ஸ்வாதி கொலையில் அரசியல் செய்யும்
அறிவுஜீவிகள்!
எதற்கெடுத்தாலும்
கருத்து சொல்லக்கூடாது என்று கொஞ்சம் அடக்கி
வாசிக்க நினைத்தாலும் இந்த ஊமையனுக்கு மூக்கைச்
சொறிய யாராவது வந்துவிடுகிறார்கள்!
ஸ்வாதி மரணத்தில்
அசிங்கமாக ஜாதி மூக்கை நுழைத்த
சில ஜந்துக்கள் ஏதோ தமிழ்நாட்டை குஜராத்தைப்போல
ஆபத்தான மாநிலமாக முன்னிறுத்தப்பார்க்கின்றன!
இன்னும்
எத்தனை தலைமுறைகளுக்கு இந்த எச்சில் ஜாதிவெறி
விளையாட்டை விளையாடுவார்களோ!
இணையத்தில்
சிலர் இதே வேலையாக இருப்பது
கண்கூடு!
மற்ற நேரத்தில் ஸ்லீப்பர் செல்களாக இருக்கும் அவர்கள் தேர்தல் சமயத்திலும்
இது போன்ற நேரங்களிலும் உண்மை
முகம் காட்டுவார்கள்!
அவர்களுக்கு
பதில் சொல்வது நேர விரயம்!
ஆனால் எல்லாக் கட்சிகளிலும் இருந்து
மக்கள் பணியாற்றிய ஒரு உத்தமர் சொல்லியிருக்கும்
கருத்துக்களுக்கும் அவர் கேட்டது போலவே
ஒரு கேள்வியைக் கேட்டிருக்கும் சிலருக்கும் பதில் சொல்வது அவசியம்
என்பதால் இது!
ஸ்வாதி
மரணத்துக்கு ஏன் எல்லோரும் குரல்
கொடுக்கவில்லை என்பதற்கு எனக்குத் தெரிந்த எளிய பதில்,
ஸ்வாதி
கொலைக்கான
காரணம்
என்ன
என்பது
இன்னும்
தெரியாத
நிலையில்
அதுபற்றிக்
கருத்து
சொல்வது
அந்தப்
பெண்ணின்
பிம்பத்தைப்
பாதிக்கும்
என்பதே!
கொலையாளியோ காரணமோ தெரியாததால் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று மட்டுமே அறிக்கை விடமுடியும்!
அதை எல்லோருமே செய்துவிட்டார்கள்!
ஆனால் அது இவர்களுக்கு
வேறு
எங்கோ
இடிக்கிறது
அதுதான் பிரச்னை!
சங்கர்,
இளவரசன் கொலைகளில் கொலையாளியும் காரணமும் வெளிப்படையானது.
அதுகுறித்து
தெளிவான கண்டன அறிக்கை விட
முடிந்தது!
விஷ்ணுபிரியா மரணத்தில்
காரணம்
ஊகிக்கமட்டுமே
முடிந்த
நிலையில்
அவர்
பணியாற்றிய
காவல்துறையே அவரது ஒழுக்கம் பற்றிக்
கேள்விகளை
எழுப்பும்
கதைகளை
சொல்லி
கணக்கை
முடிக்க
நினைத்ததை
யாரும்
மறந்திருக்கமாட்டார்கள்!
அதுபோல் ஸ்வாதி கேஸிலும் கொலையாளியைக் கண்டுபிடிக்க முடியாத பட்சத்தில் காவல்துறை கட்டுக்கதைகளோடு வரும்!
ஆனால் அதிர்ஷ்டவசமாக கொலை
செய்தவன்
ஒரு
முஸ்லீம்,
அவன்
ஸ்வாதி
அய்யங்கார்
என்பதாலேயே
கொலை
செய்தான்
என்று
எஸ் வீ சேகர் தெளிவாகச்
சொல்லியிருக்கிறார்!
கொலையாளி, கொலைக்கான மோட்டிவ் இரண்டுமே அவருக்குத் தெரிந்திருக்கிறது!
கொலை செய்வது, அதற்கு உதவி செய்வது
எப்படிக் குற்றமோ, அது போலவே, கொலையாளி
பற்றித் தகவல் தெரிந்தும் அதை
காவல்துறைக்குச் சொல்லாமல் மறைப்பதும் குற்றம்!
எனவே, ஜாதி, மத வெறியைப்
பற்றவைத்துக் குளிர் காயாமல் தனக்குத்
தெரிந்த எல்லா உண்மைகளையும் காவல்துறைக்குச்
சொல்லி உதவுவதுதான் இவரது அரசியல் அறிவுக்குப்
பொருத்தமானது!
கொலையாளி, அவன்
கொலை
செய்ததற்கான
மோட்டிவ்
எல்லாம்
தெரிந்தவருக்குக்
கண்டிப்பாக
மேலதிக
விபரங்களும்
தெரியும்!
எனவே, தான் செய்ய
வேண்டிய
கடமையை
முதலில்
செய்து,
கொலையாளியைப்
பிடிக்க
உதவட்டும்!
அதைவிட்டு, கஷ்டப்பட்டு கருணாநிதி எழுதுவதுபோல் சொற்களைத் தேடிப்பிடித்து இப்படி ஒரு வெட்கம் கெட்ட பதிவை எழுதி மெனக்கெடவேண்டாம்!
தமிழ்நாடும்
அதன் மக்களும் நாசமாகப் போகட்டும் என்று சாபம் கொடுக்கும்
அவருக்கு, தான் ஐயங்கார், ஸ்வாதி
ஐயங்கார் என்பதோடு, தங்கள் தாங்கிப்பிடிக்கும் ஜெயலலிதா
அய்யங்கார் என்பது மறக்கவில்லை!
அதனால்தான் அவரும், அவர் போன்ற ஸ்லீப்பர் செல்களும், ஆளும் அரசையோ, காவல்துறையையோ விமர்சிக்காமல் புத்திசாலித்தனமாக மடை மாற்றி, எதிர்க் கட்சிகள் ஏன் பொங்கவில்லை என்று திசை திருப்பி, எதிர்கட்சிகளையும்
மக்களையும்
தாக்குகிறார்கள் ஒரு
கோழையைப்போல்!
தமிழகக்
காவல்துறை உங்களுக்குத் தெரிந்த அளவுக்குக் கூட
விஷயங்களை நான்குநாட்களாக அறிந்துகொள்ளவில்லை என்பது எவ்வளவு பெரிய
அவமானம்!
அது எதிர்கட்சிக்காரர் கையில் இருக்கும் துறை
அல்ல!
அதன் அமைச்சர் உங்கள் அன்புக்குரிய அய்யங்கார் அம்மையார்தான்!
உங்கள்
இன்னொரு கூற்று தமிழ்நாட்டில் பிராமணர்களுக்குப்
பாதுகாப்பு இல்லை என்பதும், ஸ்வாதி
அய்யங்கார் என்பதால் கொல்லப்பட்டார் என்பதும்!
அட அறிவாளியே, அது உண்மையானால் இன்று
ஒரு அய்யங்காரை இந்த நாடு முதல்வராகத்
தேர்ந்தெடுத்திருக்காது!
இந்த மண் ஜாதி
வெறியர்களை
என்றுமே
அங்கீகரித்ததில்லை!
உம்மைப்
போல் பிணத்தில்கூடப் பூணூலும் ஜாதியும் தேடும் ஈனப்புத்தி தமிழர்களுக்கு
என்றுமே இருந்ததில்லை!
நீங்கள் போற்றித் துதிக்கும் ஜெயலலிதாவும், தூற்றி வசைபாடும் கருணாநிதியும் தான் என்ன ஜாதி என்பதைச் சொல்லி வாக்கு கேட்டதில்லை.
அதனால்தான் அவர்கள் இத்தனைமுறை ஆட்சிக்கு வர முடிந்திருக்கிறது!
ஜாதியைச்
சொல்லி ஓட்டுக் கேட்ட எவரையும்
தமிழர்கள் ஆதரித்ததில்லை இது வரலாறு!
இன்னொரு
அறிஞர்!
தமிழ்த்
திரையுலகிலும் நாடக உலகிலும் அதிகம்
படித்த மேதாவி, தமிழகமெங்கும் கல்விக்கூடங்கள்
நடத்திவரும் கல்வித் தந்தை - அவரும்
இதுபோலவே திருவாய் மலர்ந்திருக்கிறார்!
உங்கள் இருவரின் அசட்டுத்தனங்களையும் உங்கள் அச்சுப்பிச்சு நாடகத்தில் கிச்சுக்கிச்சு மூட்டப் பயன்படுத்தியதோடு நிறுத்திக்கொள்ளுங்கள்!
இந்த மண்ணில் ஜாதி மத வெறியை உங்கள் பேரன் பேத்தி காலத்திலும் விதைக்கமுடியாது!
நீங்கள்
கொடிகட்டிப் பறக்கும் நாடகத் துறையில் ஆதிக்கம்
செய்வது யாரென்று
உங்களுக்கே தெரியும்!
உங்கள் உடன் பங்காளிகள்
அய்யர்களுக்கே அங்கு இடமில்லை!
நீங்கள்
சாதிக்கமுடியாது ஓடிவந்துவிட்ட திரைத் துறையிலும் கால்
நூற்றாண்டாய் முன்னணியில் இருப்பது,
தான் அய்யங்கார்
என்பதை
அவ்வப்பொழுது
புத்திசாலித்தனமாய்
அடிக்கோடிட்டுக்
காண்பிக்கும்
ஒரு
அய்யங்காரும்,
ஒரு அய்யங்கார்பெண்ணைக்
கைபிடித்து
வாழ்பவரும்தான்!
எங்களை ஆள்பவரும் அப்படி ஒருவரே!
எனவே, தமிழ்நாட்டில் பிராமணர்களுக்குப் பாதுகாப்பில்லை என்று போலியாக ஒப்பாரி வைக்காதீர்கள்!
துரதிர்ஷ்டவசமாக,
ஊர்ப்பிள்ளைகளையெல்லாம் தன் வீட்டில் தங்கவைத்து இரவு முழுக்க விழித்திருந்து கடுங்காப்பி கொடுத்துப் படிக்கவைத்ததோடு, ஊரில் எந்த நல்லது கெட்டதற்கும் ஜாதி பார்க்காமல் முன் வந்து நிற்கும் நரசிம்மாச்சாரி ஆசிரியரும்,
தன் மகனோடு எனக்கும் ஒரே தட்டில் அக்காரவடிசிலும், சாத்தமுதும் போட்டு கையில் உருட்டி வைத்த சூடாமணி அம்மாவும் இருக்கும் அதே ஜாதியில்தான் உங்களைப் போன்ற ஜாதி வெறி பிடித்த அசிங்கங்களும் இருக்கின்றன!
எங்களுக்கு அவர்கள் போதும்!
இந்த அசிங்கம் பிடித்த சிறுபான்மைச் சிறுமதியினர் வேண்டாம்!
எனவே, உங்கள் ஜாதிவெறி நிழலைப் பார்த்து
நீங்களே மிரண்டு,
மற்றவர்களைக் குறை சொல்லி அழுவதை
விட்டுத் தொலையுங்கள்!
உங்கள்
நாடகம் மேடையில் கைதட்டல் வாங்கும்!
ஆனால் எவ்வளவு முக்கினாலும்
காவித்
தீவிரவாதத்தை
எங்கள்
புழக்கடையில்கூட
நுழையவிடாது!
இப்போது இத்தனை பேசும் நீங்கள் சங்கர், விஷ்ணுபிரியா, இளவரசன் கொலையின்போது கண்டிப்பாகக் கதறி அழுதிருப்பீர்கள்!
அந்தப் பதிவையும் எங்களோடு பகிர்ந்துகொள்ளுங்களேன் ப்ளீஸ்!
ஆனால்,
தயவுசெய்து,
ஸ்வாதி அய்யங்கார்
என்பதை
வைத்து
உங்கள்
காவி
எஜமானர்களுக்கு
வாலை
ஆட்டாதிருங்கள்!
அது மேலும் மேலும் உங்கள், உங்கள் எஜமானர்கள் இருவர் மீது வெறுப்பைத்தான் தூண்டும்!
No comments:
Post a comment