2011 சட்டமன்றத்
தேர்தல்!
மாவட்டம்தோறும்
உருவான வாரிசுகளின்
அராஜகம்!
மதுரை இளவரசரின் ஆசி பெற்ற அட்டகாசங்கள்!
தாங்க முடியாத மின் வெட்டு!
இத்தனைக்கும் மேலாக
பத்திரிக்கைகள்
பக்கம்
முழுவதும்
சைபர்களாகப்
போட்டு
ஊழல்
என்றே
மக்களின்
மனதில்
பதியவைத்த
கற்பனை
இழப்புத்
தொகை!
எட்டுக்
கட்சிக் கூட்டணியோடு களம் இறங்கிய திமுக!
பதினோரு
கட்சிக் கூட்டணி அமைத்த அதிமுக!
கூடவே,
வலியவந்து ஆதரித்த முதல்வர் கனவில்
மிதக்கும் நடிகர் விஜய்!
பேரம் படியாத, அல்லது படிந்த
காரணத்தால் தேர்தலைப்
புறக்கணித்த ஈழ வியாபாரி!
மாபெரும்
தோல்வியைத் தழுவியது திமுக!
எந்தக் கட்சியின் ஆதரவும்
இன்றி
ஆட்சி
அமைக்கத்
தேவைக்குமேல்
அசுர
பலம்
பெற்றது
அதிமுக!
29 தொகுதிகளில்
வென்று எதிர்க்கட்சித் தலைவரானார் விஜயகாந்த்!
ஏறத்தாழக்
காணாமலே போனது திமுகழகம்!
திமுகவின் படுதோல்வி,
ஒருவகையில்
தேவைதான்
என்று
அதன்
உண்மைத்
தொண்டனே
நினைக்குமளவு
அராஜகம்
செய்த
அத்தனை
மாஜிக்களும்
தோற்றுப்போனார்கள்!
சென்ற தேர்தலில் தோற்றதன்மூலம் பாடம் கற்றுக்கொண்டு திருந்தியிருப்பார்
என்று நடுநிலை ஊடகங்களால் சித்தரிக்கப்பட்ட
ஜெயலலிதா, ஊடகங்களுக்கு நன்றி சொல்லும் விதமாக
நடத்திய முதல் பிரஸ் மீட்டில்
பத்திரிக்கையாளர்களுக்கு ஓர் உறுதிமொழி கொடுத்தார்
– “இனி
வாரம் ஒருமுறை உங்களை சந்திப்பேன்!
உங்கள் கேள்விகளை அப்போது கேளுங்கள்!”
தாங்கள் காண்பது
கனவா
என்று
கிள்ளிப்பார்த்துக்கொண்டே
மகிழ்ச்சியோடு
கலைந்தார்கள்
நிருபர்கள்!
அப்போது அவர்கள் அறிந்திருக்கவில்லை அதுதான் முதலும் கடைசியுமான பத்திரிக்கையாளர் சந்திப்பு என்று!
மக்களும், 150 தொகுதிகளில் வெல்லவைத்துத் தாங்கள் காட்டிய அன்புக்கு மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா நிச்சயம் தங்களுக்கு நல்லதே செய்வார் என்று மனக்கோட்டை கட்டி வசிக்க ஆரம்பித்தார்கள்!
ஆனால், ஜெயலலிதாவின் சாந்த முகமூடி உடனே கழன்றது!
முப்பதுக்கும்
மேற்பட்ட அமைச்சர்களுடன் பதவியேற்றார் ஜெ!
v
கருணாநிதி
தன் கைப்பணத்தில் (?) கட்டிய புதிய சட்டமன்றக்
கட்டடம், உலகத் தரத்தில் கட்டப்பட்ட
அண்ணா நூற்றாண்டு நூலகம் இரண்டும் மூடப்பட்டன.
v
நீண்ட
நீதிமன்றப் போராட்டத்துக்குப்பிறகு நூலகம் ஒப்புக்குத் திறக்கப்பட,
சட்டமன்ற வளாகம், பசுமைத் தீர்ப்பாயத்துடன்
நெடிய விவாதத்துக்குப்பின் மருத்துவமனை வளாகமானது!
v
கருணாநிதி
ஆட்சிக்காலத்தில் துவக்கப்பட்ட மேம்பாலப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன!
மத்திய மனிதவளத் துறை
அமைச்சராக
ஸ்மிதி
இராணி
நியமிக்கப்பட்டது
எத்தனை
சர்ச்சைகளுக்கு
உள்ளானது?
ஆனால் நம் தங்கத்தாரகை இதுவரை அமைச்சர்களாக நியமித்தவர்களின் தகுதிகள் பற்றி என்றேனும் யாராவது கேள்வி கேட்டதுண்டா?
இந்த ஐந்து ஆண்டு காலத்தில்
உள்ளே வெளியே ஆட்டத்தில் மாஜிகள்
ஆனவர்களும், மீண்டும் மந்திரிகள் ஆனவர்களும் எத்தனை பேர்?
நிச்சயம் நூறைத் தாண்டியிருக்கும்.
தன கட்சி அடிமைகளில் யாரை
வேண்டுமானாலும் அமைச்சராக்கும் உரிமை மகாராணிக்கு இருக்கிறது
என்ற வாதத்தை ஏற்றுக்கொண்டாலும், ஒரு
அமைச்சரை நீக்கும்போது, அவர்
என்ன
காரணத்துக்காக
நீக்கப்படுகிறார்
என்று
தெரிந்துகொள்ள
கண்டிப்பாக
வாக்களித்த
மக்களுக்கு
உரிமை
உண்டு!
தாங்கள் வாக்களித்து, தங்கள் பிரதிநிதியாக சட்டமன்றத்துக்கு அனுப்பியவர் என்ன தவறு செய்து பதவி இழந்தார் என்று எந்தக் குடிமகனும் கேள்வி கேட்கவில்லை!
பிறகு எந்தத் தகுதியின் பேரில் மீண்டும் மந்திரி ஆனார் என்பதையும்!
பதவி ஏற்றபின், தங்கள் கூட்டணியின் தயவில்தான்
முதல்வர் ஆனார் என்ற தொனியில்
விஜயகாந்த் பேசியது அம்மாவின் மமதையை
உசுப்பிவிட்டது!
தன் எதிரில் பழம்தின்று
கொட்டை
போட்ட
கருணாநிதி
அமர்வதையே
சகிக்கமுடியாத
மகாராணிக்கு
நேற்று
முளைத்த
காளான்
விஜயகாந்த்
கையை
நீட்டிப்
பேசுவதை
எப்படித்
தாங்கமுடியும்?
அந்தக்
குடிகாரனை வாசலில் வந்து வரவேற்றுக்
கூட்டணி வைத்ததை மறந்தார்,
அந்தக் கூட்டணி காரணமாகவே, பல தொகுதிகளில் மிகக் குறைந்த மார்ஜினில் வெற்றி பெற்றதை மறந்தார்!
அந்தக் கூட்டணி காரணமாகவே, பல தொகுதிகளில் மிகக் குறைந்த மார்ஜினில் வெற்றி பெற்றதை மறந்தார்!
அதிமுக
உறுப்பினர்களைவிட அதிகம் அம்மா புராணம்
பாடிய காம்ரேடுகளிடமிருந்து பாடம் கற்க மறுத்த
விஜயகாந்த், அம்மாவின் அடிமைகளால் ஊளையிட்டே அவையை விட்டு விரட்டப்பட்டார்!
அடுத்த
அதிர்ச்சியாக, அவரது சகாக்கள், "தொகுதி
மேம்பாட்டுக்காக" வரிசையில் நின்று அம்மாவை சந்திக்க
ஆரம்பிக்க, தான் வகிக்கும் பதவியை
மறந்து மகன் சகாப்தத்தை ஆரம்பிக்க
மலேசியாவுக்கே போய் மௌனமானார் விஜயகாந்த்.
கூட்டணிக்
கட்சிகளை காரியம் முடிந்தவுடன் ஜெ
எப்படி நடத்துவார் என்பதை நன்கறிந்த காம்ரேட்கள்
நாலரை வருடங்கள் விசுவாசமான அடிமைகளாகவே காலம் தள்ளினார்கள்!
சட்டசபை அம்மா புகழ் பாடும் பஜனை மடம் ஆனது!
எதிர்க்கட்சிகள்
எதிரிக்கட்சிகளாக விரட்டப்பட்டன!
அம்மாவின் ஆயிரத்தொரு
அடைமொழிகளுக்கும்
தட்டப்பட்டே
சட்டமன்ற
மேஜைகள்
தேய்ந்தன!
எதிர்க்
கட்சித் தலைவர்களின் வயது பற்றிக்கூடக் கருதாமல்
அறுவருக்கத்தக்க வார்த்தைகளால் மூத்த அமைச்சர்களே வசைபாட,
குலுங்கிச் சிரித்து ரசித்து உற்சாகப் படுத்தினார்
ஆங்கிலம் படித்த அறிவுஜீவி, அரசியல்
விஞ்ஞானி!
எதிர்க்கட்சிகள்
சட்டமன்றத்தில் பேசவே அனுமதிக்கப்படவில்லை!
பேசிய ஒன்றிரண்டு வார்த்தைகளும் அம்மாவின் கடைக்கண் பார்வை வேண்டி, அடிமைச்
சபாநாயகரால் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டன!
இந்த ஐந்தாண்டு கால
அவைக்குறிப்பினை
அரசு
வெளியிடுமானால்,
அதில்எத்தனை
எழுத்துக்கள்
ஆரோக்கியமான
விவாதமாக
இருக்கும்
என்பது
வெளிப்படை.
ஆனால், போற்றி பாட
எத்தனை ஆயிரம் தமிழ் வார்த்தைகள்
இருக்கின்றன என்று அறிந்துகொள்ளலாம்!
தன்னை எதிர்த்து யாரும் கேள்வி கேட்பதை சற்றும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஜெ, அரிதினும் அரிதாக உபயோகிக்கப்படும், விவாதம் செய்ய அனுமதிக்காத விதி எண் 110ன் கீழ் மட்டுமே திட்டங்களை அறிவித்தார்!
எந்தத் துறை சார்ந்தும் விவாதங்கள் நடக்காத சபை, துறை ரீதியான எந்த அறிக்கையையும் படிக்கக்கூடத் தெரியாத அமைச்சர்கள் என சீரழிந்தது சட்டசபை!
ஒரு கட்டத்தில் ஆணவ
மிகுதியால்,
கண்ணுக்கெட்டியதூரம்
எதிரிகளே
இல்லை
என்று
எல்லை
மீறிய
ஆணவத்தால்
சட்டசபைக்குள்
கொக்கரித்தார்!
அதற்கு
மேஜை
உடைந்துபோகுமளவு தட்டி
ஆர்ப்பரித்தது
அடிமைக்கூட்டம்!
அமைதியாக வேடிக்கை பார்த்தது மானம் கெட்ட தமிழினம்!
தனிமனித வழிபாடு
நாகரீகமான
எல்லைகள்
அனைத்தையும்
மீறியது!
v
ஒரு
கட்சித் தலைவி கட்சி அலுவலகம்
வருவதும், ஒரு முதல்வர் சட்டமன்றம்
வருவதும் உலக சாதனைகளாக மாறின.
v
அம்மா
போகும் பாதை முழுக்க, அடிக்கு
மூன்று கட் அவுட்டுகள், போஸ்டர்கள்
என வாரியிறைத்தது கவனம்
ஈர்க்க காலடியில் புரண்ட அடிமைக் கூட்டம்!
v
அது அத்தனையும் உண்மை
என்று
மயங்கிக்கிடந்தது
தலைமை!
v
அரசு
யந்திரம் ஸ்தம்பித்துக் கிடந்தது!
v
எந்த
அமைச்சருக்கும், அதிகாரிக்கும் முடிவெடுக்கும் உரிமைகள் அடியோடு மறுக்கப்பட்டன!
v
அரசு
அதிகாரிகளும் காரணமே இல்லாமல் பந்தாடப்பட்டனர். நேர்மை
என்ற வார்த்தையை கனவில் சொன்ன குற்றத்துக்காக
காத்திருப்பில் வைக்கப்பட்ட, அதிகாரமற்ற பதவிக்கு தூக்கியடிக்கப்பட்ட அதிகாரிகளின் எண்ணிக்கை கின்னஸ் புத்தகத்துக்குப் பரிந்துரைக்கப்படும்
அளவு அதிகரித்தன!
Ø
இதில் "பிழைக்கத் தெரிந்த" அதிகார வர்க்க அடிமைகளை உருவாக்கியதுதான் இந்த அரசு செய்த மன்னிக்கமுடியாத குற்றம்!
அரசியல்வாதிகள்
ஊழல்வாதிகளாக இருப்பது குணப்படுத்தக்கூடிய வியாதி!
அதிகாரவர்க்கம் கறைபடிவது
சமுதாயத்துக்கு
குருதிப்
புற்றைப்போல்
குணப்படுத்த
முடியாத
வியாதி!
v
“அம்மா ஆணைப்படி” என்ற
வார்த்தை சர்வ சாதாரணமாக அதிகாரிகள்,
மாவட்ட ஆட்சித் தலைவர்கள், செயலாளர்கள்,
காவல்துறை உயர் அதிகாரிகளால் கூச்சமின்றி
உபயோகிக்கப்பட்டது!
v
அரசு
அதிகாரிகள் ஒட்டுண்ணிகளாக உருவெடுக்க ஆரம்பித்தனர்!
AMMA Scheme (AMMA-
Assured Maximum Service to Marginal People in All Villages)
இப்படி
ஒரு பெயரை மூளையைக் கசக்கி
யோசித்த அரசு அதிகாரி, நெறிமுறைகளை
எந்த அளவு மதிப்பார்?
அதே அதிகாரி அடுத்து
ஆட்சி
மாறினால்,
ஐயா
ஸ்கீம்,
( Assured
Integrated Yoga for Youth for All), ஸ்டாலின் ஸ்கீம்
(State LINan corporation) என்று
எதையாவது
கண்டுபிடித்துத் தன் இருப்பைத்
தக்கவைக்கத்தானே
மெனக்கெடுவார்?
மக்களைப்பற்றி நினைக்க
அவருக்கு
எங்கு
நேரம்
இருக்கும்?
v
அரசு
அதிகாரிகளை இப்படிப் பள்ளத்தில் இறக்கியது இந்த அரசின் மன்னிக்கமுடியாத
குற்றம்!
இந்த ஐந்து வருடங்களில், அரசு
வருமானம் அதிகரிக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?
எத்தனை மின் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு,
தமிழகம் "மின்மிகை மாநிலமாக" மாற்றப்பட்டது?
v
தனியாரிடம் அதிக
விலைக்கு
மின்சாரம்
வாங்கி
ஒப்பேற்றப்பட்டது!
பவுடர்
அடித்து ஒப்பனை செய்யப்பட்ட பிணம்
நாள்பட நாறியது!
v
கடன்
சுமை தாங்காமல் மின்வாரியம் திணற, மக்கள் தலையில்
கட்டண உயர்வு சுமை ஏற்றப்பட்டது!
v
கடந்த
ஐம்பது ஆண்டுகளில் சேர்ந்த அரசுக் கடன்
தொகை, ஐந்தே வருடங்களில் இரு
மடங்கு ஆனது!
v
எந்த
அண்டை மாநிலத்தொடும் நட்புறவில்லை, பற்றாக்குறைக்கு இடையில் வந்த நாடாளுமன்றத்
தேர்தலில் பிரதமர் வேட்பாளர் என்று
அவரை முன்னிறுத்த முயற்சிகளை வேறு ஊக்குவித்து, கனவுகளில்
மிதந்தார் மகாராணி!
v
அப்துல்
கலாமுக்கு வைத்த மலர் வளையத்தில்கூட
அம்மா படம்!
இது
அறியாமையா அல்லது ஆணவமா?
v
மாநிலத்தின்
வருவாய்ப் பெருக்கத்துக்கு சாராயம் விற்பது மட்டும்
போதும் என்று முடிவு செய்து
இலக்கு வைத்து விற்றது ஒரு
பெண் ஆளும் அரசு!
தாலிக்குத் தங்கம்
தந்த
கருணை
தெய்வம்
குடிவெறிக்குப்
பலியான
தாலிகளை
நினைக்கவும்
மறந்தது!
டாஸ்மாக் வியாபாரம் பெருக, மதுத் தொழிற்சாலைகளின் மூலம் தனிப்பட்ட கஜானாவும் நிரம்பி வழிந்தது!
எனக்கென்று யாருமில்லை
என்று
உருகி
உருகி
வசனம்
பேசிய
தெய்வம்
சாராயம்
காய்ச்சியும்
விற்றும்
ஆயிரம்,
லட்சம்
கோடிகளில்
சொத்து
சேர்த்தது!
v
பல
துறைகளில் மத்திய அரசு நிதி
உபயோகப்படுத்தாமல் திருப்பி அனுப்பப்பட்டது!
v
கட்டமைப்பு
வசதிகள் இல்லாததும், கமிஷன் கேட்டு விரட்டப்பட்டதும்
என, முதலீடுகள் தமிழ் நாட்டை எட்டிப்பார்க்க
அஞ்சியநிலையில் ஆட்சி முடியும் தருவாயில்
ஒரு முதலீட்டார்கள் மாநாடு கூட்டப்பட்டு, அரை
நாளில் ஆயிரக்கணக்கான கோடிகள் முதலீடு வந்ததாய்க்
கூச்சமின்றிக் கூவப்பட்டது!
v
மத்திய
அரசிடம் வாதாடி உதவி பெற
வேண்டிய மக்களவை உறுப்பினர்கள், வாய்
மூடி உட்கார்ந்திருந்தனர்!
v
அபூர்வமாய்
வாய் திறந்த அடிமையோ, ஊழல்
வழக்கில் சிறை சென்று மீண்ட,
இன்னும் வழக்கு நிலுவையில் உள்ள
தங்கள் தங்கத் தலைவி அம்மாவுக்கு
பாரத ரத்னா தரக் கேட்டது!
இந்த வெட்கக்கேட்டுக்கு
நாடே
வழித்துக்கொண்டு
சிரித்தது!
இதற்கு முந்தைய
தன் ஆட்சியில் உப்பரிகை
தரிசனமாவது அவ்வப்பொழுது தந்த தெய்வம், மக்களுக்கு
தரிசனம் தருவதை அடியோடு நிறுத்தியது!
மக்களுக்கு
சேவை செய்யப் பதவியேற்ற முதல்வரை
அமைச்சரவை சகாக்களே சந்திக்க வாய்ப்பு மறுக்கப்பட்டது!
போயஸ் தோட்டத்துக்குள் நுழைய
ஆடை
விதிமுறைகள்
முதல்,
வாய்க்கு
வாசனையூட்டி
அடிப்பதுவரை
வலியுறுத்தப்பட்டது!
கொடநாட்டுக்கு வானத்தில் பறந்த ஹெலிகாப்டரைப் பார்த்து, தரையில் விழுந்து புரண்டது அடிமைக்கூட்டம்!
அம்மா ஹெலிகாப்டர் பறக்கும்போது, கீழே சாலைகளில் போக்குவரத்து
நிறுத்தப்பட்டது!
எதிர்பாராத நேரத்தில்
திடீரென
மறைந்த
அப்துல்
கலாமிற்கு
அஞ்சலி
செலுத்தக்கூட
வராதவர்,
அடுத்த
இரண்டு
நாட்களில்
சோ
ராமசாமியைப்
போய்ப்
பார்த்து
ஆறுதல்
சொல்கிறார்!
அதற்கு அனுமதிக்காத உடல் நிலை இதற்கு அனுமதிக்கிறதா?
பாதுகாப்புக் காரணங்களோ,
உடல்
நிலையோ
காரணம்
அல்ல!
மன நிலைக் கோளாறு!
பிரதமர் உட்பட அனைவரும் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்குப் போனால், ப்ரோடகால் படி, மூன்றாம் நான்காம் இடம்தான் கிடைக்கும் அந்த “அவமானத்தை” எங்கள் மகாராணியாரால் தாங்க முடியுமா?
எனவேதான் புறக்கணிக்கப்பட்டது முன்னால் ஜனாதிபதியின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி!
அம்மா உணவகம்,அம்மா மருந்தகம்,
அம்மா
குடிநீர்,
அம்மா
சிமெண்ட்,
அம்மா
அம்மா
அம்மா
என்று
எல்லாவற்றிலும்
அம்மா
பெயர்!
மக்கள் வரிப்பணத்தில் நிறைவேற்றப்படும் அரசுத் திட்டங்களுக்கு அந்தப் பெண்மணி பெயர் வைக்கப்பட்டதை எந்த ஊடகமும் கேள்வி கேட்கவில்லை!
மாறாக, அம்மாவும் சின்னம்மாவும்
சிறையிலிருந்து
ஜாமீனில்
வெளிவந்த
மாபெரும்
வைபவத்தை,
லைவ்
கவரேஜ்
செய்து
புல்லரித்தது
ஜனநாயகத்தின்
நான்காவது
தூண்!
ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில்
வெளிவந்தவரை வழியெங்கும் பூத்தூவி வரவேற்றது தமிழகம்!
ஊழல் வழக்கில் தீர்ப்புச்
சொன்ன
நீதிபதிக்கு
தமிழகம்
முழுக்க
போஸ்டர்கள்,
ப்ளக்ஸ்
மூலம்
நேர்ந்த
அவமானங்கள்,
அமைச்சரவை
சகாக்கள்
நடத்திய
கண்ணீர்
நாடகம்,
அலகு குத்தல்,
மண்சோறு
தின்றது
போன்றவை,
அண்ணா
பெயரைத்
தாங்கிய
கட்சியின்
பகுத்தறிவுக்கு மகுடம் சூட்டின!
நீதிபதிக்கு கண்டனத்தீர்மானம் நிறைவேற்றத் துணிந்த வேலூர் நகராட்சித் தலைவர், நீதிமன்றத்தில் தலை குனிந்து நின்று மன்னிப்புக் கேட்ட அவலமும் நடந்தது!
இவ்வளவு தனிமனிதத்
துதியும்
வழிபாடும்
கொடுங்கோல்
மன்னர்கள்
ஆட்சியில்
கூட
இருந்திருக்க
முடியாது!
சமீபத்தில் சென்னையில் வெள்ளத்தால் நேர்ந்த பேரிடர் இயற்கையா, செயற்கையா என்பது இன்னும் விவாதப்பொருளாகவே உள்ளது.
v
ஏரிநீரைத்
திறந்துவிட்டே ஆகவேண்டும் என்ற நிலையை ஒரு
நான்கு மணி நேரத்துக்கு முன்புகூட
அறிந்துகொள்ள முடியாத நிலையில் இருந்தார்களா
நம் படித்த என்ஜினீயர்கள்?
v
ஏரியைத்
திறக்கும் முடிவுக்கு அவர்கள் வருவதை எது
தாமதப்படுத்தியது?
v
அப்படி
ஏரியைத் திறந்தே ஆகவேண்டும் எனும்போது
ஏன் மக்களுக்கு எந்த அறிவிப்பும் தரப்படவில்லை?
v
மக்களை
பாதுகாப்பான பகுதிகளுக்கு முன்கூட்டியே அப்புறப்படுத்த ஏன் எந்த நடவடிக்கையும்
எடுக்கப்படவில்லை?
v
நள்ளிரவில்
ஏரி திறக்கப்பட்டே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்படுவதை
மாலையில் கூடவா கணக்கிட முடியவில்லை?
v
முடிந்ததென்றால்,
யார் அனுமதிக்குக் காத்திருந்தார்கள்?
v
அதை
அறிய முடியாத நிலை என்றால்
அப்படிப்பட்ட முட்டாள்களுக்கு யார் வேலை கொடுத்தது?
என்ன நிர்வாகத் திறமை
இது?
v
இப்படிப்பட்ட
சூழ்நிலைகளில் கூட முடிவெடுக்க முடியாத
நிலைக்கு அதிகாரவர்க்கத்தைத் தள்ளியது யார்?
v
பேரிடர்
நேரத்தில் மக்களுக்கு உதவ வேண்டிய வார்டு
கவுன்சிலர்கள் அப்போது எங்கு ஓடி
ஒளிந்தார்கள்?
v
நிவாரணப்
பணிகளை வெகு தாமதமாகப் பார்வையிட
வந்த மாநகரத் தந்தை ஏன்
யாரையும் எதிர்கொள்ள மறுத்துப் பயந்து ஓடினார்?
மக்களின்
உயிருக்கும் உடமைகளுக்கும் இவ்வளவுதான் மரியாதையா?
v
ஆறுதல் சொல்லக் கூட
மக்களை
சந்திக்காத
முதல்வர்
அனைத்துத்
தரப்புக்
கண்டனங்களுக்குப்
பிறகு,
டெல்லியிலிருந்து
பிரதமர்
வந்து
பார்வையிடப்போவது
தெரிந்தபின்
தன்
தொகுதிக்கு
மட்டும்
போகிறார்!
அப்போதும்
மானம் கெட்ட காவல்துறை போக்குவரத்தை
நிறுத்துகிறது!
மக்களுக்கு
ஆறுதல் சொல்லவந்த தாயுள்ளம் கொண்ட முதல்வரோ, ஒரே
ஒரு இடத்தில் வண்டியை நிறுத்தி, கண்ணாடியைக்கூட
இறக்காமல் வாக்காளர்களுக்கு
உரையாற்றுகிறார்.
இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று கேட்காதது மட்டும்தான் குறை!
தன்னார்வலர்களும் தொண்டு
நிறுவனங்களும்
கொண்டுவந்த
நிவாரணப்
பொருட்கள்
காவல்துறை
உதவியோடே
பல
இடங்களில்
வழி
மறிக்கப்பட்டு
அவற்றின்மேல்
அம்மா
ஸ்டிக்கர்
ஒட்டப்படுகிறது!
இதைவிட ஒரு உட்டோப்பியன் அரசாங்கம் இருக்கமுடியுமா?
இப்போது புதிதாக மூத்த அமைச்சர்கள் ஆயிரக்கணக்கான கோடிகள் கொள்ளையடித்து சொத்து சேர்த்ததாகவும்,
அதை கட்சியையும் ஆட்சியையும் தன முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த நிர்வாகத் திறனில் அனைவரையும் விஞ்சிய மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அறியாதது போலவும்,
இப்போது விசாரணை நடத்தி அந்தச் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் ஆளும் கட்சித் தரப்பிலிருந்தே தகவல்கள் கசிகின்றன!
சாதாரண விஷயத்துக்கே மானநஷ்ட
வழக்கு
என்று
துள்ளிக்குதிக்கும்
ஜெயலலிதாவிடமிருந்து
இன்றுவரை
அதற்கு
யாதொரு
மறுப்பும்
இல்லை!
எனில்,
v
கொள்ளையடிக்கப்பட்ட பணம் மக்கள் வரிப்பணம்தானே?
v
அது பறிமுதல் செய்யப்பட்டதெனில் அதற்கான சட்டப்பூர்வ அனுமதி பெறப்பட்டதா?
v
அப்படிப் பறிமுதல் செய்த அனைத்தும் அரசு கஜானாவில் சேர்க்கப்பட்டதா?
v
கொள்ளையடித்தவர்கள் மீதான சட்டப்பூர்வ நடவடிக்கை என்ன? அவர்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு சிறைக்கு அனுப்பப் பட்டார்களா?
ஒரு சாதாரண பிக்
பாக்கெட்டுக்கும்,
நூறு
ரூபாய்
லஞ்சம்
வாங்குபவனுக்கும்
இருக்கும்
அதே
சட்ட
வழிமுறைகள்தானே
இவர்களுக்கும்?
இதை ஏன் எந்த ஊடகங்களும், "புலனாய்வுப் பத்திரிக்கைகளும்" கேட்கவில்லை?
அப்படி அவர்கள் வாயை
அடைத்தது
யார்
? அல்லது
எது?
மொத்தத்தில்,
இந்த ஐந்தாண்டு அரசாட்சியில்,
உயர்ந்தவை:
·
சாராய
வியாபாரம்!
·
விலைவாசி!
·
ஆளும்கட்சி
அராஜகம்!
·
கடன்
சுமை!
·
தனி
மனித வழிபாடு!
·
லஞ்ச
லாவண்யங்கள்!
· சாராயச்
சாவுகள்!
·
விபத்துக்கள்!
·
வழிப்பறிகள்!
·
அரசு
அதிகாரிகளின் தற்கொலைகள்!
·
சாதிக்
கொலைகள்!
குன்றியவை:
·
மக்கள்
வருவாய்!
·
ஒழுக்க
நெறிகள்!
·
வாழ்க்கைத்
தரம்!
மலிந்தவை :
·
மக்களின் உயிர்களும்
உடமைகளும்!
இன்னொருமுறை இந்த
ஆட்சி
வருவது,
இவை எல்லாவற்றுக்கும்
அங்கீகாரம்
கொடுப்பதுபோல்!
அப்படி ஒரு விபத்து நடந்தால்,
அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழகம் சுடுகாடாகும்!
கள் குடித்த குடிகாரக் குரங்கின் கையில் எரியும் கொள்ளிக்கட்டையைக் கொடுத்து கூரைமேல் ஏற்றினால் என்ன நடக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை அனுபவப்பூர்வமாக உணர மக்களுக்கு இன்னுமா தெம்பிருக்கிறது?