வியாழன், 23 ஜூன், 2016

அன்னம்மா ஜார்ஜும் பின்னொரு மோட்டிவேஷன் கிளாஸும்!
"அன்னாம்மா கோவை வந்த கதையோட கூடவே கொஞ்சம் என் + இன்னைக்கு காலைல லெட்டர் எழுதி வெச்சுட்டு ஓடிப்போன என் புதுப் பொண்டாட்டி லலிதகுமாரி கதை!

கோயமுத்தூர்ல இருக்கற பணக்காரனுக்கெல்லாம் எதையாவது பண்ணி தன்னை வித்தியாசமாக் காமிச்சுக்கணும்ன்னு ஒரு வெறி!

அதுக்கு எங்க ஓனரும் விதிவிலக்கில்லை!

எங்காளுக்கு பழைய்ய்ய கார் வாங்கி பத்திரமா வைக்கறது!
இதுக்குன்னே ஒரு பெரிய இடம் ஆபீஸ் காம்பௌண்ட்குள்ளேயே!

ஒவ்வொரு காருக்கும், 1923,1941, இப்படி நம்பர் எம்ப்ராய்டரி பண்ணி சின்ன சந்து கூட விடாத அளவு பெரிய கவர் போட்டு வெச்சிருப்பார்!

வர்றவங்களுக்கு “இது மைசூர் மஹாராஜா வெச்சிருந்தது, இது மௌண்ட் பேட்டன் வெச்சிருந்தது”ன்னு காண்பிக்கும்போது மட்டும் அந்தக் கவரை எடுக்க ஒரு ஆள்!

கண்ணில் படும், ஆனால் காது கேட்காத தூரத்தில் வாலை ஆட்டிக்கொண்டு நான்!

சொப்பன சுந்தரி வெச்சிருந்த காரையும் வாங்கிட்டாருன்னு நினைக்கிறேன்.

ஓரத்தில் நம்பர் எதுவும் போடாமல் ஜரிகை பார்டர் போட்டு மூடி வெச்சிருக்கறது அதுதான்னு எல்லோரும் பேசிக்குவாங்க!

ஒரு நாளைக்கு அந்தத் துணியைத் தூக்கிப் பார்த்துடணும் என்பது என்னுடைய ஐந்தாண்டுத் திட்டத்தில் ஒன்று! 

அவருக்கு இருக்கற வசதிக்கு நூறு சொப்பன சுந்தரியையே வெச்சுக்கலாம்! 
அதுல பாதி இப்பவே வெச்சிருக்காருங்கறது வேற விஷயம்!

அப்பன் சம்பாரிச்சு வெச்ச சொத்து, ஏழு தலைமுறைக்கு உட்கார்ந்து தின்னாலும் தீராது!

பெரியவர் ஸ்பின்னிங் மில், ஹோட்டல், ரைஸ் மில், பேப்பர் மில்லுன்னு தோணுன பிசினெஸ் எல்லாத்தையும் ஆரம்பிச்சுக் கொடுத்துட்டுப் போய்ட்டார்! 
அது போக வீட்டு வாடகை மட்டும் மாசம் என் ஒரு வருஷ சம்பளம் மாதிரி மூணு மடங்கு!

இந்தக் கணக்கு வாடகை வேறு வகையில் வசூலிக்கப்படும் சில வீடுகளைத் தவிர்த்து!

கோயமுத்தூருக்கு கிட்னி மாதிரி ராம் நகர்!

அங்கே இருக்கு எங்க ஆபீஸ்!

பேரு? வேண்டாம்! அதைச் சொல்லி, இதை எழுதினது நான்தான்னு தெரிஞ்சா, அறுத்து அவர் வெச்சிருக்கற நூறு நாய்க்கும் போட்ருவாரு!

மேலும், ஸ்வீப்பர் வேலைக்கே மரைன் என்ஜினீயரிங் படிச்சவன் வேணும்ன்னு கேட்கற காலத்துல, நான் படிச்ச ஓட்டை டிகிரிக்கும் முப்பத்திரெண்டு மார்க்குக்கும் இந்தமாதிரி ஒரு வேலை மறுபடி கிடைக்காது!

இந்த வேலை எனக்குக் கிடைச்சதே வடிவேலு பேக்கரிக் கதை மாதிரி!

என் நண்பன், ஓனரோட மூணாவது வீட்டு டிரைவர் பொண்டாட்டி மூலம் வாங்கிக்கொடுத்தது!

கொஞ்ச நாள் ஒரு ஆப்பக்காரி பின்னாடி சுத்துனதால பேசத் தெரிஞ்ச இங்கிலீஷும், அவ டாட்டா காட்டீட்டுப் போனதால சேட்டு பொண்டாட்டிக்கு கால் அமுக்கிவிட்டதுல தெரிஞ்ச அரைகுறை ஹிந்தியும், சேச்சி மாரைப் பார்த்துக் கத்துக்கிட்ட மலையாளமும் என்னோட அரை டிகிரியை மழுப்பி பெரிய ஐஏஎஸ் ஆபீசர் மாதிரி எங்க முதலாளி கண்ணுக்குத் தெரிய, அடிச்ச லக்கி ப்ரைஸ் இந்த வேலை!

ஆனால் இந்த வேலைக்கான கண்டிஷன்கள் என்று எனக்குத் தரப்பட்ட பேப்பரைப் படித்தால் யாருக்கும் இந்த வேலை பற்றி அவ்வளவு உயர்வான அபிப்ராயம் வராது

v  கஸ்டமர்களை வரவேற்கப் போகையிலும், அவர்களோடு இருக்கையிலும் உறுத்தாத வண்ணங்களில்தான் உடை அணியவேண்டும்

v  டீ ஷார்ட் , ஜீன்ஸ் அணியக்கூடாது

v  க்ஷேவ் செய்யாமல் வேலைக்கு வரக்கூடாது.

v  சட்டை கையை மடித்துவிடக்கூடாது.

v  வியர்த்து வழித்துக்கொண்டு நிற்கக்கூடாது.

v  கண்டிப்பாக வாசனைத் திரவியங்கள்  உபயோகிக்கவேண்டும்.

v  அது விருந்தினருக்கு தலைவலி ஏற்படுத்துவதாகவோ, முகம் சுளிக்கவைப்பதாகவோ இருக்கக்கூடாது என்பதால், மேலதிகாரி அனுமதிக்கும்  பிராண்டுகளுக்கு  மட்டுமே அனுமதி.

v  விருந்தினர் என்ன சொன்னாலும் முகம் சுளிக்காமல் சிரித்த முகத்தோடு தட்டாமல் செய்யவேண்டும்.

v  அவர்கள் விரும்பும்வரை அவர்கள் கூடவே இருக்கவேண்டும்.

இதை வேலை வாங்கிக்கொடுத்த வள்ளல் என் நண்பனிடம் காட்டியபோது, “பரவால்லடா ப்ராஸ்டிட்யூட்டுக்கு எத்தனை கஷ்டம் இருக்கும்ன்னு இப்போ தெரியுது” ன்னு ஏடட் சால்ட் டு த வூண்ட்!

கோட் சூட் போடவும் பென்ஸ் காரில் போகவும் மட்டுமல்ல,
“பாரு B.A பெயில் ஆனாலும் பாஸ்கர் எப்படி சாமர்த்தியமா இருக்கான்! நீயும் வந்து பொறந்தியே எனக்குன்னு” என் சொந்த பந்த நட்பு வட்டத்துல இருக்கற என்ஜினீயரிங், MBA படிச்ச திமிர்ல என்னை கொசு மாதிரி பார்த்த எல்லா அறிவாளிக்கும் மண்டகப்படி கிடைக்க இந்த வேலைதானே காரணம்!

அதுவும் சாதாரண வேலையா!

கை நிறைய சம்பளம்,
ஜி எம்முக்கே i 20! எனக்குன்னு தனியா ஒரு பென்ஸ் கார்!

அப்படி என்ன வேலை?

பீ ஆர்! தமிழ்ல சொன்னா, பொதுத் தொடர்பு அதிகாரி!

கொஞ்சம் அசிங்கமா அர்த்தம் வருதுதானே?

அதுனாலதான் சிலதை இங்கிலீஸ்ல சொல்லீர்றது நல்லது!

அப்படி இங்கிலீஷ்ல சொல்லி, பென்ஸ் கார்ல பொண்ணுப்பார்க்கப் போய் சரியா ஆறு மாசம் முன்னாடி கட்டிக்கிட்ட தேவதைதான் லலிதா! இந்தக் கதையோட ஆரம்ப வரிகள்ல லெட்டர் எழுதிவெச்சுட்டு ஓடிப்போன லலித குமாரி!

காரணம், அன்னம்மா!

எங்க ஓனரோட சுயதம்பட்டத்தைக் கேட்க உள்ளூர் ஆளுங்க போதாதுன்னு, வெளியூர்ல இருந்தும் வெளி நாட்டிலிருந்தும் அப்பப்ப வருவாங்க!

ஆடிட் கமிட்டி, அப்ரைஸல் டீம், ரேட்டிங் கமிட்டி இப்படி ஏதோ ஒன்னு!

மாசம் ரெண்டு தடவையாவது வந்து ரெண்டுநாளோ மூணு நாளோ தங்கி வேலையோட, எங்க ஆளோட கார் கலெக்சனையும் பார்த்து ஆ ஊ ன்னு பாராட்டிட்டுப் போவாங்க!

அதில் ஒருத்தர் நம்ம ரேஞ்ச் போல!

இப்படிப் பழைய கார் வாங்கிப் போத்தி வைக்கறதுக்கு பழைய இரும்புக்காவது போடலாமேன்னு கேட்டுத் தொலைச்சு, அதைக் கேட்டு நான் சிரிச்சதுனால இப்பக் காது கேட்காத தூரத்துல கை கட்டி நிக்கற வேலை!

என்னோட வேலை என்னான்னு சொல்லலையே!

வர்றவங்களை ஏர்போர்ட்டிலோ அல்லது எப்போதாவது ரயில்வே ஸ்டேஷன்லயோ தேவுடு காத்துக் கூட்டிக்கிட்டு வந்து, கம்பெனி கெஸ்ட் ஹவுஸ்ல தங்க வெச்சு, அவனுக பல் தேய்க்கறதுல இருந்து போத்திக்கிட்டுத் தூங்கற வரைக்கும் ஈன்னு இளிச்சுக்கிட்டே கூடவே இருக்கணும்!

வர்றவன்ல பாதிப்பேர் நெத்தியில கொம்பு மொளைச்சவனுக!

மீதிப்பேர் வர்ற தடமும் தெரியாது, போற எடமும் தெரியாது ஆனா இவனுக ஆடுற ஆட்டம் இருக்கே!

இவனுக புத்தி தெரிஞ்சுதான் இருபது வகை பேஸ்ட், முப்பது வகை சோப்புன்னு வாங்கி வெச்சிருப்பேன்! 

அத்தனையும் பிடிக்காதுன்னு உலகத்துலயே இல்லாத ப்ராண்ட் ஒன்னைச் சொல்லி அதுதான் வேணும்ன்னு அடம் பிடிப்பானுக!

அகால நேரத்துல கடை கடையா ஏறி அதை வாங்கிக்கிட்டு வர்றதுக்குள்ள சமையல்காரியைக் கையைப் பிடித்து இழுக்காத கொறையா களேபரம் பண்ணி வெச்சிருப்பானுக!'

குளிக்க சுடுதண்ணி இத்தனை டிகிரி வேணும், அதையும் நாம தொட்டுப் பார்த்து சொல்லணும்!

வீட்ல பொண்டாட்டிகிட்ட காட்டமுடியாத அதிகாரம் அத்தனையும் இங்க கொடிகட்டிப் பறக்கும்!

என்ன செய்ய?
கால் கழுவி விடச்சொன்னாக்கூட மூக்கைப் பொத்திக்கிட்டு கழுவிவிட்டுத்தான் ஆகணும்!

இது பரவாயில்லை!

இவனுக கிட்ட எவனோ கோயமுத்தூர்ல இருந்து கூப்பிடு தூரம்தான் ஈரோடு, திருப்பூர் பவானி எல்லாம்ன்னு சொல்லி அனுப்புவானுக போல!

அந்த ஊர்ல எல்லாம் துணிமணி ரோட்ல போட்டு சும்மா கொடுப்பாங்கன்னு நெனைச்சுக்கிட்டு, பனியன், ஜட்டி லுங்கி வேஷ்டி பெட்ஷீட் ஜமக்காளம்ன்னு ஒரு பெரிய லிஸ்டே தூக்கிக்கிட்டு வருவானுக!

ஒருதடவை ஹைதராபாத்துக்கு ப்ளைட் கார்கோல அனுப்புனேன்னா நம்பவா போறீங்க!

அதைவிடக்கொடுமை, ஒருத்தர் திருப்பூர் சந்து பொந்து எல்லாம் சுத்தி பொண்டாட்டி உள்பாவாடை  தைக்க சாட்டின் துணி வேணும்ன்னு பத்துக்கலர்ல ரோல் ரோலா வாங்கி  டெம்போ வெச்ச்சு எடுத்துக்கிட்டு வந்த கூத்தெல்லாம் சாதாரணம்!

இப்படி வர்ற எல்லோருமே, ஞாயிற்றுக் கிழமை மருதமலை, ஊட்டி டாப் ஸ்லிப் ன்னு எங்கேயாவது போறதுக்கு நானும் கூடப் போகணும்!

இப்படி கண்டவன் பின்னாடி அலைஞ்சு, என் ஓனர் பழைய காரைப் போத்தியே வெச்சிருக்கற மாதிரி நானும் புதுப் பெண்டாட்டியை….

அப்படி இந்த வாரம் சனி ஞாயிறு மோட்டிவேஷன் கிளாஸ் எடுக்க வந்தவங்க அன்னம்மா!

பேருதான் கொஞ்சம் பழசு!

எம்பிபிஎஸ் முடிச்ச கையோட, சைக்யாட்ரியில் மாஸ்டர் டிகிரி வாங்கி உலகம் முழுக்கப் பறந்து பறந்து கம்பெனி எக்சிக்யூட்டிவ்களுக்கு ஊக்க மருந்து லெக்சர் கொடுக்குற வேலை!

புருஷன்?  அது கெடக்குது நம்ம கதைக்கு சம்பந்தம் இல்லாத கழுதை!

வெள்ளிக்கிழமை தொட்டம்பட்டி பஸ்ஸ்டாண்ட் மாதிரி இருக்கற, கோயமுத்தூர் "இண்டர்நேஷனல்"ஏர்போர்ட் வாசல்ல ஏசி காருக்குள்ள உட்கார்ந்து தேவுடு காத்துக்கிட்டு இருந்தேன். 

சிம்பு படம் மாதிரி திருவனந்தபுரம் ஃபிளைட் வருது வருதுன்னு டீஸரா உட்றானுங்க!

ஒருவழியா ராத்திரி எட்டரை மணிக்கு வந்துது அந்த ஃபிளைட்!

இந்தவாரம் கெஸ்ட் இவங்கதான்ன்னு பாஸ் ப்ரொபைல் போட்டோ அனுப்புனது அன்னம்மா கொஞ்சம் சின்னம்மாவா இருந்தப்ப எடுத்த படம் போல!

யப்பா.. வாட்டே வுமன்!

சும்மா தளதளன்னு குலுங்கக் குலுங்க வளந்திருக்குது!

கேரளா கடவுள்களின் தேசமான்னு தெரியாது ஆனா சாத்தியமா வள்ளிய தேவதை தேசமானு!

அந்த நேரத்துல கோயமுத்தூர் ஏர்போர்ட்ல இருந்த எல்லோருமே ஆசீர்வதிக்கப்பட்டவங்க!

அத்தனை கோடீஸ்வரன் கண்ணும் அன்னம்மா மேலதான்!

பதினேழு வயசுக்கு ஒரு வினாடி அதிகம் சொன்னா, சாமி கண்ணைக் குத்தீரும்!

அன்னம்மாகிட்ட கண்ணைக் குத்த வேற விஷயமும் இருந்தது! 
அது .... 

விடுங்க! முடிஞ்சவரைக்கும் யூ சர்டிபிகேட் கதை எழுதப் பார்ப்போம்!

அன்னம்மா கையைப் பூ மாதிரி குலுக்கினப்போ இது போதும்டா பாஸ்கரான்னு ஒரு குரல் மண்டைக்குள்ளே!

அத்தனை பேரும் ஸ்டாப் பிளாக்கில் நிற்க, அன்னம்மாவையும் அவங்களோட சிக்கனமான லக்கேஜையும் காருக்குத் தள்ளிக்கிட்டு வந்துட்டேன்!

“டாக்டர், டின்னர் கெஸ்ட் ஹவுஸ்ல ரெடியா இருக்கு! வேற ஏதாவது வேணுமா?”

கோவை ஸ்பீட் ப்ரேக்கர்களை வாழ்த்திக்கிட்டே கண்ணுக்குக் கொஞ்சம் கீழ பார்த்துக் கேட்டா, மொத வெடிகுண்டு!

“நோ பாஸ்கர், எனக்கு அங்கண்ணன் கடை பிரியாணி வேணும்”!

“போச்சுடா! அங்கண்ணன் கடை ஹைதர் காலத்தில் இருந்து, அதை மூடி, நயன்தாரா காலம் வந்தாச்சு! இப்போ கேட்கறீங்களே” - இதைக் கேட்க முடியாமல்,
“டாக்டர், அந்தக் கடை மூடி பத்து வருஷம் ஆச்சு!”

“நோ நோ, போனதடவை சாப்பிட்டதா ஜார்ஜ் சொல்லுச்சு”

கிழிஞ்சுது. ஜார்ஜும் வின்டேஜ் ஐட்டமா?

“இல்லை டாக்டர் இப்போ அந்தக்கடை இல்லை! வேணும்னா பிரியாணி மண்டியில வாங்கித் தரட்டுமா?”

“ஏதோ செய்ங்க, எனக்கு இப்ப நல்ல பிரியாணி வேணும்!”

“அப்புறம் பாஸ்கர், நீங்க பார்க்கற இடம் அவ்வளவு நாகரீகமா இல்லை!”

“சாரி டாக்டர்”! எனக்கு நாக்கு உலர்ந்து போச்சு!

நாளைக்கு பரதேவதை வத்தி வெச்சுருச்சுன்னா அப்புறம் கோபிநாத் மாதிரி கோட் போடமுடியாது!

எல்லாத்தையும் பொத்திக்கிட்டு மரியாதையா காரைக் கொண்டுவந்து கெஸ்ட் ஹவுஸில் நிறுத்தி, அன்னம்மா ரூமுக்குள்ள பெட்டியை வெச்சுட்டு பிரியாணி வாங்க ஒரே ஓட்டம்!

பிரியாணி வாங்கிக்கிட்டு பதுங்கிப் பதுங்கி வந்தா, 
இது என்னடா பாஸ்கருக்கு வந்த சோதனை!

குளிச்சு முடிச்சு, ஒரு அரை ட்ரவுசரும் ஸ்லீவ்லெஸ் பனியனும் போட்டுக்கிட்டு ஹால் சோபாவில அன்னம்மா!

எதைப் பார்க்கறதுங்கறதை விட, எதையும் பார்க்காமல் இருக்க பெரிய திறமை வேணும்!

கண்ணகலப் பார்த்துக்கிட்டே, “டாக்டர் டின்னர் ரெடி!”

டைனிங் ஹாலுக்கு நகர்ந்த அன்னம்மா, பாஸ்கர்ன்னு கூப்பிட, 
வாயை மூடறதுக்குள்ள என்ன டாக்டர்ன்னு எட்டிப்பார்க்கும் தூரத்துக்கு வந்தேன்!

“என்னதிது ஒரு பிளேட்? நீங்களும் உட்காருங்க!”

கையைப் பிடித்து இழுத்து சேரில் உட்காரவைத்ததில், உடம்பெல்லாம் தீ மாதிரி கொதிக்குது!

“இல்லை டாக்டர்!” - நான் சொன்னது எனக்கே கேட்கல!

“ரெண்டு விஷயம்! நான் தனியா சாப்பிடமாட்டேன்!  
இன்னொன்னு, டோண்ட் கால் மீ டாக்டர்! கால் மீ அனு!”

சமையல்காரன், மச்சம்டா ன்னு பார்க்கறாப்ல!

அன்னம்மா பிரியாணியும், நான் அன்னம்மாவும் சாப்பிட்டு முடிக்கும்போது மணி பதினொன்னு!

என் அரைகுறை மலையாளத்துக்கு அனு குலுங்கிச் சிரிச்சப்ப எட்டிப்பார்த்த ரெண்டு ... பல்லும்  மனசுக்குள்ள படம் காட்டிக்கிட்டிருக்க,

கதவைத் திறந்த சப்பை ஃபிகர் என் புதுப் பொண்டாட்டின்னு மண்டைல ஏர்றதுக்குள்ள மொபைல் கூவுது!
அனு!

“பாஸ்கர், எடுத்துவர மறந்துட்டேன்!”
“எனக்கு அவசரமா ஸ்பேஸ்மோப்ராக்சிவான் மாத்திரை வேணும்!  
வயத்து வலி!”

“என்னாச்சு அனு? பிரியாணி ஒத்துக்கலையா?”

“இல்லை பாஸ்கர், இது மாதாந்திர வலி!”

“ஓ! இதோ பத்து நிமிஷத்துல வரேன்!”

கதவைத் திறந்து காருக்குள்ளே பாய்ஞ்சப்பத்தான் பொண்டாட்டி என்னையே பார்த்துக்கிட்டு நிக்கறது தெரிஞ்சது.

ஆனா, விருந்தாளி முக்கியம் இல்லையா!

கே எம் சீ ஹெச் மெடிக்கல் ஷாப் ஜன்னலை உடைக்கலாமான்னு யோசிக்கும்போது வந்தது அந்த சிஸ்டர்-
“எந்தா வேணும்!”

மத்த நாளுன்னா வழிஞ்சிருப்பேன்!

ஆனா அனுவைப் பார்த்தவனுக்கு மீதி எல்லாப் பொண்ணுமே சிஸ்டர்தானே!

மாத்திரையோடு படியேறி ஓடினா அடுத்த குண்டு!

“எனக்கு நேப்கின் வேணும் பாஸ்கர்!”

“விஸ்பர் விங்ஸ்!”

“கண்டிப்பா அந்த ப்ராண்டுதான் வேணும்”!

அதுதானே பார்த்தேன்! மேன் மக்கள் மேன் மக்களே!

ராத்திரி பன்னெண்டு மணிக்கு விஸ்பர் விங்ஸ் தேடி கோயமுத்தூர் ரோட்டுல நாய் மாதிரி அலைஞ்சேன்! 
- அதுல எதுக்குடா விங்ஸ்?

ஒருவழியா வாங்கிக் கொடுத்துட்டு வீட்டுக்கு வரும்போது மணி ரெண்டு!

எப்போதும் காஞ்ச மாடு மாதிரி பாயற நான் ஓரத்துல மரவட்டை மாதிரி சுருண்டு கிடந்த லலிதாவைக் கண்டுக்கவே தோணாம தூங்கிப்போனது தப்பில்லை, ஆனா காலைல அலாரம் அடிக்குதுன்னு எழுப்புன லலிதாவை அனூஊ ன்னு கையைப் பிடிச்சு இழுத்தது என் கெரகம்!

மறுநாள் காலைல நான் பார்த்தது வேற அன்னம்மா!

அவ்வளவு பாந்தமும் அவ அழகை கொஞ்சம்கூட மழுப்ப முடியலைங்கறத சாயங்காலம் வரைக்கும் அங்க ஓடின ஜொள்ளு சொல்லுச்சு!

வந்திருந்த ஆம்பள ஸ்டாஃப் எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமா அன்னம்மா அழகும் அந்த கிளாஸும் கட்டிப்போட்டுடுச்சு!

லேடி ஸ்டாஃப் சிலர் மட்டும் பொறாமை மறையாமல் என்னை மாதிரியே வேற விஷயத்தப் பார்த்துக்கிட்டிருந்தாங்க!

மதியம் லன்ச்!

தட்டைத் தூக்கிக்கிட்டு மட்டன் சிக்கன் எல்லாத்தையும் வேட்டையாடற ரமேஷ் அன்னைக்கு ஒரே சப்பாத்தி, கொஞ்சம் இலை தழையோட ஜென்டிலா ஒதுங்குனது ஒன்னும் பெரிய ஆச்சர்யம் இல்லை!

நாலரை மணிக்கு, “ஷல் வீ மீட் டுமாரோ” என்று புன்னகையோடு அன்னம்மா கை கூப்ப, கை தட்டல் தெறித்தது!

அதுக்கப்புறம்தான் ஆரம்பித்தது அழகான ராட்சஸி ஆட்டம்!

“எனக்கு இப்போ ஷாப்பிங் போயே ஆகணும்!”

“என்ன வேணும் அனு?”

“ஸ்விம்மிங் ட்ரெஸ்”!

“யாருக்கு? குழந்தைக்கா?”

மாரியாத்தா மாதிரி முறைத்தவள் சொன்னாள் – “எனக்கு!”

அது சரி!

ஆர் எஸ் புரம், கிராஸ் கட் ரோடுன்னு எனக்குத் தெரிஞ்ச எல்லா இடத்துலயும் கிடைக்காம அவங்க கேட்ட ஸ்கை ப்ளூ - பெட்ரோமேக்ஸ் லைட்டேதான் வேணும் - சிங்கிள் பீஸ், கடைசில ப்ரூக் ஃபீல்ட்ல ஈசான மூலைல ஒரு சின்னக் கடைல மூணு மணிநேர அலைச்சலுக்கு அப்புறம் கிடைச்சது!

இதுல பத்தாக்குறைக்கு அவசரத்துல மறந்துட்டு வந்துட்டேன்னு ப்ரேசியர் வாங்க அலைந்தது உப கதை!

எத்தனை வயசானாலும் பெண்கள் ஜாக்கிரதை உணர்வு உள்ளவங்க!

கடைசி வரைக்கும் எப்படி எட்டிப்பார்த்தும் சைஸ் கண்டுபிடிக்க முடியல!

அன்னைக்கும் அனுவோட டின்னர்!

வீட்டுக்குப் போகும்போது மணி பத்து.

சாப்டுட்டேன்னு சொல்லும்போதே லலிதா கேட்டா! “அனுவோடதானே??”

கொஞ்சம்கூட குரல்ல தெரிஞ்ச கோபத்தைக் கவனிக்காம ஆமாம்ன்னு சொல்லி வாய் மூடல!
சொய்யுன்னு பெட்ல போய் விழுந்த லலிதாவை கவனிக்காமல் மாடு மாதிரி அலுப்புல தூங்கப் போய்ட்டேன்!

மறுநாள் காலைல ஒன்பது மணிக்கு லெக்சர்!

அனு ரூம் கதவை நான் தட்டும்போது மணி எட்டு!

அவசர அவசரமா குளிச்சு முடிச்சு வந்த அனு, “பக்கத்துல சர்ச் எங்க இருக்கு?”

“இங்கிருந்து பத்து கிலோமீட்டர்! கார்ல போய்ட்டு ஒன்பது மணிக்குள்ள வர முடியாது!”

“பைக்ல போனா?”

“பைக்கா?  தெரிஞ்சா எங்க பாஸ் என்னை வெட்டிப் போட்டுடுவாரு!”

பாஸ்கர், எனக்காக ப்ளீஈஸ்!

சந்தோஷமா செக்யூரிட்டி பைக்கை வாங்கிக்கிட்டுப் பறந்தேன்!

பின்னாடி பல்லி மாதிரி ஒட்டிக்கிட்டு அனு!

அந்த அவசரத்துல அனு மறந்த ஒரு விஷயம், என் முதுகுக்கு சொகுசாய்த் தெரிஞ்சுது!

எவன்டா அவன் பத்து கிலோமீட்டரை இவ்வளவு பக்கத்துல வெச்சது?
அதுக்குள்ள வந்துடுச்சே அந்தப் பாழாய்ப்போன சர்ச்!

இன்னும் பத்து நாளைக்கு முதுகு நனையாமதான் குளிக்கணும் டா பாஸ்கரா! 

ரூமுக்கு வந்து கிளம்பி லெக்சர் ஹாலுக்கு வரும்போது மணி சரியா எட்டு ஐம்பத்தஞ்சு!

தாங்க்ஸ் பாஸ்கர்! கையைத் தொட்டு அழுத்திய இடம் புண்ணியம் செய்தது!


அன்னம்மா உள்ளே ஏதும் போடலைன்றது கடைசி வரிசைல கொட்டாவி விட்டுக்கிட்டிருந்த மாலதிக்கே தெரிஞ்சா, முதல் வரிசைல ஆன்னு பார்த்துக்கிட்டிருந்த ராமேசுக்குத் தெரியாதா என்ன?

அன்னைக்கும் லெக்சரும் அன்னம்மாவும் சூப்பர் ஹிட்!

ஒருவழியா மூணு மணிக்கே லெக்சரை முடிச்சுட்டு பழைய கார் பார்வையிடும் வைபவம் முடிஞ்சு, அன்னம்மா சம்பாவணை வாங்கிக்கிட்டு கார்ல ஏறுனதும் சொன்ன ஒரே வார்த்தை “பொறுக்கி!”

வேற யாரு? எங்க எம் டி தான்!

ஏழுமணி ஃபிளைட்டுக்கு ஏழே காலுக்கு அவசர அவசரமா, ஏர்போர்ட் போய் கிளம்பிக்கிட்டிருந்த பிளேன்ல ரன்னிங்ல ஏறின அன்னம்மா கிட்ட இருந்து கால்!

“காலைல அந்த புது ப்ரேசியர் டேக் கிழிக்கும்போது கைல இருந்து எகிறி பெட்டுக்கு அடியில விழுந்திருச்சு!”

“நான் ரொம்ப நாள் தேடின லாவண்டர் கலர் பாஸ்கர்!”

“கொஞ்சம் சிரமம் பார்க்காம அதை எடுத்து எனக்கு கூரியர் பண்ணிவிடேன் ப்ளீஸ்!”

காலைல சொன்ன அதே ப்ப்ப்ப்ப்ளீஸ்!

அனுவுக்காக இது கூடவா செய்ய மாட்டேன்?

முதுகு வேற குறுகுறுக்குது!

ஹவுஸ் கீப்பிங் ஆளுங்க யாரும் வந்தாங்களான்னு கேட்டுக்கிட்டே பெட் ரூமுக்குள்ள கட்டிலுக்கு அடியில பாய்ஞ்ச என்னை விநோதமாய் பார்த்த சமையல்காரன் வெளிய வரும்போது என் கைல இருந்ததை பார்த்து தலைல அடிச்சுக்கிட்டான்!

சரி! இதை வீட்டில போய் பேக் பண்ணிக்கலாம்னு கோட் பாக்கெட்ல திணிச்சுக்கிட்டு, காலைல பைக் பயணம் பத்தி ஏதும் பேசக்கூடாதுன்னு செக்யூரிட்டிக்கு ஐநூறு ரூபாய் நோட்டை எறிஞ்சுட்டு வீட்டுக்குப் பறந்தேன்!

இன்னைக்காவது பொண்டாட்டிய சமாதானம் செய்யணும்!

போனவன் அவசரமா ட்ரெஸ் மாத்திக்கிட்டு பாத்ரூம் போய்ட்டு வர்றேன் - லலிதா கைல என் கோட் பாக்கெட்ல இருந்த லேவண்டர் கலர் ஐட்டம்!

“இது என்னது?”

“கலர் நல்லா இருக்குன்னு உனக்காகத்தான் வாங்கினேன் செல்லம்!”

“அப்படியா? என் சைஸ் என்ன தெரியுமா?”

“இது என்ன என் இடுப்புக்கா?”

“லல்லி…….”

கதவு சாத்தின சத்தம் பஸ் ஸ்டாண்டு வரைக்கும் கேட்டிருக்கும்!

லலிதா மானஸ்தி!

காலைல நான் எழுந்திருக்கும்போது அவளுக்கு பதிலா பக்கத்துல இருந்த பேப்பர்ல ஒரே எழுத்துதான்!


தூ!

 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக