நேற்று காலை!
கேடிஜி
அலுவலகம்!
“ஐயா,
தமிழ்நாட்டிலிருந்து முதலமைச்சர் வந்திருக்கிறார்!”
“அவரை
உட்காரச்சொல்!
நாடுன்னா கண்ட்ரிதானே?
அது எந்தக்
கண்டத்துல
இருக்கு?
பேசும்போது
என்னை
எப்படியும்
இன்வைட்
பண்ண
வைத்துவிடுவேன்!
ஒரு நாலு
நாளைக்கு
டிரஸ்
எடுத்துவை!”
“இல்லைங்கய்யா
அது இந்தியாவுக்குள்ளேயேதான் இருக்குது!
கண்ணீர்
செல்வம் வந்திருக்காருங்கய்யா!”
“இவனுங்க சுத்தக்
கிருத்திருவம் புடிச்சவனுக!!
எதுக்கு நாடுன்னு
பேர்
வெச்சு
கன்ஃபியூஸ்
பண்ணறாங்க. தமிழ்நாட்டு முதல்வர் லெட்டர்தானே எழுதணும்?
அவர் எதுக்கு நேர்ல வந்தார்?
பி ஏவ
பார்த்துட்டுப்
போகச்
சொல்லு!”
“இல்லைங்கய்யா,
ஊருல போய்க் காட்ட ரெண்டு போட்டோ மட்டும் எடுத்துக்கிட்டுப் போறேன்னு கெஞ்சறாரு!”
“போட்டோகிராஃபர் வந்திருக்கிறாரா கூட? அப்ப உட்காரச்சொல்லு!
வர்றேன்!”
உள்ளே
வந்துகொண்டே,
கேடிஜி:
“வாங்க
கண்ணீர்!”
கண்ணீர்: “வணக்கம் ஐயா!”
கேடிஜி:”
உட்காருங்க!
நல்லா
இருக்கீங்களா!”
கண்ணீர்: எங்கய்யா என்னை நிம்மதியா இருக்கவிடறாங்க?
இந்தச் சின்னம்மா கொடுமை தாங்கமுடியலைங்கய்யா!
கேடிஜி: சித்தின்னா
கொடுமை பண்றது சகஜம்தானே!
நீங்க
அம்மா இருக்கும்போதே சின்னம்மாவுக்கு கும்பிடு போட்டவங்கதானே!
சரி,
இப்போ எதுக்கு வந்தீங்க?
கண்ணீர்: நிம்மதியா ஒரு படம் பாக்க விடமாட்டேங்கறாங்க!
இந்த சின்னப்பசங்க, லட்சம்பேர் பீச்சுல உட்கார்ந்துகிட்டு தண்ணி காட்றாங்க!
கேடிஜி: ஒரு
மூணு நாள்! அதைக்கூட உன்னால் சமாளிக்க முடியல!
ஐம்பது
நாள், நாடுமுழுக்க எல்லோரும் ரோட்டுல நின்னாங்க!
ஒரேயொரு பிங்க் கலர் நோட்டு!
அது கிடைச்சாலும் சில்லறை கிடைக்காம அலைஞ்சப்ப நான் எங்க இருந்தேன்?
எப்போதுமே
வெளிநாட்டில் இருந்தா, நான் வரணும்ன்னு சொல்லியே சமாளிச்சங்க எங்க ஆளுங்க!
இப்பக்கூட
பாரு நீட் பத்தி யாராவது பேசறாங்களா? அதுதான்யா திறமை!
அது சரி,
உன்னை
யார்யா உள்ளூர்ல படம் பார்க்கச் சொன்னது?
அமெரிக்காவிலோ,
ஆஸ்திரேலியாவிலோ தமிழ்ச் சங்கம் இல்லையா? அங்கே போய் நிம்மதியா பார்க்கவேண்டியதுதானே!
கண்ணீர்: நீங்க சொல்லீருவீங்க! உள்ளூர்ல இருக்கும்போதே, எப்போ எவன் என் சீட்டுல உட்காருவான்னு தெரியல! இதுல வெளிநாடுபோனா கேட்கவே வேண்டாம்!
கேடிஜி: அதுக்கெல்லாம்
சாமர்த்தியம் வேணும் கண்ணீர்!
நான்
எப்படி கட்சில சீனியர் எல்லோரையும் ஓரம் கட்டிட்டு வந்தேன்?
துடைப்பமோ,
ராட்டையோ ஏதா இருந்தாலும் நம்ம கைலதான் இருக்கணும்!
அப்படி
எந்தநேரமும் நம்ம மூஞ்சி ஜனங்க கண்ணுல பட்டுக்கிட்டே இருக்கணும்!
அப்பத்தான்
கட்சின்னு சொன்னாலே நம்ம நியாபகம் மட்டுமே வரும்!
கண்ணீர்: ஐயா அதெல்லாம் இந்தக் காட்டுமன்னார்குடி கூட்டத்துக்கிட்டே செல்லுபடி ஆகலீங்க!
கேடிஜி: அப்ப
விடு!
நீ
என்னைக்காவது அம்மா மூஞ்சிய நிமிர்ந்து பார்த்திருக்கயா?
கண்ணீர்: இல்லைங்க ஐயா! எங்க எல்லாருக்குமே, அம்மான்னா, ரெண்டு பாதமும், புடவைக்கரையும் மட்டும்தான்!
கேடிஜி: அப்புறம்
என்ன, அதே சின்னம்மாகிட்டயும் மெயின்டைன் பண்ணிக்க!
நிமிர்ந்து முகத்தைப் பார்க்காதவரைக்கும் அம்மா, சின்னம்மா எல்லாமே ஒண்ணுதானய்யா!
கண்ணீர்: சரிங்கய்யா அப்படியே பண்ணிடறேன்!
கேடிஜி: சரி!
வேற என்ன விஷயம்?
கண்ணீர்: ஐயா சல்லிக்கட்டு...
கேடிஜி: பீட்டாவை
என்ன பண்ண?
அதெல்லாம்
ஆகாது!
பசங்கள அடிச்சு வெரட்டற வழியப் பாரு!
இல்லைன்னா
அவங்க நடுவே போய் ஒரு மீட்டிங் போடு!
பார்டர்ல
மாடே இல்லாம…ன்னு ஆரம்பி! தெறிச்சு ஓடிருவானுக!
கண்ணீர்: நீங்க வேற! பீச்ல இருந்து பாரிஸ் வரைக்கும் நிக்கறாங்க!
மீட்டிங் போட்டா பாரிஸ்லதான் போடணும்!
கேடிஜி: பாரிஸா!
அப்போ நானும் வர்றேன்!
டேய்,
அந்த ஃபிளைட்ட தொடைச்சு, ஏர் செக் பண்ணி நிறுத்து!
கண்ணீர்: ஐயா! நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க! இது பாரிஸ் கார்னர்! சென்னைல!
கடுமையாக முறைக்கிறார் கேடிஜி!
கேடிஜி: உங்க
அக்கப்போருக்கு அளவே இல்லைய்யா!
போ!
இதுல நான் செய்ய ஒண்ணுமே இல்லை! நீயே போய் சமாளி!
கண்ணீர்: ஐயா, நாம் ரெண்டு பேரும் ஒரே தொழில்ல வாழ்க்கையை ஆரம்பிச்சவங்க! அதுக்காகவாச்சும்...
கேடிஜி: அதுனாலதான்,
நீங்க எந்தக் காலுக்குக்கீழ உருண்டுக்கிட்டு இருந்தீங்களோ, அது இருக்குதா இல்லையான்னு தெரியாம புதைச்சபோதும் உங்கள கண்டுக்காம விட்டேன்!
கண்ணீர், கண்ணீர் விட்டு அழுகிறார்!
கேடிஜி: எப்படிய்யா
உங்களுக்கெல்லாம் பொசுக்குன்னு அழுகை வருது?
அதுவும்
வரக்கூடாத நேரத்துல?
அந்தம்மா
செத்து அனாதையாக் கிடக்கும்போது மட்டும் அழாம பதவி ஏத்துக்கிட்டீங்க எல்லோரும்?
கண்ணீர்: ஐயா, முதல்வர் இறந்துபோனா காபந்து முதல்வர் பதவியேற்பது வழக்கம்தானே?
கேடிஜி: அது
வழக்கம்தான், ஆனா முழு மந்திரிசபையும் பதவியேத்து, இலாகாவும் அப்போதே ஒதுக்குனது உகாண்டாலகூட நடக்காதுய்யா!
சரி!
அது உங்க ஊர் விஷயம்!
இப்ப இந்தப் பிரச்னையை நீயே போய் சமாளி!
கண்ணீர்: நீங்கதானே ஐயா பிரதமர்?
கேடிஜி: அதுக்கு?
என்னைக்காவது உங்க ஊர்க்காரனுக எங்களுக்கு ஓட்டு போடறானா?
அது
இன்னும் நூறு வருசத்துக்கு நடக்காது!
அப்புறம் எனக்கு என்ன இண்ட்ரஸ்ட் வரும்?
ஏதோ, மாறி மாறி ரெண்டு கட்சி குடுமியும் எங்க கைல இருக்கறதால பொழைச்சீங்க!இப்பவும் உங்க ஐம்பது அடிமைகள் இருக்கறதால அந்த ஊருக்கு ட்ரெயின் விடறோம்! இல்லாட்டி அதையும் நிறுத்திருப்போம்!
ஜல்லிக்கட்டு விஷயம்
கோர்ட்டுல இருக்கு, பி எம் ஒன்னும்
செய்யமுடியாதுன்னு சொல்லீரு!
போகும்போது
அந்தப் பாட்டுப்பாடற ஆளை வேற நல்ல பாட்டு கத்துக்கிட்டு பார்லிமெண்ட் வரச்சொல்லு!
பட்ஜெட்
கூட்டத்தொடர்ல என்டர்டைன்மெண்ட் வேணும்!
அப்புறம், சுசிகலா
தகவல்
ஏதுமே
இல்லை!
இப்படி
கண்டுக்காம
இருந்தா
சொத்துக்குவிப்பு
வழக்குல
சட்டம்
தன்
கடமையைச்
செய்யும்ன்னு
சொல்லிடு!
இன்னொரு
விஷயம்!
இந்த ஊர்ல
மிக்ஸர்
நல்லா
இருக்கும்
- புளிப்பும்
உரைப்புமா!
அத்வானிக்கு வாரவாரம் கொடுக்க ஒரு
அஞ்சு
கிலோ
வாங்கி
வெச்சேன்! உங்களுக்கு மிக்ஸர் பிடிக்கும்ன்னு கேள்விப்பட்டேன்!
பையன்கிட்ட கேட்டு
வாங்கிக்கிட்டுப்போ!
கண்ணீர் வெளியே போனதும்,
“யோவ் பி
ஏ,
இந்த
ஆள்
வேற
பாரிஸ்,
நாடுன்னு
நியாபகப்படுத்திட்டுப்
போய்ட்டாரு!
கையெல்லாம் நடுங்க
ஆரம்பிச்சுடுச்சு! இப்ப எங்காவது வெளிநாடு போகணுமே?
பேசாம பாரிஸ் கிளம்ப
ஏற்பாடு
செய்!
அப்படியே அதானிக்கு
ஒரு
ஃபோன்
போடு!”
“என்னது,
அத்வானிக்கா?”
“யோவ், அதானிக்குய்யா!
ஃபிரான்ஸ் ஸ்டேட் பாங்க்ல ஏதாவது லோன் வேணுமான்னு கேளு!”
வெளியே
வந்து கார் ஏறின கண்ணீர் திடீர்ன்னு நியாபகம் வந்தவராக,
“யோவ் ட்ரைவர், உள்ளே போய் அந்த மிக்ஸரை வாங்கிக்கிட்டு வா! இன்னைக்கு கேம்ப் டெல்லிலதான்!”
No comments:
Post a comment