பிப்ரவரி ஏழாம்நாள்
கலியுகத்தின்
முதல்
அதிசயம்
நடந்தது!
கோடிக்கணக்கான கண்கள் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்க,
முன்னாள் முதல்வரின் ஆத்மா இந்நாள் முதல்வரோடு பேசியது!
அந்த
நிகழ்வு அப்படித்தான் சொல்லப்பட்டது!
நாற்பது
நிமிடங்கள் பேசி முடித்தபின் நிகழ்ந்தது அதுவரை யாரும் நினைத்துப் பார்த்திராத அந்த மகத்தான ட்ரான்ஸ்ஃபர்மேஷன்!
டிசம்பர் ஆறாம்
தேதி!
ஒரு
சோகமான கொடும்கணம்!
லட்சக்கணக்கான
தமிழர்கள் கண்ணீரோடு நேரிலும்,
கோடிக்கணக்கான
மக்கள் உலகம் முழுவதிலும்
நம்பமுடியாத
சோகத்தோடு தங்கள் முதல்வருக்கு பிரியாவிடை கொடுத்துக்கொண்டிருந்த அந்த திறந்த வெளியில்,
அத்தனைபேர்
மத்தியில், ஒரு மன்னார்குடி சில்வண்டு,
"யோவ் ஓபி"
என்று அதட்ட, சுற்றியிருந்த எவர் முகத்திலும் ஒரு சின்னத் திடுக்கிடல் கூட இல்லை! அதட்டப்பட்டவர் உட்பட!
அதன்பின்
இரண்டு மாதங்கள் நடந்தவை சரித்திரம்!
கட்சியின்
பொதுக்குழு கூட்டி, பதவி வேண்டவே வேண்டாம் என்று துறவு வாழ்க்கை வாழ முடிவு செய்திருந்த தியாகத் தாய் சசிகலா அம்மையாரை பொதுச் செயலாளராக பதவியேற்க ஒப்புக்கொள்ளவைக்கும் வேலையைச்
செய்தவர் நம் முதல்வர்!
சசிகலா
பொதுச்செயலாளர் ஆனபின், பொது நிகழ்வில் அவர் காலில் விழுந்து ஆசி பெற்றவர் நம் முதல்வர்!
அதன்பின்
நடந்த சில நிகழ்வுகள் காரணமாக மாண்புமிகு சின்னம்மாவை கழகத்தின் சட்டமன்றக் குழுத்தலைவர் என்று முன்மொழிந்தவர் நம் மானமிகு முதல்வர்!
இவையெல்லாம்
நாம் இப்போது மறந்தே ஆகவேண்டிய விஷயங்கள்! ஏனெனில் புரட்சி நாயகன் அவதாரம் எடுத்திருப்பவரை விமர்சிப்பது தேசவிரோதம்!
அவரது
கடந்தகாலம் எந்த ஒரு கேள்வியும் இன்றி முற்றாக மறக்கவேண்டியது!
அதிலும்
ஜெயலலிதா மறைவுக்குப்பிறகான இரண்டு மாத நடவடிக்கைகள்!
அவரென்ன
கருணாநிதியா, எழுபது வருடம் முன்பு கொட்டாவி விட்டதைக்கூட நியாபகம் வைத்துக்கொண்டு விமர்சிக்கப்பட?
எனவே,
நாம் மாண்புமிகு புரட்சியாளர் பன்னீர்செல்வம் அவர்கள் ஜெயா ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்ததையோ,
அவர் விடுதலைப்போரில் கலந்துகொண்டதற்காகத் தண்டிக்கப்பட்டு தோழியோடு சிறை சென்றபோது தற்காலிக முதல்வராக இருந்ததையோ நாம் உடனடியாக மறந்துவிடவேண்டும்!
அப்போதெல்லாம்
இவருக்கு சசிகலா யாரென்றே தெரியாது!
அதன்பின்
இப்போது முதல்வர் ஆனபோது அறப்போரில் ஈடுபட்ட மாணவர்களின்மீது காவல்துறை வெறியோடு தாக்குதல் நடத்தியபோது, அந்த இலாகாவின் அமைச்சராக இருந்தவர் இவர்தான் என்பதையும் நாம் மறந்துதான் ஆகவேண்டும்!
அப்படி
மறக்கமுடியாது என்று உங்கள் மூளை அடம்பிடித்தால்,
யாரையாவது
ஒரு கட்டையை எடுத்து உங்கள் பின் மண்டையில் அடிக்கச் சொல்லுங்கள்!
எல்லாமே
மறந்துபோகும்!
மறக்காமல்
அடிப்பவர் பின் மண்டையிலும் ஒன்று போடுங்கள்!
அவரும்
மறந்து தொலைக்கட்டும்!
ஜெயலலிதா
செப்டம்பர் 22ம் தேதி இரவு
அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
டிசம்பர்
5ம் தேதி "திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால்" காலமானார்!
இந்த
இடைப்பட்ட காலத்தில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதும், டாக்டருடன் ஆங்கிலம் பேசியதும் செவிலியர்களுடன் பந்து விளையாடியதும், உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு ஆடியோ அனுப்பியதும், கடிதம் எழுதியதும் நம் முதல்வருக்குத் தெரியாமல் நடந்தவை!
அப்போது
தங்கள் யாரையும் அவரை சந்திக்கவிடாமல் சசிகலா அடைகாத்ததையும் பெருந்தன்மையோடு கொஞ்சநாள் மறந்திருந்தார் நம் முதல்வர்!
முதல்வர்
ஜெயா "அதிகாரப்பூர்வமாக" மறைந்ததும்,
சில
மணித்துளிகளிலேயே அவர் பூத உடலை அனாதையாக மருத்துவமனையில் விட்டுவிட்டு, வரலாறு காணாத வகையில் மொத்த மந்திரி சபையும் பதவியேற்றதும் அப்பொழுதே அவர்களுக்கான இலாகாக்களும் ஒதுக்கப்பட்டதும் நாம் மறக்கவேண்டியவற்றில் முக்கியமானவை!
(ஒரு
காபந்து
முதல்வர்
நியமிக்கப்படுவதும்,
துக்கம்
எல்லாம்
முடிந்தபின்
மந்திரிசபை
அமைக்கப்படுவதும்தான்
பொதுவான
நடைமுறை)
அம்மாவுக்காக
உயிரையே கொடுக்கத் துடித்த அமைச்சர்கள் அந்த நள்ளிரவில் பதவியேற்றது ஏன் என்பதையும் நாம் மறந்துவிடவேண்டும்!
அதன்பின்
ராஜாஜி ஹாலில் முதல்வர் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டபோது மன்னார்குடி மாஃபியா மொத்தமாக அவர் உடலைச் சுற்றி நின்றதும் பன்னீரோடு நாமும் மறக்கவேண்டியது!
அதிமுகவின்
அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் போல நடராஜன் பேட்டியளித்ததும், ஆமாம், எங்கள் குடும்ப அரசியல்தான் தமிழ்நாட்டில் நடக்கிறது என்று திமிராகப் பேசியதும் பன்னீர் அவர்களுக்குத் தெரியாது!
இப்போது நடப்பதை
மட்டும்
பாருங்கள்!
அவர்
புரட்சிகரமான அறிவிப்புக்கள் உங்களை புளகாங்கிதம் அடையச் செய்யும்!
அவற்றில்
முக்கியமான இரண்டு!
முன்னாள் முதல்வர்
மரணம்
பற்றி
விசாரிக்க
உச்ச
நீதிமன்ற
நீதிபதி
தலைமையில்
கமிஷன்
அமைக்கப்படும்!
வேதா நிலையம் நினைவுச் சின்னமாக்கப்படும்!
இந்த
இரண்டு அறிவிப்புக்களையும் அவர் முதல்வராக இருந்தபோது முயன்றிருந்தால் வெகு சுலபமாக செயல்படுத்தியிருக்கவே
முடியும்!
ஆனால்
இப்போது காபந்து முதல்வராக, எல்லாவற்றுக்கும்
கவர்னரின் அனுமதியை நம்பியிருக்கும் நிலையில் இவை வெற்று அறிக்கைகளாகவே கரைந்துபோகும்!
உண்மையில்
பன்னீருக்கோ அல்லது ஜெ விசுவாசி என்று
சொல்லிக்கொள்ளும் மற்றவர்களுக்கோ கொஞ்சமாவது அக்கறை இருந்திருக்குமானால் அவர் மருத்துவமனையில் இருந்தபோதே தங்களை உள்ளே அனுமதிக்கும்படி போராடியிருக்கலாம்!
அல்லது
அந்தப் பெண் சொல்வது பொய் என்று சொல்லியிருக்கலாம்!
எல்லோரும்
சேர்ந்துகொண்டு ஜெ சினிமா பார்க்கிறார்,
சீரியல் பார்க்கிறார் என்று கதை சொல்லிக்கொண்டிருந்துவிட்டு
இப்போது திடீர் ஞானோதயம் வந்தவர்களாய் சாவில் சந்தேகம் என்று பேசுவது கீழ்த்தரமான சந்தர்ப்பவாதம்!
அப்போலோ
மருத்துவமனை ஐசியூவில் கேமிரா வைத்திருப்பதைத் தங்கள் தனித்துவம் என்று விளம்பரம் செய்கிறது!
ஆனால்
ஜெ இருந்த அறையிலும், அதன்பின் அவர் மாற்றப்பட்டதாகச் சொல்லப்பட்ட பொது வார்டிலும் கேமரா இல்லை என்கிறது!
அவர்
நடந்த, பந்து விளையாடிய வராண்டாக்களிலும் கேமிராக்கள் இல்லையா?
ஒரு
முதல்வராக, தங்கள் தலைவியின் சாவில் இருக்கும் சந்தேகத்தைப் போக்கிக்கொள்ளத்தானே அவர் முதல் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்!
முதல்வர் அனுமதிக்கப்பட்ட
நாளிலிருந்து,
மாரடைப்பால்
காலமான
நாள்வரையான
மொத்த
மருத்துவ
சிகிச்சை
விபரங்களையும்
மருத்துவ
வல்லுனர்களிடம்
சமர்ப்பிக்கச்சொல்லி
ஆராய்ந்திருக்கலாமே,
எது தடுத்தது
நம்
முதல்வரை?
அப்படி
அப்போலோ நிர்வாகம் அளிக்கமறுத்தால், அவர்களை கைது செய்ய காவல்துறை முதல்வர் வசம்தானே இருந்தது?
அல்லது
நீதிமன்றத்தை நாட முதல்வரை எது தடுத்தது?
அடுத்து, வேதா
நிலையம்
நினைவுச்
சின்னம்!
தன்னால்
கட்சியிலிருந்தும், தன் வீட்டிலிருந்தும் பலமுறை அடித்து விரட்டப்பட்ட,
கட்சியில்
யாரும், எந்த நிலையிலும் எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளக்கூடாது என்று தடைவிதிக்கப்பட்ட
கும்பலின் ஒவ்வொருவர் பெயரிலும்,
தான்
சம்பாதித்த எல்லா சொத்தையும்,
தன்
தாய் பார்த்துப்பார்த்துக் கட்டிய வேதா நிலையம் வீட்டையும்
ஜெயா
உயில் எழுதி வைத்திருப்பார் என்று நம்புமளவு அப்பாவி முட்டாளா நம் முதல்வர்?
அப்படி எழுதப்பட்டதாக
கதைகட்டப்படும்
உயில்கள்
எப்போது
எழுதப்பட்டன,
எந்தப்
பதிவாளர்
அலுவலகத்தில்
பதியப்பட்டன,
யார் சாட்சிகையெழுத்திட்டது,
ஜெயா கையெழுத்துப்
போட்டிருந்தால்,
அது
அவருடையதுதானா,
அல்லது ரேகை
உருட்டப்பட்டிருந்ததா?
எனில் அது
எந்த
சூழ்நிலையில்
ரேகை
வைக்கப்பட்டது?
அந்த மர்மம் சூழ்ந்த எழுபத்தைந்து நாட்களில் அது பதியப்பட்டதா,
அல்லது அதற்கு முன் ஒரு தேதியில் பதியப்பட்டதா?
எனில், அந்த நாளின் மற்ற பதிவுகளின் வரிசை எண்ணோடு இது ஒத்துப்போகிறதா?
இதையெல்லாம் விசாரிக்க
முதல்வருக்கு
இரண்டுநாள்
போதாதா
- மனமிருந்தால்?
இன்றைக்கு, பரபரப்புக்காய்
கதை
சொல்லும்
முதல்வர்
டிசம்பர்
ஆறாம்
தேதி
முதல்
பிப்ரவரி
ஏழாம்
தேதி அவரை மந்திரித்து
விடப்பட்டிருந்தாரா?
இவையும்
மறக்கப்படவேண்டிய கேள்விகள்தானோ?
உண்மையில் பன்னீர்
முதல்வராக
மட்டும்
தொடரவிடப்பட்டிருந்தால்,
சின்னம்மா என்று
சசிகலா
காலடியில்
அடிமையாய்
உருண்டுகிடந்திருப்பார்!
ஒருவேளை,
மற்ற அடிமைகள் உளறுவதுபோல், ஜெயாவால்தான் சசி பாதிக்கப்பட்டார் என்றும்,
ஜெயாவுக்கு
சசிதான் அரசியல் சொல்லிக்கொடுத்தார் என்றும் சாதித்துத் திரிந்திருப்பார்!
அல்லது,
பேரம் பேசியதுபோல் ஒரு துணை முதல்வர் பதவி கொடுக்கப்பட்டிருந்தாலும் அமைதியாகத் தொழுதுகொண்டிருந்திருப்பார்!
அவருக்குத்
தேவை தொழ ஒரு ஜோடிக்கால்கள்தானே?
அவமானப்படுத்தப்படுவது அவருக்கு
ஒன்றும்
புதிதல்ல!
பதவி கொடுக்காமல்
அவமானப்படுத்துவதே
உறுத்தல்!
உடனே
பொங்கி எழுந்துவிட்டார் புரட்சி வீரர்!
நம்
மக்களுக்குத்தான் நாடகமோ, திரைப்படமோ, சீரியலோ, எல்லாவற்றிலும் ஒரு ஹீரோ, ஒரு வில்லன் ஒரு நல்ல சக்தி, ஒரு தீய சக்தி தேவை!
சசி,
அவர் தகுதியின்மை, அவர் பேராசை இவற்றின் மீதான வெறுப்பு, அவரை சுலபமாக வில்லியாக்க,
நமக்கு
ஒரு ஹீரோ தேவைப்பட்டார்!
திடீரென்று
எதிர்த்துச் சிலிர்த்த பன்னீர் சுலபமாக அந்த ரோலில் பொருந்திப்போனார்!
கடந்த இத்தனை
வருடங்களாக
அவர்களுக்கு
ஒத்து
ஊதியதும்,
அம்மாவின் ஆத்மாவோடு
பேச
அமர்ந்த
முந்தைய
நாள்வரை
அந்த
வில்லி
காலில்
அந்த
மாவீரர்
விழுந்து
கிடந்ததும்
சுலபமாக நமக்கு
மறந்துபோனது!
இது பலராலும், ஊடகங்களாலும் உருவகப்படுத்தப்படுவதுபோல்
தேவ அசுர உத்தமல்ல!
இது இரண்டு கொள்ளைக்கும்பல் தங்கள் ஆதாயத்துக்கு அடித்துக்கொள்ளும் தெருச் சண்டை!
இதில் யார்
வென்றாலும்
நமக்குத்தான்
தீவினை!
ஒரு பெரிய
தீமையை
ஒழிக்க,
வேறு
வழியின்றி
இன்னொரு
தீமையின்
உதவியை
நாடியிருக்கிறோம்
என்பதை
மறந்து
உணர்ச்சிவசப்பட்டு
அதில்
ஒன்றைப்
புனிதமாக்கிப்
பார்ப்பது
நம்
தலையில்
நாமே
மண்ணை
வாரி
இறைத்துக்கொள்வது!
சசி
சூர்ப்பனகை என்பது எவ்வளவு உண்மையோ,
அவ்வளவு
உண்மை,
பன்னீர் பொன்மானல்ல, மாரீசமான் என்பதும்!
இதை மறந்தால் அசோகவனம்தான் இறுதிவரை நம் வாசஸ்தலம்!
இந்த
கீரியும் பாம்பும் போடும்
சுயநல அதிகாரச் சண்டையில்,
சத்தம் போடாமல் காவிரி, பாலாறு இவற்றோடு பவானியாற்றையும் எதிர்ப்பே இல்லாமல் இழந்துகொண்டிருக்கிறோம்!
சத்தம் போடாமல் காவிரி, பாலாறு இவற்றோடு பவானியாற்றையும் எதிர்ப்பே இல்லாமல் இழந்துகொண்டிருக்கிறோம்!
அதைப்பற்றிக்
கவலைப்பட நம் ஆண்டவர்களுக்கும் நேரமில்லை, அவர்களைக் கைதட்டி வேடிக்கை பார்த்து ரசிக்கும் நமக்கும் அறிவில்லை!
கோடையில் வண்ணவண்ணமாய்
குடங்களைத்
தூக்கிக்கொண்டு
அலையும்போது,
நம்மை
இதுபோல்
பிஸியாகவே
வைத்திருக்கவும்
அவர்களுக்குத் தெரியும்!
அதையும் சுற்றி
நின்று
நாம்
மெய் மறந்து வேடிக்கை பார்ப்போம் என்பதும் அவர்களுக்குத் தெரியும்!
No comments:
Post a comment