உங்கள் கதை உங்களுக்கே!
நீங்களே மறந்துபோன
உங்களின் உண்மைக் கதையை இப்போது உங்களோடு பகிர்ந்துகொள்ளப்போகிறேன்!
ஒரு மிகப்பெரிய குடியிருப்பு வளாகத்தில் நீங்கள்
ஒரு வீடு வைத்திருக்கிறீர்கள்!
அது உங்கள் அப்பா, தாத்தா
என்று தலைமுறைகளாக வாழ்ந்த இடம்!
அந்தக்
குடியிருப்பு வளாகத்துக்கு ஒரு அசோசியேஷன் இருக்கிறது!
அதற்கென்று ஒரு
பை-லா
(சட்ட
விதிமுறைகள்)
இருக்கும்!
அதற்கு என்ன வருமானம்
இருக்கும்?
எனக்குத்
தெரிந்த சில வழிகள்.
1. ஆரம்ப காலத்தில் உறுப்பினர்கள் எல்லோரும் போட்ட பணம் வங்கியில் டெபாசிட் செய்து அதில் வரும் வருமானம்.
2. அனுமதிக்கப்பட்ட, நஷ்டம் வர வாய்ப்பில்லாத ஏதாவது முதலீடுகள் செய்து அதில் வரும் வருமானம்!
3. நீங்கள் அனைவரும் மாதம் தோறும் உங்கள் வருமானத்திலிருந்து கொடுக்கும் ஒரு சிறிய தொகை!
இந்தத் தொகையிலிருந்துதான்
குடியிருப்பில்
உங்கள்
அனைவருக்கும்
சமமான
வசதிகளை,
அடிப்படை
உள்
கட்டமைப்பு
வசதிகளை
செய்து
தரமுடியும்.
இது மட்டுமல்ல!
அக்கம்
பக்கத்து குடியிருப்புகளோடும் பாதாள சாக்கடை போன்ற
சில வசதிகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டியிருக்கும்!
அதனால்
அவர்களோடும் ஓரளவு நல்ல நட்புறவைப்
பேணவேண்டியிருக்கும்.
இதுபோல்
மாநகராட்சி உங்கள் குடியிருப்புக்கான குடிநீர்,
மின்சாரம் போன்றசேவைகளை வழங்கவும், எல்லாக் குடியிருப்புக்கும் சில
இலவச வசதிகளை வழங்கவும் கடமைப்பட்டிருக்கிறது!
அதற்கான
சொத்து வரி போன்ற கட்டணங்களை
நீங்கள் நேரிடையாகவோ, அசோசியேஷன் மூலமாகவோ செலுத்தவேண்டியிருக்கும்!
இது எல்லாவற்றையும் நீங்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட
முறையில் செய்ய உங்களுக்கு நேரம்
இருக்காது!
அந்த வேலையைச் செய்யத்தான், அந்த அசோசியேஷனுக்கு ஒரு
செகரெட்டரி, தலைவர், உறுப்பினர்கள் என
சிலரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியிருக்கும்!
உங்களுக்காக அந்த
வேலையைச்
செய்ய,
அசோசியேஷன்
மூலம்
அவர்களுக்கு
சம்பளமும்
வழங்கப்படும்
- உங்கள்
பணத்திலிருந்து!
குடியிருப்பின்
தலைவர், செயலாளர் என்பதெல்லாம் ஒரு கவுரவம் என்பது
தவிர, பெரிய வருமானம் தரும்
பதவிகள் இல்லை என்பதோடு, குடும்பத்தைக்கூடக்
கவனிக்க முடியாத அளவு நேரத்தை
உறிஞ்சும் வேலை!
அப்படித்தான் இருந்தது
ஆரம்பத்தில்!
உங்கள் சேவைக்கும்,
பதவி தரும் சமுதாய அங்கீகாரத்துக்கும்தான்
ஆரம்ப காலத்தில் தலைவர்கள் பதவிக்கு வந்தார்கள்!
கொஞ்சம்
கொஞ்சமாக, மாதாந்திர பங்குத்தொகையை வீசி எறிவதோடு உங்கள்
கடமை முடிந்ததாக நினைக்க ஆரம்பித்தீர்கள்!
உங்கள்
குடும்ப வேலைகளில், அசோசியேஷன் தேர்தல்களில் பங்கேற்பதோடு உங்கள் கடமை முடிந்தது
என்று ஒதுங்க ஆரம்பித்தீர்கள்!
அப்போதுதான், அந்த
அசோஷியேஷனில்
குவிந்துகிடக்கும்
செல்வம்,
அதன்
கணக்கற்ற
தன்மை,
கேள்வி
கேட்கவேண்டிய
உங்கள்
பாராமுகம்
இவையெல்லாம்
அந்தத்
தலைவர்களுக்கு
புரிய
ஆரம்பித்தது!
கொஞ்சம் கொஞ்சமாக அந்தத் தலைவர்கள் உங்களிடம் சம்பளம் வாங்குபவர்கள், உங்களுக்கு வேலை செய்வதற்காக உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்பதை மறந்தீர்கள்!
அவர்களை உங்கள் முதலாளிகளாகக் கருதித் தொழத் தொடங்கினீர்கள்!
உங்களுக்குள் ஒற்றுமை
வராமல்
பார்த்துக்கொள்ளும்
வேலையை
அந்தத்
தலைவர்கள்
திறம்படப்
பார்த்தார்கள்!
உங்களை
யோசிக்க விடாமல் இருப்பதற்கான எல்லா
வேலைகளையும் அவர்கள் திறமையாகச் செய்ய
ஆரம்பித்தார்கள்!
வருமானம்
வரச் செய்திருந்த முதலீடுகளை அவர்கள் பெயரில் மாற்றிக்கொண்ட
அவர்கள், அசோசியேஷன் நஷ்டத்தில் நடப்பதாக முதலைக் கண்ணீர் வடிக்க
ஆரம்பித்தார்கள்!
அவர்களில் நடிப்பும்,
அடுக்கு
மொழியும்
அவர்கள்
சொல்வது
உண்மையாகமட்டுமே
இருக்க
முடியும்
என்று
உங்களை
நம்பவைத்தன!
ஒவ்வொரு
தேர்தலின்போதும், உங்களுக்கு புதுப்புது வசதிகள் செய்து தருவதாக
உறுதிமொழி அளித்த அவர்கள், தங்களைத்
தலைவராக்க உங்களை நிர்பந்திக்க ஆரம்பித்தார்கள்!
அவர்களிடமிருப்பது உங்கள் பணம் என்பதையும், மாதம் தோறும் நீங்கள் செலுத்தும் தொகை உங்கள் அனுமதி இல்லாமலே பலமடங்கு உயர்த்தப்பட்டிருப்பதையும் கவனிக்க
மறந்தீர்கள்!
அரிதாரம் பூசுபவர்கள்,
அழகாக இருப்பவர்கள்
அடுக்குமொழி பேசுபவர்கள் என்ற புதுத் தகுதிகளில் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும்
முனைப்பில், அவர்களின் கைகள் உங்கள் பாக்கெட்டுகளில்
இருப்பதைப் பார்க்க மறந்தீர்கள்!
உங்களை
எந்நேரமும் போதையில் வைத்திருக்கும் அந்தத் தலைவர்களும், உங்கள்
பாக்கெட்டிலிருந்து எடுத்த பணத்தைப் பதுக்கிக்கொண்டு,
உங்கள்
சில்லறைகளையே
உங்களுக்கு
இலவசமாக
வீச
ஆரம்பித்தார்கள்.
சில்லறை பொறுக்கும் முனைப்பில் நோட்டுக்கள் இழப்பைக் கவனிக்கும் நிதானம் உங்களுக்கு இல்லாமல் போனது!
இதிலும் நரித்தனமாக,
உங்கள்
பணத்திலிருந்து
வீசும் இலவசங்களில் அவர்கள்
பெயரை,
உங்கள் செலவில் பதித்துக்
கொடுத்தார்கள்.
ஒவ்வொரு
தேர்தலிலும் இது அதிகரித்து, தங்களைத்
தேர்ந்தெடுக்க அவர்கள் உங்களை நாடி
வரும்போதும் இலவசங்களில் அவர்கள் முகம் பார்த்துப்
பூரிக்க ஆரம்பித்தீர்கள்!
கொஞ்சம் கொஞ்சமாக அது உங்கள் வீடு, அவர்கள் உங்களிடம்
சம்பளம்
வாங்கும்
வேலைக்காரர்கள்
என்பதை மறந்து, நீங்கள் அவர்களைத் தொழவும், அவர்கள் வீசும் சில்லறைகள் அவர்களின் பரம்பரைச் சொத்தென்று நம்பவும் தலைப்பட்டீர்கள்.
இப்போது உங்கள்
குடியிருப்பே,
அந்தப் போலிகளின் கட்டுப்பாட்டில்!
உங்களுக்குள் அவர்கள்
வளர்த்த
பகை
நெருப்பில்
குளிர்காய்ந்து
கொண்டு,
அவர்களால்
களவாடமுடியாதபடி
சட்ட
விதிகளின்படி
உங்களுக்கு
மிச்சமிருக்கும்
வாக்கைக்
கேட்டு
வரப்போகின்றனர்!
தாங்களே வளர்த்துவிட்ட, வாய்ப்புக் கிடைத்தால் தங்களை மிஞ்சக்கூடிய, சில கற்பனைப் போட்டியாளர்களைக் கூடச் சேர்த்துக்கொண்டு இந்தமுறை புது வித்தைகள் காட்டப்போகிறார்கள்!
மே 16 ல், உங்கள் உரிமைகளை மீட்டெடுக்கப் போகிறீர்களா,
அல்லது,
உங்கள் சில்லறைகளை
நீங்களே தரையில் தவழ்ந்து பொறுக்கப் போகிறீர்களா?
No comments:
Post a comment