பொங்கல் வாழ்த்துக்கள்!!
வள்ளியம்மாளுக்கு
காலைல முருகேசன் சொல்லிட்டுப் போனது மனசுக்குள்ள குமுறிக்கிட்டே
இருந்தது!
வயலுக்குப்
போறபோக்குல சொன்னான்,
"வள்ளி, நாளைக்கு பத்திர ஆபீஸுக்குப் போகணும்!
இது ஒன்னும் ஊரு உலகத்துல நடக்காத விஷயம் இல்லை!
நாளைக்கு நம்ம மகனுக்கு சொத்தைப் பிரிச்சுக் கொடுத்துருவோம்!
நஞ்சை அஞ்சு ஏக்கர்ல மூணு ஏக்கர் அவனுக்கும், மீதி ரெண்டு ஏக்கர் நம்ம ரெண்டு பேருக்கு ஆளுக்கு ஒரு ஏக்கர் மேனிக்குப் பிரிச்சு பத்திரம் எழுதச் சொல்லியிருக்கிறேன்!”
“என்னோட அப்பன் சம்பாரிச்ச மூணு ஏக்கர் நிலமும் இந்த வீடும் பாட்டன் சொத்தா அவனுக்கே போய் சேரட்டும்! நான் சம்பாரிச்ச ரெண்டு ஏக்கர் நமக்குப் போதும்!”
கிறுக்குத்தான்
புடிச்சுருச்சு அந்தக் கிழவனுக்கு!
ஒத்தைப் பையனை
நம்பாம
சொத்தைப்
பிரிச்சுக்கறது
எத்தனை
கேவலம்?
ஏன் இந்த ஆளுக்கு
இப்படி
புத்தி
வேலை
செய்யுது?
நேத்து புள்ளை
ஒரு
லட்ச
ரூவா
கேட்டதிலிருந்து
அந்த
ஆள்
மொகரையே
நல்லா
இல்லை!
என்னமோ
பொண்டாட்டியத்
தின்னவனாட்டம்
மூஞ்சிய
வெச்சுக்கிட்டு
சுத்திக்கிட்டிருக்கு!
நம்ம தகுதிக்கு மீறிப்
படிக்கவெச்சா
சொமந்துதானே
ஆகணும்!
இப்புடியா
சொத்தைப்
பிரிக்கறேன்னு
பேசணும்?
இது
அந்தப்
புள்ளை
காதுல
விழுந்தா
என்ன
பாடுபடும்?
வரட்டும் சாயங்காலம்-
அப்போ
வெச்சுக்கறேன்
கச்சேரிய!
பொருமிக்கிட்டு
உட்கார்ந்திருந்தா வள்ளியம்மா!
அதேநேரம்
வயக்காட்டுல முருகேசனுக்கும் ஒரே யோசனையாத்தான் இருந்தது!
ஆனாலும் இப்போ
சொத்தைப்
பிரிக்கறது
தவிர
வேற
வழி
இருக்கறதாத்
தெரியல!
பச்சை முழுசா மஞ்சளா
மாறி
வயல்
முழுக்க
கதிர்
பிடுச்ச
நாத்து!
கனம் தாங்காம வெட்கப்பட்டு
பூமியைப்
பார்த்துக்
குனிஞ்சு
நிக்கிற
வயலைப்பார்க்கப்
பார்க்க
மனசெல்லாம்
குளிர்ந்து
போனது
முருகேசனுக்கு!
வள்ளியம்மாள் கல்யாணம்
ஆகி
வந்த
முதல்
ஆறு
மாசம்
இப்படித்தான்
தலை
குனிந்து
கிடப்பாள்!
அந்தப் பூரிப்பும் அழகும்
இப்போதும்
முருகேசனுக்கு
நியாபகம்
இருக்கிறது!
கருப்பும் இல்லாது
சிவப்பும்
இல்லாது
புது
நிறம்!
அப்பன் ஆத்தாளோட வயல்
வேலை
செஞ்சு
இறுகிப்போன
தேகம்.
வனப்பும்
வடிவுமாக
அவள்
கல்யாணப்
பந்தலில்
வந்து
நின்னபோது நிறைசூலியான நெல்லுப்பயிறு
மாதிரிதான்
தெரிஞ்சா!
அது ஆகிப்போச்சு இருபத்தஞ்சு
வருஷம்!
இன்னும் அதே
நெகுநெகுப்பு,
மினுமினுப்புமாத்தான்
இருக்கறா!
நாந்தான் இந்த
வெய்யில்ல
அலைஞ்சு
கறுத்துப்போனேன்!
இந்த நினைப்பு வந்ததுமே
முருகேசனுக்கு
வள்ளியம்மா
சொல்லும்
“ஆமா,
இல்லாட்டி
பவுன்
நிறந்தான்
என்
மகராசா!”
நினைப்புக்கு வர,
மெல்லிசா
சிரிச்சுக்கிட்டான்!
வந்து ரெண்டாவது வருஷம் வயிறு தொறந்ததுல
பொறந்தவந்தான் ரமேஷு!
அதுக்கப்புறம்
அந்த வயித்துல தங்குன மூனும் கொறை
உசுராப் போச்சு!
அதுக்கு
முருகேசுதான் அப்படி வருத்தப்பட்டுக் கெடந்தான்!
வள்ளியம்மா, “எனக்கு உன்னையே உரிச்சுவெச்சுப் பொறந்த
ஒத்தைப்
பிள்ளை
போதும்”ன்னு ரமேஷு, ராமேஷுன்னு
உருகிக் கெடப்பா!
பள்ளிக்கோடத்துல
படிக்கும்போதே எம்பட பையன் நம்மளமாதிரி
காட்டுலயும் மேட்டுலயும் அலைஞ்சு சம்பாதிக்காம ஏசி
ரூம்புக்குள்ள உக்காந்து ஆபீசர் தொரை மாதிரி
சம்பாதிக்கணும்ன்னு சொல்லிச் சொல்லி வளத்தா!
இதா, இப்போ கோயமுத்தூர்ல
இஞ்சினீருக்கு
படிக்கறான்
மவன்!
அதுல வள்ளியம்மாளுக்கு அத்தனை பெருமை!
அவனும்
சும்மா சொல்லக்கூடாது அப்புடிப் படிக்கறான்!
பெரிய வெள்ளைக்காரத் தொரை மாதிரி அவன்
சூட்டும் பூடீசும் போட்டுக்கிட்டு வண்டீல வந்து எறங்கும்போது
கண்ணெல்லாம் நெறைஞ்சு போகும் பெத்தது ரெண்டுக்கும்!
இன்னும்
ஒரு வருஷம் கஷ்டப்பட்டு அவனைப்
படிக்கவெச்சுக் கரையேத்திட்டா, அப்புறம் அவன் அந்த ராமசாமி
மகனாட்டம் அமெரிக்காவுலையோ துபாய்லையோ பெரிய ஆபீசரா ஆய்டுவான்!
என்ன இந்தப் பாழாப்போன வெள்ளாமைதான்
சமயத்துக்குப் பழி பண்ணித் தொலைக்கிது!
பாவம் வெடியவெடியக் கண்ணு முழிச்சுப் படிச்ச
பையன் அந்த பிளஸ் டூவுல
கொஞ்சம் மார்க்கு கொறைஞ்சுபோய் காலேசுல சேரமுடியாம கண்ணுத்
தண்ணி உட்டுக்கிட்டு நின்னான்!
வள்ளியம்மா போட்டுக்கிட்டு
வந்த
நகை,
சிறுகச்
சிறுக
ஊடு
பயிருல
சேத்த
சிறுவாட்டுக்காசு
எல்லாத்தையும்
போட்டு
அவன்
ஆசைப்பட்ட
காலேசுல
எட்டு
லச்சம்
ரொக்கமா
குடுத்துத்தான்
சேத்துனான்!
அதுக்கே எம்மெல்லேகிட்ட
கடிதாசு
வாங்கிக்கிட்டு
நாயா
அலையவேண்டி
இருந்தது!
அதைப் பத்தி முருகேசோ வள்ளியம்மாளோ
இன்னைக்கு வரைக்கும் வெசனப்பட்டதில்லை!
ஒத்தைப் புள்ளை
ஆசைப்பட்டதை
செய்யமுடியாத
காசு
நமக்கெதுக்குன்னு
ரெண்டும்
நெனைச்சதுக!
உனக்கென்னப்பா
முருகேசு, நாளைக்கு உன்னை உக்காரவெச்சு சோறு
போடுவான் உம்பட மவன்னு என்னைக்காச்சும்
ஓய்ஞ்சுபோய் சாவடியில உக்காரும்போது மத்த சமுசாரிங்க கேட்டா,
முருகேசனுக்கு சுருக்குன்னு கோவம் வந்துரும்!
பலனைப்
பார்த்து வளத்தற மரமாடா புள்ளை?
அது எங்கியாச்சும் நல்லா
இருந்தா
அது
போதும்டா
எங்களுக்கு!
கடைசி
வரைக்கும்
கஞ்சி
ஊத்த
இந்த
அஞ்சு
ஏக்கரா
நஞ்சை
வயல்
போதும்டா!
ன்னு பொருமித் தீத்துருவான்!
காலேசுல
சேந்த மொத வருஷம் பெருசா
ஒரு செலவும் இல்லை!
ரெண்டாவது
வருஷம்தான் ரமேசுக்கு கொஞ்சம் பெரிய எடத்துப்
புள்ளைங்க சாவுகாசம்ல்லாம் கெடைச்சது!
அதுக்கப்புறம்
இந்த ரெண்டு வருஷத்துல ஆயிரத்தைநூறு
ரூபாய்க்குக் கொறைஞ்சவெலைல சட்டை எடுக்கறதோ, ரெண்டாயிரத்துக்குக்
கொறைச்சலா பேண்ட் எடுக்கறதோ கெடையாது!
நடுவ நடுவ ஸ்காலர்ஷிப் வாங்க, செமினார் வாங்கன்னு பத்தாயிரம் இருவதாயிரம் காசு வாங்கிட்டுப் போவான்!
போனவருஷ லீவுல
ஏதோ
ப்ராஜெக்ட்
இருக்குன்னு
அவசர
அவசரமா
பாஸ்போர்ட்
எடுத்து
ஒருவாரம்
சிலோனுக்கு
சிநேகிதகாரனுகளோட
போய்ட்டுவந்தான்
!
அந்த கதிரேசன் மவன் “இவன் படிக்கற
படிப்புக்கு அங்கெல்லாம் போய் ப்ராஜெக்ட் செய்யவேண்டாம்
சும்மா ஊரு சுத்தப்போறான்” ன்னு சொன்னப்ப
ரெண்டு பேரும் துளிகூட நம்பலையே!
அப்புடித்தான்
இருந்துட்டுப் போகுது, அவனுக்குப் புடிச்சத
அவன் செய்யறான்னு ஒரே வார்த்தைல அவன்
வாய அடைச்சிருச்சுங்க!
என்னமோ
அந்த மகனுக்கு ஆடம்பரமா காமிச்சுக்கறதுல அத்தனை ஆசை!
ஆனா எந்த ஆண்டவன் பண்ணுன
புண்ணியமோ, இல்லை அப்பன் ஆத்தா
செஞ்ச தவமோ, ரமேஷுக்கு வேற
எந்தக் கெட்டபழக்கமும் மண்டைல ஏறல!
ஒரேஒருதடவை சிநேகிதகாரனுக
ரொம்பக்
கட்டாயப்படுத்த,
இம்போர்டட்
சரக்கு
வாங்கி
அடிச்சுப்
பார்த்தும்,
அவனுக்கு
அது
பூனை
மூத்திரம்
மாதிரி
நாறுனதாய்த்
தோன,
அதிலிருந்து
தப்பித்தான்!
மார்க்கெட்ல எந்தப் புது லேப்டாப்போ மொபைல் போனோ பைக்கோ வந்தா, அதை மத்தவங்களுக்கு முன்னால வாங்க அப்பாவுக்கு முன்னாடி போய் நிற்பான்!
அப்போதைக்கு வாயில் என்ன பொய் வருதோ, அதைச் சொல்லிப் பணம் வாங்கிவிடுவான்!
ரெண்டு வருஷத்துல ரெண்டு பைக், எட்டு மொபைல், மூணு லேப்டாப்ன்னு மாத்தியாச்சு!
அந்தப் பணம் எப்படி வருது, அதுக்கு அப்பன் எவ்வளவு கஷ்டப்பட்டாருன்னு ஒன்னுமே கவலை கிடையாது!
இன்னும்
ஒரு வருஷம் படிப்பு இருக்குது!
இப்போ, பொங்கல் லீவு முடிஞ்சு வரும்போது ஐபோன் 6எஸ் ப்ளஸ் வாங்கிக்கிட்டுத்தான் காலேஜுக்கு வருவேன்னு பசங்ககிட்ட சொல்லிட்டு வந்திருக்கிறான்!
அதற்காகத்தான் இந்த வருடம் ஸ்டடி லீவ் வாங்க ஒரு லட்சம் பீஸ் கட்டணும்ன்னு அப்பன் கிட்ட சொல்லியிருக்கிறான்!
படிப்பில் கொஞ்சம் சுமாரா இருந்தாலும், இந்த ஆடம்பரம் மட்டும் இல்லாட்டி சொக்கத் தங்கம்தான் ரமேசும்!
எப்படியோ ஒட்டிகிட்ட
ஊதாரித்தனம்
காசுக்காக
எந்தப்
பொய்
சொல்லி
அப்பன்
ஆத்தாவை
ஏமாத்தவும்
துணியவெச்சது!
இந்த நிமிஷம் வரைக்கும் பையன்
தங்கள ஏமாத்தறான்கறது ரெண்டு பேருக்குமே தெரியாது!
பின்ன ஏன் இந்த சொத்தைப்
பிரிக்கற ஏற்பாடு?
எனக்கும் தெரியல!
வாங்க! இன்னைக்கு ராத்திரி
படுக்கையறைல
ரெண்டும்
பேசிக்கறத
ஒட்டுக்
கேட்போம்!
அட வாங்க! இந்த
வயசுல
அது
ரெண்டும்
என்ன
பண்ணப்போகுதுக
பேசறது
தவிர!
இதோ, பிலுபிலுன்னு பிடுச்சுக்கிட்டா வள்ளியம்மா!
கிராமத்து
வெள்ளந்திக, சத்தமாத்தான் பேசும்! ஆனா பையன்
காதுல விழுந்தறக்கூடாதுன்னு ரெண்டும் கொஞ்சம் மெதுவாத்தான் பேசிக்கிதுக!
கொஞ்சம் அந்த
ட்விட்டர
நோண்டறத
விட்டுக்
காதக் குடுத்துக்
கேளுங்க!
ஏய்யா, உனக்கு ஏதாச்சும் கிறுக்குப் புடிச்சுப்போச்சா
இல்லை யாரவது செய்வினை வெச்சுட்டாங்களா? –
இது வள்ளியம்மாவோட கீச்சுக் குரல்!
நீ ஏன் இப்படிப் பேசறேன்னு தெரியும் புள்ள, ஆனா இப்போ இது தவிர வேற வழி இல்லை! –
இது முருகேசனோட கட்டைக் குரல்!
இனி நீங்களே கவனமாக் கேட்டுக்கோங்க!
இன்னொம் கல்யாணம் கோட முடிக்காத புள்ளை கூட சொத்தைப் பிரிச்சுக்கலாம்ன்னு சொல்றியே, உனக்கு ஏதாவது இருக்குதா? இதைக் காதுல கேட்டா, அந்தப்புள்ளை
மனசு என்ன பாடுபடும்?
இன்னம் ஒரு வருஷம் படிப்பு இருக்குது! அந்தப்புள்ள இந்த வெசனத்தோட எப்படிய்யா படிக்கும்? புள்ளை படிப்புக்கு லட்சரூவா கேட்டது தப்பா?
அது வேற யாருகிட்டய்யா போய் நிக்கும்? உனக்கு ஏன் புத்தி இப்புடிப் போகுது?
ரொம்பநேரம்
முருகேசன் சத்தமே இல்லை!
திடீர்ன்னு
குரல் கம்மப் பேச ஆரம்பிச்சான்!
கேட்டுக்க புள்ள, இதுவரைக்கும் நம்ம புள்ளை படிப்புக்கு ஆதியில குடுத்த காசு போக முப்பது லட்சம் செலவு ஆயிருக்குது!
நாளைக்கு வேற ஒரு லட்சம் வேணும்!
இன்னும் ஒரு முழு வருஷம் இருக்குது! எப்படியும் கடைசி வருஷம் செலவு இன்னும் ஜாஸ்தியாத்தான் இருக்கும்!
அதுக்கு, பையனுக்கு சொத்தைப் பிரிச்சுக் குடுத்தா?
கொஞ்சம் பொறுமையாக் கேளு புள்ள!
இதுவரைக்கும் ஆன செலவுக்கு நான் உன்கிட்ட சொன்னமாதிரி பண்டாபீஸ்ல கடன் வாங்கல! அவனுக குடுக்க மாட்டேன்னுட்டானுக!
சிறுகச்சிறுக ரமேசுக்கு உள்ளூர் கந்துவட்டி ராசுகிட்டத்தான் நோட்டெழுதி வாங்கியிருக்கறேன்! அவன் இனிமேல் பணம் குடுக்கணும்னா சொத்தைக் கொதவு வெச்சு ஒத்திக் குடுத்தாத்தான் பணம் குடுப்பேன்னு கறாரா சொல்லிட்டான்!
அடுத்தவாரம் புள்ளை ஊருக்குப் போறதுக்குள்ள பணம் குடுத்துவுட வேண்டாமா?
அதுக்கும் சொத்தைப் பிரிக்கறதுக்கும் என்னய்யா இருக்குது?
சொல்றேன்!
மொத்த சொத்தையும் ஒண்ணா எழுதிக் குடுத்தா இன்னைக்கு விவசாயம் இருக்கற நெலமைல அத மீட்டுக்கிட்டு வரமுடியும்ன்னு தோணல!
அதுவும் அந்த ராசுகிட்ட சொத்து எழுதிக்குடுத்து யாரும் மீட்டதா எனக்குத் தெரிஞ்சு இல்லை!
அதுனாலதான் பையனோட சொத்தைப் பிரிச்சுவிட்டு ஒரு விடுதலைப் பத்திரம் எழுதி வாங்கிக்கிட்டா, மீதி ரெண்டு ஏக்கராவ ஒத்திவெச்சு பணத்த வாங்கிக்கலாம்!
மீட்க முடிஞ்சா பார்ப்போம், இல்லாட்டி, நம்ம சம்பாரிச்சதுதான போச்சுன்னு கடனுக்கு நேர் பண்ணிவிட்டுட்டு கூலி வேலை செஞ்சுகூடப் பொழச்சுக்கலாம்!
பரம்பர சொத்து பையன் கைக்குப் போகலைன்னா, நாம வாழ்ந்ததுக்கு என்ன அர்த்தம் புள்ள?
குரல் கம்ம சொல்லி
முடிச்சான் முருகேசு!
மொச்சு மொச்சுன்னு முத்த
சத்தம்தான்
கேக்குது!
நடுவுல
வள்ளி
கிசுகிசுக்கறது
கேட்டுச்சில்ல?
உன்ன மாதிரி ஆம்பளக்கு இந்த வயசுலகூட புள்ளை
பெத்துக்
குடுக்கலாம்!
வாய்யா!!
இன்னும் என்ன இங்க வேடிக்கை? போங்க அக்கட்டால!
நாளைக்குக் காலைல
என்ன
நடக்குது
பார்ப்போம்!
காலைல வெள்ளன ஏந்திருச்சு அதிசயமா
குளிச்சு முடிச்சு வர்ற மவன்கிட்ட ஆத்தா
சொல்றா - ஐயா, ராசா! சாப்ட்டுட்டு பத்தர ஆபீஸ் வரைக்கும் போயிட்டு
வருவோம், ஒரு சின்னவேலை இருக்குது!
எதுக்கு ஆத்தா? சொத்தைப் பிரிக்கவா?
நேத்து ராத்திரியே, எனக்கு காலேஜிலிருந்து போன் பண்ணிட்டாங்க!
இந்த பீஸ் கட்டவேண்டியதில்லையாம்!
என்கிட்டே ஒரு இருபதாயிரம் பணம் இருக்கு!
காலேஜில சும்மா நிக்கற பைக்குனால என்ன பிரயோஜனமும் இல்லை! அதை வித்தா எப்படியும் ஒரு லட்சம் கிடைக்கும்!
அது போதும் அடுத்த வருஷம் முழுக்க படிப்புக்கு!
இப்போ சோத்தைப் போடு ஆத்தா, அப்பனோட அறுப்புக்கு வயலுக்குப் போயிட்டு வந்து படிக்கணும்! இந்த அஞ்சு ஏக்கர அம்பது ஏக்கரா மாத்தவரைக்கும் மூணுபேரும் பாடுபடுவோம்!
அப்புறம் என் சிநேகிதகாரனுக யாராச்சும் போன் பண்ணுனா, நான் வெளிய போய்ட்டேன் வர ரெண்டு நாள் ஆகும்ன்னு சொல்லீருங்க! எனக்கு நெறையா படிக்கற வேலை இருக்குது!
சொன்ன மகனைக் கண் நெறையப்
பார்த்தா வள்ளியம்மா!
கெழக்கு
மெதுவா வெளுக்க ஆரம்பித்தது!
சரி, ரமேஷ் ஏன் இப்படி
திடீர்ன்னு மாறுனான்?
நேத்து ராத்திரி தண்ணி
குடிக்க எறங்கிவந்த ரமேஷ்
நம்ம
பின்னாடியே
நின்னு
அப்பன்
ஆத்தா
பேசுனதைக்
கேட்டு
கண்ணு கலங்கப் போனத
நீங்க
பார்க்கலையா?
உங்களுக்குத்தான் பெட் ரூம்புக்குள்ள புருஷம்பொண்டாட்டி பேசறத ஒட்டுக் கேக்கறதுல வேற எதுவும் கண்ணுக்கே தெரியலையே!
போங்க, போய் சந்தோஷமா பொங்கல் வெச்சுக் கொண்டாடுங்க!