டை அணிந்த இளைஞர்கள் வரிசையாக படபடப்பாக உட்கார்ந்திருந்தனர்!
காரிடாரின் கடைசியில் ஒரு கதவு!
அதைத் திறக்க படிக்கட்டுகள் முதல் மாடிக்கு இட்டுச் சென்றன!
பட்டப் பகல் வெளிச்சத்திலும் லைட் எரிந்துகொண்டே இருந்தது!
படிக்கட்டின் முடிவில் ஒரு டஸ்ட் பின்!
படிக்கட்டில் சில காகிதங்கள் கசங்கிக் கிடந்தன!
ஒவ்வொருவராக அழைக்கப்பட, நுழைந்து படியேறி வந்தவர்களில் சிலர் லைட்டை அணைக்க,
சிலர் குப்பை பொறுக்கிப்போட,
சிலர் இது எதையும் கண்டுகொள்ளாமல் தாண்டி வர, சிசி கேமரா மூலம் இண்டர்வ்யூ அறையில் இதைப் பார்த்துக்கொண்டிருந்த எம்டி, வந்தவர்களை சில கேள்விகளை சுரத்தில்லாமல் கேட்டு அனுப்பிக்கொண்டிருந்தார்!
ஒவ்வொருவர் வரும்போதும் அதே செட்டப் மாறாமல் பார்த்துக்கொள்ள ஒரு பணியாள்!
ரமேஷ் முறை வந்தது!
படி ஏற ஆரம்பித்த ரமேஷ், எரியாதிருந்த இன்னொரு லைட்டையும் போட்டுவிட்டு,
பாக்கெட்டில் கை விட்டு ஒரு பேப்பரையும் எடுத்துக் கிழித்துப் போட்டான்!
பாராததுபோல் உட்கார்ந்திருந்த பணியாளனைப் பார்த்து இரைந்தான்!
"படியெல்லாம் குப்பையாக் கெடக்குது, லைட்டெல்லாம் எரியுது, என்னய்யா பண்ணிக்கிட்டிருக்கே! அறிவு கெட்டவனே!"
கேட்டபடியே இண்டர்வ்யூ அறைக் கதவைத் தட்டினான்!
அத்தனையும் ஸ்க்ரீனில் பார்த்துக்கொண்டிருந்த எம்டி, அவன் உள்ளே நுழைய, எழுந்து நின்று சொன்னார்!
"யூ ஆர் செலெக்டட் ஃபார் தி போஸ்ட் ஆஃப்
மேனேஜர்!"
No comments:
Post a comment