வியாழன், 6 அக்டோபர், 2016

பாலசந்தர் படத்தில் மட்டும் எப்படி....?கொடைக்கானல் குளிரில் அதிகாலை பத்துமணிக்கு படுக்கையைவிட்டு எழுந்திருக்க மனமில்லாமல் கௌதமியைக் கையைப்பிடித்து ரகு இழுத்துக்கொண்டிருந்தபோது ஃபோன் அலறியது!

கனவில்கூட வீட்டுக்காரன் சந்தோஷப்படக்கூடாது என்ற கொள்கை!

சென்னையிலிருந்து சகதர்மினி!

என்னடி இந்நேரத்துல?

இன்னைக்கு டாக்டர் அப்பாயின்மெண்ட்! மணி பத்து!
இருங்க, டாக்டரம்மா பேசணுமாம்!

சுத்தம்! எனக்கு வேலை இருக்குடி! நீயே..
சொல்லச்சொல்ல டாக்டர் குரல்! "குட் மார்னிங்! பத்மினி ஹியர்!"
"எஸ் டாக்டர்! இங்கையும் பத்து மணிதான்!"
"உங்களுக்குக் கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கா?"
- அடிப்பாவி! இது எம் பொண்டாட்டி டெம்ப்ளேட்!  மனசுக்குள்ள சபிச்சுக்கிட்டே, "வொய் டாக்டர்?" 

"இன்னைக்கு என்ன தேதி? இவ்வளவு இர்ரெஸ்பான்சிபிலா இருந்தா எப்படி? நீங்க இன்னைக்கு இங்க இருந்தே ஆகணும்!"

தெரிஞ்சுக்கிட்டேதான் கேட்டான், "எதுக்கு டாக்டர்?"

சத்தியமா அப்படி ஒரு அன்பார்லிமெண்டரி பதிலை ரகு எதிர்பார்க்கல!
சே! சினிமால அவங்க அப்பா எவ்வளவு டீசண்ட்! 

என்ன செய்ய, உரலுக்குள்ள... வேண்டாம்! இந்தப் பழமொழிக்கு இங்க வேற அர்த்தம்!

"சாரி டாக்டர்! இப்பவே புறப்பட்டு வந்துடறேன்!"

அவசர அவசரமா குளிச்சுமுடிச்சு சீவி சிங்காரிச்சு கீழ வரும்போது மணி பதினொன்று!

பஃபே ஹாலுக்குப்போனா, கான்டினெண்டல் ப்ரேக்ஃபாஸ்ட்!
போனவாரம் செவ்வாக்கிழமை டோஸ்ட் பண்ண பரெட் மார்ச்சுவரி பொணம் மாதிரி வெறச்சுக்கெடக்குது!
கான்டினெண்டல்ன்னாலும் காசு இண்டியன்டா!

அரைடஜன் அவிச்ச முட்டையும் மூணு ஆம்லேட்டும் ப்ளாக் காபி ஒரு சொம்பும் சாப்ட்டுட்டு ரிசப்ஸன் தேவதைகிட்ட வந்து "ஐம் செக்கிங் அவுட் ஹனி"ன்னா. (பொண்டாட்டி இல்லாத தைரியம்!) 
ஐ தாட் யூ வில் பீ ஸ்டேயிங் திஸ் வீக் எண்ட்!

சரிதான்!!!

நோ! ஹேவ் சம் இம்பார்ட்டண்ட் ஒர்க் அட் சென்னை டு நைட்!
நல்லவேளை! என்ன வேலைன்னு கேட்கல மகராசி!

டிரைவர் எங்கேன்னு தேடினால், ஹவுஸ் கீப்பிங் பொண்ணுகிட்ட தீயத்தீயக் கடலை!

அடப்பாவி, ரெகுலர் கஸ்டமர் நானா நீயாடா!

ஏன் சார் இன்னைக்கே போறோம்?

ஏன் நீ வேணும்னா இருந்துட்டு வாயேன்!

வத்தலக்குண்டு வரவரைக்கும் மொணகிக்கிட்டே வந்தவன், ரோட்டோரம் அப்பாவியாப் போன ஒரு சைக்கிள்காரனை   உரசி உருட்டித்தான் வண்டிய நிறுத்தினான்!

வந்த போலீஸ்காரன்கிட்ட ரகுவைக் காமிச்சு, "ஐயா யாருன்னு தெரியுமா?"ன்னு உதார் வேற!
ஐநூறு ரூபாய் அழுதுட்டு, நீ மூடிக்கிட்டு உட்கார்! நான் ஓட்றேன்!

ரைட் ராயலா சாவியைக் கொடுத்துட்டு சீட்ட சாய்ச்சுப் படுத்துட்டாரு தொரை!
திட்டம்போட்டுத்தான் இடிச்சிருக்குது பண்ணாடை!
அடிச்சுப் புடிச்சு திருச்சி, உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், தாம்பரம்ன்னு வாகன வெள்ளத்துல நீந்தி வந்தா நூறு தடவை கேட்ருச்சு பக்கி "அப்படி என்ன சார் அவசர வேலை எனக்குத் தெரியாம?"
ஒருவழியா ராத்திரி ஒன்பது மணிக்கு நுங்கம்பாக்கம் ஹைரோட்ல ஆஸ்பத்திரி வாசல்ல நிறுத்துனா, கமுக்கமா சிரிக்கறான் "இதுக்குத்தான் இப்படி பறந்துக்கிட்டு வந்தியா!" கண்டிசனா நெனச்சிருப்பான் கெரகம் புடிச்சவன்!

போய்ட்டு நாளைக்கு வாடி பார்த்தசாரதி! இருக்கு உனக்கு!


ஆஸ்பத்திரி ரிசப்ஷனிஸ்ட் சிரிக்காம சொல்றா "ஆல் தி பெஸ்ட் சார்!"

"பால் சொம்பு இல்லையா சேச்சி?"
"ம்.. பாதாம் வாங்க ஆள் போயிருக்கு!"

ஃபஸ்ட் நைட் ரூமுக்குள்ள போற மாதிரி ஆஸ்பத்திரி ரூமுக்கு!

என்ன கொடுமைடா இது! 

ரெண்டு நாள் ஆஸ்பத்திரி வாசம்! 
அப்பத்தான் வந்தது அந்த சந்தேகம்!

"ஏன்டி, இங்கே கேமரா வெச்சுப் பார்ப்பாங்களோ?"

விடியவிடிய ரூமுக்குள்ள மூலை முடுக்கெல்லாம் ரெண்டுபேரும் தேடி சலிச்சப்புறம் எங்க தூங்க?

காலைல வந்த டாக்டர் "நைட் ரெண்டுபேரும் தூங்கவே இல்லையா? கண்ணெல்லாம் செவந்திருக்கு?"
கண் சிமிட்டி சிரிப்பு வேற!

வழக்கம்போல, ஒருவாரம் கழிச்சு ஸ்கேன் பண்ணிப் பார்த்துட்டு உதட்டைப் பிதுக்கிட்டு சொல்லுது "இதெல்லாம் ஆங்க்சைட்டி இல்லாம நடக்கணும்!"

அடுத்த மாசம் விதியேன்னு பரோடாவிலிருந்து ஃப்ளைட், அதுக்கு அடுத்த ரெண்டு மாசம் கவனமா உள்ளூரிலேயே தேதி பார்த்து தங்கல்!

நெட் ரிசல்ட்! "சாரி! உங்களுக்கு இயற்கையா கொழந்தை பொறக்க சான்ஸே இல்லை! ஆர்ட்டிபிஸியல் இன்செமனேஷன்தான் ஒரே வழி!"

அதுக்கு அவங்க சொன்ன அமௌண்ட்ட ரெடி பண்ண, ட்ரிப்ளிகேன்ல வாடகைக்கு குடியிருந்த பாய் வீட்ட வித்தாலும் பத்தாது!

அந்த மாசம் கடைசி முயற்சி!

பக்கத்து ரூமில் இன்னொரு ஃபஸ்ட் நைட்!அந்த சக பேஷண்ட் கேட்டதுதான் ஹைலைட்!

"இந்த பாலசந்தர் படத்துல மட்டும் எப்படி பிரதர் ஒரு தடவைலயே கன்ஃபார்மா கொழந்தை பொறக்குது?"அதுக்கப்புறம் எல்லாம் கேன்சல்ன்னு ஊருக்கே பொண்டாட்டியோட போனப்புறம் சுகப்பிரசவத்துல கொழந்தை பொறந்ததும், 
பொண்ணுதான் பொறக்கும்ன்னு நம்பின ரவி, பையன் பொறந்ததா வந்து சொன்ன நர்ஸ்கிட்ட, 
"சரியா பார்த்து சொல்லுங்க! தொப்புள் கொடியப் பார்த்துட்டு அவசரத்துல தப்பா சொல்லிடாதீங்க!" ன்னு சொல்லி வாங்கிக் கட்டியதும் தனிக்கதை!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக