாரும் பொருட்படுத்தப்போவதில்லை!
ஷீனா போரா வழக்கிலும்,
நேற்றைய கிசுகிசுவிலும் இருந்த கிளுகிளுப்பான ஒற்றுமை இந்த வறட்டு சம்பவத்தில்
இல்லாததால் நாமும் இதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை!
வாழ்க நம் நெறிமுறைகள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக