“It won’t be
hard enough” என்ற
ரவியின் பதில் கேட்டு,
“அப்போ
சொல்லு..” என்று
ஆரம்பித்த கவிதா,
சட்டென்று
முகம் சிவந்து, “ச்ச்ச்சீய்… அசிங்கம்
பிடிச்ச ராஸ்கல்!” என்று
அவன் மார்பில் பொய்யாய்க் குத்திவிட்டு விலகி உட்கார்ந்தாள்!
எதற்கு இந்த பதில்?
"How to identify a blind man in a nudist colony?" என்ற கேள்விக்கு!
எதற்கு இந்த பதில்?
"How to identify a blind man in a nudist colony?" என்ற கேள்விக்கு!
கவிதா?
இந்த
இடத்தில் அவளைப்பற்றி சின்ன வர்ணனை சொல்லுவது தமிழ்க்கதை மரபு!
அதனால்,...
சராசரியைவிட
எல்லாமே கொஞ்சம் அதிகமாக இருக்கும் அழகி!
காலண்டர்
மகாலட்சுமியையும், மாயா
நயன்தாராவையும் மிகச் சரியான விகிதத்தில் கலந்த கலவை!
சில
குழந்தைகளைப் பார்த்தால் சட்டென்று அள்ளி முத்தம் கொடுக்கத் தோன்றும்! அப்படித்தான் இந்த இருபத்தைந்து வயதுக் குழந்தையைப் பார்க்கும் யாருக்கும் தோன்றும்!
இப்போது
அவள் சற்றே அபாயகரமான நெருக்கத்தில் உட்கார்ந்திருப்பது ஏறத்தாழ ரவியின் மடியில்!
முதல்
வரியில் விலகி உட்கார்ந்தாள் என்று சொன்னேனே?
அதனால்தான் 'ஏறத்தாழ' மடியில்!
அவள்
அப்படித்தான்!
ஆணோ,
பெண்ணோ, எந்த சினேகமானாலும், சட்டென்று தொட்டுப்பேசுவதும், தோளில் தொங்குவதும்!
ஆயிரம்
வார்த்தை சொல்லாத அன்பை ஒரு தொடுகை சொல்லும் என்பது அவள் லாஜிக்!
அதனால்
ரவியிடம் மட்டுமல்ல, ராஜேஷ், மைத்ரி, குழலி எல்லோரிடமும் இப்படித்தான்!
ரவியைப்பற்றி
சொல்லப் பெரிதாக ஒன்றுமில்லை!
வழக்கமான
சாதாரணன்!
கிராமத்து
விவசாயம், வயல்வெளி
எல்லாம் விட்டு, பட்டினத்துக்குப் பிழைக்கவந்த என்ஜினீயர்!
ஆனால்
கொஞ்சம் வெற்றிகரமான என்ஜினீயர்!
ஐந்துக்கும்
பத்துக்கும் அல்லாடாமல், படித்தவேகத்தில் ஐடி வேலை, ஏறத்தாழ ஆறிலக்க சம்பளம், பெசண்ட் நகரில் எட்டாவது மாடியில் அழகான, வசதியான தனி ஃபிளாட்!
கொஞ்சம்
தனியன்! பெரியநட்பு வட்டம்! நிறைய நண்பிகளும்,
கொஞ்சமே கொஞ்சம் நண்பர்களும்!
இன்ஸ்டால்மென்டில்
வாங்கிய கூப்பர் மினி!
அதில்
எப்போதுமே அள்ளிப்போட்டுக்கொண்டு சுத்தப் பெண்கள்! நள்ளிரவுவரை உலாத்த ஈஸீஆர்! பை நிறையப்பணம், கை
நிறையப் பெண்கள்!
இதுவரைக்கும்
பெரிய இலட்சியங்கள் ஏதுமில்லாமல், என்றைக்காவது அபிமான நடிகரின் படத்துக்கு FDFS, பார்க் ஹோட்டலில் கல்ச்சுரல் ஷோ என்று சிக்கலில்லாத
வாழ்க்கை!
இப்போதைக்கு
லட்சியம் கவிதாவை நிரந்தரமாக முன் இருக்கையில் உட்காரவைத்து ஊர்வலம் போவது!
டிபார்ட்மெண்ட்
மாறி வந்து கதவோடு இவன் மனதையும் திறந்து உள்ளே நுழைந்தவள்!
மொத்த
டிபார்ட்மெண்ட்டும் திறந்த வாயை மூட கொஞ்சம் நேரமானது! ரவிக்கும் ராஜேஸுக்கும் அதிக நேரமானது!
மூன்று
மாதப் பழக்கத்தில் கவிதா புயல் தாக்கி, மணந்தால் மகாதேவி என்ற அளவுக்கு காதல்!
மூன்று
மாதம் கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தி, இன்றுதான் ப்ரொபோஸ் செய்திருக்கிறான்!
“ஹாஹா!
ராஜேசும் இதேதான் கேட்டான்!”
“நான்
யாரை ச்சூஸ் பண்ணட்டும், நீயே சொல்லுடா!”
ராஜேஸ்,
தவணையில் இல்லாமல், ஒரே பேமெண்டில் ஜாகுவார் வாங்குமளவுக்கு, கழுத்துவரை பணக்காரன்!
கொஞ்சம்
ரவியை விட அழகனும் கூட!
பொழுதுபோக்க
வேலைக்கு வருபவன்!
ஆனால், ரவியைவிட கொஞ்சம் ஒழுக்கசீலன்!
கொஞ்சம் அந்தக்காலத்து ஆள்! ஒருவனுக்கு ஒருத்தி, கற்பு என்று கொஞ்சம் ம்யூஸியம் பிறவி!
கவிதை,
பூங்கொத்து என்று போன நூற்றாண்டுக்காதலன்!
அஷ்டலட்சுமி
கோவிலில் வைத்துக் காதலைச் சொல்லுமளவு செண்டிமெண்டல்!
நிச்சயம்
கவிதா மாட்டேன்னு சொன்னா உத்தரவாதமாக மூணு மாசமாவது தாடி வளர்த்துவது உறுதி!
“நீ
என்ன சொன்னே?”
“எனக்கு
அவ்வளவு பொஸசிவ்னெஸ் ஜீரணமாகாதுடா!
ஆனா
நீ கொஞ்சம் ஓவர் பொறுக்கி அதுதான் பயமா இருக்கு!
நூறு
சக்களத்திகளை மேய்க்கணுமே!”
“அதுனால
அவனுக்கும் நாளைக்கு சொல்றேன்னு சொல்லிட்டேன்!
சரி,
சீரியஸா கேட்கறேன், நான் மாட்டேன்னு சொன்னா என்னடா பண்ணுவே?”
“உன்
தங்கச்சிக்கு ரூட் போடவேண்டியதுதான்!”
“நீ
செஞ்சாலும் செய்வடா ராஸ்கல்!
ஓகே!
நாளைக்குப் பார்ப்போம்!”
அவள்
போய் அரைமணிநேரம் கழித்துத்தான் போனது கேல்வின் க்ளைன் வாசம்!
அதென்ன
நாளைக்கு?
நாளைக்கு
புதன் கிழமை,
போதாக்குறைக்கு
கவிதா பர்த்டே!
சரி,
ரவி சஸ்பென்ஸோடவே தூங்கப்போகட்டும்!
நாம் கொஞ்சம் ரவியோட வில்லேஜுக்குப் போய் எட்டிப்பார்த்துட்டு வருவோம்!
நேரா
ரவி வீட்டுக்கே போவோம்!
இந்த
இடத்தில் ஒரு செண்டிமெண்டல் ட்விஸ்ட்டோ, ஏழை விவசாயி கதையோ எதிர்பார்ப்பவர்கள் ரமணிச்சந்திரனையே வாசிக்கப் போகலாம்!
சுத்திவர
இருக்கும் இருபது ஏக்கருக்கும் ஒற்றை வாரிசு ரவி!
ரவிக்கு
ஒரு ரெண்டு மூணு வருஷம் மூத்தவர் மாதிரி ஒரு ஆள் எதிர் வீட்டுக்காரி இடுப்பையே பார்த்துக்கிட்டு நிற்கிறாரே, அவர்தான் சக்திவேல், ரவியோட அப்பா!
ஐம்பதை
நெருங்கும் வயசுன்னு சத்தியம் பண்ணினாலும் நம்பமாட்டீர்கள்!
அப்படி
ஒரு உடல்வாகு!
காபி
டம்ளரோடு வந்த சீதா, ரவியோட அம்மா
” ஏன்,
போய் அவ இடுப்புலேயே ஏறிக்குங்களேன்!”
“போடி
லூஸு, அவ புருஷன் வீட்டுலதான்
இருக்கறான்!”
“அடப்பாவி,
கொதிக்கற காஃபியை தலையோட ஊத்திருவேன்!”
இந்த
கொஞ்சலும் சீண்டலும் அவர்களது முப்பது வருட வாடிக்கை!
“ஒருநாள்
பாருடி, எவளையாவது இழுத்துக்கிட்டு வரப்போறேன், அன்னைக்கு இருக்குது உனக்கு!”
“மொசப்புடிக்கிற
நாய் மூஞ்சியைப் பார்த்தா தெரியாதா!”
சொல்லிக்கிட்டே
அவனை இறுக்கிக்கிட்டா!
ஜாலியான
ஆள் சக்திவேல். எல்லோரோடும் வரைமுறை இல்லாமல் கேலியும் கிண்டலும்! ஆனால் வரம்பு மீறாதவன்!
அந்தக்காலத்திலேயே
பிடெக் முடிச்சுட்டு, பிடிவாதமா விவசாயத்துக்கு வந்தவன்!
விவசாயத்தில்
எந்த ரிஸ்கும் எடுக்கத் தயங்கமாட்டான்!
இதோ,
இப்பக்கூட மொத்த ஊரும் கரும்பும், மஞ்சளும் நெல்லுமாய் வெள்ளாமை! இவன் மட்டும் பத்து ஏக்கரில் நெல்லும், பத்து ஏக்கரில் மூணுமாச சாகுபடியும்!
“எவனாவது
இப்படிப் பத்து ஏக்கரில் இதை சாகுபடி செய்வானா!”
கேட்ட
அத்தனை பேரும் இப்போது தண்ணிக்கு அல்லாடிக்கொண்டிருக்க, சக்திவேல், ரெண்டு கிணத்துத் தண்ணியையும் நெல்லுக்கே பாய்ச்சிட்டு, இந்தப் பத்து ஏக்கருக்கு வெறும் மூன்றுமுறை தண்ணீர் பாய்ச்சி, இதோ, பத்து ஏக்கருக்கு பூ பிடிச்சு, நாளைக்கு
பிடுங்கிவிடலாம் என்று முடிவு!
காஃபியை
குடித்துக்கொண்டே கேட்டான்,
“உன்
மவன் ஏதாவது சொன்னானா?”
“இல்லையே,
என்ன விஷயம்?”
“அன்னைக்குப்
போயிருந்தப்ப எனக்கென்னவோ அவன் ஒரு பொண்ணு பின்னாடி சுத்தறான்னு பட்டுச்சு!”
“உங்களைப்போலத்தானே
இருக்கும் உங்க வாரிசும்!
ஆனா
என் பையன் அப்படியெல்லாம் போகமாட்டான்!”
“போடி
கிறுக்கி! பூப்போட்ட கர்சீப் அவன் பெட் ரூமுக்குள்ள எப்படி வந்துச்சு?
போதாக்குறைக்கு
வீடு முழுக்க பொம்பள வாசம்!”
“ அதுதானே,
நமக்குத் தெரியாத பொம்பள வாசமா?
சக்திவேல்ன்னு
பேரு வெச்சதுக்கு தசரதன்னு வெச்சிருக்கலாம்!”
“என்னமோ
பண்ணு! நான் பெருமாள் கோவில் வரைக்கும் போயிட்டு வரேன்!”
“செவ்வாக்கிழமை
பெருமாள் கோவிலுக்குப் போற ஒரே ஆள் நீங்கதான்! ஏன், அங்க ஏதாவது செட்டாயிடுச்சா?”
“அடிப்பாவி,
ராமசுப்பு நாளைக்கு அறுவடைக்கு நேரம் குறிச்சுத் தர்றேன்னு சொல்லியிருக்கிறான்!”
ராமசுப்பு
பெருமாள் கோவில் அர்ச்சகர்! சக்திவேலுக்கு ஃப்ரண்ட்!
ரவி நகர்ந்ததும் சீதாகிட்ட பக்கத்து வீட்டுக்காரி கேட்டா,
"எப்புடி நீ இந்த ஆளை நம்பி வெளியே தெருவுக்கு அனுப்பறே?"
"போடி இவளே, அந்த ஆள் எங்கே வாலாட்டினாலும் சோத்துக்கு இங்கதான் வருவாரு! சாப்பாடு சூடா இருக்கறது முக்கியமில்லடி, தினமும் தினுசு தினுசா கிடைக்கற இடம்தான்டி ஆம்பளைக்கு சொர்க்கம்!"
"அப்படின்னா?"
"அது உனக்குப் புரியாததாலதான் இன்னும் நீ உன் புருஷன தொரத்திக்கிட்டே சுத்தறே!" சிரித்துக்கொண்டே உள்ளே போனாள் சீதா!
ரவி நகர்ந்ததும் சீதாகிட்ட பக்கத்து வீட்டுக்காரி கேட்டா,
"எப்புடி நீ இந்த ஆளை நம்பி வெளியே தெருவுக்கு அனுப்பறே?"
"போடி இவளே, அந்த ஆள் எங்கே வாலாட்டினாலும் சோத்துக்கு இங்கதான் வருவாரு! சாப்பாடு சூடா இருக்கறது முக்கியமில்லடி, தினமும் தினுசு தினுசா கிடைக்கற இடம்தான்டி ஆம்பளைக்கு சொர்க்கம்!"
"அப்படின்னா?"
"அது உனக்குப் புரியாததாலதான் இன்னும் நீ உன் புருஷன தொரத்திக்கிட்டே சுத்தறே!" சிரித்துக்கொண்டே உள்ளே போனாள் சீதா!
கோவிலுக்கு
போயிட்டு, பக்கத்திலிருக்கும் வீட்டில்
“அம்மா
தாயே, எனக்கும் உன் வீட்டுக்காரனுக்கும் காஃபி போட்டுக்கிட்டு வா!”
ராமசுப்பு
குறிச்சுக்கொடுத்த நேரத்தை வாங்கிக்கிட்டு அப்படியே கோவில் திண்ணையிலேயே உட்கார்ந்தார்கள்!
“சொல்லு
சக்தி, பையனுக்கு எப்போ கல்யாணம் பண்ணப் போறே?”
“அவன்
யாரையோ லவ் பண்ணறான்னு நினைக்கிறேன்!
அப்படி
இல்லைன்னா, பொள்ளாச்சிலதான் ஏதாவது பொண்ணைப் பிடிக்கணும்!”
பக்கத்துவீடுதான்
பெரியத்தனக்காரர் வீடு!
வெளியே
வந்தவர், “ என்ன சக்திவேல், சாகுபடியெல்லாம் எப்படி?”
“அதுக்கென்ன,
வயலிலும், வெளியிலும் நல்ல மகசூல்தான்!”
“
ஆனா அங்கதான் விளைச்சல் ஜாஸ்தி போல!”, மேடிட்ட
அவர் பெண்டாட்டி வயிற்றைப் பார்த்துக்கொண்டே கேட்க,
“உன்னைப்போய்
கேட்டேன் பாரு”! தலையில் அடிச்சுக்கிட்டே உள்ளே போய்விட்டார்!
“ஏன்
சக்தி, அந்த ஆள்கிட்ட இப்படிப் பேசறே!”
“பின்ன
என்ன சுப்பு, அந்த ஆளுக்கு இது பிள்ளை பெத்துக்கற வயசா?”
“சரி,
எப்படி வந்திருக்குது விளைச்சல்?”
“நாளைக்குப்
பிடுங்கும்போதுதான் தெரியும்!”
“ஓரளவுக்கு
நல்லா வந்தா சொசைட்டில இருக்கற கொஞ்சம் கடனையும் அடிச்சுட்டு நிம்மதியா இருக்கலாம்!”
“ஏன்,
நீதான் சொசைட்டி கடன் தள்ளுபடி ஆய்டும்னு ஜோசியம் சொல்லிக்கிட்டிருந்தே?”
“இந்த
தாடிக்கார கிறுக்கன் போறபோக்கைப் பார்த்தால் அதெல்லாம் நடக்கும்ன்னு தோணல!
எதுக்கு
வட்டிக்கும் கேடா!”
“சரி
நான் வரட்டுமா?
அமெரிக்காவிலிருந்து
கருடாழ்வார் தகவல் ஏதும் இருக்கா!”
“நல்ல
வாய் உமக்கு!
நீ வெச்ச பேர்தானே அது? அவ பேரே எங்களுக்கு
மறந்துபோச்சு!”
சிரிச்சுக்கிட்டே
கிளம்பிட்டாரு சக்திவேல்!
“சரி,
நாளைக்கு முதல் வயல் விளைச்சலை அனுப்பிச்சுவைக்கிறேன்!
வீட்டுக்கு
வேணும்கறதை எடுத்துக்கிட்டு, மீதியை வித்து பெருமாளுக்கு ஏதாவது செஞ்சுடு!”
ரைட்டு!
நாளைக்கு
ஏன்ன ஆகும்?
அப்பா, மகன் ரெண்டு பக்கமும் கடலை சாகுபடிதான்!
ரெண்டுமே ஜெயிக்குமா,
அல்லது தோற்குமா,
ஒண்ணு ஜெயிச்சு ஒண்ணு தோற்குமா?
நீங்களே முடிவு
பண்ணிக்குங்க!
ஹேப்பி பொங்கல்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக