தேர்தல்
முடிவுகள் இணையத்தின் போலிப் பூச்சுக்களைக் கழுவி
விட்டிருக்கின்றன.
திராவிடம்
ஒழிக! மாற்றம் ஒன்றே இனி
வழி என்றவர்கள் எல்லாம் இப்போது முழுமையாகாச்
சந்திரமுகியாக சுயரூபம் காட்டுகிறார்கள்!
அவர்களில் பெரும்பான்மை
யாரென்று
பார்க்கும்போதுதான்
அந்த
அதிர்ச்சி!
வழக்கம்போல்
இதிலும் ஒரு திரை மறைவு
நாடகம் நடந்து முடிந்திருக்கிறது!
இத்தனை
நாள் வெளியே நடுநிலை
பேசியவர்கள் இன்று, “ஆம்,
நாங்கள் அம்மா ஆதரவாளர்கள்தான்!” என்று
வண்ணம் கலைகிறார்கள்!
ஒருவர் தன்னிலை விளக்கமாக,
நடுநிலை
என்று
ஒன்று
இருக்கவே
முடியாது!
அம்மா
அல்லது
ஐயா
ஆதரவாளராக
இருப்பதே
சாத்தியம்
என்று
விளக்கம்
தருகிறார்!
ஆனால் ஏன் இதைத் தேர்தல்
முடிந்தபின் சொல்கிறார்?
முன்பே
சொன்னால் நோக்கம் சிதைந்துவிடக்கூடும் என்பதால்!
நம்மைப்போல் அவர்கள் எக்காலத்தும் ஓட்டுக்களை மாற்றிப்போடுவதே இல்லை!
எப்போதும் பெரும்பான்மை
சிந்தாமல்
சிதறாமல்
அம்மாவுக்குத்தான்!
இன்றைய
ஆட்சியை, அதன் அவலங்களை விமர்சிக்கும்
யாரும், நாளை எந்த ஆட்சி
வந்தாலும் அதையும் இதை விட
வேகமாக, நேர்மையாக விமர்சிப்பார்கள்!
அதிமுகவை விமர்சிக்கும்
பலரும்
அதனினும்
வேகமாக
திமுகவை
விமர்சிப்பதுண்டு!
அவர்கள்தான் உண்மை
நடுநிலைவாதிகள்!
அவர்களுக்கு மறைமுகத்
திட்டங்கள்
ஏதும்
இருப்பதில்லை!
இந்த ஆட்சி மோசம்தான் ஆனால் ..... என்று இழுப்பவர்கள் வேறுவகை!
திமுகவின்
போன ஜென்மப்பிழை வரை விமர்சிக்கும் இவர்கள்
அதிமுக அவலங்களை, திமுகவை இழுக்காமல் பேசியதே
இல்லை!
அவர்களின் நோக்கமே
திமுக
மீண்டும்
தலை
தூக்கிவிடக்கூடாது
என்பது
மட்டும்தான்!
எதனால்
கருணாநிதிமேல் இத்தனை வன்மமும் காழ்ப்பும்?
எந்த வகையில் ஜெயலலிதா அவரைவிட
நல்லவர்?
இவ்வளவு மோசமான,
மக்களின்
வாழ்வாதாரத்தைப்
பாதிக்கும்
நிர்வாகச்
சீர்கேடுகளை
விமர்சிக்காமல்,
வீட்டிலிருக்கும்
கிழவரின்
வயது,
ஒழுக்கம்
பற்றியே
அதிகம்
விமர்சிக்கிறார்கள்?
எந்த நன்மையையும் செய்யாமலா அவரைத் தமிழர்கள் ஐந்துமுறை
முதால்வர் ஆக்கினார்கள்? தேர்தலில் நின்ற பதின்மூன்று முறையும்
சட்டமன்ற உறுப்பினர் ஆக்கினார்கள்?
ஏறத்தாழ அறுபது
ஆண்டுக்கும்
மேலாகத்
தமிழக
அரசியல்
அவரைச்
சுற்றியே
இயங்க,
அவரது
பங்களிப்பு
ஏதும்
இல்லையா?
பிறகேன்,
அந்த மனிதரின் "குற்றங்கள் மட்டும்" இங்கு அலசப்படுகின்றன?
அது தலைமுறை தாண்டிய வன்மம்.
அதுபற்றிப்
பேசுமுன் இணையத்தில் அவர்பற்றி வைக்கப்படும் விமர்சனங்கள், அதே விஷயத்தில் புரட்சித்தலைவி
அம்மா அவர்கள் நிலைப்பாடு இரண்டையும்
கொஞ்சம்
ஒப்பிட்டுப் பார்ப்போம்!
வாரிசு அரசியல்:
கருணாநிதி
செய்த மாபெரும் வரலாற்றுப்பிழை, கட்சியே குடும்பம் என்ற
நிலையிலிருந்து மாறி, குடும்பம்தான் கட்சி
என்று ஆனது!
மனைவி,
துணைவி இவர்களின் அர்த்தமற்ற வற்புறுத்தல் காரணமாக அருகதையே இல்லாத
அழகிரி, எங்கோ நிம்மதியாக இருந்த
கனிமொழி, இவர்களைக் கட்சிக்குள் திணித்தார்!
போதாக்குறைக்கு,
மாறன் மீதான நன்றி உணர்ச்சியில்
தயாநிதி மாறனை மத்திய அமைச்சராக்கியது
இமாலயப்பிழை!
டெல்லி
அரசியல் லாபியில் கொடிகட்டிப் பறந்தவர் முரசொலி மாறன்!
அவர் மறைவுக்குப்பின், தகுதி
வாய்ந்த
திருச்சி
சிவா
போன்றவர்களை
ஒதுக்கி,
தகுதியே
இல்லாத
இந்தச்
சிறுவனை
முன்னிறுத்தினார்!
அதன் தீவிளைவை அவரோடு கட்சியும் அனுபவித்தது!
நாற்பது
வருடங்களுக்கு மேல் அரசியலில் இருக்கும்
ஸ்டாலின், அரசியலில் நுழைந்தது வேண்டுமானால் வாரிசு என்பதால் இருக்கலாம்!
ஆனால் இன்று அவர் தன்னை
ஒரு தலைவனாக நிலை நிறுத்திக்கொள்ளுமளவு
தன்னை நிரூபித்துவிட்டார்!
இன்றைய முதல்வர் உட்பட
அரசியலில்
இருக்கும்
பலரினும்
அவருக்கு
அனுபவம்
அதிகம்!
ஆனாலும்
இன்று அவரை வாரிசு என்றே
விமர்சிப்பவர்கள், அம்மா எப்படி அரசியலுக்கு
வந்தார் என்பதை வசதியாக மறந்து,
மறைத்தே பேசுவார்கள்!
ஜெ வாரிசாக வந்தபோதே,
அவரை
உளவு
பார்க்க
வந்த
பெண்மணியோடு,
மன்னார்குடிக்
கொள்ளைக்
கும்பலின்
ஒவ்வொரு
வாரிசும்
அரசியலில்
ஆட்டம்
போடுவதும்,
திவாகாரன்,
சுதாகரன்,
இளவரசி,
டாக்டர்
வெங்கடேஷ்,
எல்லாவற்றுக்கும்
மேலாக
சின்னம்மா
என்று
அரசியல்
நிபுணர்கள்
அதிமுகவை
நிர்வகிக்க,
அவர்களுக்குக்
கட்சியில் இருக்கும்
செல்வாக்கும்,
அடிக்கும்
கொள்ளைகளும்
ஊரறிந்த
ரகசியம்!
திமுக மாவட்டச் செயலாளர்களின் வாரிசுகள் அடித்த லூட்டிக்கு நூறுமடங்கு
அதிகம் அதிமுக மாவட்டக் குறுநில
மன்னர்கள் அடிக்கும் கொள்ளை!
இதற்கு பணிவுச் செல்வத்தின்
தம்பி
ஒருசோறு
பதம்!
இவர்கள்
மாற்றாய்ச் சுட்டும் கட்சிகள் இன்னும் கேவலம்!
விஜயகாந்த்
மைத்துனன் மந்திரிசபை இலாகாக்களை அறிவித்ததும்,
சீமான்
மனைவி மாற்று வேட்பாளர் ஆனதும்
அவல நகைச்சுவையின் உச்சம்!
அன்புமணி
யாருடைய மகன் என்பது வாரிசில்
வராது!?
வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு கருணாநிதி மேல் மட்டும் வைக்கப்படுவது உள்நோக்கம் காரணமாகவே என்பது வெளிப்படை!
ஊழல்:
இதில்,
கருணாநிதி நட்ட விதை, அம்மா
ஆட்சியில் ஆலமரமாய் வளர்ந்தது!
நாற்பது
பர்சண்ட் அரசாங்கம் என்று உலகப் புகழ்
பெற்றது இந்த அரசு!
ஒரு சாதாரண மாவட்டச் செயலாளரும்
கோடிகளில் புரள்வதும், அமைச்சர்கள் அம்பானிகளாக மாறியிருப்பதும் கண்கூடு!
சமீபத்தில் ஐந்து
மூத்த
அமைச்சர்களிடம்
ஆயிரக்கணக்கான
கோடிகள்
அம்மாவால் பறிமுதல் செய்யப்பட்டது
அவர்
கட்சிக்காரர்களாலேயே
பெரும்
சாகசமாகப்
புகழப்பட்டது!
அது நிச்சயம் நேர்மையாக உழைத்துச் சம்பாதித்த பணமாகத்தான் இருக்கும்!
இந்தியாவிலேயே, ஊழல்
குற்றச்சாட்டு
நிரூபிக்கப்பட்டு
சிறை
சென்ற
முதல்
முதல்வர்
என்ற
அவமானமான
பெருமைக்குச்
சொந்தக்காரர்
ஆனார்
அம்மா!
தமிழர்கள்
மானம் உலக அரங்கில் கொடிகட்டிப்
பறந்தது!
1.7 லட்சம்
கோடி உத்தேச இழப்பு என்பதை 1.7 லட்சம்
கோடி ஊழல் என்றே திரித்தன
ஊடகங்கள்!
இன்றுவரை
அதன் விசாரணை நடத்தப்பட்டு வரும்
நிலையில் இங்கு தீர்ப்புகளே எழுதப்பட்டுவிட்டன!
அந்த விசாரணையை இழுத்தடிக்காமல் எதிர்கொள்கிறது திமுக!
பதினெட்டு
வருடம் விசாரணையை இழுத்தடித்து அதிலும் சாதனை படைத்தார்
அம்மா!
இன்று அந்தக் கத்தி உச்சநீதிமன்றத்தின்
தலையில் தொங்கிக்கொண்டிருக்கிறது!
இடையில் விசாரணைக்
கைதி
ஆனார்
தடம்
மாறி
அரசியலுக்கு
வந்த
கனிமொழி!
இரண்டுமுறை, வெவ்வேறு வழக்குகளில் ஊழல் குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனைக் கைதியானார் அம்மா!
இரண்டையும் ஒரே
தராசில்
வைத்துப்
பார்ப்பதோடு,
அம்மா
செய்தது
ஊழலே
இல்லை
என்றும்
சாதிக்கிறார்கள்
அம்மா
ஆதரவு
நடுநிலைகள்!
ஊழல் தராசில் இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பதும் வெளிப்படை!
சுயதம்பட்டம்:
நெல்லுக்குக்
கருணா என்று நாமகரணம் சூட்டிப்
பிள்ளையார் சுழி போட்டவர் கருணாநிதி!
ஆனால் அதிலும் அம்மா அறுபதடி
பாய்ந்தார்!
அரசுப்பணத்தில்
அத்தனை திட்டங்களிலும் அம்மா பெயர்!
சமீபத்து
ஸ்டிக்கர்களும், மணமக்கள் நெற்றிப்பட்டைகளும் உலகப் பிரசித்தம்!
அம்மா கழிவறைகளும், அம்மா
சாராயக்கடைகளும்
மட்டுமே
இன்னும்
பாக்கி!
நிர்வாகச் சீர்கேடு:
அதிலும்
சிகரம் தொட்டவர் அம்மா!
அரசு அதிகாரிகளையும், அமைச்சர்களையும் விருப்பம்போல் பந்தாடுவதுதான் நிர்வாகத் திறமை என்றால், அதில்
அம்மாவுக்கு ஈடு இணை இல்லை!
இன்றைய
மின்சாரத்துறையின் அவல நிலையும், தாறுமாறாய்
எகிறியிருக்கும் மாநிலத்தின் கடன் சுமையும், மாநிலத்தைவிட்டு
ஓட்டம் பிடித்த முதலீடுகளும் அம்மாவின்
அரிய சாதனைகள்!
சென்னை
செயற்கைப் பேரிடர் போனஸ்!
தனி மனித ஒழுக்கம்:
இதில்தான்
கருணாநிதி பெரிதும் தாக்கப்படுகிறார்.
அவருக்கு
வெளிப்படையாய் ஒரு மனைவியும் துணைவியும்
இருப்பது முக்கியத் தாக்குதல் காரணி!
அது முற்ற முழுக்க அவரது
சொந்த விஷயம்!
மற்றபடி
அவர் சின்னவயதுச் சேட்டைகள் இன்று எழுபது வருடங்களுக்குப்பின்
கேவலமாக விமர்சிக்கப்படுவதின் உள்நோக்கம் என்ன?
கண்ணதாசனின் வனவாசம்
வேதப்புத்தகமாகக்
கொண்டாடப்படும்
இணையத்தில்,
அம்மா
அவரே
எழுதிய
வாழ்க்கைத்
தொடர்
ஏன்
விவாதப்
பொருள்
ஆவதில்லை?
சோபன்பாபுவோடு கோயிங் ஸ்டெடி என்று அவர் புகைப்படத்தோடு எழுதிய தொடரைப் பதிப்பித்த அதே குமுதம் என்ற மஞ்சள் பத்திரிக்கைதான், கார்டூனிஸ்ட் பாலா என்ற வக்கிரவாதியை வைத்துக் குஷ்புவைப்பற்றிக் கார்ட்டூன் போடுகிறது!
கருணாநிதி
குஷ்பு திருமணம் என்று வயிற்றுப்பிழைப்புக்கு விபச்சாரம் செய்யும்
ஏடு அது!
எம்ஜியார்
என்னை வலுக்கட்டாயமாக அரசியலுக்கு இழுத்துவந்தார் என்று குமுறிய அதே
பெண்மணிதான் எம்ஜியார் மறைவில் வேறு நாடகம்
போட்டார்!
எம்ஜியார் என்னை மகளாகத் தத்தெடுத்துக்கொண்டார் என்றும், எம்ஜியார் என் கணவர் என்றும் ஒரே மாத இடைவெளியில் கூச்சமே இன்றி அறிக்கை விட்டார்!
எம்ஜியாரின் மறைவுக்குப்பின்
அவர்
மனைவியா,
இல்லை
மனைவி
என்று
தானே
சொல்லிக்கொண்டவரா
என்று
பலப்பரீட்சை
நடத்திய
தேர்தலில்
இருவரையுமே
வீழ்த்தினார்கள்
மக்கள்!
அப்போது
அம்மாவை அரவணைத்துக் காப்பாற்றியவர்கள் திருநாவுக்கரசரும் கேகேஎஸ்எஸ்ஆரும் !
ஒரு மதி மயங்கிய சூழலில்
தனக்கும், ஜெவுக்குமான உறவு பற்றி ஜெ
முதல்வரானபின் KKSSRR உளறித் தொலைக்க, அப்போதுதான்
தன்னை எம்ஜியாரின் உண்மை வாரிசு என்று
நிரூபித்தார் ஜெ!
ராமாவரத் தோட்ட
உத்தி
என்ன
வேலை
செய்ததோ,
ஒரே
வாரத்தில்
மனைவியோடு
வந்து
அம்மா
காலில்
சாஷ்டாங்கமாக
விழுந்தார்!
அதைப் பின்னாலிருந்து முழு அளவு புகைப்படமாக
எடுக்கச் செய்து எல்லாப் பத்திரிக்கைகளிலும்
மறுநாள் வரவைத்தார் அம்மா!
இந்தியன் எக்ஸ்ப்ரஸ்
டெல்லிப்பதிப்பு
அதிர்ந்துபோய்
இதுபற்றி
எழுதிய
தலையங்கம்
அப்போதைய
பரபரப்பு!
இன்று மேலே பறக்கும் ஹெலிகாப்டருக்குத் தரையில் விழுந்து புரளும், அம்மா வாகனத்தின் டயரை சேவிக்கும், சாதாரணக் காட்சிகளுக்கு அதுதான் பிள்ளையார் சுழி!
தன்னைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் உபயோகித்துக்கொண்ட ஆண்களை உளவியல் ரீதியாகப் பழிவாங்கும் நடவடிக்கைதான் இந்தக் காலில் விழும் கலாச்சாரத்தை ஜெ ஊக்குவிப்பது!
இத்தனை
அவலங்களும் இவர்கள் கொண்டாடும் மனவாச
காலத்துக்குப் பல பத்தாண்டுகளுக்குப் பின்
நடந்தவை!
இதைப்பற்றி,
கலைஞரின் குடும்ப வாழ்வை அலசும்
யாரும் ஏன் பேசுவதே இல்லை?
சக மனிதர்களுக்கு மரியாதை:
இதைப்பற்றிப்
பேச அதிமுகவினருக்கு இன்னும் அருகதை இருக்கிறதா?
மக்களால்
சந்திக்கவே முடியாத மகாராணியை அவரது
மந்திரி பிரதானிகள் சந்திப்பதோ, தங்கள் கருத்தைப் பகிர்ந்துகொள்வதோ
களவிலும் நடக்காத விஷயம்!
திமுக பொதுக்குழு, செயற்குழு
கூட்டங்களில்
விவாதம்
அனல்
பறக்கும்!
ஆனால் அம்மா முன்
முணுமுணுக்கும் திராணி
இருக்கிறதா
இந்த
மங்குனி
மந்திரிகளுக்கு?
"அம்மாவின் செருப்பைப் பொக்கிஷமாய்ப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்" என்று
புளகாங்கிதப் பேட்டி கொடுக்கிறார் இன்று
திமுகவுக்குத் தாவிவிட்ட கொங்கு நாட்டுச் சிங்கம்!
இது ஒன்று போதும்
பெருமாள்
முருகனை
ஓடவிட்ட
இந்த
ஆண்ட
பரம்பரையின்
உண்மை
சுயமரியாதை
சொல்ல!
இத்தனை
அவலங்களை மீறி அம்மாவைவிடக் கூடுதலாக
இவர்கள் ஏன் கருணாநிதியை வெறுத்து
விமர்சிக்கிறார்கள்?
கருணாநிதி
ஆட்சியில் நடந்த நல்லவை ஏன்
திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன?
சிப்காட்களும் டைடல்
பார்க்குகளும்
மேம்பாலங்களும்
அரசு
மருத்துவக்
கல்லூரிகளும்,
அண்ணா
நூலகம்
போன்ற
அறிவுச்
சோலைகளும்
திரை
போட்டு
மறைக்க
முடியாதவை
என்பது
அவரை
வேறு
காரணத்தால்
நிந்திக்கும்
அறிவாளிகளுக்குத்
தெரியும்!
தலைமுறைகளாய்த் தாங்களே உயர்ந்தவர்கள் என்று மூளைச் சலவை செய்து ஆண்டவர்களுக்கு வேறு வழி தெரியாதா என்ன?
எதைப்பற்றிப்
பேசினால் இளைஞர்கள் ஈர்க்கப்படுவார்கள் என்பது அவர்களுக்கா தெரியாது?
வெறுப்புத்
தீயை நையாண்டித் திரையால் மறைத்தார்கள்!
கருணாநிதியின் தனிமனித
ஒழுக்கம்,
மனைவி,
துணைவி,
வாரிசுகள்
என்பதைப்
பிரதான
காரணமாக்கி
தொண்ணூற்று
நான்கு
வயதுக்
கிழவரை,
இரண்டு
பெண்களுக்குத்
தாயானவரோடு
இணைத்துப்
பேசினார்கள்!
கட்டுமரம், தள்ளுவண்டி என்று நையாண்டி செய்யப்படும் முதுமை இப்படிப் பேசும்போது மட்டும் இருபது வயது இளமை ஆனது!
முன்னாள் நடிகை என்பதால் அவர் ஒழுக்கம் கெட்டவராகத்தான் இருப்பார் என்றால், இதே அளவுகோல், குடும்பம், துணை என்று ஏதுமே இல்லாத முன்னால் நடிகைக்குப் பொருந்தாதா?
இதுதான் இவர்களின்
தரம்,
இதைத்தான்
சொல்லிகொடுத்தது
இவர்களின்
கல்வி,
வளர்ப்பு
எல்லாம்!
தாங்கள்
இவ்வளவு தரம் தாழ்ந்தாவது அவரைத்
தாழ்த்தும் அவசியம் இவர்களுக்கு என்ன?
காரணம் மிக எளிமையானது!
இன்றுவரை இவர்கள் அடிவயிற்றில் தீ மூட்டியிருப்பது இட ஒதுக்கீடும், சமூக நீதியும்தான்!
இட ஒதுக்கீட்டில் பலன் பெற்று முதல்
தலைமுறை அரசு உயர் அதிகாரிகள்
பதவிக்கு வந்தபோது இந்த ஆண்டவர்கள் செய்த
விமர்சனங்களும் ஏளனங்களும் இன்றுவரை தொடரத்தான் செய்கிறது!
தன உயர்வு பிறப்பால் வந்தது
என்ற மூட நம்பிக்கையும் உயர்வு
மனப்பான்மையும் அடிவாங்கிச் சரிவதை அவர்களால் எப்படிச்
சகித்துக்கொள்ளமுடியும்?
அந்த வலி, பழிவாங்க அவர்களுக்குக்
காட்டியதுதான் இந்தக் கேவலமான வழி!
குறிப்பிட்ட அறிவுசார்
தொழில்கள்
தமக்கு
மட்டும்தான்
சொந்தம்
என்று
இறுமாந்திருந்தவர்கள்
அந்த
இடத்துக்கு
மற்றவர்களும்
வந்து
தம்மினும்
சிறப்பாக
வெல்வதைப்
பார்த்து
வெம்பி
வெதும்பிப்
போகிறார்கள்
.
அது, இந்த மாற்றத்துக்கெல்லாம் காரணி என்று தாங்கள் கருதுபவர்கள் மீது சாக்கடையை வாரி இறைக்கிறது!
இந்த மனநிலை படித்தவர்கள் உலவும்
இணையத்தில்கூட மாறவில்லை என்பதுதான் அவல நிஜம்!
படிக்காத
பாமரர்கள் மிகத் தெளிவாகத்தான் இருந்தார்கள்!
கீழ்மட்டத்திலிருந்து
வந்த படித்த இளைஞர்களுக்கு ஒரு
பழக்கம் உண்டு!
கொஞ்சம்
படித்து ஒரு நிலைக்கு வந்ததும்
தங்கள் இயல்பு மொழியை, பழக்கவழக்கங்களை
வெறுத்து மாற்றிக்கொள்ள முனைவார்கள்!
தங்களைவிடப்
பிறப்பால்
உயர்ந்தவர்கள்
என்று
சொல்லிக்கொள்ளும்
ஜாதியினரைப்
போலப்
பேசும்
உச்சரிப்புக்கு
மாற்றிக்கொள்வார்கள்!
அவர்கள்
பழக்க வழக்கங்களை, அவர்கள் உணவுப்பழக்கத்தை, அவர்கள்
தொழும் கடவுள்களை சிலாகித்துத் தங்களை அவர்களைப்போல் காட்டிக்கொள்ள
முயல்வார்கள்!
இது தன் ஜாதி,
பிறப்பு
பற்றி
விதைக்கப்பட்ட
தாழ்வு
மனப்பான்மையின்
பின்விளைவு!
இணையத்திலும்
அதுதான் நடந்தது!
அவர்கள்
சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று அப்படியே ஏற்றுக்கொண்டார்கள்!
எதையும் காரண
காரியத்தோடு
சுயமாக
யோசிக்க
மறந்தார்கள்!
இவ்வளவு
கேவலமான ஆண்டான் அடிமை அரசை
வெளிப்படையாக ஆதரிக்கக் கூசிய இளைஞர் படை,
அன்புமணி, சீமான், வைகோ, விஜயகாந்த்
என்று தனக்குக் கண்ணில் பட்டவர்களை மாற்றாக
எண்ணி, அவர்களின் கடந்த காலச் செயல்பாட்டை
சற்றும் ஆராயாமல் அவர்கள் பின்னால் போனது!
அவர்களை
மறைமுகமாக வழி நடத்திய ஆண்டவர்களுக்கு
இது இன்னும் வசதியாகப் போயிற்று!
ஜெயலலிதா எதிர்ப்பு
ஓட்டுக்கள்
சிதறுவது
கருணாநிதியை
வராது
தடுக்கும்
என்பது
அவர்களுக்குப்
புரிந்தது!
தங்கள் நோக்கமும் நிறைவேறும், நடுநிலை முகமூடியும் பொருந்திப்போகும் என்று இரட்டை பலனை அறுவடை செய்ய முனைந்தார்கள்!
சந்தோசம்
மறைத்த புன்னகையோடு இளைஞர்களைத் தட்டிக்கொடுத்து உற்சாகப்படுத்தினார்கள்!
அவர்கள் கொஞ்சம்
யோசிக்கிறார்கள்
என்று
பட்டால்,
2ஜி,
ஈழம்,
வாரிசு,
கட்டுமரம்
என்று
மடை
மாற்றிக்கொண்டே
இருந்தார்கள்!
இப்படி
இவர்கள் அலைமோதிக்கொண்டிருக்க, தங்கள் வாக்குகளை சிந்தாமல்
சிதறாமல் அம்மாவுக்குப் போட்டார்கள்!
தேர்தல்
முடிந்த கையோடு, "இந்த மாற்றம் என்று
வந்த கூட்டம் அடித்த கூத்தில்
நம்பிக்கை இல்லாமல், மோசம் என்று தெரிந்தாலும்
அம்மாவுக்குத்தான் வாக்களித்தோம்!” என்று லஜ்ஜையே இல்லாமல் சொன்னார்கள்!
வழக்கம்போல்,
அதையும் கேள்வி கேட்காமல் மந்தைகளாய்
ஆதரித்தது இணையம்!
நினைத்ததை
முடித்த நிம்மதியில் இன்று ஏகடியம் பேசுகிறார்கள்!
ஆனாலும்,
அவர்களுக்குப் பல்லிடுக்கில் சிக்கிய பாக்குத் தூளைப்போல
சில விஷயங்கள் உறுத்தின!
திமுக,அவர்கள் எதிர்பார்த்ததைவிட
அதிக
இடங்களைப்
பெற்றது!
அவர்களின்
ஆதர்ஷ
நாயகியின்
கட்சி
பெரும்பான்மை
பெற்றாலும்
இரண்டு
இடங்களில்
டெபாசிட்
இழந்தது!
திமுகவுக்கு விழுந்த வாக்குகள் மக்கள் நலக் கூட்டணித் தொண்டர்கள் மாற்றிப்போட்டவை என்று கூசாமல் புளுகி, சுய ஆறுதல் அடைந்தார்கள்!
அவர்கள்
எப்போதுமே இப்படித்தான்!
கருணாநிதி
மட்டுமல்ல!
தலைமுறைகளாகத் தங்கள்
ஆளுமையைக்
கேள்வி
கேட்ட
எல்லோருமே
அவர்களுக்கு
விரோதிகள்தான்!
ஜாதி சார்ந்த வேறுபாடுகளை எதிர்த்து,
இந்த அமைப்பிலிருந்து வெளியேறியவர்களைக்கூட அவர்கள் மன்னித்துவிடுவார்கள்
ஆனால் உள்ளே இருந்துகொண்டே
அதை
உடைக்க
முயலும்
கலகக்காரகள்
என்றும்
அவர்களுக்கு
என்றும்
கசப்பானவர்களே!
அப்படி வந்த கசப்பு மருந்து பாரதி!
பூணூலை
அறுத்தெறிந்துவிட்டு சேரிக்குக் குடி பெயர்ந்திருந்தால் பாரதி
அவர்களால் மன்னிக்கப்பட்டிருப்பான்!
நீ உன் உயர்வு எதுவென்று
நினைக்கிறாயோ, அதை இவர்களுக்கும் தந்து
இவர்களை உங்களுக்கு இணையாக்குவேன் என்று சேரிக்குழந்தைகளுக்குப் பூணூல் அணிவித்தும்,
வேதம் கற்பித்தும் அவர்களுக்கு இணையாக உட்காரவைத்ததில் அவன்
அவர்களுக்குப் பரம விரோதி ஆனான்!
"பார்ப்பானை
ஐயரென்ற
காலமும்
போச்சே"
என்று
ஒரு
பிராமணன்
கூற்று
அவர்களுக்கு
சர்வாங்கத்தையும்
எரித்தது!
அப்படிப்பட்ட தங்கள் முன்னோடியான பாரதியை, அவன் பிறந்த ஜாதியை வைத்து அங்கீகரிக்காமல் உதாசீனம் செய்தது திராவிடக் கட்சிகளின் மடமை!
இட ஒதுக்கீடு, சமூக நீதி என்று
தன் முன் கூனிக்குறுகி வணங்கி
நின்றவர்களைக் கை பிடித்து மேலே
கூட்டிவரும் வேலையில் முனைப்புக் காட்டியதுதான் ஆரம்பகால திராவிடக் கட்சிகளின் மீதான அவர்கள் ஆத்திரத்தின்
காரணி!
அதன் இன்றைய வாழும்
கடைசி
பிரதிநிதி
கலைஞர்
என்பது
அவர்கள்
வயிற்றில்
தீ
மூட்டுகிறது!
மதமாற்றத்
தடைச் சட்டம், கோவில்களில் உயிர்ப்பலிக்குத்
தடை என்ற நடவடிக்கைகள் அவர்களின்
ஒளிவிளக்காக ஜெயை சுட்டிக்காட்டியது - தங்களவர்
என்ற அடிப்படைத் தகுதிக்கு மேலாக!
அனைத்துச்
சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது தட்டில்
விழும் பிச்சைக் காசுகளுக்காக அல்ல!
செய்யும் தொழிலை
வைத்தே
ஜாதிகள்
தீர்மானிக்கப்படும்
என்ற
நிலையை
மாற்றவே!
உன்பிறப்பு உன்
தொழிலைத்
தீர்மானிக்கும்
இழிநிலை
மாறட்டும்,
சில
தொழில்கள்
மட்டும்தான்
புனிதமானது,
அது
சிலருக்கு
மட்டுமே
பிறப்புரிமை
என்ற
மூட
நம்பிக்கை
ஒழியட்டும்
என்பதற்காகவே!
ஒருவன் வழிபடும் தெய்வம், சாப்பிடும் உணவு, செய்யும் தொழில் இவை அவனது உயர்வு தாழ்வைத் தீர்மானிக்கும் அவலத்தை மாற்றும் முயற்சி தங்கள் ஆதிக்க ஆணவத்தின்மீது விழும் பேரிடி என்றும், அதை முன்னெடுப்பவன் தங்கள் பரம் விரோதி என்றும் அவர்கள் நினைப்பது ஒருவகையில் புரிந்துகொள்ளக் கூடியதே!
ஆனால், தங்களைப் புதிய
ஆதிக்க
சக்தி
என்று
சொல்லிக்கொள்பவர்களும்,
இந்த
மாறுதலால்
பலன்
பெற்ற
குலத்தின்
இளைஞர்களும்
அவர்கள்
வலையில்
தாங்களே
போய்
விழுந்து,
தங்கள்
கைகளால்
தங்கள்
கண்களைக்
குத்திக்கொள்ளும்
அவலத்தை
என்ன
சொல்வது?
தங்கள்
மீது திணிக்கப்படும் எதையும் அதற்கான காரண
காரியத்தை ஆராய்ந்து முடிவெடுக்கும் பகுத்தறிவை இந்தக் கல்விமுறை கற்பிக்காதது
துரதிர்ஷ்டம்!
யாரையும்
நீங்கள் கொண்டாடுங்கள்!
யாரையும்
நீங்கள் தூற்றுங்கள்!
ஆனால், அதற்குமுன், வெறும்
இரண்டு
தலைமுறை
வரலாற்றை
ஊன்றிப்
படியுங்கள்!
உங்கள் பாட்டனுக்கும், பூட்டனுக்கும் மறுக்கப்பட்ட உரிமைகளும், கல்வியும் உங்கள் முந்தைய தலைமுறைக்கும் உங்களுக்கும் தடையின்றிக் கிடைக்க, யார், எந்த இயக்கம் காரணம் என்று கேட்டறியுங்கள்!
பிறகு,
அந்த அறிவால் முடிவெடுங்கள்!
இனி வரும் இளைஞர்
பட்டாளமாவது
சுயமாக
யோசிக்கப்
பழகட்டும்!
இல்லையேல் தலைமுறைகளாகத் தாங்கள் தோற்கடிக்கப்படும் பிரித்தாளும் சூழ்ச்சிக்கு வழக்கம்போல் வீழ்ந்துபடட்டும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக