இன்னும் ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின்!
கி. பி. 3016.
நோவா கிரகம்!
படைத் தளபதியிடம் கடும் கோபத்தில் இரைந்துகொண்டிருந்தார்
அதிபர் லான் மார்ட்!
“பூமியிலிருந்து வந்திருக்கும் இந்த அவசரத் தகவலைப் பாருங்கள்!”
“இந்த இழவுக்குத்தான் பூமியின் அந்தப் பகுதியில் இருந்து வருபவர்களுக்கு நம் கிரகத்தில் வேலை தரவேண்டாம் என்று தலை தலையாய் அடித்துக்கொண்டேன்! “
“உங்களுக்கு அந்தப் பாழாய்ப்போன டெக்னாலஜி தெரியாதென்றால் வேறு யாரையாவது வேலைக்கு அமர்த்திக்கொள்ள வேண்டியதுதானே?”
“இப்போது இருக்கும் தலைவலிகளுக்கு நடுவே இது ரொம்ப அவசியமா?”
அவர் சற்று அடங்கும்வரை காத்திருந்த
தளபதி மெதுவாகச் சொன்னார்!
“அந்த சம்பவம் நடந்தபிறகு நாம் மிகுந்த எச்சரிக்கையாகத்தான் இருக்கிறோம்!”
“அந்த ஒரு பகுதியிலிருந்து யாரையுமே நாம் வேலைக்கு எடுப்பதில்லை!”
“ஆனால் அவர்கள் செவ்வாய் கிரகாத்தில் வந்து சில நாள் தங்கி அங்கு குடியுரிமை பெற்றுக்கொண்டு அடையாளங்களை சுத்தமாக மாற்றிக்கொண்டு இங்கு வந்துவிடுகிறார்கள்!”
“நம்மவர்களும் இப்போதிருக்கும் ஆள் பற்றாக்குறையால் சரியாக ஆராயாமல் ஆட்களை அனுமதித்துவிடுகிறார்கள்!”
“போன நூற்றாண்டு முதல், வடிவங்களை சுத்தமாக மாற்றிக்கொள்ளும்படி ஜீன்கள் திருத்தி வடிவமைக்கப்பட்டபின் யாரையும் அவ்வளவு சுலபமாகக் கண்டுபிடிக்க முடிவதில்லை!”
“மேலும், எல்லாக் கிரகங்களுக்குமான குடியுரிமைச் சட்ட விதிகள் மாறுதலின்படி யாரையும் நாம் அனுமதிக்க முடியாது என்று மறுதலிப்பது சட்ட விரோதம்!”
“நாள்தோறும் அல்ட்ராசானிக் விண்கலங்களில் மாறிமாறிப் பயணித்து வந்துபோகும் எத்தனை ஆயிரம் பேர்களை எப்படிக் கண்காணிப்பது?”
“மேலும், ஒவ்வொரு வேலைக்கும் ஒவ்வொரு கிரகமாய்ப் பயணிக்கும் யாரும் எந்தக் கிரகத்திலும் நீண்ட நாள் தங்கியிருப்பதில்லை!”
“அது முக்கியமில்லை தளபதியாரே!
நம் கிரகத்தின் சட்டவிதிகளின்படி உயிர்க்கொலை என்பது எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத தீமை!
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அந்தக் குற்றத்தை இவர்கள் ஓயாமல் செய்வதும், ஓடி ஒளிவதும், எங்கு போனாலும் அவர்கள் பழி தீர்ப்பதும் இதற்கு நம் கிரகம் இடம் கொடுக்கவேண்டாமே!
மென்மையான இதயம் கொண்ட நம் குடிகள் பத்து வருடத்துக்குமுன் நடந்த அந்தக் குரூரத்தின் அதிர்ச்சியிலிருந்து விடுபடவில்லை!
இன்னொருமுறை அப்படி இந்த மண்ணில் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்!
அந்தக் குற்றவாளிகள் எந்த வடிவத்தில் இருந்தாலும் கண்டுபிடித்து இன்னும் ஒரே நாளில் கண்டம் கடத்துங்கள்!
அவர்கள் மீண்டும் இங்கு திரும்பி வராதபடி அவர்களின் டி என் ஏ குறியீடுகளை எல்லா விண்கல நிலையத்துக்கும் அனுப்புங்கள்!”
"உத்தரவு!"
பணிவோடு தலை
வணங்கி
வெளியே
வந்த
தளபதி
தன்
விரலிலிருந்து
நீண்ட
சின்னக்
கணினி
அழைப்பான்
மூலம்
சரமாரியாக
ஆணை
பிறப்பிக்க
ஆரம்பித்தார்!
யாரைப்பற்றியது இந்த உரையாடல்?
பூமியின் மக்கள்
தொகை
அடர்ந்த
ஒரு
தீபகற்பத்தின்
தென்கோடி
முனையிலிருந்து
வந்த
இருவரைப்பற்றி!
இருவரும்
சாதாரணமானவர்கள் அல்ல!
நானோ ஹைட்ரஜனேசன் டெக்னாலஜியில் டாக்டர் பட்டம் பெற்றவர்கள்!
ரவியும்
நிலாவும்!
“ரவி, நமக்குக் கல்யாணம் ஆகி இன்றோடு ஒருவருடம் ஆகிவிட்டது!
ஒரே ஒரு தவறு செய்துவிட்டு இன்னும் எத்தனை நாள் இப்படி அடையாளம் மாற்றி சுற்றிக்கொண்டிருப்பது?”
"இன்னும் கொஞ்ச நாள் நிலா!
நோவாவில் நாம் இருப்பது பூமியில் யாருக்கும் தெரியாது! இன்னும் இரண்டு நாளில் இங்கு இந்த ப்ராஜெக்டை முடித்து, கணிசமான தொகையை சம்பாதித்துக்கொண்டு, புதனைச் சுற்றும் ஏதேனும் ஒரு உப கோளில் செட்டில் ஆகிவிடலாம்!
இன்னும் சில வருடங்கள் சென்றபின் உனக்கு ஆசையாக இருந்தால் பூமிக்குப் போய்வரலாம்!
இப்போது வா கடைக்குப்போய் நமக்குத் தேவையான உடைகளை வாங்கி வருவோம்!"
"ரவி, இந்தக் கிரகத்தில் யாருக்கு நம்மைத் தெரியும்?
இன்றைக்கு மட்டுமாவது கொஞ்சநேரம் என் ரவியை அவன் சொந்த உருவத்தில் பார்க்க ஆசையாக இருக்கிறது!
கடைக்குப் போய் வரும்வரை நாம் பழைய வடிவத்தில் கை கோர்த்து நடப்போம் வா!
ஆசையாகக்
கேட்டவளை இறுக்கி அணைத்து நெற்றியில்
முத்தம் கொடுத்த ரவி, தன
பழைய வடிவத்தில் இருந்தான்!
இருவரும்
கை கோர்த்து நடக்க ஆரம்பித்தார்கள்!
அதே நேரம் பூமியின்
ஒரு
குறிப்பிட்ட
பகுதி!
ஜனத்தொகை
அடர்த்தி
காரணமாக
வாகனப்
போக்குவரத்து
அடியோடு
தடை
செய்யப்பட்டு,
நகரும்
தானியங்கி கன்வேயர் ரோட்டில்
வேகமாக
வந்துகொண்டிருந்த
ரமேஷ்
, ஏழாவது
தடவையாக
வந்த
அந்த
அழைப்புக்கு
சட்டென்று
எரிச்சலானான்!
"ஐயா! இன்னும் பத்து நிமிஷத்தில் வந்துவிடுவேன்! நோவா கிரகத்தில் அவர்களை நம் ஆட்கள் நெருங்கிவிட்டார்கள்! இன்னும் பத்து நிமிடத்தில் நல்ல சேதிவரும்!"
வழக்கம்போல்
எல்லா அழைப்புகளையும் கண்காணிக்கும் காவல்துறை அதிகாரி இந்த சம்பாஷனை
ஏதோ விபரீதம் என்று உணர்ந்து, நேரடியாக
உளவுத்துறை தலைமை அதிகாரியைத் தொடர்புகொள்ள,
அவர் பதறிப்போய் குறுக்கிட்டார்!
"ராஜேந்திரன், இது தலைமைக்கு தேர்தல் நடக்கும் நேரம்!
மேலும் நேற்றே இதுபற்றி எனக்குத் தகவல் வந்துவிட்டது!
இது நமது அதிகார வரம்புக்கு உட்பட்ட பூமி எல்லைக்குள் நடக்கப்போவதில்லை! நோவாவில் நடக்கப்போகும் குற்றத்தை நீங்கள் கண்டுகொள்ளாமல் விடுவதே உங்களுக்கு நல்லது!"
"சார், ஆனாலும் சர்வ கிரக விதிமுறைகளின்படி இந்தத் தகவலை சற்று முன்பே நோவா கிரகத் தலைவருக்கு அனுப்பிவிட்டேன்!"
சொல்லிமுடித்த ஏழாவது
வினாடி,
உளவுத்
துறைத்
தலைவரின்
நம்பிக்கைக்குரிய
உதவியாளனின்
லேசர்
துப்பாக்கி
ராஜேந்திரனை
பொசுக்கியது!
ரமேஷ்,
தலைவர் என்று அழைத்தவர் வீட்டை
அடைந்தபோது நோவாவிலிருந்து சாட்டிலைட் வீடியோ அழைப்பு வந்தது!
அதில் கண்ட உருவங்களைக் கண்ட
தலைவர் ரத்தம் கொதித்தது!
"மன்னிப்பே இல்லாத
குற்றம்
செய்ததோடு,
என்
கண்ணில்
மண்ணைத்தூவி
நோவாவுக்குப்போன
அந்த
துரோகிகள்
சாம்பலாகப்
போன
தகவல்
இன்னும்
ஒரு
மணி
நேரத்தில்
எனக்கு
வந்தாகவேண்டும்!"
"ஒருமணி நேரம் அதிகம் தலைவரே, இதோ, இப்போது என் கண்முன்னால்தான் நடந்து போகிறார்கள் இப்போது நீங்களே லைவாகப் பாருங்கள்!"
சொல்லிக்கொண்டே
முதுகுக்குப்பின்னாலிருந்து
எடுத்த நீளமான அரிவாளோடு ரவி,
நிலா மீது பாய்ந்தார்கள் அந்த
நால்வரும்!
அவர்கள் எடுத்த
அந்த
உலோகத்
தகடு
என்ன
என்று
புரிந்து,
நடக்கும்
விபரீதம்
தவிர்க்க
நோவாவின்
வீரர்கள்
துப்பாக்கியை
எடுப்பதற்குள்,
ரவியும்
நிலாவும்
நான்கு
துண்டுகளாய்
தரையில்
சாய்ந்தார்கள்!
பூமியிலிருந்து
நேரடியாக இதைப் பார்த்துக்கொண்டிருந்த, தமிழ்நாட்டில் திருச்சி
என்ற ஊரில் இருந்த தலைவர்
என்று அழைக்கப்பட்ட, நிலாவின் தந்தை, ரமேஷைக் கட்டிப்பிடித்துக்
கூவினார்!
"என் சாதிப்பெருமையை காப்பாற்றிவிட்டாய்!
அந்தத் தாழ்ந்த ஜாதி நாயோடு ஓடிய என் வீட்டு நாய் ஒழிந்தது!
இனி நான் ஊருக்குள் தலை நிமிர்ந்து நடப்பேன்!"
அதே நேரம், அன்றைய
தமிழக
முதல்வர்,
எட்டு
ஜாதிக்கட்சிகளோடு
தொகுதிப்
பங்கீடு
குறித்து
பேச்சுவார்த்தை
நடத்திக்கொண்டிருந்தார்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக