வியாழன், 8 டிசம்பர், 2016

நாடகத்தின் கடைசி காட்சிகளும் சில பாமர சந்தேகங்களும்!
ஏறத்தாழ முப்பது ஆண்டுகள்! கருணாநிதியின் சாணக்கியத்தை எதிர்த்து அரசியல் செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல!

அதை அனாயாசமாக சாதித்துக்காட்டிய ஒரு பெண்மணியின் மரணத்தில் ஏன் இத்தனை மர்மங்கள்?

இரும்புத்திரைக்குப்பின் நடத்தப்பட்ட நாடகத்தின் உச்சக் காட்சிகள் மட்டுமே வெளிச்சத்துக்கு வந்ததில் கிளர்ந்த சந்தேகங்கள்தான் எத்தனை!

ஒரு நள்ளிரவில் (செப் 22) திடீரென அப்போலோ மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படுகிறார் தமிழக முதல்வர்!

பொதுவாகவே மருத்துவமனைக்குச் செல்வதைத் தவிர்க்கும் முதல்வர் எப்போதாவது செல்ல நேரும்போதும் ராமச்சந்திரா மருத்துவ மனைக்கே செல்வார்!
அதைத் தவிர்த்துவிட்டு, அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்படுகிறார்.
அவசரம் கருதியும் அருகில் இருப்பதாலும் அப்போலோ!

அன்றிரவு போயஸ் தோட்டத்தில் நடைபெற்ற அதிகாரிகள் மீட்டிங்கின் இடையே மயங்கி விழுந்ததாகவும், அதற்கு டெல்லியிலிருந்து வந்த ஒரு தொலைபேசி அழைப்பே காரணம் என்றும் புலனாய்வு ஊடகங்கள் கதை சொல்லின!
(அதன்பின் எழுபத்தைந்து நாட்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு வேடிக்கை மட்டுமே பார்த்தன நம் வீரமிகு ஊடகங்கள்)

நீர்ச்சத்து குறைபாடு மற்றும் காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்டதாக அப்போலோ சொன்னது!

அதுவரை யாவரும் அறிந்த கதை!

அதற்குப்பின் நிகழ்ந்தவை அனைத்தும் இரும்புத்திரைக்குப் பின்!

ஒரு கொசு கூட அப்போலோ மருத்துவமனை இரண்டாம்தளத்தை நெருங்கமுடியாதவாறு காற்றுக்கும் வேலி போடப்பட்டது!

இடையில் ஜெயலலிதா பேசுவதுபோல் ஒரு ஆடியோ, பஞ்சாயத்துத் தேர்தலில் ஓட்டுக்கேட்டு, இரண்டு அறிக்கைகள் - இடைதேர்தலில் வாக்களிக்கக் கோரியும், நன்றி செலுத்தியும்!

அதன்பின் விசாலாட்சி நெடுஞ்செழியன், பாலமுரளி கிருஷ்ணா மறைவுக்கு அஞ்சலி அறிக்கைகள்!

இன்னொரு கேவலமான கட்டுக்கதை, நெடுஞ்செழியன் மகனோடு தொலைபேசியில் அவரே உரையாடியதாக ஒரு அறிவிப்பு!

இவையெல்லாம் கடைந்தெடுத்த 420 நடவடிக்கைகள் என்பது கடைமட்டத் தமிழனுக்கும் தெரிந்திருந்தும் எல்லாத் துவாரங்களையும் பொத்திக்கொண்டு வேடிக்கை பார்த்தன அம்மா இல்லாத தைரியத்தில் இப்போது திடீரென ஷெர்லாக் ஹோம்ஸ் வேஷம் போடும் ஊடகங்கள்!

இது குறித்து எழுதினால் அது வேறு எங்கோ போகும்!

எனக்கு சில பாமரத்தனமான சந்தேகங்கள்.
அவை மட்டும் இப்போது!

1.       முதல்வர் உண்மையில் எந்த நிலையில் மருத்துவமனைக்கு வந்தார்?

2.       வெறும் காய்ச்சல் என்று தமிழகத்தின் தலைசிறந்த தனியார் மருத்துவமனை டயக்னோஸ் செய்தது எப்படி மல்டிபிள் ஆர்கான் பெயிலியர் ஆனது? எனில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் முறையான சிகிச்சை தாமதமானதா?

3.       முதல்வருக்குக் கொடுக்கப்பட்ட சிகிச்சைகள் என்ன?

4.       இடையில் ஒருமுறையாவது முதல்வருக்கு நினைவு திரும்பியதா?

5.       இன்று கேலி செய்தார், விளையாடினார் என்றெல்லாம் பதிவிடும் மருத்துவமனை ஏன் அவர் அப்படி இருந்த ஒரேயொரு புகைப்படத்தைக்கூட வெளியிடவில்லை?

6.       ஒரு அறிக்கையில் கைநாட்டு, உடனே இன்னொரு அறிக்கையில் கையெழுத்து என்று மாறிமாறி கண்ணாமூச்சி காட்டியதா முதல்வர் உடல்நிலைஎனில், எத்தனை நாட்கள் நல்ல உடல் நிலையோடும் மனநிலையோடும் இருந்தார் முதல்வர்?
7.       அப்படி மாறிமாறி உடல்நிலை இருந்தநிலையில் ஏன் உடல்நிலையில் சீரான முன்னேற்றம் என்று பொய் சொல்லியது மருத்துவமனை அறிக்கை?

8.       திடீரென ரெட்டிகாரு தொனியை மாற்றிக்கொண்டு, முதல்வர் பரிபூரண குணம் அடைந்துவிட்டார்! அவர்  விரும்பும்போது வீடு திரும்பலாம் என்று ஏன் திரும்பத்திரும்ப சொல்ல ஆரம்பித்தார்?
அது அப்போலோ மருத்துவமனையா அல்லது அப்போலோ கேளிக்கை விடுதியா?

9.       அப்படி ஒரு அறிக்கையை விடுமளவு அவருக்கு என்ன நிர்ப்பந்தம்?

10.   கண்டிப்பாக பிரதாப் ரெட்டி சசிகலாவால் மிரட்டப்படுமளவு பலவீனமானவரல்லஎனில் நிர்பந்தம் வந்தது வேறு எங்கிருந்து?


11.   மருத்துவமனைக்குச் செல்லும்வரை ஜெயலலிதா மூர்க்கமாக எதிர்த்த மத்திய அரசின் திட்டங்களுக்கெல்லாம் எந்த தைரியத்தில் அனுமதி வழங்கப்பட்டதுஅப்போதே அம்மா திரும்பி வரமாட்டார் என்பது தெரிந்திருந்ததா அல்லது அப்போதே அம்மா இல்லையா?
12.   இந்தக் கொள்கை மாற்றம் அதிமுக பிரமுகர்கள் வீட்டில் வருமானவரித்துறை சோதனைகளுக்குப்பிறகு நேர்ந்ததா?

13.   இனி மறைக்கவே முடியாது என்ற கட்டம் வந்தபின்பே நான்காம் தேதி மாரடைப்பு நாடகம் அரங்கேற்றப்பட்டதா?

14.   அல்லது அன்றுதான் மாரடைப்பு ஏற்பட்டதெனில், அன்றிரவே அவர் இறந்துவிட்டதாக இன்று NDTV சொல்வது உண்மையா?

15.   முதல்வர் இறந்தபிறகு அதை மறைத்து அல்லது இறப்பு நிச்சயம் என்ற நிலையில் அப்போலோ உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகளை அளித்ததாக தொலைக்காட்சி ஊடகங்களும், லண்டன் மருத்துவர் ரிச்சர்ட்ஸ் அறிக்கையும் மாறிமாறி மக்களுக்குப் போதித்தனவா?
 அது மக்களின் கோபத்திலிருந்து மருத்துவமனையைக் காப்பாற்றவா?

17.   ஏன் ஆளுநர் உட்பட அனைவரையும் முதல்வரைக் காண அனுமதி மறுத்தது மருத்துவமனை?

18.   நோய்த்தொற்று ஏற்படும் என்ற காரணம் உண்மையெனில் சசிகலா மட்டும் கூடவே இருக்க அனுமதிக்கப்பட்டது எப்படி?

19.   மருத்துவரீதியாக நோய்த்தொற்று சசியால் மட்டும் ஏற்படாதா?

20.   ஜெயலலிதாவுக்கு எழுபத்தைந்து நாட்களும் அளிக்கப்பட சிகிச்சை விபரங்களை வெளியிடுமா மருத்துவமனை?


அரசியல்ரீதியான சில சந்தேகங்கள்:
1.       இடையில் முதல்வர் இலாகாக்களை பன்னீர்செல்வம் ஏற்பார் என்பதைத் தீர்மானித்தது யார்?

2.       பன்னீர்செல்வம் உட்பட யாரிடமும் மாநில நிலவரங்களைக் கேட்காமல் பொறுப்பு ஆளுநரிடம் பிரதமரும் உள்துறை அமைச்சரும் விசாரிக்க என்ன காரணம்?


3.   முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஆளுநரையும் நியமிக்காமல் காலம் கடத்திக்கொண்டு இருந்ததற்கு என்ன காரணம்?

4.       முதல்வர் இறந்துவிட்டார், அல்லது இறக்கப்போகிறார் என்ற நிலையில் அவசரமாக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடத்த அழைப்பு விடுக்க என்ன காரணம்?

5.       இதுவரை சுதந்திர இந்தியாவில் எந்த மாநிலத்திலும் எப்போதும் இல்லாத வகையில், முதல்வர் பிணம் மருத்துவமனையில் கிடக்க, முழு மந்திரிசபையும் அகாலத்தில் பதவியேற்க என்ன அவசர நிர்ப்பந்தம்?

6.       அப்போதே இலாகாக்களும் ஒதுக்கப்பட்டது எதனால்? யாரை சமாதானப்படுத்த?

7.       முதல்வர் சிறை சென்று, கண்டிப்பாக ஜாமீனில் வெளிவந்துவிடுவார் என்ற நிலையில் இப்படிக் கதறி அழுத அமைச்சர் பெருமக்கள் அவர் இனி வரவேமாட்டார் என்ற நிலையில் சற்றும் சலனமே இல்லாமல் பதவியேற்றது எப்படி?இதில் எது இயல்பானது?
சற்றேனும் அன்பும் அபிமானமும் இருந்தால், அவர் இறந்துகிடக்கும் நிலையில் அவ்வளவு இறுக்கமாக ஒரு துளி கண்ணீரும் இல்லாமல் பதவியேற்பது சாத்தியமா?பொதுவான சந்தேகங்கள்:
1.       தங்கள் தலைவியைக்காணத் திரண்ட லட்சக்கணக்கான மக்கள் கடைசிமுறை அவர் முகத்தைக்காண வாய்ப்பில்லாமல் முதல்வர் உடல் ஏன் அன்று மாலையே அடக்கம் செய்யப்பட்டது?

2.       மன்னார்குடி கும்பல் மட்டுமே முதல்வரைச் சூழ்ந்து நிற்க அனுமதித்தது யார்? அதிலும்  தன் வாழ்நாள் முழுவதும் அவர் ஒதுக்கியே வைத்திருந்த நடராஜன், திவாகரன் ஆகியோரை அனுமதித்தது யார்?

3.       முதல்வரின் அண்ணன் மகள்  கடைசிவரை அனுமதிக்கப்படாதபோது, இவர்கள் மட்டும் எப்படி அனுமதிக்கப்பட்டார்கள்?

4.       பிரதமரோடு முதல்வர் பன்னீர்செல்வத்தை முந்திக்கொண்டு திவாகரன் உரையாட எந்த ப்ரோட்டகால் அனுமதித்தது?

5.       மாநில முதல்வரும் மற்ற அமைச்சர்களும் ஒரு ஓரத்தில் அமர்ந்திருக்க, வந்த அனைத்து முக்கியஸ்தர்களும் சசிகலாவை மட்டுமே பார்க்க நேர்ந்தது ஏன்?

6.       அதிமுக சார்பில் பேட்டியளிக்க நடராஜனை அனுமதித்தது யார்?

7.       ஜெயலலிதாவை நாங்கள் உருவாக்கினோம் என்று அவர் சொன்னதை பன்னீர்செல்வம் உட்பட எந்த உண்மையான அதிமுகவினரும் ஆட்சேபிக்காதது ஏன்?இந்தச் செய்தி உண்மையானதுதானா? எனில் இதுகுறித்த உயில் எப்போது எழுதப்பட்டது? எந்தத் தேதியில் எந்த பதிவாளர் முன் அது பதிவு செய்யப்பட்டது?
உடல் அடக்கம் செய்யப்படுமுன்பே இவ்வாறான செய்திகள் யாரால், எப்படிக் கசியவிடப்பட்டன?

கடைசிவரை ஒரு பதட்டமான உடல்மொழியோடு சசிகலா இருந்தது ஏன்?

குடியரசுத் தலைவர் வருகிறார் என்ற நிலையிலும், காத்திருக்காமல் உடலை அப்புறப்படுத்துவதில் குறியாக இருந்ததும், சவப்பெட்டியில் ஆணி அடித்து மூடியபின்பே சசிகலா முகத்தில் நிம்மதி வந்ததும் ஏன்?

ஒரு குளிர்சாதன சவப்பெட்டியில் சராசரி நீளம் என்ன?
ஆறரை அடி?


எனில் இந்தப்படம் சொல்வதென்ன?
நம் முதல்வரின் உயரம் இவ்வளவு குறைவா
அல்லது வேறு ஏதேனும் சிகிச்சையின் விளைவா?

அப்படியான ஒரு சிகிச்சை உயிரைக் காக்க என்றால்கூட நம் முதல்வர் அதை அனுமதித்திருக்கமாட்டார் என்பது அவர் மனநிலை அறிந்த எல்லோருக்கும் தெரியும்.

அப்படி ஒரு சிகிச்சை அளிக்கப்பட்டது எனில், அதன்பின் முதல்வர் சுயநினைவு அடைந்திருக்க வாய்ப்பே இல்லை!இந்தப் புகைப்படத்தில், அந்த மலர் வளையம் உடல் மட்டத்துக்குக் கீழே இருப்பதாய்த் தெரிவது ஏன்?
இதுதான் சசிகலா பதட்டத்துக்குக் காரணமா?
அவர் கன்னத்தில் இருந்த நான்கு துவாரங்களுக்கு என்ன காரணம்?இனி, இந்தப்படங்கள்!

இவற்றுக்கு விளக்கமே தேவையில்லை! இவ்வளவு சுலபத்திலா மண்சோறு தின்றவர்களும் அலகு குத்திக்கொண்டவர்களும் இயல்பு (?) நிலைக்குத் திரும்பிவிட்டார்கள்?


சசிகலா புகழை ரங்கராஜ் பாண்டேவும் இதுபோல் சுவரொட்டிகளும் இவ்வளவு சீக்கிரம் பாட என்ன அவசரம்?
அதன் பின் இருக்கும் செயல் திட்டம் என்ன

ஜெயலலிதாவோடு புதைக்கப்பட்ட இத்தனை கேள்விகளுக்கும் என்றாவது பதில் கிடைக்குமா?

எம்ஜியாரால் நிம்மதியாக வாழ விடப்படாத அந்த புத்திசாலிப் பெண்மணி, மன்னார்குடி கும்பலால் நிம்மதியாக சாகவும் விடப்படவில்லை என்பது வெளிப்படை!


அவர் ஆத்மாவாவது நிம்மதியாக உறங்க இறை அருளட்டும்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக