வக்கீலுக்கு வந்த சோதனை!
வக்கீல் இருக்காருங்களா?
உள்ள வாங்கம்மா, என்னை
பார்த்தா
வக்கீல்
மாதிரி
தெரியலையா?
I am advocate Sattanaathan!
என்னங்க, பெரிய வக்கீல்ன்னாங்க, இப்படி சோன்பப்டி விக்கிறவனாட்டம் டிரஸ் பண்ணியிருக்கீங்க?
என் டிரஸ் எப்படியிருந்தா
என்னை
வக்கீல்ன்னு
ஒத்துக்குவீங்க?
ஹூம் எனக்கு வாய்க்கறது எல்லாம் இப்படித்தான் இருக்கு!
என்னம்மா என்னவோ என்
பொண்டாட்டி
மாதிரி
சலிச்சுக்கறீங்க?
இப்ப உங்களுக்கு என்ன
பிரச்னை?
அதைச்
சொல்லுங்க!
கொஞ்சம் சைனஸ் இருக்கு, இப்போ வெயிலில் வந்தது கொஞ்சம் கிறுகிறுப்பா இருக்கு!
அம்மா, நீங்க டாக்டர்கிட்ட வந்திருக்கீங்களா, வக்கீல்கிட்ட
வந்திருக்கீங்களா?
அதை நீங்கதான் சொல்லணும்!
இப்படி சாகடிக்கிறீங்களே!
எனக்கு
வேற
வேலை
இருக்கு!
ஓ, வக்கீல் வேலையோட வேற வேலையும் பார்க்கறீங்களா!
ஆமாம், நீங்கதான் சொன்னீங்களே,
சோன்பப்டி
விற்கிறேன்!
சாரி சார் கோபப்படாதீங்க எனக்கு மனசுல இருக்கறத மறைக்கத் தெரியாது.
சரி சரி, அந்த
சாரி
முந்தானையை
ஒழுங்கா
இழுத்துவிடுங்க.
என்
பெண்டாட்டி
வர்ற
நேரம்!
இப்போவே
வாய்தால
ஓடிட்டிருக்கு
வாழ்க்கை!
இன்னும் நீங்க எதுக்கு வந்தீங்கன்னு சொல்லலை!
என் பக்கத்து வீட்டுக்காரி மேல கேஸ் போடணும்!
எதுக்கு?
எங்க வீட்டுக்குள்ள குப்பை ஆகுது!
அதுக்கு அவங்க
என்ன
பண்ணுவாங்க?
அவங்க வீட்டு வேப்ப மரத்திலிருந்தும், மாமரத்திலிருந்தும் ஒரே இலையா கொட்டுது! காக்கா வேற அசிங்கம் பண்ணுது!
காக்கா கக்கா போறதுக்கு
எப்படிம்மா
அந்த அம்மா மேல கேஸ்
போடமுடியும்?
உடனே அவங்க அந்த வேப்பமரத்த வெட்டணும்!
மாமரம்?
அது இருந்துட்டுப் போகுது! அது இலை கொஞ்சம் பெருசா இருக்கறதுனால, அத எடுத்து அவங்க வீட்டுக்குள்ளே வீசீருவேன்!
அதும் இல்லாம அப்பப்போ நான் மாங்கா பறிச்சுக்குவேன்!
அதும் இல்லாம அப்பப்போ நான் மாங்கா பறிச்சுக்குவேன்!
அடுத்தவங்க மரத்துல
அனுமதி
இல்லாம
காய்
பறிக்கறது
சட்டப்படி
தப்பில்லையா?
நீங்க எனக்கு வக்கீலா, அவளுக்கு வக்கீலா?
அது சரி!
உண்மையைச் சொன்னது தப்புதான்!
சொல்லுங்க! இப்போ
நான்
என்ன
பண்ணணும்?
உடனே ஒரு கேஸ் போட்டு ஸ்டே வாங்கணும்!
என்னன்னு, மரம்
இலை
உதிர்க்கக்
கூடாதுன்னா?
அப்படியெல்லாம் கேஸ்
போட முடியாதும்மா!
என்ன சார் பேசறீங்க? அடுத்தவங்க வீட்டுக்குள்ள அத்துமீறிப் போறது தப்பில்லையா?
ட்ரெஸ்பாஸிங் கேஸ் போடலாமே?
அது அந்த மரத்துமேல
வேணும்ன்னா
போடலாம்!
கிளையை வெட்டச் சொல்லி
முதலில்
ஒரு
நோட்டீஸ்
அனுப்பலாம்!
அதுக்கு
பதில்
வர்றதைப்
பொறுத்து
கேஸ்
போடறதை
யோசிக்கலாம்!
என்ன ஸார், என்னவோ மோடிக்கு ஜெயலலிதா எழுதற மாதிரி லெட்டர் எழுதி என்னைக்கு பிரச்சனை தீர்றது?
கோர்ட்டுக்குன்னு ஒரு
ப்ரோசிஜர்
இருக்கு
அது
படிதான்
பண்ணமுடியும்!
சரி ஏதாவது பண்ணுங்க!
சரி, சொல்லுங்க நான்
எழுதிக்கறேன்!
உங்க பேர்?
மஞ்சுளா!
இந்தப்பேர எங்கேயோ
கேட்டமாதிரி
இருக்கே!
சரி சொல்லுங்க, பக்கத்து
வீட்டுக்காரங்க
பேர்
என்ன?
ஜானகி!
உங்க வீடு எங்க
இருக்கு?
ஜானகி வீட்டுக்கு வலது
பக்கம்!
சாவடிக்கறீங்களே, ஜானகி
வீடு
எங்கம்மா
இருக்கு?
எங்க வீட்டுக்கு ...
அடச் சே! அட்ரஸ்
சொல்லுங்கம்மா!
அப்படித் தெளிவா கேட்கலாமல்ல! என்ன வக்கீலோ!
எத்தனை சென்ட்?
ஆமாங்க, கொஞ்சம் ஜாஸ்தியாத்தான் போட்டுக்கிட்டு வந்தேன், வெயில் காலம் பாருங்க!
என்னது?
செண்ட்தான்!
ஐயோ, நான் வீடு
எத்தனை
சென்ட்டுன்னு
கேட்டேன்
தாயே!
ஏழரை!
சரியாத்தான் இருக்கு!
சொல்லுங்க, சென்ட்
என்ன
வெலை?
நல்லா இருக்கில்ல, எங்க வீட்டுக்காரர் துபாய்ல இருந்து அனுப்பிச்சது!
அங்கேயே இது ஆயிரம் ரூபாய்!
கடவுளே! நான்
நெலத்தோட
வெலை
கேட்டேன்மா!
அதுவா, சென்ட் ஏழரை லட்சம்!
அருமை! அதுவுமா? உங்க
வீட்ல
எத்தனை
ஏழரை!
சரிம்மா, நான்
ஒரு
நோட்டீஸ்
டிராஃப்ட் பண்ணி வைக்கறேன். நாளைக்கு
வந்து
பார்த்துட்டுக்
கையெழுத்துப்
போடுங்க!
டிராஃப்டா? எதுக்கு, கேஷா வாங்கிக்குங்க! நான் பேங்குக்கு போக நேரம் இல்லை!
இது அந்த டிராஃட் இல்லம்மா!
மாடல், மாடல் .... புரியுதா!
அப்புறம் ஏன் சார் நீங்க குழப்புற மாதிரி சொல்றீங்க!
நீங்க கிளம்புங்கம்மா!
தயவுசெய்து
!!
ஃபீஸ்?
வெளிய என் ஜூனியர்கிட்ட
கொடுத்துட்டுப்போங்க!
ஜூனியர்ன்னா, மகனா, மகளா?
கடவுளே, நான்
என்
அசிஸ்டண்ட
சொன்னேன்!
நாங்க எங்க கொழந்தைகளைத்தான் ஜூனியர்ன்னு சொல்லுவோம்!
ஆரம்பத்திலிருந்தே இப்படி குழப்பமாவே பேசறீங்களே!
அதிகம் வெய்யில்ல சுத்தாதீங்க!
ஆஹா! இப்போ ஞாபகம்
வந்துருச்சு!
நீ
அந்த
டாக்டரை
பைத்தியம்
பிடிக்க
வைச்ச
மஞ்சுளா
இல்ல?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக