லலிதா லெட்டர் எழுதி வெச்சுட்டுப் போய்ட்டாடா!
வார ஆரம்பத்துல அட்டெண்ட் பண்ணுன முதல் ஃபோனே இந்த லட்சணத்துல இருந்தா எப்படி விளங்கும்!
இல்லாத பாட்டியைக் கொன்னு லீவ் சொல்லிட்டு ஹேங் ஓவர் தீராம கவுந்தடிச்சு படுத்திட்டிருக்கும்போது
"என்ன தலைவலிடா! இனி இந்தக் கெரகம் புடிச்ச சனியனைக் கைலேயே தொடக்கூடாதுடா சாமி!”
அட்டக்கத்தில வர்ற சாவு மோளம் சத்தம் கேட்டுச்சு.
“எவன் ஃபோன்டா இது?”
ரெண்டு முழு ரிங் போனதும்தான் உறைச்சுது!
எல்லா நாயும் பையத் தூக்கிக்கிட்டு வேலைக்குப் போய்டுச்சு!
அப்போ, என் ஃபோன் ரிங் டோனைத்தான் ராத்திரி கூட உட்கார்ந்து தண்ணியடிச்ச ஏதோ ஒரு நாதாரி மாத்தித் தொலைச்சிருக்கு!
மறுபடியும் சாவு மேளம்!
மேனேஜர் சனியனாத்தான் இருக்கும்! - எடுக்காம விடாது!
போர்வைக்குள்ள இருந்து கையைமட்டும் வெளியே நீட்டி எடுத்துப் பார்த்தா பாஸ்கரன்!
விடிகாலைல பத்து மணிக்கு இவன் ஏண்டா கூப்பிடுறான்னு,
“என்னடா மாப்ள,”
“லலிதா லெட்டர் எழுதி வெச்சுட்டுப் போய்ட்டாடா!”
“எவடா அவ!”
“டேய்! என் பொண்டாட்டிடா!”
“சாரி மச்சி மப்புல கேட்டுட்டேன்!
என்னாச்சுடா!”
“பாழாப்போன என் எம்டியால வந்த வினைடா!”
அடப்பாவி, அந்த ஆள்கூடவா ஓடிப் போய்ட்டா! - ஒரு ஃப்ளோல கேட்டுத் தொலைச்சிட்டேன்!!
நல்லவேளை அவன் கண்டுக்கல!
“உடனே வீட்டுக்கு வாடா!”
“பத்து நிமிசத்துல வரேன் மச்சி!
நீ என்ன பண்றே, ஒரு டஜன் முட்டை மட்டும் வாங்கி வெச்சுடு!
நெப்போலியனுக்கு என்ன இருந்தாலும்
சைட் டிஷ் ஆப்பாயில்தான் செட் ஆவும்!
நான் சரக்கும், நாயர் கடை பிரியாணியும் வாங்கிக்கிட்டு வந்துடறேன்!
பேசுவோம்!”
டாஸ்மாக்ல ஜன்னல் வழியா தேசசேவை செஞ்சுக்கிட்டிருந்த பாவாடைசாமி வீட்டு மாப்பிளையைக் கேக்கற மாதிரி கேட்கறான்!
“ஏன் சார் நேத்து வரல?”
இதுக்குத்தான் ஒரே கடைல சரக்கு வாங்கித் தொலைக்கக் கூடாது!
ரெண்டு ஃபுல்லும் அரை டஜன் பீரும் வாங்கிக்கிட்டு அடுத்த ஸ்டாப் நாயர் கடை!
“ரெண்டு பிரியாணி, நாலு மீன் வறுவல். ரெண்டு பெப்பர் சிக்கன்!”
இத்தனை ஆர்டருக்கும் நாயர் ஏண்டா மூஞ்ச சுளிக்கிறான்னு பார்த்தா, பல் தேய்க்க மறந்து தொலைச்சிருக்கிறேன்!
நடு ஜாமம் வரைக்கும் அடிச்ச சரக்கு,
சிகரெட், அது தீர்ந்து அவசரத்துக்கு வாட்ச் மேன் கிட்ட வாங்கி அடிச்ச பீடி!
நாத்தம் குடலைப் பிடுங்குது எனக்கே!
பாவம் நாயர்!
அவசரமா வீட்டு வாசல்ல வண்டிய நிறுத்திட்டு உள்ள போனா ஆஃப் பாயில் போட்டுக்கிட்டிருக்கான்!
நண்பேன்டா!
பாட்டில், பொட்டலம் எல்லாம் வெச்சுட்டு பல் தேய்க்கலாம்ன்னு பாத்தா,
“வாடா, சரக்கடிச்சா நாறத்தானே போகுது!”
அதுவும் சரிதானே!
தீர்த்தவாரி ஆரம்பித்து நாலு ரவுண்ட் போனதுக்கப்புறம் மெதுவாக் கேட்டேன்!
“என்னடா ஆச்சு?”
சரக்கடிச்ச நாதாரி கிட்ட கேட்கக்கூடாத கேள்வி!
ஓன்னு அழ ஆரம்பிச்சுட்டான்!
“சொல்லிட்டு அழுடா நாயே!”
லலிதா எழுதிவெச்ச லெட்டர்ன்னு ஒன்னைக் காண்பிச்சான்!
தூ!
ஒரே எழுத்து!
அன்னம்மா கதையை மொத்தமாக் கோர்வையா சொல்லி முடிச்சதும் கேட்டேன் – “எங்கே அவ போட்டோ காட்டு?”
பாஸ்கர் தடுமாறியது தப்பே இல்லை!
நானா இருந்தா ஃபிளைட் பின்னாடியே ஓடியிருப்பேன்!
“சரி விடு மாப்ள! எல்லாம் பேசிக்கலாம். எங்க போகப்போறா!” -
சொல்லச் சொல்ல காலிங் பெல் அடிச்சது!
“மணி கூட அடிக்குது பாரு!”
“மூடு! எவனோ வந்திருக்கறான் போய்ப் பாரு!”
கதவைத் திறந்தா, ஆறடி உயரத்துக்கு கடோத்கஜன் மாதிரி பாஸ்கர் மாமனார்!
சரக்கு, பிரியாணி, முழு மப்புல பாஸ்கர்!
மொத்த சூழ்நிலையும் சதி பண்ணுது!
“ஏன்தம்பி, இதுதான் உங்க பிரண்ட்ஷிப்பா! பொண்டாட்டி போனதே நல்லதுன்னு குடியும் கூத்தும்!
என்ன மனுஷன்டா நீ?”
அந்த சூழ்நிலைல தரைல உட்கார்ந்திருந்த பாஸ்கர் திருவாய் மலர்ந்த வார்த்தை –
“அவ வரலையா”
யாரு?
அனு!
தூ!
என் மூஞ்சில ஏன் துப்பிட்டுப் போனார்ன்னு எனக்கு இன்னுமே புரியல!
ஸ்பஷ்டமா அழ ஆரம்பிச்சுது மூதேவி!
“ஆமாம் இப்போ அழு!”
அடுத்த நாலு நாள் ஆயுசுக்கும் தேவையான அசிங்கப்பட்டேன்!
மொத நாள் கதவை என் மூஞ்சியில அடிச்சு சாத்திய லலிதா அடுத்த நாள்தான் கொஞ்சம் மனசு இளகி அரைக்கதவைத் திறந்தாள்!
அவளைக்கூட சமாளிச்சிடலாம்!
அந்த வேதவள்ளித் தாயார், அவங்க ஆத்தா!
சாமி! சத்தியமா முடியல!
சுப்ரீம் கோர்ட் வக்கீல் எல்லாம் பிச்சையெடுக்கணும்!
எத்தனை கேள்வி!
யப்பா!
பாஸ்கர் வம்சத்தை திட்டித் தீர்த்தது பத்தாதுன்னு என் முப்பாட்டன் வரைக்கும் திட்டி, கடைசியில முக்கியமான மாமூல் கேள்வி!
“தம்பி, உங்க தங்கச்சிக்கு இந்த நிலை வந்திருந்தா என்ன பண்ணுவீங்க?”
“என் தங்கச்சிய இந்தமாதிரி நாதாரிக்கு ஏன் கொடுக்கப்போறேன்!” - வாய் வரைக்கும் வந்துடுச்சு!
என் குல தெய்வம், அவங்க அப்பன் ஆத்தா அப்பத்தா மேல சத்தியம் பண்ணி, ரெண்டுநாள் வாசல்ல தேவுடு காத்ததுக்கு அப்புறம் லலிதா ஒருவழியாய் பேச்சுவார்த்தைக்கு ஒத்துவரும்போது
சுப்ரீம் கோர்ட் வக்கீல் போட்டது அடுத்த குண்டு!
“இந்த ரெண்டு தறுதலைகளை நம்பாதீங்க! அந்தப் பொம்பளைக்கு போன் போட்டுக் கேட்டுருவோம்!” - இது மாமியார் திருவாய் மொழி!
யாருக்கு? - அன்னம்மாவுக்கு!
இந்த ஐடியா எனக்கே வயத்தைக் கலக்குது!
பாஸ்கர் மூஞ்சிய பாக்க சகிக்கலை!
“ஐயோ அப்படி ஏதாவது பண்ணித்தொலைச்சிராதீங்க! அவங்க என் பாஸுக்கு சொல்லிட்டா வேலை போய்டும்!”
ஆமாம்! பெரிய ரிசர்வ் பேங்க் கவர்னர் வேலை! இந்தப் பொம்பளை பொறுக்கி வேலைக்கு ரெண்டு மாடு மேய்ச்சுப் பொழைச்சுக்கலாம்!
நான் லலிதாவையும் அந்தம்மாவையும் பார்த்த பார்வை நல்லவேளை யாருக்கும் புரியல!
என்ன கதறியும், “அன்னம்மாவுக்கு ஃபோன் போட்டால்தான் ஆச்சு!”
வேற வழி?
அதுவும் ஸ்பீக்கர் போட்டுத்தான் பேசணும்ன்னு கண்டிஷன்!
சரி! நடப்பது நாராயணன் செயல்!
ஃபோன் கனெக்ட் ஆனதும் அந்தப்பக்கம்,
“தேங்க்ஸ் பாஸ்கர்! பார்சல் கெடைச்சுது”!
இத்தன அக்கப்போரிலும் தறுதலை அதை மறக்காமல் செய்திருக்கிறது!
அதற்கப்புறம் நடந்த கொடுமையை எப்படி என் வாயால் சொல்ல!
“ஐ யாம் ரமேஷ்! பாஸ்கர்ஸ் ப்ரெண்ட்!” அப்படின்னு என் ஒன்றரையணா இங்கிலீஷ்ல தடுமாறித் தடுமாறி பேசுன ஒவ்வொரு வார்த்தைக்கும் அம்மாவுக்குத் தமிழ் மொழிபெயர்ப்பு லலிதா!
விஷயம் ஒருவழியாய் புரிஞ்சு அன்னம்மா,
“நானா, ஈ ஆளையா!” ன்னு சொல்லி நிறுத்தாம சிரிச்ச சிரிப்புக்கு
பத்துப்பைசா ரோஷம் இருந்தாலும் தும்பைப்பூவுல தூக்குப்போட்டு செத்திருப்பான் யாராயிருந்தாலும்!
பாஸ்கருக்குத்தான் அது ஒண்ணுமே கிடையாதே!
ஆடு மாதிரி லலிதா மூஞ்சியைப் பார்த்துக்கிட்டே நிக்குது சனி!
ஒருவழியா சிரிச்சு ஓய்ந்து அன்னம்மா சொன்னதை லலிதா எப்படி அவங்க அம்மாவுக்கு மொழிபெயர்ப்பான்னு புரியலை!
அத்த்த்த்தனை கெட்ட வார்த்தை ஒரே வாக்கியத்துல!
இந்த அசிங்கத்தை நான் ரிப்போர்ட் பண்ணப் போறதில்லைன்னு அன்னம்மா சொன்னதும்தான் கள்ளப் பயலுக்கு மூச்சு வந்தது!
அப்பத்தான் அது நடந்தது!
வேலை போகப்போறதில்லைன்ன உடனே பாஸ்கர் மூஞ்சியே மாறிடுச்சு!
“விடுடா இவகிட்ட இப்படிப் பேசுனா வேலைக்காகாது!”
சொல்லிக்கிட்டே அவ பக்கத்தில வேகமாப் போனான்!
எனக்கு ஸ்வாதி, ராம் குமார், நுங்கம்பாக்கம் எல்லாம் நியாபகம் வந்து அடிவயிறு கலங்கிடுச்சு!
ஆனா நம்ப ஆளு அதுக்கெல்லாம் வொர்த்தே இல்லைங்க!
கொஞ்சம்கூடயோசிக்காம லலிதா காலடியில சாஷ்டாங்கமா விழுந்துடுச்சு தண்டம் கோதண்டம்!
அப்பவும் அம்மணிக்கு பொள்ளாச்சி கெத்து!
“இந்தாள் கூட நான் போறேன்!
ஒரே வீட்டில் இருப்பேனோ ஒழிய என்னைத் தொட்டான், மறு நிமிஷம் கெளம்பி வந்துடுவேன்!”
அதுக்கே வாயெல்லாம் பல்லாக இளிக்குது நம்ம ஹீரோ!
கல்யாணமே பண்ணிக்கக்கூடாதுடா சாமி! அதுவும் இந்தக் கோயமுத்தூர் பொள்ளாச்சி பணக்காரன் வீடு சாவகாசமே ஆகாது!
ஏதாவது அப்பன் ஆத்தா இல்லாத அனாதைதான் நமக்கெல்லாம் லாயக்கு!
எண்ணி ஒருவாரம் கழிச்சு ப்ரூக் ஃபீல்டுக்கு சினிமாவுக்குப் போனா, ரெண்டும் மெய் மறந்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டுக்கிட்டு ஈஷிக்கிட்டு
நிக்கிதுங்க!
ஒரே ஐஸ்க்ரீம், ஒரே ஸ்பூன் வேற!
அப்பவும் லலிதாதான் கேட்டா, “அண்ணா ஐஸ்க்ரீம் சாப்பிடறீங்களா!”
“வேண்டாம் தாயி!
ஏன், மாசக் கடைசியா மாப்ள? இன்னொரு ஐஸ்க்ரீம் வாங்கக் காசில்லையா!”
“உனக்கென்னடா தெரியும் தாம்பத்ய அன்னியோன்யம் பத்தி!”
“சாமி! இந்தக் கெரகமெல்லாம் எனக்குத் தெரியவே வேண்டாம்டா” ன்னு கையெடுத்துக் கும்பிட்டுட்டு வந்துட்டேன்!
அடுத்தமாசம் ஆபீஸ் வேலையா சென்னை போய்ட்டு வந்து இறங்கினா -
ஏர்போர்ட்ல பாஸ்கர்!
வாயெல்லாம் பல்லா இளிச்சுக்கிட்டு, க்ரீம் போட்டுப் படிய வாரிய தலை, க்ரீம் கலர் கோட்டோட தெலுங்குப்பட ஹீரோ மாதிரி பளபளன்னு நிக்குது!
“என்னடா, இன்னைக்கு யாரு?”
ஒண்ணும் இல்லடான்னு பதுங்கினவன் போனைப் பிடுங்கிப் பார்த்தா, ஐஸ்வர்யா ராய் தங்கச்சி மாதிரி ஒரு ப்ரொபைல்!
யாருடா இது?
பசந்தி மல்ஹோத்ரா!
ஹைதராபாத் பிளைட்ல வருதாம்!
பசந்தியா அது, பாஸந்தி!
சரியான கல்கத்தா ரசகுல்லா!
நம்ம ஆள் மொகரைல அத்தனை அசடு வழிய நயன்தாராவைக் கண்ட ஆர்யா மாதிரி ஈஈன்னு ஒரு எக்ஸ்ப்ரசன்!
ம்ஹூம்! சில ஜென்மங்கள் எல்லாம் சாகுறவரைக்கும் திருந்தாது!
ஓகே!
திங்கட்கிழமைக்கும் சேர்த்து இன்னைக்கே சரக்கு
வாங்கிவைக்க வேண்டியதுதான்!
No comments:
Post a comment