அன்று
ஸ்வாதி, இன்று நந்தினி!
இருவரும் பெண் என்பது
முக்கியமே
இல்லை!
அன்று
கொல்லப்பட்டவர் அய்யங்கார்!
இன்று
கொல்லப்பட்டவர் தலித்!
அன்று
கொன்றவன் தலித்!
இன்று
கொன்றவன் இந்துமுன்னணி!
இதுதான்
இங்கு பேசப்படு பொருள்!
நாம்
பொங்குவதற்கும் அடங்குவதற்கும் இதுதான் காரணி!
இது
பெண் மீதான வன்முறை என்று பார்ப்பதில் எல்லோருக்குமே சங்கடங்கள் உண்டு!
ஏனென்றால்,
நாம், பொறுக்கிகள், படித்த, புத்திசாலிப்பெண்ணைத் துரத்தித் துரத்திக் காதலிப்பதையும், பின் அந்தப்பெண் மனம் மாறி தன்னை ஏற்றுக்கொள்ளக் கெஞ்சுவதையும் விசிலடித்துக் கண்டு களிப்பவர்கள்!
நமக்குப்
பெண் என்பவள் போகத்துக்கு மட்டுமே என்பதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை!
ஆண்
என்பவன் படித்தவனோ, படிக்காதவனோ, ஆனால் நல்லவனாகவும் பெண்ணைக் கண் கலங்காது பார்த்துக்கொள்பவனாக இருக்கவேண்டும் என்பதிலிருந்து,
அவன்
படிக்காதவனோ, பொறுக்கியோ, அடுத்தவேளை சாப்பாட்டுக்கு வழியற்றவனோ எப்படி இருந்தாலும்,
அவன்
காதலித்தால்,
பெண்,
தான் எவ்வளவு படித்தும், நல்ல குடும்பத்தில் இருந்து வந்திருந்தாலும், தனக்கு அவனைப் பிடிக்காவிட்டாலும் அவனைக் காதலிக்கவேண்டும் என்று சொல்லுமளவுக்கு முன்னேறியிருக்கின்றன நம் திரைக்கதைகள்!
ஆனால் பெண்ணுக்கான
வரைமுறைகள்
ஆரம்பத்திலிருந்து
ஒன்றேதான்!
பெண் என்பவள்
அடக்கமானவளாக
இருக்கவேண்டும்!
அவ்வளவே!
அவள்
படித்தவளோ, அழகானவளோ, நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவளோ, அதைப்பற்றிக் கவலை இல்லை!
அவளுக்குப்
பிடிக்கிறதோ இல்லையோ, அது தேவையில்லை!
அவள்
விருப்பம் என்பது இரண்டாம்பட்சம்தான்!
அவள்
ஒரு மிகப்பெரிய தொழிலதிபர் எனினும், ஒரு மருத்துவர் எனினும், மெக்கானிக்கை, நர்ஸ் வேடமிட்ட பொறுக்கியை, காதலித்து,
அவனுக்கு அடங்கிய நல்ல மனைவியாக இருந்தே ஆகவேண்டும்!
இதுதான்
நாம் கொண்டாடும், நம்மை ஆள்பவர்களையும், நம் மீட்பர்களையும் தேடிக் கண்டுபிடிக்கும் திரைப்படங்கள் நமக்கு போதிப்பது!
இந்தக்
கருமத்துக்குத்தான் காதல்
என்று பெயர்!
அது
ஆண்டவனைவிடப் புனிதமானது என்று கவிதைகளுக்கும் பஞ்சமில்லை!
இதில் பெண்ணை
தெய்வம்
என்றும்,
மொழியை,
தேசத்தைத்
தாய்
என்றும்
கொண்டாடும்
தேசம்
என்று
பெருமை
வேறு!
த்த்த்தூ!
இது
நம் இளைஞர்களின் மனதில் ஆழமாக விதைக்கப்பட,
காதலிப்பது
என்பதே, காதலிக்கப்படத் தகுதி, மற்றபடி வேறு எந்தத் தகுதியும் தேவையில்லை என்று பதிகிறது!
பெண்களும்
இந்த மாயவலையில் எளிதாய் விழ,
காவியக்காதல்கள் அரங்கேறுகின்றன!
பூணூலையும்
சிலுவையையும் அறுத்துப் போட்டுவிட்டுப்போன காதலர்கள் மறுநாள் சோத்துக்கு என்ன செய்வார்கள் என்று யோசிக்கவேண்டியதில்லை!
ஏனென்றால்
அது
கதை!
ஆனால்
அவர்கள் காதலிப்பதுபோல் நாமும் காதலிக்க வேண்டும்!
அப்போது மட்டும்
அது
வாழ்க்கை!
இந்த
இழவெடுத்த புரிதல்கள்தான் இத்தனை இழவுகளையும் கொண்டுவருகிறது!
காதலிக்க
மறுத்தாளா, வெட்டு அவளை, கொளுத்து அவளை!
காதலித்தாளா, முதலில்
அவளோடு
படு!
கல்யாணம் என்று
வரும்போது
ஜாதி,
தகுதி
எல்லாம்
யோசி,
கொன்று
குப்பையில்
போட்டுவிட்டுப்
போய்க்கொண்டே
இரு!
பெண் என்பவள் அந்த அளவுக்குத்தான் வொர்த்!
நீ
சார்ந்த ஜாதியோ, மதமோ உன்னைக் காப்பாற்றிவிடும்!
இன்னும்
சில நாளில், அவர்கள் சொல்லும் பெண்ணைக் கல்யாணம் செய்துகொள்ளலாம்!
கொல்லப்படுபவள் பெண்
என்பதில்
எல்லோருக்கும்
எந்த
செய்தியும்
இல்லை!
அவள்
எந்த
ஜாதி,
எந்த
மதம்
எனபதுதான்
இங்கு
செய்தி!
அதற்கேற்பவே
அதற்கான குரல்களும்!
பெண்
போகத்துக்கு மட்டும்தான் என்பதை என்றுமே நாம் மறுக்கவில்லை!
நீ இந்த
ஜட்டி
போட்டால்,
இந்த
லுங்கி
கட்டினால்,
இந்த
செண்ட்டை
அடித்துக்கொண்டால்
பெண்
உன்மீது
பாய்ந்து
வந்து
விழுவாள்!
நீ
கேட்ட நேரத்துக்கு காலை விரித்துப் படுத்துக்கொள்ளுவாள்!
இதை
இதுவரை எந்தப் பெண்ணியம் பேசும் அறிவுஜீவிகளும் விமர்சித்ததில்லை!
இப்போதுகூட,
ஒரு மிகப்பெரிய எழுச்சி எப்படிக் கொச்சைப் படுத்தப்பட்டது?
அங்கு
முழக்கமிட்ட பெண் தண்ணியடிப்பதுபோல் ஒரு படம் சித்தரிக்கப்பட்டது!
கடற்கரையில்
ஆணுறைகளாக அள்ளப்பட்டன என்று தங்கள் மன வக்கிரங்களை, அரிப்பைக்
கொட்டித் தீர்த்தார்கள்!
ஆணும்
பெண்ணும் எந்தநேரமும் அதே நினைவாக அலைகிறார்கள் என்பதே இவர்கள் நிலைப்பாடு!
கொஞ்சம்
சதை குவிந்திருப்பதோ, நீண்டிருப்பதோதான் அவர்கள் வக்கிரப் பார்வைகளில் படுகிறது!
தன்னைப்
பெண்ணென்று சொல்லிக்கொண்டு, புடவை கட்டிக்கொண்டு, சமூக சேவை செய்வதாய்ச் சொல்லும் ஒரு ஜந்து, ஃபிரீ செக்ஸ் என்று உளறுகிறது!
இவர்களின்
மனதில் எந்தநேரமும் அதே நினைவு!
ஆணும்
பெண்ணும் வாய்ப்புக்கு அலைபவர்கள்!
இந்த
எண்ணம்தான் இத்தனை கொடூரங்களுக்கும் காரணம்!
தான்
சொன்னதைக் கேட்க மறுத்த பெண்ணை வெட்டுவதும், எரிப்பதும் தவறில்லை என்ற சிந்தனை ஆழ்மனதில் விதைக்கப்பட்ட இவை எல்லாம் காரணிகள் இல்லையா?
அதிலும்
நந்தினி கொல்லப்பட்ட விதம் கொடூரத்தின் உச்சம்!
அதை
விவரிக்கவே எனக்கு மனமில்லை!
உடம்பின்,
புத்தியின் ஒவ்வொரு அணுவிலும் வன்மமும் வக்கிரமும் ஊடுருவிய ஒரு மிருகத்துக்கே இது சாத்தியம்!
இதில் சாமர்த்தியமாக
ஜாதியும்
மதமும்
கலந்து,
இந்த
வன்மம்
பின்னுக்குத்
தள்ளப்படுகிறது!
எனக்கு
வந்த ஒரு பாட்டாளியின் பதில், தனக்கு வந்தால்தானே தெரியும், அனுபவிக்கட்டும் என்று தங்கள் வன்மத்தை நியாயப்படுத்தியது!
இது சொல்லும்
ஜாதி
நம்முள்
எவ்வளவு
ஆழமாக
தைத்திருக்கும்
முள்
என்று!
தமிழ்நாட்டில்
ஒவ்வொருவனும் ஒரு ஜாதிய அமைப்பிலோ கட்சியிலோ இருப்பது சகஜம்!
அவன் தன் தனிப்பட்ட வக்கிரத்தில் செய்யும் செயல்களை,
அவன் தலித் என்றோ,
இந்து முன்னணி என்றோ,
முஸ்லீம் என்றோ
அடையாளப்படுத்தப்பட்டு,
விமர்சனங்களும், கண்டனங்களும்
அந்த ஜாதி, மத அமைப்புக்களை நோக்கி திசை திருப்பப்பட்டு, உண்மையான பாலியல் வன்மம் பூசி மெழுகப்படுகிறது!
ஜாதியும் மதமும்
நம்முள்
விதைக்கும்
துவேஷம்
இந்த
அடிப்படை
குரூரத்தை
இரண்டாம்
பட்சமாக்கி
கவனத்திவிட்டு
மறைக்கிறது!
ஸ்வாதியோ, நந்தினியோ
பெண்ணாகப்
பார்க்கப்பட்டு,
இது
பெண்களுக்கு
எதிரான
வன்முறை
என்று
புரிந்துகொள்வது
சாமர்த்தியமாக
மடை
மாற்றப்படுகிறது!
ஒரு
தேசியக் கட்சியின் தலைவர்களில் ஒருவர் தன ஒவ்வொரு வார்த்தையிலும்
முஸ்லீம்கள் மீது வெறுப்பை உமிழ்கிறார்!
இன்னொரு
புறத்திலோ, தான் ஒரு “கெத்துக்காக” பின்லேடன் படத்தை பைக்கில் ஒட்டியிருந்ததாகவும், நாட்டின் பிரதமர் முகமூடி அணிந்து செருப்புமாலை போட்டுக்கொண்டு போஸ் கொடுத்ததாகவும் சொல்பவரை அப்பாவி என்கிறது பேட்டி எடுத்த முன்னணிப் பத்திரிக்கை!
இந்த ஜாதி,
மத
வெறிப்
பிரிவினைகள்
இருக்கும்வரை,
இதுபோன்ற
வக்கிர
மனோநிலைக்கு
மறைமுக
ஆதரவு
இருந்தே
தீரும்!
ஸ்வாதிக்காகப்
பொங்கியவர்கள் நந்தினிக்காகப் போராடமாட்டார்கள்!
நந்தினிக்காகப்
போராடுபவர்கள் ஸ்வாதியை அய்யரா அய்யங்காரா என்றுதான் பார்ப்பார்கள்!
இளவரசனைக்
கொன்றவர்கள் வேறுவகை வெறியர்கள்!
அவர்கள்
மற்ற எல்லோருக்கும் அந்நியர்கள்!
நாய்க்குப் போராடும்
அமைப்புகளுக்கு
இந்தக்
கொடூரங்கள்
உறைப்பதே
இல்லை!
கொல்லப்பட்டது நாய்
இல்லையே!
கேவலம், பெண்தானே!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக