புதன், 27 ஜனவரி, 2016

ஏற்பதும் மறுப்பதும் எதன் கையில்?காலன் வந்து அழைக்கையில்....
பயந்து மறுத்த பாவங்கள்,
தெரிந்து செய்த துரோகங்கள், 
அறிந்து மீறிய வார்த்தைகள்,
காணாது கடந்த சத்தியங்கள்..


அறிந்து தவிர்த்த நட்புக்கள் 
படிக்க மறந்த எழுத்துக்கள்  
நேசிக்க மறுத்த  உறவுகள் 
காதல் கலவாக் கலவிகள் ...குதித்துத் துளைத்த நீர்நிலைகள் 
ரசித்து நனைந்த பெருமழைகள் 
நடந்து சலித்த அடர்வனங்கள் 
படித்துக் கரைந்த கவிவரிகள்....


கேட்டுக் குழைந்த கீதங்கள் 
திளைத்து மகிழ்ந்த காதல்கள் 
ரசித்துப் புசித்த அருஞ்சுவைகள் 
கொஞ்சி மலர்ந்த பூந்தளிர்கள்...


மூச்சடங்கிக் கால்நீட்டி
உயிர் உதிரும் அந்த நொடி
நினைவில் நிலைப்பதே  
செயல் தூண்டும் காரணி..

காலன் அழைப்பை  நான்   
புன்னகைத்து ஏற்கவோ...
மறுதலித்துக் கத
றவோ....கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக