ஞாயிறு, 18 டிசம்பர், 2016

கண்ணியம் என்பது தொண்டனுக்கு மட்டும்தானா?நேற்று மாலை காவேரி மருத்துவமனைக்கு வந்த ஒருவர் வழிமறித்துத் திருப்பி அனுப்பப்பட்டார்!

உண்மையிலேயே அனுதாபப்படவேண்டிய, வருத்தமும் கண்டனமும் தெரிவிக்கப்படவேண்டிய நிகழ்வு!

அதைத்தான் திமுக தலைவர்கள் உடனே செய்தார்கள்!

ஸ்டாலின் வருத்தமும் கண்டனமும் தெரிவித்தது எல்லா ஊடகங்களிலும் வருகிறது!பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் நபர், ஐம்பதாண்டு அரசியல் அனுபவம் உள்ளவர்!
ஆயிரக்கணக்கான(??) தொண்டர்களைக் கொண்ட கட்சித் தலைவர்!

அண்ணா, கலைஞர், ஒபாமா வரை பாராட்டும் உத்தமர்!
(ட்ரம்ப் பற்றி இன்றுவரை தகவல் இல்லை)

அவர் உடனடியாக ஊடகங்களுக்குப் பேட்டியளிக்கிறார்!

“கனிமொழி வருத்தம் தெரிவித்தார்,
அழகிரி வருத்தம் தெரிவித்தார்,
மு தமிழரசு வருத்தம் தெரிவித்தார்,
எதிர்கட்சித்தலைவரும் (பெயர் சொல்லமாட்டாராம்) வருத்தம் தெரிவித்ததாய் சொல்கிறார்கள்! “

என்ன ஒரு நாகரீகம், எத்தனை வன்மம்!

இவர் அப்போது என்ன செயல் திட்டத்தோடு மருத்துவமனைக்குப் போயிருப்பார்?

இவர் வருவது தெரிந்து ஸ்டாலின் வீட்டுக்குச் சென்றுவிட்டாராம்!

கட்டைகள் வீசப்பட்டதாக நடக்காத ஒன்றை மிகைப்படுத்திச் சொல்கிறார்!

கோசி மணி, அண்ணாதுரை, கலைஞர் என்று வசைமாரி பொழிந்துவிட்டு இறுதியில் சொல்கிறார்
எனக்கு யார்மீதும் வருத்தம் இல்லை!

அந்தக் கடைசிவரியை தலைப்பில் போட்டு, ஆஹா! இதுவல்லவோ நாகரீகம் என்று புல்லரிக்கிறார்கள்!

சரி! நடுநிலை என்றால் அப்படித்தான் போலும்!

ஸ்டாலின் இவரை வாசலில் நின்று வரவேற்றிருக்க வேண்டுமா?

அப்போலோவில் அனுமதிக்கப்பட்ட அப்போதைய முதல்வரை எல்லா அரசியல்கட்சித் தலைவர்களும் பார்க்கப்போகிறார்கள்!

எல்லோரும், முதல்வர் குணமடையப் பிரார்த்திப்பதாகச் சொல்கிறார்கள்! அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதும் கலைஞர் குணமடையவேண்டி அறிக்கை விடுகிறார்!

எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் போய்ப் பார்த்து வருகிறார்!

அந்த இடத்தில் அதிமுகவினர் உட்பட யாரும் அரசியல் பேசவில்லை!

எல்லோர் மனதிலும் முதல்வர் உடல்நிலை பற்றிய கவலை மண்டிக்கிடக்கிறது!
ஒரே ஒரு தலைவரைத் தவிர!

வந்தார், மைக்கைப் பார்த்தார், முதல்வர் உடல்நிலை பற்றிப் பேசாமல், திமுகவை வசைபாடுகிறார்
அருகில் நிற்கும் அடிமட்டத் தொண்டன்கூட கூச்சத்தில் நெளிகிறார்!

அத்தனை வன்மம் அடிமனதில்!அதற்குப்பின் முதல்வர் மறைந்து, அவர் பூதவுடல் ராஜாஜி ஹாலில் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது!

அத்தனை தலைவர்களும் வந்து மௌனமாக அஞ்சலி செலுத்திவிட்டு மறைந்த முதல்வர்பற்றி சில வார்த்தைகள் பேசிவிட்டுச் செல்கிறார்கள்!

ஸ்டாலின் வந்து மரியாதையை செலுத்திவிட்டு, ஓரமாய் வருத்தத்தோடு உட்கார்ந்திருக்கும் முதல்வர் பன்னீர்செல்வத்தைத் தேடிப்போய் கையைப்பிடித்து ஆறுதல் சொல்கிறார்!

நாகரீகச் சின்னம் அடுத்து வருகிறது!
முல்லைப்பெரியாறு விஷயத்தில் துரோகம் செய்தது திமுக என்று ஆரம்பிக்கிறது!

இதுதான் ஒரு தலைவனின் நாகரீகம்!

இழவுவீட்டில் கூசாமல் அரசியல் ஆதாயம் தேடும் அந்த நல்லவரை, இடம் பொருள் பார்க்காமல் என்னேரமும் வன்மத்தை வாரி இறைப்பவரை இன்று நடுநிலை பேசும் எத்தனைபேர் வாசலில் வந்து நின்று வரவேற்பார்கள்?

ஒருவேளை, கண்ணியம், நாகரீகம், கட்டுப்பாடு எல்லாம் வாசலில் காத்திருக்கும் அடிமட்டத் தொண்டனுக்கு மட்டும்தானோ?
தலைவர்களுக்கு அது தேவையில்லை என்பது புது அரசியல்விதியா?

தப்பித்தவறி மருத்துவமனைக்குள் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், இவர் வழக்கம்போல் விஷம் கக்கியிருக்கமாட்டார் என்பதற்கு என்ன உத்தரவாதம்?
ஸ்டாலினின் வளர்ச்சியும் தன்னுடைய வீழ்ச்சியும் அவரை ஒரு முழுமையான சைக்கோவாகவே மாற்றியிருக்கிறது!

தன் தாய் மறைவிற்கு அஞ்சலி செலுத்த வந்த ஸ்டாலினை அவர் அஞ்சலி செலுத்த வரவில்லை, அரசியல் ஆதாயம் தேடவந்தார் என்று தூற்றிய மனோவியாதியஸ்தர் கலைஞரைப் பார்க்கவந்தது எந்த ஆதாயத்துக்கு?

உங்களை ஒருவர் சம்பந்தமே இல்லாமல் எப்போதும் வசை பாடிக்கொண்டே இருப்பார், அது அவர் நாகரீகம்!
அவரை வாசலில் நின்று பொன்னாடை போர்த்தி வரவேற்காதது உங்கள் அநாகரீகம்!

கல்லறைக்குத் தலைவி உடல் போகுமுன்பே, தலைவியை மாற்றிக்கொண்ட பாசமிகு தொண்டர்களைப் பார்த்த கண்களுக்கு, தன் தலைவனை இகழ்வதே தொழிலாக உள்ளவரை எதிர்க்கும் தொண்டர்கள் தவறானவர்களாகவே தெரிவார்கள்!

இன்று நாகரீகம் கற்பிக்க முனையும் எத்தனைபேர் இப்படித் தன்னை, தன் தந்தை போன்ற முதியவரை வசைபாடுபவரை பூச்செண்டு கொடுத்து வீட்டுக்குள் வரவேற்பர்?

தொண்டர்கள் உணர்ச்சிவசப்படுவது தவறு என்று புரிந்துகொண்ட யாருக்கும், ஒரு தலைவன் என்று தன்னைச் சொல்லிக்கொள்ளும் ஒருவர் கண்ணியம் காக்கவேண்டும் என்று தோன்றாதது ஆச்சர்யம்!


எந்தத் தொண்டனும் அதிமுக தலைவர்கள் வந்தபோது எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை

அவர்களுக்கு யாரை மதிக்கவேண்டும் என்ற நாகரீகம் தெரியும்

திமுகவை விட்டு வைகோ வெளியே வந்தபோது, இரண்டு கட்சியும் பிடிக்காத என்போன்ற பலர் அவரை மகிழ்வோடு ஆதரித்தோம்!
தமிழக அரசியலில் ஒரு நல்லவர் என்று கொண்டாடினோம்!
கொஞ்சம்கொஞ்சமாக அவரது சாயம் களைந்து சைக்கோ ஆனபோது வெட்கி விலகினோம்!

அடிமட்டத் தொண்டர்கள் என்றுமே உணர்ச்சிவசப்படுபவர்கள்!
அதிலும் திமுக தொண்டர்கள் உணர்வுப்பூர்வமாகத் தலைமையை நேசிப்பவர்கள்!

எம்ஜியார் இறந்தபோது, அண்ணாசாலையில் இருந்த கருணாநிதி சிலையை அடித்து உடைத்தார்கள் சில அதிமுக தொண்டர்கள்!
இப்போது நடந்ததும் அதுபோல் ஒரு எதிர்வினைதான்!

எக்காரணம் கொண்டும் இதை நியாயப்படுத்த முடியாது!

ஆனால், சமீபகால விஷவார்த்தைகளுக்குப்பின், உணர்வுள்ள எந்தத் தொண்டனும் அவரை மன்னிக்கமாட்டான்!

இத்தனைக்குப் பிறகும், நடந்த சம்பவத்துக்கு ஸ்டாலின் வருத்தம் தெரிவிக்கிறார்!
இவர் இன்னும் விஷம் கக்குகிறார்!

இதில் எதை நாகரீகம் என்கிறார்கள் நடுநிலை பேசுபவர்கள்?

உடனே, கருணாநிதி காமராஜரை என்ன சொன்னார், இந்திராவை என்ன சொன்னார் என்று, என்றைக்கோ நடந்ததாய் சொல்லப்படுவதைத் தூக்கிக்கொண்டு ஓடிவருகிறார்கள்!

அன்று அவர் அப்படிச் சொல்லியிருந்தால் அது தவறுதான்!

ஆனால், இன்று அவருடைய அறிக்கைகள் எத்துனை நாகரீகமாக இருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும்!

வயது மனிதனுக்கு முதிர்ச்சியை, கண்ணியத்தை,அன்பைக் கூட்டும்! அதுதான் கலைஞருக்கும், ஸ்டாலினுக்கும் நடக்கிறது!

இவருக்கு வயது ஏற ஏற வன்மமும், ஆத்திரமும் தலைக்குமேல் ஏறி, மனநோயாளி ஆக்கியிருக்கிறது!

இங்கு மாத்திரமல்ல, நெல்லை ரயில் மறியல் போராட்டத்தின்போது ஒரு காவல்துறை உயர் அதிகாரியிடம் அவர் பேசிய வார்த்தைகளும், உடல்மொழியும் தேர்ந்த ரவுடிக்கானவை!

இவர் காவேரி மருத்துவமனைக்குப்போய் கலைஞரைப் பார்ப்பதைவிட,
கீழ்ப்பாக்கம் போய் ஒரு நல்ல மனநல மருத்துவரைப் பார்ப்பது நல்லது!

இனி வரும் காலமாவது அவருக்கு இத்தனை கொதிப்பில்லாமல் அமைதியாகக் கழியும்!

பி கு:
நேற்று என் பதிவுகளுக்கு பெண்குறியைக் குறிப்பிட்டு சில கண்ணியவான்கள் பதில் சொல்லியிருந்தார்கள்!

தலைவனைப்போலவே தொண்டர்களின் நாகரிகம்!


அவர்கள் தேடுவது என்னிடம் கிடைக்காது
இணையத்தைவிட்டு அதை அவர்கள் தங்கள் வீடுகளில் தேடுவது நலம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக