நேற்று
சிவாண்ணாவை எதேச்சையாகத் தியேட்டரில் பார்த்தபோது சித்ராவின் இதயம் ஒருமுறை துடிப்பை
நிறுத்தி சந்தோஷத்தில் துள்ளியது நிஜம்!
சிவாண்ணா?
அப்படித்தான்
அநேகமாக மொத்தக் கல்லூரியும் கூப்பிட்டது
சிவாவை - சித்ராவையும் காயத்ரியையும் தவிர!
ஏனோ, அப்படிக் கூப்பிட அவர்கள் இருவருமே
விரும்பியதில்லை!
அதெல்லாம்
ஐந்து வருடம் முந்தைய கதை!
கல்லூரிப்
படிப்பு முடித்த கையோடு மாப்பிள்ளை
தேடும் படலம், சல்லடையாகச் சலித்துத்
தேடியதில் கிடைத்த மாப்பிள்ளை ரவி!
ரவியோடு
கல்யாணம் ஆகி, மூன்று வருட
கலிஃபோர்னியா வாழ்க்கை!
பழைய கைபேசியோடு தொலைந்துபோனது எல்லாக் கல்லூரி நட்புக்களும்!
சென்னை
வந்து ஒரு மாதம் ஆகிவிட்டது!
ரவியின்
ஆசைக்கு தோழா படம் பார்க்க
தியேட்டருக்கு வந்த இடத்தில் சிவாண்ணா
முன் வரிசையில்!
“சிவாண்ணா” என்று ஆசையாய்க் கூவ வாய் திறந்தவள் நரகலை மிதித்தவள் போல் ஆனாள்.
சிவா பக்கத்தில் முகம் முழுக்க சிரிப்போடு காயத்ரி!
ரமேஷோடு ஆறு
வருடம்
முன்பு
கல்யாணம்
ஆன,
எட்டு மாத கர்ப்பமாக
சித்ராவின்
கல்யாணத்துக்கு
கணவனோடும்
முகம் நிறைய சிரிப்போடும்
வந்த
அதே
காயத்ரி!
கடைசியில் காயத்ரி சொன்னதைச் செய்துவிட்டாளா?
அவ்வளவுதானா இந்த சிவாண்ணா?
எல்லா ஆண்களும் சந்தர்ப்பத்துக்குக் காத்திருப்பவர்கள்தானா?
தோழா திரையிலும், கேள்விகளோடு
கடந்த
சில
வருடங்கள்
சித்ரா
மனதிலும்
ஓடின!
கோவையின்
அந்த பிரபலமான என்ஜினீயரிங் கல்லூரியில் சிவா அவ்வளவு பிரபலம்!
ஆறடிக்குக்
குறையாத உயரம்!
கருப்பாக
இருந்தாலும் களையான முகம்!
எல்லோரிடமும்
சுலபமாகப் பேசும் கண்கள்,
சின்னச்
சிரிப்போடுதான் பேச்சின் ஒவ்வொரு வாசகமும் ஆரம்பிக்கும்!
முதலாண்டு
கனவுகளும், ராகிங் பற்றிய பயமுமாக
இவர்கள் நுழைந்தபோது , “ஹாய் கேர்ள்ஸ், ஃபர்ஸ்ட்
இயரா, எந்த டிபார்ட்மெண்ட்?” என்று
இயல்பாய் வந்து பேசியபோதே, பாதி
பயம் குறைந்துபோனது!
அப்போது
சிவா மூன்றாம் ஆண்டு மாணவன்!
கொஞ்சநாளிலேயே தெரிந்துபோனது,
சிவா
அந்தக்
கல்லூரியின்
செல்லப்பிள்ளை
என்பது!
எல்லா சப்ஜெக்டிலும் புலி!
போதாக்குறைக்கு
கல்லூரிக் கலைவிழாக்களிலும், விளையாட்டுப் போட்டிகளிலும் “சிவாண்ணா, சிவாண்ணா” என்ற
ஓயாத கூக்குரல் காதை நிறைக்கும்!
முதலாண்டு மாணவர்களுக்கு
மட்டுமல்ல,
எல்லா
வருடத்திலும்
எல்லா
மாணவ
மாணவிகளுக்கும்
சிவா
அண்ணாதான்!
யாருக்குப்
பாடத்தில் என்ன சந்தேகம் என்றாலும்
முதலில் சிவாகிட்டத்தான் கேட்பார்கள்!
அவனும்
கொஞ்சம்கூடத் தயக்கமே இல்லாமல் பொறுமையாகச்
சொல்லிக்கொடுப்பான்!
ஒருமுறை
அவன் சொல்லிக்கொடுத்தால் கஷ்டமான கால்குலஸ் கூட
அப்படியே மனதில் பதிந்துபோகும்!
அது மாத்திரமல்ல, சின்ன விகல்பம் கூட
இல்லாமல் பெண்களின் முகச் சுளிப்பில் அவர்களின்
அந்த நாள் அவஸ்தைகளைக் கூடப்
புரிந்துகொண்டு, ஏதாவது மாத்திரை வாங்கிவரட்டுமா
என்று இயல்பாகக் கேட்பான்!
அவனிடம்
யாருக்கும் எந்தத் தயக்கமுமே தோன்றியதில்லை!
அழகன், அறிவாளி, ஆல்ரவுண்டர்
என
ஆயிரம்
ப்ளஸ்!
அவன் ஓட்டிவரும் புல்லட்,
அவனுக்காகவே
செய்ததுபோல்
இருக்கும்!
அவனிடம் எந்தப் பெண்ணும் ப்ரொபோஸ் செய்ததே இல்லையா என்ன?
எத்தனை பேர் என்பதை
யார்
கணக்கில்
வைப்பது?
ஆனால் எல்லோருக்கும் சிவா சொன்னது ஒரே
பதில்தான்!
“படிக்கும்
காலத்தில் இதெல்லாம் தேவையில்லாத வேலை!
நான் எப்போதும் எல்லோருக்கும் சிவா அண்ணாதான்!
இதுதான்
நிரந்தரம்!
நாம் எல்லோரும் இங்கிருந்து போகும்போது நல்ல எஞ்சினீயர்களாக வருவோம்ன்னு
காத்திருக்கற பெத்தவங்கள ஒரு நிமிஷம் நினைச்சுப்
பார்த்தீங்கன்னா இந்த லவ் எல்லாம்
எத்தனை அபத்தம் அப்படின்னு புரியும்!
போய்ப்
படிக்கற வேலையைப் பாரு!”
இது முதல் முறை
அவனை
ஒரு
க்ரஷ்ஷோடு
பார்க்கும்போதே பெண்களுக்குச் சொல்லப்படும்
கர்ண
பரம்பரைக்
கதை!
ஆனாலும்,
அவன் மீதான ஒரு கிள்ளைக்
காதல் காயத்ரி, சித்ரா இருவருக்கும் கொஞ்சமும்
குறையவில்லை!
ஆரம்பத்தில்
ஒருவருக்கொருவர் காண்பித்துக்கொள்ளாமல்தான் இருந்தார்கள்!
ஒருநாள்
ஹாஸ்டல் ரூமில் மொபைலில் சிவா
போட்டோவை ரசித்துக்கொண்டிருந்தபோதுதான் காயத்ரி சொன்னாள்!
“ரெண்டு
பேருக்குமே
கிடைக்கப்போறதில்லை!
அப்புறம்
என்னடி
ரகசியக்காதல்!”
அன்றிலிருந்து,
சிவா மீதான காதல் இருவருக்கும்
பொதுவான ரகசியம் ஆனது!
அதுவும், அவங்க காலேஜ் பெண்ணை கிண்டல்
செய்தான் என்று பக்கத்து ஆட்டோ
ஸ்டேண்ட் டிரைவர் ரெண்டு
பேரை சிவா புரட்டியெடுத்த நாளிலிருந்து
காயத்ரி அவன் மீது பைத்தியமே
ஆகிப்போனாள்!
மூன்றாம்
வருடம் படிக்கும்போது, அதே காலேஜில் சிவா
பி ஜி சேர்ந்தபிறகுதான் அவளுக்கு
மூச்சே வந்தது!
எத்தனை
முறை நேரிடையாக அவனிடம் காதலைச் சொன்னபோதும்
அசைந்தே கொடுக்கவில்லை!
ஃபைனல் இயரில் ஒருமுறை அவனைப்
பின்னாலிருந்து கட்டிப்பிடிக்க, பளீரென்று அறைந்துவிட்டுப் போனான்!
அன்றைக்கு
கையில் கிடைத்த மாத்திரைகளையெல்லாம் விழுங்கி
கண் சொருகிக்கிடந்தபோது சிவாதான் ஓடிவந்தான்!
அன்று வந்த ப்ராக்டிகல் தேர்வில் ஃபெயில் ஆனதே எல்லோரிடமும் காரணமாய்ச்
சொல்லி, அவள் மானம்
காத்ததும் சிவாதான்!
அடுத்த மாதமே, அவசரமாக
அத்தை
மகன்
ரமேசுக்கும்
காயத்ரிக்கும்
திருச்சியில்
நடந்த
கல்யாணத்துக்கு
எல்லோருக்கும்
முன்னால்
கிளம்பி
வந்தவனும்
சிவாதான்!
ரிசப்சனில் நிற்கும்போதும், சிவா போன திசையெல்லாம் காயத்ரியின் பார்வையும்!
தனியே கூட்டிப்போய் விளையாட்டாய்ச் சொல்வதுபோல் சீரியஸாகவே சித்ராவிடம் சொன்னாள்!
“இதோ பாருடி, நான் இல்லைன்னு இதுதான் சாக்குன்னு சிவாகிட்ட ரொம்ப வழியாதே! என்னைக்கு இருந்தாலும் அவன் என் புருஷன்தான்!”
அதற்குப்பிறகு
எல்லாமே வேகமாக ஓடியது!
படித்து முடித்த
கையோடு சிவா
சென்னைக்கோ,
மும்பைக்கோ
வேலைக்குப்
போனதும்,
காலேஜ்
நட்பு
ஒவ்வொன்றும்
ஒவ்வொருபக்கம்
சிதறிப்போனதும்!.
தினமும்
என்பது, வாரம் ஒருமுறை, மாதம்
ஒருமுறை என்று போனில் பேசுவதும்
சுருங்கி, சித்ரா கல்யாணத்துக்கு காயத்ரியோடு
மொத்தமே எட்டு ஃப்ரண்ட்ஸ்தான் வந்தார்கள்!
சிவாண்ணாகூட அன்று ஏதோ இண்டர்வியூ என்று
வரவில்லை.
அப்போதுதான்
காயத்ரியைக் கேட்டாள் “ஏண்டி,
இன்னுமே
சிவாதான்
உன்
புருஷனா!”
“ஆமாம்! அதில் என்ன சந்தேகம்?”
“அப்போ இது?” மேடிட்ட அவள்
வயிற்றைக் காட்டிக் கொஞ்சம் காரமாகவே கேட்டபோது,
“அது எனக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கைடி! அதுக்காக நான் சிவாவை மறந்துட்டேன்னு என்னால பொய் சொல்லமுடியாது!”
“நாளைக்கே சிவா வந்து கூப்பிட்டா, யோசிக்காம தாலியைக் கழற்றி வைச்சுட்டுப் போய்க்கிட்டே இருப்பேன்!”
“என்னடி சொல்றே?”
“விடுடி! கல்யாணம் பண்ணுன எல்லோரும் சந்தோஷமா இருக்கறதா நினைக்காதே!”
நல்லவேளை!
சித்ராவுக்கு
எல்லாமே சந்தோஷமாகத்தான் அமைந்தது!
ஒரு நிமிடம் கூட அவளை
வருத்தப்பட ரவி விட்டதே இல்லை!
வரமாக அமைந்த வாழ்க்கை!
ரவி எந்த அளவுக்கு
நல்ல
கணவன்
என்றால்,
சிவாண்ணா
பற்றி,
அவர்
மீது
தனக்கிருந்த
ஒருதலைக்
காதல்
பற்றி,
தயக்கமே
இல்லாமல்
சொல்ல
முடிந்த
அளவு
நேசமான
தோழன்!
பதிலுக்கு அவனுக்கு
எட்டாவது
படிக்கும்போது
மீனா
டீச்சர்
மேல்
வந்த
வெறித்தனமான
காதல்
பற்றி
சிரிக்கச்
சிரிக்கச்
சொல்லுவான்!
இந்தியாவுக்குத்
திரும்பி வருவது என்று முடிவு
செய்தவுடனே சித்ரா சொன்னாள்
“எப்படியாவது
சிவாண்ணாவை கண்டுபிடித்து அவங்க வொய்ஃப் எப்படி
இருக்காங்கன்னு பார்க்கணும்!"
"நீங்க உங்க மீனா டீச்சரைப்
பார்க்கலையா?”
“வேண்டாம்டி! உன்னை
விட்டுட்டு
ஒரு
கிழவியைத்
துரத்திக்கிட்டுப்
போக
நான்
முட்டாளில்லை!”
இப்படி சிவாண்ணாவைப் பார்ப்போம் என்று அவள் நினைக்கவில்லை!
அதுவும் இன்னொருத்தன் மனைவியோடு!
கடவுளே! இவர்களைப் பார்க்காமலே இருந்திருந்தால் மனதளவில் ஒரு சுத்தமான பிம்பமாவது இருந்து தொலைத்திருக்குமே!
படம் முடிந்தும் முடியாமல் அவர்கள் கண்ணில் படாமல்
அவசர அவசரமாக ரவியை இழுத்துவந்து
காரில் ஏறியபின்புதான் மூச்சே வந்தது சித்ராவுக்கு!
அவள் முகத்தை வெளிச்சத்தில் பார்த்தவுடன்
ரவி கேட்டான்- “என்ன ஆச்சு சித்து?”
“வீட்டுக்குப்
போய் சொல்றேனே ரவி ப்ளீஸ்!”
வீட்டுக்
கதவைத் திறந்ததுதான் தாமதம்!
ரவியைக் கட்டிக்கொண்டு
கதறித்
தீர்த்துவிட்டாள்!
அழுது ஓயும்வரை பொறுமையாக இருந்த ரவி மறுபடி கேட்டான்!- “என்னாச்சு
சித்து?”
“தியேட்டரில்
சிவாண்ணாவைப் பார்த்தேன் ரவி!”
“என்ன சித்து இது? போய்ப் பேசியிருக்க வேண்டாமா?”
“எப்படிப்
பேச ரவி? நான் பார்த்தது
இன்னொருத்தன் பெண்டாட்டியோடு!”
ரவி எதுவுமே பேசாமல் அவளையே
பார்த்துக்கொண்டிருந்தான்!
“ஆமாம் ரவி, காயத்ரியோடு
குலாவிக்கிட்டு
உட்கார்ந்திருந்தார்!
என் மனசுல இருந்த
அந்த
பிம்பம்
இப்படியா
உடைந்து
போகணும்?”
“எனக்கென்னவோ
நீ மிகையாகப் பேசுவதாகத்தான் படுது சித்து!
அவங்களுக்குள்
ஒரு நல்ல புரிதல் இருக்கலாம்!
நீ ஊரில் இல்லாத இந்த
சில வருஷத்துல அவங்களுக்குள்ள நல்லபடியான நட்பு வளர்ந்திருக்கலாம்!”
“கொஞ்சம்
வாயை மூடு ரவி! எனக்கு
அவங்க இருந்த நிலை புரியாத
அளவுக்கு நான் குழந்தை இல்லை!
எனக்கு
காயத்ரி கூடக் கவலை இல்லை!
ஆனால் சிவாண்ணா?
இவ்வளவு
சராசரியா?”
“எனக்கு
இதை மறக்க இன்னும் நூறு
ஜென்மம் ஆகும் ரவி!”
“சரி! நான் மீனா டீச்சரைத் தேடிப்போய் தோசை வார்த்துத் தரச்
சொல்லிக் கேட்கட்டுமா?
பசிக்குதுடி!”
சிரிப்பும்
அழுகையுமாய் அவன் வயிற்றில் ஓங்கிக்
குத்தினாள் சித்ரா!
அதற்குப்பின்
அந்த வாரத்தில் இரண்டுமுறை அதைப்பற்றிப் புலம்பியபோது, “இது உன் நிம்மதியைக்
கெடுக்குதுன்னா அதை மறந்துவிடு சித்து!
நாம் வேணும்னா ரெண்டு நாள் எங்காவது
போயிட்டு வரலாம்.
ஆனால் எதையும் முழுதாய்த் தெரியாமல்
பேசுவது நம் படிப்புக்கு அழகில்லை
சித்து!” என்று அவள் வாயை
அடைத்துவிட்டான் ரவி!
சரியாக
ஒரு மாதத்தில், ஒருவழியாய் அதை மறந்து இயல்புக்கு மாறியிருந்தாள்
சித்ரா!
காலையில்
ரவி ஆபீஸ் போனதும், கிறுகிறுப்பாய்
வர, பக்கத்திலிருந்த லேடி டாக்டரைப் பார்க்கப்போனாள்!
அவள் வயிற்றில் பாலையும்,
காதில்
தேனையும்
வார்த்தாள்
அந்த
டாக்டர்!
“கங்க்ராட்ஸ் மிஸஸ் சித்ரா, நீங்க அம்மா ஆகப் போறீங்க!”
வீட்டுக்கு
வரப் பொறுமை இல்லாமல், அங்கிருந்தே
ரவிக்கு போன் செய்தாள்!
“ரவி, சாயங்காலம் கொஞ்சம் சீக்கிரம் வரமுடியுமா?”
“அட, நானே சொல்லலாம்ன்னு நினைச்சேன்!
அஞ்சு மணிக்கு வர்றேன்! கொஞ்சம்
வெளியே போகலாம்!
இன்னைக்கு
டின்னர் வெளியே!”
அதுவும்
நல்லது என்றுதான் பட்டது சித்ராவுக்கு!
டின்னர் சாப்பிட்டு
வீட்டுக்கு
வந்ததும்
அவனிடம்
சொல்லி,
அவன்
துள்ளிக்
குதிப்பதைப்
பார்த்து
ரசிக்கவேண்டும்!
புன்னகையை
அடக்க முடியாமலே நாள் முழுவதும் திரிந்தாள்!
ஐந்து மணிக்கு வந்த ரவி
மெலிதாய் விசில் அடித்துச் சொன்னான்!
“இன்னைக்கு
எல்லாமே கேன்சல்! வா பெட்ரூமுக்குப் போவோம்! என்னடி இவ்வளவு அழகாயிட்டே
இன்னைக்கு!”
செல்லமாய்
சிணுங்கிக்கொண்டே காரில் ஏறியபோதுதான் பார்த்தாள்
பின்சீட்டில் அழகான ஒரு பொக்கே!
“என்ன ரவி, யாருக்கு இது!”
“உன்னைப்
பார்த்த மயக்கத்தில் சொல்ல மறந்துட்டேன்!
இன்னைக்கு
ஒரு ப்ரெண்ட் வீட்டுக்கு டின்னருக்குப் போறோம்!
அவர் கல்யாணத்துக்கு நான் போக முடியல!
இன்னைக்குத்தான்
அட்ரஸ் கிடைச்சுது!
உடனே போன் பண்ணி சொல்லிட்டேன்
- டின்னருக்கு வர்றதா!”
“யார் ரவி அது?”
"அவரைப்பற்றி நான் உனக்கு சொன்னதில்லை சித்து!"
"மிக உயர்ந்த மனிதர்! தகப்பனை இழந்து தன் அன்னை படும் கஷ்டங்களைப் பார்த்து வளர்ந்தவர்!
ஒரு விதவைக்குத்தான் வாழ்க்கை
கொடுக்கணும்ன்னு ரகசியத் தீர்மானத்தில் இருந்து, சாலை விபத்தில் கணவனை இழந்து, கையில் குழந்தையோடு பரிதவித்து நின்றவளைக் கைபிடித்தவர்!
சொல்லிக்கொண்டே
அந்த அழகிய சிறிய வீட்டின்
முன் காரை நிறுத்த, புன்னகையோடு
கதவைத்
திறந்தது……..
சிவாண்ணா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக