நூறு ரூபாய்க்காக!
கோவை வ உ சி பார்க் அருகிலுள்ள டாமினோஸில் நடந்த ஒரு சிறு உரையாடல்!
தேனுங்கம்மணி,
இதென்னமோ பீச்சா ன்னு ஒன்னு
வட்டமா இருக்குமுங்களே, அது ரெண்டு குடுங்க!
சார், உங்களுக்கு என்ன பிட்ஸா வேணும்?
அதானுங்கம்மணி
அந்த வட்டமா ரொட்டியாட்டம் இருக்குமுங்களே
அதுதானுங்க!
சார், ஏதாவது கிண்டல் பண்றீங்களா?
அட, தேம்மணி, உன்னைய நானெதுக்கு கிண்டல்
பண்ணப் போறேன்?
எம்பட மவ நாளைக்கு அம்பேரிக்காவுல
இருந்து இன்னைக்கு ரவைக்கு வருது! அதுக்குப்
புடிக்குமுன்னு வாங்க வந்தனுங்க!
ஜார்ஜ், ப்ளீஸ் ஹேண்டில் திஸ் மேன்!
ஐயா, என்ன வேணுங்க?
தம்பி எனக்கு அந்த பீச்சா
ரொட்டி ரெண்டு வேணுமுங்க!
ஐயா அதுல நெறையா வெரைட்டி வருதுங்க,
உங்களுக்கு என்ன வேணும்?
நமக்கு
அந்த வட்டமா இருக்குமல்லங்க, கோழிக்கறித்
துண்டெல்லாம் போட்டு நல்லா சவ்வாட்டம்
வருமல்ல தம்பி, அதுல ரண்டு
குடுங்க!
ஐயா, உங்க போன்ல யாருகிட்டையாச்சும் கேட்டு என்ன வெரைட்டி வேணும்னு கேட்டுச் சொல்லுங்க!
எனக்கு
அதெல்லாம் பண்ணத் தெரியாது சாமி,
வாரத்துக்கு மூணு நாலுதடவை இது
அடிக்குமுங்க, இதா, இந்தப் பித்தான
அமுக்குனா, அதுக்குள்ளே இருந்து எம்பட மவ
பேசுமுங்க!
நீங்களே
நல்லதாப் பாத்துக் குடுங்க!
ஐயா, என்ன சைஸ் வேணும்ங்க?
அது நல்லாப் பெருசாவே குடுத்துருங்க!
பில் தொள்ளாயிரத்து அறுபது ரூபாய் வருமுங்க, பரவாயில்லைங்களா?
தெரியுமுங்க,
போனதடக்கா ரெண்டு வருசத்துக்கு முன்னால
வாங்குனப்போவே எட்டு நூறு ரூவா
ஆச்சுங்களே - இந்தாங்க ஆயரம் ரூவா! மீதி
குடுங்க!
ஐயா பில் போடணும், உங்க போன் நம்பர் சொல்லுங்க!
அந்தக்
கெரகமெல்லாம் எனக்குத் தெரியாது! இந்தாங்க நீங்களே பாத்துக்குங்க!
பரவாயில்லைங்க ஐயா, அப்படி உட்காருங்க, ரெடி ஆக ஒரு கால் மணி நேரம் ஆகும்!
ஒன்னு சொல்றந்தம்பி, கோவிச்சுக்காதீங்க,
ஒரு
மூட்ட
நெல்லு
கோட
இந்த
வெலைக்கு
விக்க
முடியாது
!
நீங்க ரண்டு ரொட்டிக்கு
அந்தக்
காசு
வாங்கறீங்க!
ஒரு கால் மணி நேரத்துக்குப்
பிறகு!
ஐயா, இந்தாங்க!
எங்கே,
தொறந்து காமி?
பாருங்க இதுதான் நீங்க கேட்டது!
அடக் கருமமே, இந்த எலவென்ன
இப்பிடித் தீஞ்சு கெடக்குது! இதத்
தின்னு பலகத்தான் அந்தப் புள்ள அத்தன
படிப்பு படிச்சுப் போட்டு அம்பேரிக்கா போச்சு
போல!
வாரந்தம்பி,
ரொம்ப டாங்க்சு!
இதன் காரணி!
மகளோடு நூறு ரூபாய் பந்தயம்!!
பின்னிட்ட உரையாடல்:
எங்கிட்ட ஒரு நூறு ரூபாய் பந்தயத்துக்கு இப்படியா செய்வே? உனக்கு கொஞ்சம்கூட ஒரு ஆடிட்டர்ன்னு நெனைப்பே இல்லையா?
எங்கிட்ட ஒரு நூறு ரூபாய் பந்தயத்துக்கு இப்படியா செய்வே? உனக்கு கொஞ்சம்கூட ஒரு ஆடிட்டர்ன்னு நெனைப்பே இல்லையா?
அப்பா,
கொஞ்சம் கூட உனக்கு வெட்கமே
இல்லையா?
போடா, கோயமுத்தூர்ல எனக்கென்ன இமேஜ் வாழுது? நீ முதலில் பந்தயப் பணம் நூறு ரூபாயை எடு!
பந்தயத்துல நாணயம்
முக்கியம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக