தமிழகத்தில், இந்தியாவில், உலகில், பிரபஞ்சத்தில், இருக்கும், இறந்த,
பிறக்கப்போகும் அனைத்து உயிர்களும் வாசலில் நின்று தலைமையேற்றுக் காப்பாற்றச்
சொல்லி கதறிக்கொண்டிருக்கும் எங்கள் சின்னத்தாய் இதுவரை பேட்டி ஏதும் தரவில்லை
என்ற மனக்குறையைப் போக்க,
ஒரு
புத்தாண்டு நேர்காணல்!
நிருபர்: வணக்கம் மேடம்!
யோவ்! என்ன மரியாதையில்லாம.. என்றொரு குரல் கேட்க, சுதாரித்து,
“வணக்கம் சின்னம்மா அவர்களே!”
தினகரன் செல்லமாய் ஓங்கி அறைந்தபடி,
'மாண்புமிகு' உங்க அப்பனாடா
சொல்லுவான்!
“விடு பாஸ்! தம்பி இன்னும் ட்யூன் ஆகல! நம்ம பாண்டே கிட்ட அனுப்பு!
ரெண்டுநாள்ள சரியாயிடும்!
கேளு தம்பி!”
நிரு: தை பிறந்தால் தமிழக முதல்வர் ஆகப்போகிறீர்கள்! வாழ்த்துக்கள்!
சிஅ: எனக்கு இந்த அரசியல்,
பதவி இதிலெல்லாம் ஆசையே இல்லை! மக்கள் நலனுக்காகத்தான் விருப்பமே இல்லாமல் இதை
ஏற்கிறேன்!
நிரு: தமிழக மக்கள் அதிர்ஷ்டசாலிகள்!
சிஅ: அட, நான் மன்னார்குடி
மக்களைச் சொன்னேன்! என்னை நம்பி டெம்போ எல்லாம் வெச்சு வந்திருக்காங்க!
நிரு: ஆனால் அவர்களை ஜெயலலிதா தள்ளி வைத்திருந்தார்களே!
சிஅ: நானும் அக்கா வழியில்
தள்ளித்தான் வெச்சிருக்கிறேன். பாருங்க, இளவரசி எவ்வளவு தள்ளி
உட்கார்ந்திருக்காங்கன்னு! மத்தவங்ககூட மாடிலதான் இருக்காங்க!
நிரு: அரசியலில் உங்களுக்கு
அனுபவம் இல்லையே, எப்படி சமாளிக்கப் போறீங்க?
சிஅ: யார் சொன்னது?
இப்பக்கூட நான் அக்கா உட்கார்ந்த சேரில் உட்கார்ந்துதான் உங்களோட
பேசிக்கிட்டிருக்கிறேன்! இது எவ்வளவு பெரிய ராஜதந்திரம்! நீங்க விகடன்
படிக்கறதில்லையா?
நிரு: ஏங்க, அதில் என்னங்க ராஜதந்திரம்? அக்கா எப்ப சாவாங்க, திண்ணை
எப்ப காலியாகும்ன்னு பார்த்தமாதிரி இருக்கு!
ஏய், இன்னா.. ன்னு வளர்மதி அக்கா பாய்ந்துவர, பதறி ஓட எழுந்த நிருபரை அடக்கி
உட்காரச் சொல்கிறார் சிஅ.
சிஅ: தம்பி, உங்களுக்கு
பெட்டி குடுக்க விட்டுப்போச்சுபோல! போகும்போது வாங்கிக்கலாம்! அத மனசுல
வெச்சுக்கிட்டு கேள்வி கேளுங்க!
நிரு: இன்னைக்கு அவசரத்துல ரூம்மேட் ஜட்டியைப் போட்டுக்கிட்டு வந்துட்டேன்.
அப்ப நான்தான் அவனோட வாரிசா? என் பெண்டாட்டி பழைய புடவையெல்லாம்
வேலைக்காரிக்குதான் கொடுப்பா! அப்போ அவ என் பெண்டாட்டி ஆயிடுவாளா?
ஒரு லாஜிக் வேண்டாமா
மேடம்?
சிஅ: அக்கா
தூங்கப்போகும்போது டிவி ரிமோட்டை என் கையில் கொடுத்துட்டுப் போவாங்க! அவ்வளவு ஏன்,
இன்னைக்கு என்ன டிஃபன் செய்யட்டும்ன்னு சமையல்காரி கேட்டா, சசிகிட்ட கேளுன்னு
சொல்லுவாங்க! இதிலிருந்து என்ன தெரியுது?
நிரு: நீங்க ஜாமம் வரைக்கும் தூங்கமாட்டீங்க, நல்லா சாப்பிடுவீங்க!
சிஅ: எப்படி இப்படி சட்ட
அறிவோ, அரசியல் அறிவோ இல்லாம நிருபரா இருக்கீங்க? அது என்னை வாரிசுன்னு அக்கா
மறைமுகமா சொன்னது!
நிரு: அப்புறம் ஏன் உங்களை கட்சியிலிருந்து நீக்கினார்?
சிஅ: இப்ப ஒரு உண்மையைச்
சொல்றேன்! என்னை பல தடவை ஓய்வெடுத்துக்கச் சொல்லி அக்கா கட்டாயப்படுத்தினாங்க!
நான் கேட்காததால கட்டாய ஓய்வு தர ரொம்ப மனவேதனையோட அப்படி செஞ்சாங்க!
நிரு: உங்களுக்கு அரசியல் ஆசை ஏதுமில்லை அப்படின்னு லெட்டர் கொடுத்துத்தானே
கட்சியில் திரும்ப சேர்ந்தீங்க?
சிஅ: இப்பவும் எனக்கு ஆசை
இல்லை தம்பி! மக்களுக்காகத்தான்!
அப்போது ஏதோ ஒரு வாரிசு வந்து சின்ன அம்மாவிடம் ஏதோ சொல்ல, டென்ஷனோட
ஃபோனை எடுத்துப் பேசறார்!
" கவர்னருக்கு எதுக்கு அத்தனை பெரிய வீடு? கங்கை அமரனைவிட அந்த வித்யாசாகர் ராவ் என்ன
அவ்வளவு பெரிய ஆளா? கையெழுத்து போடமாட்டாரா?
வெள்ளை குர்தா போட்டுக்கிட்டு அந்தாள் டெல்லில என்ன பண்றாரு? தம்பி
ஆசைப்படுது, அந்த அடையாறு பங்களாவை எழுதி வாங்க முடியுமா முடியாதா?
ஒருவேளை அங்க ஏதாவது சேட்டுப்பொண்ண கரெக்ட் பண்ணிட்டாறா? ஒரு மூட்டை
கஞ்சா ரெடி பண்ணட்டுமான்னு கேளு!
சிஅ: நீங்க கேளுங்க தம்பி!
நிரு: இல்லைங்க.. வந்து..
சிஅ: சும்மா கேளுங்க பயப்படாதீங்க
இங்க வெச்செல்லாம் எதுவும் செய்யமாட்டோம்! மகளிர் அணி, ஆட்டோ எல்லாம் வெளியேதான்.
நிரு: ஜெ மரணத்தில் சந்தேகம்
இருப்பதாய் சொல்கிறார்களே?
சிஅ: அத்தனை கோடிப்பேர்
பார்த்தார்களே, அவர்
மரணமடைந்துவிட்டார். இதிலென்ன சந்தேகம்?
நிரு: இல்லை, அவர் மரணமடைந்த
விதத்தில் சந்தேகம் ...
சிஅ: இதே கேள்வியை
நீங்கள் ஸ்டாலினைக் கேட்பீங்களா?
கருணாநிதி இன்னும்
மரணமடையாமல் இருக்கிறாரே, அதில் உங்களுக்கு
ஏன் சந்தேகம் வரலை?
நிரு: உப்புமா
சாப்பிடுகிறார்,பந்து விளையாடுகிறார் என்றெல்லாம் சொன்னீர்களே, இல்லை, அவர் ட்ரீட்மெண்ட்
எடுத்துக்கொண்டிருப்பதுபோல் ஏன் ஒரு புகைப்படத்தை நீங்கள்
வெளியிடவில்லை?
சிஅ: உங்களுக்கெல்லாம்
கொஞ்சமாவது இங்கிதம் இருக்குதா?
ஒரு பெண்மணி படுத்திருப்பது, சாப்பிடுவது, விளையாடுவதெல்லாம்
அடுத்தவங்க பார்க்கலாமா? உங்க வீட்டுப்
பொண்ணுகளை அப்படிப் படம் எடுத்துப் போடுவீங்களா?
நிரு: சரி, மத்திய அமைச்சர்களை, கவர்னரையாவது பார்க்க
அனுமதித்திருக்கலாமே?
சிஅ: லூசு மாதிரி பேசாத
தம்பி, போட்டோவே
பார்க்கக்கூடாதுன்னு சொல்றேன்,நேர்ல பார்க்கணுமா?
நிரு: இல்லை, அவர் ட்ரீட்மெண்ட்
பற்றிய சந்தேகம் தீர்ந்திருக்குமே?
சிஅ: ஏன், லண்டனிலிருந்து வந்த
பீலா ரிச்சர்டு சொன்னார், ரெட்டி, எத்தனை ஜெராக்ஸ்
கொடுத்தார், அதெல்லாம் போதாமல், நானே சொன்னேன்.
இதற்குமேல் என்ன ஆதாரம் வேணும்?
வேணும்னா போய்
அக்காவையே கேளுங்க!
நிரு: சரி, இப்போ உங்களை
முதல்வராகச் சொல்லி யார் கேட்டாங்க?
சிஅ: ஏன் தம்பி, நீ பேப்பரே
பார்க்கமாட்டியா?
நேத்து,போஸ், தேவரையா, அக்கா, எம்ஜியார் எல்லாரும்
வந்து என்கிட்டே கேட்டது போட்டோ வந்ததே?
நிரு: அம்மா, அது வேஷம் போட்டவங்க!
சிஅ: ஏன், சினிமால வேஷம்
போட்டவங்கள நம்பி நீங்க ஆட்சியைக் கொடுக்கலையா? இப்போ மட்டும் என்ன புதுசா பேசறீங்க?
நிரு: துணை வேந்தர்கள்
எதற்கு உங்களை வந்து பார்த்தார்கள்?
சிஅ: எனக்கு அதுதான்
தம்பி கோபம்! பழைய சசிகலான்னு நினைச்சுக்கிட்டு துணை வேந்தருங்க வந்துட்டானுக!
நான் இப்போ சிஎம்!
போய் வேந்தரை வரச்சொல்லுங்கடான்னு ஓட்டிவிட்டுட்டேன்.
நிரு: அது சரி! உங்க கொள்கை
என்ன?இனிமேலாவது அண்ணா
வழியில் நடப்பீர்களா?
சிஅ: எங்க அண்ணனுக்கு ஒரு
இழவும் தெரியாது! நான்தான் இங்கே எல்லாம்!
நிரு: ஐயோ, நான் அறிஞர் அண்ணாவைச்
சொன்னேன்!
சிஅ: அந்த ஆளா? அதுதான்
பறக்கவிட்டுட்டோமே கொடியில!
நிரு: சரி,நீங்க தியாக வாழ்வு
வாழ்ந்தா சொல்றீங்க! ஆனா எப்படி கோடிக்கணக்கில் சொத்து சேர்ந்தது?
சிஅ: நான் ஒரு பெண்
அதனாலதானே இந்தக்க்கேள்வி கேட்கறீங்க?
இதை அம்பானியைக்
கேட்கமுடியுமா? அதானியைக்
கேட்கமுடியுமா, இல்லை பில் கேட்ஸை
கேட்கமுடியுமா?
அவர்களைவிட பெரிய
குடும்பம் என்னோடது! இதில் யாருக்காவது சொந்தமா ஒரு ஏர்போர்ட், ரெயில்வே ஸ்டேஷன்
இருக்கா?
இல்ல, சொந்தமா ஒரு
ஏரோபிளேன் இருக்கா?
பின்ன ஏன் இப்படி?
நிரு: தீபா உங்களுக்குப்
போட்டியா வருவார்ங்கறாங்களே?
சிஅ: ஐயோ, அந்த அம்மா எப்போவோ
சினிமாவை விட்டுப் போய்டுச்சுங்க?
நிரு: ஜெயலலிதா அண்ணன்
மகள்...
சிஅ: அவங்களுக்கு அண்ணனே
இல்லை! அப்புறம் மகள் எங்க?
நிரு: இப்போதைய முதல்வர்
என்னாவார்?
சிஅ: யாரு, ஓபியா? அரைக்கிலோ மிக்ஸர் வாங்கிக் கொடுத்து ஓரமா
உட்காரவைச்சிடுவோம்!
நிரு: சரி, பதவி ஏற்றதும்
மதுவிலக்கு கொண்டுவருவீங்கன்னு சொல்றாங்களே?
சிஅ: போங்கதம்பி! வாயில
நல்லா வருது! அப்புறம் மிடாஸ்ல சத்துணவா தயாரிக்கமுடியும்?
நிரு: சொத்துக்குவிப்பு
வழக்கு என்னாகும்?
சிஅ: முதல் குற்றவாளி
செத்துப்போனதுக்கப்புறம் வழக்கு ரத்து ஆகிடும்
நிரு: யார் சொன்னாங்க மேடம்?
சிஅ: மாமாவே சொன்னாரு!
அப்ப சரி!
No comments:
Post a comment