இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்!
இன்னைக்கு
விடியற்காலை!
குளிருக்கு
இதமா தலையோட போர்த்தி சுருண்டு படுத்திருந்தேன்.
யாரோ
தடியால் மெல்லத்தட்டி எழுப்புனதுல போர்வையை விலக்கிப்பார்த்தா கறுப்புக் கோட்டும் முறுக்கு மீசையுமா ஒரு ஆள்!
ஓவரா
டீவி பார்க்கறோம்போல!
கோபிநாத்
எல்லாம் கனவுல வர்றார்ன்னு மறுபடியும் போர்வையை இழுத்தா, “எழுந்திரு மானிடா, விடியும் நேரம், புள்ளினங்கள் பாடல் கேட்போம் வா!”
கோபி
இப்படியெல்லாம் பேசமாட்டாரேன்னு சந்தேகமா பார்த்தால்,
பாரதி!
சரிதான்!
இன்னைக்கு நமக்கு ஏழரைதான்!
“என்னய்யா
காலங்கார்த்தால?”
“சொர்க்க
ராஜ்ஜியத்துல ஒருமணிநேரம் ரஜா வாங்கிவந்தேன்! என் செந்தமிழ் நாட்டை சுற்றிப்பார்க்க!”
“உமது
துணைவியாரை எழுப்பும்! குளிருக்கு இதமாக ஏதாவது பருகியவாரே உரையாடுவோம்!”
“ஞாயித்துக்கிழமை
இன்னேரத்துக்கு எழுப்பினா உமக்கு காளி தரிசனம் இன்னொருமுறை கிடைக்கும்!
வாரும்
அப்படியே போய் ஒரு டீ அடிப்போம்!
உமக்கும்
ஊரை சுற்றினமாதிரி இருக்கும்!
இன்னொரு
விஷயம், இந்தத் தெள்ளுதமிழ் பேசறதை விட்டு நார்மலா பேசும்!”
“சரி
நீ கிளம்பி வரும்வரை இந்த செய்தித்தாள்களை படித்துக்கொண்டிருக்கிறேன்!”
கிளம்பி
நடக்கும்போதே அவர் முகம் கோபத்தால் சிவந்திருந்தது!
குதித்துக்
குதித்து நடந்த நடையின் வேகம் வார்த்தையிலும்!
என்னய்யா
ஆச்சு இந்தப் பத்திரிக்கைகளுக்கு?
சசிகலாவை
இப்படிக் கூச்சமே இல்லாமல் தலைமேல் தூக்கிவைத்து ஆடுகிறார்கள்?
அவர்கள்
செய்வதில் என்ன தப்பு?
பிழைப்புக்குப்
பத்திரிகை நடத்துபவர்களிடம் வேறு என்ன எதிர்பார்க்கிறீர்?
முழுப்பக்க
விளம்பரம்! உண்மைத் தொண்டனிடமிருந்து!
இத்தனை
காசு நீரா கொடுப்பீர்?
நாளைக்கு
அரசு விளம்பரங்களெல்லாம் வேண்டாமா?
நூறாண்டு
தாண்டிய ஹிண்டுவுக்கா இந்த நிலமை?
முதலில்
பாதை போட்டுக்கொடுத்ததே அவர்கள்தான்!
அப்போலோவில் நடந்த
கதை
என்று
ஆரம்பித்து,
கூச்சமே
இல்லாமல்
போயஸ்
தோட்ட
வீட்டில்
கதறி
அழுத
சசிகலா
என்று
வளர்த்து,
இப்போது
சின்னம்மா
என்று
எழுத
ஆரம்பித்தது
அந்த
நூறாண்டு
பாரம்பரியம்தான்!
சுதேசமித்திரனில்
நீர் பிழைக்கத் தெரியாமல் எழுதி, வைத்தியம்கூடப் பார்க்க வழியில்லாமல் அல்பாயுசில் செத்துப்போனீர்!
அப்படியே
வாழ இவர்களெல்லாம் முட்டாள்களா?
நிலத்தில்
யாருக்கும் அஞ்சாத நெறிகள் என்று என் வரிகளைத் தலைப்பில் வைத்திருந்த தினமணி கூடவா?
ஐயா, அது
போணியாகாத
சரக்குன்னு
அப்போதே
டெலீட்
செய்துவிட்டார்கள்!
அம்மா
வழியில்
சசி
என்று
சமாதிக்குப்
போன
படத்தைப்
போட்டுக்
காலில்
விழுந்தாச்சு!
சசிகலா
ஏன்
தலைமை
ஏற்கவேண்டும்
ன்னு
தலையங்கமே
எழுதியாச்சு!
இன்னைக்கு
ஜால்ரா சத்தம் யாருது ஜாஸ்தி வருதுங்கறதுதான் போட்டியே!
பாரம்பரியம்
மிக்க விகடன்?
யோவ்!
ஏன்யா காலங்கார்த்தால வாயைப் பிடுங்குறீர்?
சசிகலா
வாழ்க்கைவரலாறு எழுத ஆரம்பிச்சுட்டாங்க! இப்போ பாரம்பரியம் என்பதெல்லாம் சர்வைவலுக்கு அப்புறம்தான்!
என்னைப்போலவே
துடிப்பாய் ஒருகாலத்தில் எழுதிக்கொண்டிருந்தார்களே மாலனும், சுதாங்கனும்?
“இதற்குத்தானே ஆசைப்பட்டாய்
பாலகுமாரா!” என்று
தன் நண்பனையே கிழித்துத் தோரணம் கட்டிய சுதாங்கன் என்ன சொல்கிறார்?
அவருக்கும்
கோட்டுப்போடும் ஆசை வராதா?
பத்திரிக்கையாளர்
குடியிருப்பில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பிலேயே வாழ்ந்து மடியுமளவு விபரமில்லாதவரா அவர்?
ஜெயா
டிவியின் மிகப்பெரிய காவடியாட்டக்காரர் அவர்!
மாலனைப்
பற்றி நான் சொல்லவேண்டாம்!
இளஞ்செழியன்
ஆரம்பித்த மெஸ் என்று அவர் எழுதிய கதை நாயகனாகவே மாறிப்போனார்!
தந்தி
டீவியில் ரங்கராஜ் பாண்டேவுக்கு போட்டியாளராக வேகமாக மாறிவருகிறார்!
அறிவுஜீவி
தொனியில் அவர் பக்கவாத்தியம் அற்புதம்! கேட்டுப்பாரும்!
நீரே
சின்னம்மா வாழ்க ன்னு அலகு குத்தக் கிளம்பிடுவீர்!
தொழிலில்
அத்தனை நேர்த்தி!
எழுபத்தைந்து நாள்
அப்போலோ
ரெட்டி
சொன்னதைக்
கேள்வியே
கேட்காமல்
வாங்கிப்போட்டுக்கொண்டிருந்துவிட்டு
இன்றைக்கு
பந்து
விளையாடினார்,
பொங்கல்
சாப்பிட்டார்,
மெனுகார்டு
தயாரித்தார்ன்னு
புதுக்கதை
சொல்வதை
அட்சரம்
பிசகாமல்
ஆமாம்
சாமி
போட்டுக்கொண்டிருக்கும்
ஊடகங்களை
கெட்ட
வார்த்தை
பேசலாம்
என்றால்,
சசிகலாவை
தியாகியாக்கியதற்கு
காறி
உமிழலாம்!
எங்கிருந்து வந்தார்,
எப்படி
போயஸ்
தோட்டத்தில்
நுழைந்தார்?
எத்தனை சொத்து
சேர்த்தார்?
ஜெயலலிதாவை
அண்டிப்பிழைத்தோ,ஆட்டிப்படைத்தோ
இத்தனை
ஆயிரம்
கோடியை
சுருட்டியவர்
கையில்
தமிழகத்தை
தாரை
வார்க்கச்
சொல்லும்
இந்த
நாய்கள்
எலும்புத்துண்டு
வாங்கியதாகத்
தெரியவில்லை!
எலும்புக்கூட்டையே வாங்கியிருக்கின்றன!
ஆங்காரம் அகங்காரம்
இவற்றுக்கு
அடையாளமாக
இருந்த
ஜெயலலிதாவை
நல்லவர்
என்று
நினைக்கவைக்க
இந்தவழியைத்
தேடுகின்றனவா
இந்த
நெறி
கெட்ட
ஊடகங்கள்?
இதில் பார்ப்பன சதி என்றும் பாஜக கொல்லைப்புற வழி என்றும் சாமர்த்தியமாக திசைதிருப்பும் முயற்சிகள் வேறு!
பாஜகவோ, காங்கிரஸோ, தமிழகத்தை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை!
தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்து, காவேரி, முல்லைப்பெரியாறு, பாலாறு, மீனவர் பிரச்னை, கச்சத்தீவு என்று ஏழரையைக் கூட்டிக்கொள்ள அந்தக் கட்சிகள் தயாராக இல்லை!
தாங்கள் முன்பே காலூன்றிவிட்ட அண்டை மாநிலங்களைப் பகைத்துக்கொள்ள அவை முட்டாள்களா?
தமிழகத்தை எந்தக் கட்சி ஆண்டாலும் தங்களுக்கு இணக்கமான போக்கையே மேற்கொள்ளும்போது அவர்களுக்கு இது தேவையில்லாத தலைவலி!
முப்பத்தொன்பது லோக்சபா எம்பிக்களும், பதினோரு ராஜ்யசபா எம்பிக்களும் ஆதரவாய் வாக்களித்தால் அது போதும் அவர்களுக்கு!
அது இப்போதே தடையில்லாமல் கிடைக்கிறது!
சொத்துக்குவிப்பு வழக்கு,
2ஜி
என்று
லகானைக்
கைக்குள்
வைத்துக்கொண்டு
(போதாக்குறைக்கு
ரெய்டுகள்
வேறு)
ஜெயலலிதா
எதிர்த்ததெல்லாம்
இப்போது
சாதித்துக்கொண்டிருக்கும்
கட்சி
அதிமுகவை
உடைக்கப்பார்க்கிறது
என்று
சொல்வது
கோமாளித்தனம்!
இந்த அடிவருடிகளுக்கு
சசிகலாவை
அரியணை
ஏற்ற
ஏதாவது
காரணம்
வேண்டியிருக்கிறது!
பார்ப்பன சதி
என்று
கிளப்பிவிட்டதற்கு
கைமேல்
பலன்!
பெரியாரை
விற்றுப்
பிழைக்கும்
வியாபாரி
வீரமணியும்
இப்போது
ஜால்ராவோடு
வந்துவிட்டார்!
முதுகெலும்பே இல்லாமல்
அப்போலோவில்
நடந்த
நாசவேலை
பற்றிப்
புலனாய்வு
செய்யத்
திராணி
இல்லாமல்,
சசிகலாவின்
வரலாற்றை
அப்படியே
மறைத்து
மன்னார்குடி
கும்பலுக்கு
நடை
பாவாடை
விரிக்கும்
இந்த
மானம்
கெட்ட
பிழைப்பு
விபச்சாரத்தைவிடக்
கீழ்மை!
காமராஜுக்கு மாற்று கருணாநிதி என்று இறங்கிய அவலம் இன்று சசிகலாவுக்குப் பல்லாக்குத் தூக்குமளவு தாழ்ந்திருக்கிறது!
எங்கள்
ஊரில் கொச்சையாகச் சொல்வதுண்டு!
கொல்லைக்குப்
போகையில் வெள்ளரிக்காய் சாப்பிடுகிறாயே என்று கேட்டால் தொட்டுக்கொண்டு சாப்பிடுவேன் என்ன பந்தயம் என்பான் என்று!
இன்று
பத்திரிகைகளும் ஊடகங்களும் அதைத்தான் செய்கின்றன!
சரி,
திமுக என்ன செய்கிறது இப்போது?
பொத்திக்கொண்டு
உட்கார்ந்திருக்கிறது!
இன்றைய சூழலில்
ஏதாவது
பேசினால்,
சாவு
வீட்டில்
ஆதாயம்
தேடுகிறது
என்று
அதையே
தொழிலாக
வைத்திருக்கும்
சைக்கோ
உட்பட
அனைவரும்
பாய்வார்கள்
என்பதால்!
அப்போ,
என்னதான் செய்வது?
எட்டையபுரம்
ராஜாவை அண்டிப்பிழைத்து வாரிசாக ஆகத்தெரியாத
முட்டாள் நீர்!
ரெண்டு
பெண்களைப் பெற்று வறுமையில் வாடவிட்ட கூறுகெட்ட உமக்கு, இத்தனை பெரிய கும்பலுக்கு தலா ஆயிரம் கோடி சம்பாதித்துக் கொடுத்த எங்கள் சின்னம்மாவை விமர்சிக்க என்ன அருகதை இருக்கிறது?
யானை
உண்பதில் சிதறும் கவளத்துக்கு அலையும் பத்திரிக்கை எறும்புகளை விமர்சிக்காமல் மரியாதையாகப் போய்ச்சேரும்!
சரி,
அதை விடு. இந்த அதிகாலைப் பனியில் ஏடிஎம் வாசலில் வரிசையாக நிற்கும் இவர்கள் யார்?
யோவ், அவங்க
இந்தியாவை
வல்லரசாக்க
நிக்கறாங்க!
அடுத்த
ஏழரையைக் கிளப்பாமல் போய்ச் சேரும்!
No comments:
Post a comment