ஜெயலலிதா
இயற்கையான முறையில் மரணமடைந்ததாய் அறிவிக்கப்பட்டு இன்னும் மூன்று மாதங்கள் கூட முடியவில்லை.
அதற்குள்
எத்தனை நாடகங்கள்!
அவரைப்போல் கட்டுக்கோப்பாகக்
கட்சியை
நடந்த
உலகிலேயே
ஆட்களே இல்லை என்று
ஒரு
அப்பட்டமான
சர்வாதிகாரத்தை
உயர்த்திப்பிடித்த
ஊடக
பிம்பங்கள்
சல்லி
சல்லியாக
உடைந்து
நொறுங்கிப்போயின!
ஜெயலலிதா
உடல்நிலை குறித்து முதல் அறிக்கை கேட்டது கலைஞர்!
அப்போது
ஊடகங்கள் வானுக்கும் பூமிக்கும் தாவிக்குதித்தன!
முதல்வர்
என்றால் அவருக்கு பிரைவசி இல்லையா, ஒரு பெண் சிகிச்சை பெறும் விபரங்கள், புகைப்படங்களை வெளியிடக்கேட்பது எவ்வளவு அயோக்கியத்தனம் என்று ஆளும் கட்சிக்குமேல் கூக்குரலிட்டுத் தங்கள் விசுவாசத்தைக் காட்டின!
எழுபத்தைந்து நாட்கள்
மருத்துவமனையில்
கவர்னர்,
மத்திய
அமைச்சர்கள்,
ஜெயா
உறவினர்கள்,
மங்குனி
மந்திரிகள்
என
யாரையுமே
பார்க்கவிடாமல்
சசி
அடைகாத்தபோது
சின்ன
முணுமுணுப்புக்கூட
இல்லாமல்
அமைதி
காத்தன
ஊடகங்கள்!
அதற்கு ஒத்து ஊதிக்கொண்டிருந்தவர் ஓபிஎஸ்!
பணமும் பறிக்கப்பட்டு,
பதவியும்
பறிக்கப்பட்டு
இரண்டுநாள்
குமைந்துகொண்டிருந்தபின்
திடீரென்று
ஆவி
அமுதா
அவதாரம்
எடுத்தார்
ஓபிஎஸ்!
சமாதிக்குப்போய்
அம்மாவின் ஆத்மாவுடன் உரையாடியபின் அவருக்கு ஞானோதயம் வந்தது!
திருவாய்
மலர்ந்தார்,
" அம்மா மருத்துவ
சிகிச்சை
பற்றி
விசாரணைக்கமிஷன்
அமைக்கப்படும்!"
உடனே,
உடனே அவருக்கு புனிதர் பட்டம் கட்டி ஆமாம் சாமி கொட்டின ஊடகங்கள்!
இத்தனைநாள்
அம்மா மரணம் பற்றி உனக்கு சந்தேகம் வரவில்லையா அடிமையே என்று எந்த ஊடகமும் கேள்வி எழுப்பவில்லை!
சசிகலா
மிரட்டினார் எனில், நீயாக ஏன் அவர் காலில் எல்லோர் முன்னும் விழுந்தாய் என்றும் கேட்கவில்லை!
அவர்களுக்கு ஜெயா
மரணத்தைவிட
அதிக
பாதிப்பைத்
தந்தது
சசியின்
விஸ்வரூபம்!
அதைவிட மிகப்பெரிய அச்சம், திமுக ஆட்சியைப் பிடித்துவிடுமோ என்ற பதைப்பு!
சாவதானமாக,
மதியம்போல்
எழுந்துவந்து, தூக்கம்
கலையாமல் பேட்டி கொடுத்துவிட்டு மீண்டும் தூங்கப்போகும் தீபா அவர்களுக்கு அவ்வளவாக உதவவில்லை!
அதனால்,
ஓபிஎஸ்ஸை ஊதிப் பெருக்கவைத்தன!
ஐந்து நிமிடத்துக்கு
ஒரு
பேட்டி,
அரை
மணிநேரத்துக்கு
ஒரு
அறிக்கை
என்று
அவர்களுக்கு
சரியாகத்
தீனிபோட்டார்
பன்னீர்!
அம்மா
சாவில் மர்மம் இருப்பதைக் கண்டுபிடித்தது மட்டுமல்ல,
அமைதியாக நடந்த
ஜல்லிக்கட்டுப்
போராட்டத்தில்
காவல்துறை
வன்முறை
வெறியாட்டம்
தனக்குத்
தெரியாமல்
நடந்தது
என்பதையும்
கண்டுபிடித்து நீலிக்கண்ணீர் வடித்தார்
பன்னீர்!
போராட்டக்களத்தில்
பின்லேடன் படம் இருந்ததால் போலீஸ் தாக்கியது என்று அவர் சட்டமன்றத்தில் சப்பைக்கட்டு கட்டியதை மறந்ததுபோல் நடித்து அதையும் கேள்வி கேட்காமல் நின்றன ஊடகங்கள்!
மாஃபியா
மிகத் தெளிவாக திட்டம் தீட்டியது!
அத்தனை
கூவங்களையும் திரட்டிக் கொண்டுபோய் கூவாகத்தில் அடைத்தது!
திமிறுவோர்களையும், தப்பிக்க
நினைத்தவர்களையும்
தினசரி
தானே
நேரில்
சென்று
மிரட்டினார்
பதவி
ஆசையே
இல்லாத
சசிகலா!
கட்சி
உடைந்து தேர்தல் வருமானால் ஒரு தொகுதி ஜெயிப்பது கூட பகல் கனவு என்பது அவர்களுக்கு உறைக்கும்வண்ணம் சொல்லப்பட்டது!
தொகுதிக்கு பத்துக்கோடி
செலவு
செய்துதான்
உங்களை
ஜெயிக்க
வைத்திருக்கிறேன். அதை மரியாதையாக
வட்டியோடு
எண்ணி
வைத்துவிட்டு
யாருக்கு
வேண்டுமானாலும்
போய்
ஆதரவு
கொடுங்கள்
என்று
சொர்ணா
ஸாரி
சசி அக்கா
அன்போடு
மிரட்டியதிலும்,
இன்னும் நாலு
வருடம்
சமஉ
பதவியில்
இருப்பதில்
சுருட்டக்கூடிய
கோடிகள்
பற்றி
கோடி
காண்பிக்கப்பட்டதிலும்,
குழம்பிச் சுருண்டன
அடிமைகள்!
போன
ஜூன் மாதம் விசாரணை முடிந்து தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது சசிகலாவின் முதல்வர் கனவில் மண் அள்ளிப்போட,
கடைசி
முயற்சியாக, தான் கடத்தி வைத்திருந்த சமஉக்களை அரணாக்கி கூவத்தூரில் அடைக்கலமானது அரசியல் கூவம்!
விடியல் தமிழனுக்கு
நலமாக
விடிய,
யாராலும்
நான்
முதல்வராவதைத்
தடுக்கமுடியாது
என்று
கொக்கரித்த
அரசியல்
அசிங்கம்
இருபது
வருடம்
விளையாடிய
வாய்தா
விளையாட்டை
இன்னுமொரு
நான்கு
வாரம்
உச்சநீதிமன்றத்தில்
விளையாடப்பார்த்தது
- உடல்
நலத்தை
காரணம்
காட்டி!
உச்சநீதிமன்றம்
கடுமை காட்ட, ஊடகங்கள் கூடவே போய் சின்னம்மா சிறைபுகும் வைபவத்தை நேரலையாக ஒளிபரப்பி தங்கள் விசுவாசத்தை நிரூபித்தன!
அன்றுவரை
கஷ்டப்பட்டுத் தான் காத்துவந்த அப்பாவி இமேஜை மறந்து, ஜெயலலிதா சமாதியை ஓங்கி அறைந்து தன் ஆத்திர முகத்தை வெளிக்காட்டினார் சசி!
இப்படி பொதுவெளியில்
ஒரு
கட்சித்தலைவர்
நிதானம்
இழந்து
வெறியாட்டம்
போட்டது
தமிழகத்துக்குப்
புதிது!
இதற்கிடையே,
ஆட்சியமைக்க யாரையாவது அழைத்தே ஆகவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்ட ஆளுநர் வேறு வழியின்றி மாஃபியாக்களின் புதிய அடிமை ஈபிஎஸ்ஸை ஆட்சியமைக்க அழைத்தார்!
பத்து சதவிகித
உறுப்பினர்களைக்கூட
திரட்டமுடியாத
வாய்ச்சவடால்
பன்னீர்
எனும்
மண்
குதிரை
நம்பி
ஸ்டாலின்
ஆற்றில்
இறங்கினார்!
அதன்பின்
நடந்தவை எல்லோருக்கும் தெரியும்!
இதெல்லாம் ஊரறிய நடந்த நாடகங்கள்!
திரைமறைவில் நடக்கும் இன்னொரு நாடகம் யாரும் அறியாதது!
அந்த நாடகத்துக்கு வயது, ஐம்பது ஆண்டுகளுக்கு மேல்!
இது இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் திரையைத் தாண்டி வெளியே வராது!
ஊடகங்கள் நடத்தும் அந்தத் திரைமறைவு நாடகத்தை பின்நின்று இயக்குபவர்கள் எந்தக்காலத்திலும் முகம் காட்டாதவர்கள்!
மூளைச்சலவை செய்வதே தெரியாமல் தாங்கள் நினைப்பதை சாதிக்கும் சமர்த்தர்கள்!
இந்த
மூன்று மாத நாடகத்தில் அவர்களின் சித்து விளையாட்டு நிகரற்றது!
சசி பொதுச்செயலாளர்
ஆனதை
விமர்சிக்கும்போது
தவறாமல்
கூடவே
ஸ்டாலின்
செயல்
தலைவரானதையும்,
அதைவிட வலிமையாக
விமர்சித்தனர்!
பேராசிரியருக்கும்,
துரைமுருகனுக்கும் சீனியர்கள் என்றவகையில் தகுதியில்லையா என்று நீலிக்கண்ணீர் வடித்தனர்!
அவர்களுக்கு அதிமுக
சீனியர்கள்
பெயர்கள்கூட
நியாபகம்
இல்லை
பாவம்!
தாங்கள் ஸ்டாலினோடு
ஒப்பீடு
செய்யும்
சசி
தெருத்தெருவாய்
வீடியோ
கேசட்
வாடகைக்கு
விட்டுத்
திரிந்தபோது,
அவரை வளர்த்து
விட்ட
அன்புத்தாய்
குமுதத்தில்
கோயிங்
ஸ்டெடி
என்று
கட்டுரை
எழுதிக்கொண்டிருந்தபோது,
ஸ்டாலின் அரசியலின்
ஆரம்பப்
படிக்கட்டுக்களைத்
தாண்டிவிட்டதை
வசதியாக
மறந்தனர்!
இதற்கு உண்மைக்காரணம்
வேறு!
தாங்கள்
மட்டும் அனுபவித்த பல சலுகைகளை, தாடிக்காரனின்
விழுதுகள் அத்தனைநாள் அடக்கிவைக்கப்பட்ட இனத்துக்கும் பகிர்ந்துகொடுத்ததை அவர்களால் மன்னிக்கவே முடியவில்லை!
இதற்கான மூலகாரணி
என்று
எல்லாக்
காலத்தும்
அவர்களால்
சுட்டப்படும்
கலைஞரை
அவர்களால்
இன்னும்
நூறு
தலைமுறைகள்
ஆனாலும்
மன்னிக்கவே
முடியாது!
அதனால்,
காரணம் சொல்லாமலே கலைஞர் மேல் வெறுப்பை விதைக்க ஆரம்பித்தது அந்த கும்பல்!
காலகாலமாக தங்களை
சாமி
என்று
கூப்பிட்டுத்
தொழுதுகொண்டிருந்த
அடிமைகள்,
தங்களுக்கு
நிகராக
உட்காரும்
கொடுமை
அவர்களைத்
தீயாய்ச்
சுட்டது.
அந்த வெறுப்பு
கலைஞர்
மீது
பாய்ந்தது!
அதில்
ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை!
ஆனால்,
இப்போது மூன்றாவது தலைமுறையாக அதன் பலனை அனுபவித்துவரும் இளைஞர் கூட்டமும் ஏனென்றே தெரியாமல் அவர்கள் சொல்படி ஆடியது!
தன் அப்பா
தாத்தாவிடம்
அரசியல்
கேட்காமல்
இவர்கள்
சொன்னதற்கு
ஆமாம்
போட்டது!
அவர்கள் சொன்னால் உண்மையாகத்தான் இருக்கும் என்று நம்பியது காலகாலமாக ரத்தத்தில் கலந்த அடிமை புத்தி!
ஏன்
இவர்களுக்கு கலைஞர் மேல்மட்டும் இவ்வளவு வன்மம் என்பதை கேள்வியே கேட்காமல் அதே வன்மத்தை அவரால் பலனடைந்தவர்களும் காட்டுவதற்கு ஒரு எளிய உளவியல் காரணம் இருக்கிறது!
தாழ்வு மனப்பான்மை!
தான் படித்து
ஒரு
நிலைக்கு
வந்ததும்,
தான்
வணங்கிய
சிறுதெய்வங்களை
மறந்துவிட்டு,
மேல்ஜாதி
தெய்வங்களை
வணங்குவதும்,
தாங்கள் பேசும்
தாய்மொழியையும்
அவர்களைப்போலவே
பேசுவதும்
போலவே
இதுவும்!
உப்புமா
பிடிக்காது என்று ஒருவர் சொல்ல, இன்று உப்புமா என்பது ஒரு கெட்டவாத்தையே ஆகிப்போனதுபோலத்தான் இது!
கலைஞர்
ஒன்றும் உத்தமரில்லை.
ஆரம்பகாலத்திலிருந்தே
மு.க. முத்தை
எம்ஜியாருக்கு எதிராய் வளர்த்துவிட முயன்று கேவலமாய்த் தோற்றபின்பும்,
மனைவி,
துணைவிகளின் அழுத்தம் தாங்கமுடியாது
சிங்கப்பூரில்
அமைதியாகக் கதை கவிதை என்று கணவரோடு நிம்மதியாக வாழ்ந்துகொண்டிருந்த கனிமொழியையும்,
மதுரைக்கு
விரட்டப்பட்ட அழகிரியையும்
அரசியலுக்குக்
கூட்டிவந்ததும்,
பதவி
கொடுத்ததும்,
முரசொலி
மாறனிடம் பட்ட நன்றிக்கடனாக
தயாநிதியை
மத்திய மந்திரி ஆக்கியதும்
வரலாற்றுப்பிழை!
மு.கவின் இந்த நடவடிக்கைகளால், அரசியலில்
ஸ்டாலின்
பட்ட
துயரங்களும்
தியாகங்களும்
மக்கள்
பார்வையில்
நீர்த்துப்போயின!
எமெர்ஜென்சி
காலத்தில் ஸ்டாலின் பட்ட அடிகளை சஃபையர் தியேட்டர் சுரங்கப்பாதையும் அப்போதைய மத்தியச் சிறைச்சாலையும் இன்னும் மறந்திருக்காது!
சிட்டிபாபு
இல்லாவிட்டால், ஸ்டாலின் நினைவுநாள் அனுஷ்டிக்க ஆரம்பித்து நாற்பது வருடங்கள் ஆகியிருக்கும்!
உப்புமா
பிடிக்காது என்று நரகலை அள்ளித் தின்பது போன்றதுதான்,
கலைஞரை எதிர்ப்பதற்கு சசியையும், அவர்களின் அடிமை ஈபிஎஸ்ஸை ஆதரிப்பதும்!
பெரும்பான்மை ஊடகங்கள் அவர்களின் கைப்பிடிக்குள் இருப்பதும், வைத்தியநாதன்களும் குருமூர்த்திகளும் சோ ராமசாமிகளும் துணையிருப்பதும்
அவர்களுக்கு வசதியாய்ப் போனது!
அவர்கள்
பிடியிலிருக்கும் ஊடகங்கள் விதைத்த விஷம் இளைஞர்களின் மனதில் ஆழமாக வேரூன்றியது!
சசியையும், தினகரனையும்,
ஒரு சின்ன
முணுமுணுப்போடு, அது அவர்கள்
உட்கட்சி
விவகாரம்
என்று
ஏற்றுக்கொண்டவர்கள்
நாற்பது
வருடம்
அரசியலில்
இருப்பவரை
இன்னும்
வாரிசு
என்றே
கூசாமல்
சொல்லமுடிகிறது!
ஆறு
தலைமுறையாக ஒரு தேசியக்கட்சியின் தலைமை ஒரே குடும்பத்திடம் இருப்பதும், அண்டை மாநில முதல்வர்கள் வாரிசுகளாக இருப்பதும் இவர்களுக்கு உறுத்தவில்லை!
ஆனால்
தகுதியற்ற மற்ற வாரிசுகள் காணாமல் போய்விட்ட நிலையில், போராடி மேலே வந்த ஸ்டாலின் இன்றும் இவர்களுக்கு வாரிசாக மட்டுமே தெரிகிறார்.
அதைவிடக்கொடுமை எல்லோரும்
சிரிக்கிறார்களே
என்று
கழுதையும்
சிரித்ததுபோல்
அன்புமணியும்
ஸ்டாலினை
வாரிசு
என்பதுதான்!
வன்னியன் ஓட்டு அந்நியனுக்கில்லை என்ற ஜாதிவெறியற்ற கொள்கை முழக்கத்தோடு அரசியலுக்கு வந்த டிராமாதாஸ் ஆரம்பத்தில் பேசிய வீரவசனம் நியாபகம் இருக்கும் யாரும் அன்புமணியின் ஒவ்வொரு உளறல் வார்த்தைக்கும் பெரிய மருத்துவர் ஐயாவை சவுக்கால் அடிக்கவேண்டும்!
மாறிமாறி திராவிடக்
கட்சிகளின்
காலைக்கழுவி
மகனுக்கு
மத்திய
மந்திரி
பதவி
வாங்கிக்கொடுத்த
பெரியய்யா
தன் மனைவியையும்
மருமகளையும்
கட்சி
அமைப்புகளில்
பதவியில்
அமர்த்தியபின்,
இப்போது வாரிசு
அரசியல்
என்றும்
திராவிடக்கட்சிகள்
என்றும்
வீரவசனம்
பேசுகிறார்!
அப்படி பதவி கிடைத்த சின்னையா ஊழல், சிபிஐ வழக்கு என்று முகம் முழுக்கக் கரியைப் பூசிக்கொண்டு, ஸ்டாலினுக்குப் பின்னால் ராசா நிற்கிறார் என்று நகத்தில் அழுக்கிருப்பதாய் கதறுகிறார்!
விஜயகாந்த் - பிரேமலதா,
சுதீஷ்
ஜெ - சசி-
தினகரன்,
வெங்கடேஷ்,
திவாகரன்
இன்னும்
மொத்த
மாஃபியா
- இது
போதாதென்று
தீபா,
தீபன்!
இதெல்லாம் வாரிசிலேயே
வராது!
பன்னீர்செல்வத்தின் மகனும்
தம்பியும்
ஆடும்
அரசியல்
சித்து
விளையாட்டுக்கள்
வாரிசு
அரசியலில்
சேரவே
சேராது!
எந்த சீனியாரிட்டியில் ஓபிஎஸ், ஈபிஎஸ் முதல்வர் ஆனார்கள் என்று கேட்குமுன், ஐம்பது வருடம் முன்பு நாவலரை முந்தி கலைஞர் முதல்வர் ஆகவில்லையா என்று கேட்பார்கள்!
இவர்களின் தர்மத்தாய் எந்த சீனியாரிட்டியில் வந்தார் என்பது சொல்லமுடியாத ரகசியம்!
அடுத்து, ஊழல்!
இன்று
40 % அரசு என்று உலக அளவில் புகழ்பெற்ற அதிமுக அடிமைகளால் விஷவிருட்சமாக வளர்ந்து நிற்கும் ஊழலின் விதை கலைஞர் காலத்தில் போடப்பட்டது என்பதில் மாற்றுக்கருத்தில்லை!
ஆனால் அப்போது
நெல்லுக்கும்
நிறையவே
நீர்
பாய்ந்தது!
இந்திய வரலாற்றிலேயே ஊழலுக்கு தண்டனை பெற்று சிறை சென்ற ஒரே முதல்வர் நம் தர்மத்தாய்!
கருணாநிதி எத்தனைமுறை ஊழலுக்கு சிறைக்குப்போனார் என்று அவர்களால் சொல்லமுடியுமா?
கேட்டால், மாட்டிக்கொள்ளாமல் செய்தார் என்று வியாக்கியானம் செய்வார்கள்! விசாரணைக்கைதிக்கும் தண்டனைக்கைதிக்கும் வித்தியாசம் தெரியாததுபோலவே விஷம் விதைப்பார்கள்!
டான்சி வழக்கில்
குற்றம்
நிரூபிக்கப்பட்டு,
நிலத்தைத்
திருப்பிக்கொடுத்து,
சொத்துக்குவிப்பு
வழக்கில்
இருபது வருடமாக இழுத்தடித்து
இல்லாமலே
போனபின்பும்,
ஊழல் ராணி
என்று
உச்சநீதிமன்றம்
கடுமையாகச்
சாடி,
செத்துப்போனதால் ஜெயிலுக்குப்
போகாமல்
அபராதம்
மட்டும்
கட்ட
நேர்ந்த
ஜெ,
தீர்ப்பு
வழங்கிய
இரு
நீதிபதிகளாலும்
மிகக்
கடுமையான
வார்த்தைகளால்
அர்ச்சிக்கப்பட்டிருக்கிறார்!
ஆனால் சில அடிமை ஊடகங்கள், வழக்கிலிருந்து ஜெ விடுவிப்பு என்று கொட்டை எழுத்தில் போட்டுத் தங்கள் விசுவாசத்தை நிரூபிக்கின்றன!
சசியை என்ன
காரணத்துக்காகவோ
திடீரெனக்
கழுவி
ஊற்றும்
தினமலர்,
ஜெ
சொத்துவழக்கில்
விடுவிக்கப்பட்டார்
என்றே
தலைப்பில்
சொன்னது!
இன்றும், ஊடக விவாதங்களில் ஜெ விடுவிக்கப்பட்டதாகவே பொய்யை திரும்பத்திரும்பச் சொல்கின்றன அடிமைகள்!
பதவியைத் தக்கவைத்துக்கொண்ட அடிமைகள்,
தாங்கள் இத்தனை நாள் யார் காலைக் கழுவிக் குடித்துக்கொண்டிருந்தனவோ, அந்த ஜெதான் குற்றவாளி,
சசி அப்பாவி என்று கூசாமல் புளுக,
ஜாதி அபிமான ஊடகங்களோ இது எல்லாமே சசியின் திருவிளையாடல், தங்கள் அம்மா குற்றமற்ற சொக்கத்தங்கம் என்கின்றன!
நீதிதேவதை திகைத்து
வாயடைத்து
நிற்கிறார்!
தீர்ப்பை முழுமையாகப் படித்தால் இதெல்லாம் எவ்வளவு கேவலம் என்பது புரியும்!
இதில் மானம்
கெட்ட
சில
ஊடகங்களோ,
இன்னுமே
சொத்து
வழக்கு
என்றே
சொல்கின்றன!
2ஜி
அலைக்கற்றை
உத்தேச
இழப்பை
மட்டும்
ஊழல்
என்று
எழுதுகின்றன!
176 என்று
போட்டு பக்கம்பக்கமாக ஜீரோவால் நிரப்பிய பத்திரிக்கைகள் சிபிஐ நீதிமன்றத்தில் இழப்பென்று சொன்னதொகையை கேட்க மனமில்லாமல் காதை பொத்திக்கொண்டு ஓடுகின்றன!
இருபது
வருடம் வழக்கை இழுத்தடித்து,
இந்தியாவின்
மிகப் பெரிய வழக்கறிஞர்களை வைத்து வாதாடியும் முடியாமல் உண்மை முகத்தில் காறித்துப்ப,
சிறைக்குப்போன
தலைவியின் வழிகாட்டில் நடக்கும் கட்சியும், ஆட்சியும், ஊடகங்களும்,
நீதிமன்றத்தில்
ஆ ராசா தனக்காகத் தானே வாதாடுவதையும்,
நீதிமன்றமே
கண்டனம் தெரிவிக்கும் வகையில் சிபிஐ வாய்தா வாங்கி ஓடுவதையும் வாயடைத்துப் பார்க்கின்றன!
அதிமுக
தலைமையின் ஊழல் நிரூபிக்கப்பட்டும் மானம் கெட்ட ஊடகங்கள் திமுக விஞ்ஞானப்பூர்வமாக ஊழல் செய்தது அதனால் மாட்டிக்கொள்ளவில்லை என்று ஊளையிடுகின்றன!
இவர்கள் விஞ்ஞானம்
தெரியாத
காட்டுமிராண்டிகளா?
இவர்கள் ஏன் அதைவிட விஞ்ஞானப்பூர்வமாக வழக்குப்போட்டு கருணாநிதியை, ஸ்டாலினை ஜெயிலில் தள்ளக்கூடாது?
இவர்களும்தான் "விஞ்ஞான ரீதியாக" பாலத்தையெல்லாம் சுத்தியால் அடித்து உடைத்துப் பார்த்தார்கள்!
என்
மீதான வழக்கை விசாரித்து உண்மையாக இருந்தால் வழக்குப்போடுங்கள் என்று கமிஷனர் அலுவலகத்துக்கே போனார் ஸ்டாலின்!
பாவம்!
ஒரு எஃஐஆர் கூடப் போடமுடியவில்லை!
இன்றைய உங்கள்
பினாமி
முதல்வர்
மேலிருக்கும்
கொலைக்குற்றச்சாட்டுக்களும்,
அவரது வாரிசு
கோடி
கோடியாக
நோட்டு
மாற்றிய
விவகாரத்தில்
சிறையில்
இருப்பதும்
முக்கியமில்லை!
ஊழல் செய்து
சிறையில்
இருப்பவர்
வழி
காட்டுதலில்தான்
இந்த
அரசு
செயல்படுகிறது
என்று
ஒரு
திமிர்
பிடித்த
அமைச்சர்
ஊடக
விவாதத்தில்
சொல்வது
உங்கள்
காதில்
விழவேண்டியதில்லை!
காந்தியும் நேதாஜியும்
ஜெயிலுக்குப்
போகவில்லையா
என்று
கேட்கும்
திமிர்த்தனம்
உங்களுக்குப்
புரியவேண்டியதில்லை!
ஒன்றுமே முடியாவிட்டால் இருக்கவே இருக்கிறது
கருணாநிதிக்கு இரண்டு மனைவி என்ற மாபெரும் அஸ்திரம்!
தொண்ணூறு வயதுக்
கிழவரை
இரண்டு
வளர்ந்த
பெண்
குழந்தைகளின்
தாய்
சந்திக்கப்போனதை,
இன்னொரு மணியம்மை
என்று
அட்டைப்படக்
கட்டுரை
எழுதமுடியும்
ஊடகங்களுக்கு
சோபன்பாபு,
ரவிச்சந்திரன்
எல்லாம்
யாரென்றே
தெரியாது!
எனக்கு
ஒரு மனைவி ஒரு துணைவி என்று ஊரறியத்தான் சொன்னார் கருணாநிதி! முக்காடு போட்டுக்கொண்டு மறைத்து
வாழவில்லை!
ஒருவர் தன்னை மணந்துகொண்டார் என்றும்,
அவரே தன்னை மகளாகத் தத்தெடுத்துக்கொண்டார் என்றும் கூசாமல் இரண்டையும் சொன்னவரைப் புனிதர் ஆக்குவதும்
கோயிங் ஸ்டெடி என்ற கட்டுரை வந்த அதே பத்திரிக்கைதான் என்பது இன்னொரு குரூர முரண்!
தனிப்பட்ட வாழ்க்கையை
விமர்சிப்பது
என்று
ஆரம்பித்தால்
காந்தி,
நேரு, பெரியார்,
பாரதி
என்று
யாரையுமே
சுலபமாகக்
களங்கப்படுத்த
முடியும்!
இதெல்லாம்,
பழைய எஜமானர்கள் சொல்வதை வேதவாக்கு என்றும்,
கருணாநிதியைத்
திட்டாவிட்டால் இணையத்தில் நல்லபெயர் வாங்கமுடியாது என்றும் ஆட்டு
மந்தைகள்போல் கிறுக்கிக்கொண்டிருக்கும் பலருக்கும் புரியவில்லை!
கருணாநிதி இல்லாவிட்டால்
தங்கள்
கதி
என்ன
என்பது,
அடிமை மங்குனி
அமைச்சர்
நீட்
தேர்வுக்குத்
தலையாட்டிவந்தபோதும்,
உதய்
திட்டத்துக்கு
ஒப்புதல்
சொன்னபோதும் ஓரளவுக்காவது
புரிந்திருக்கும்!
இன்றைய நிலையில் காமராஜும் கக்கனும் வேண்டுமென்றால், வயிறார சாப்பிட்டுவிட்டு, நடுப்பகலில் உறங்கிக் கனவுதான் காணவேண்டும்!
இப்போது நமக்கு இருக்கும் சாய்ஸ்களில் ஊழல் கறை படியாத, அரசியல் அனுபவம் உள்ள, ஓரளவு திறமையான முதல்வர் வேட்பாளர்களில் ஸ்டாலின் முன்னணியில் இருப்பது எல்லோருக்கும் புரிந்ததால்தான் தீபாக்கள்கூட முதல்வர் பரிவட்ட ஆசை காட்டி இழுத்துவரப்படுகிறார்கள்!
உங்களை ஊடகப்போர்வைக்குள்
இருந்து
கள்ளப்புன்னகையோடு
ஆட்டுவிக்கும்
போன
தலைமுறை ஆண்டைகளை சற்றே
உரசிப்பாருங்கள்!
மகனையும் மகளையும்
அமெரிக்காவில்
செட்டிலாக்கிவிட்டு,
ரிட்டயர்மெண்ட்ட்டுக்குப்
பின்னும்
எங்காவது
ஆலோசகர்
பதவி
வாங்கிக்கொண்டு
ஒய்யார
வாழ்க்கை
வாழ்ந்துகொண்டு,
தங்கள் வன்மத்தை
உங்கள்
மூலம்
தீர்த்துக்கொள்ளும்
வஞ்சகம்
புரியும்!
உங்கள்
கண்களைக் குத்த உங்கள் கைகளை அவர்களுக்கு வாகாக நீட்டுமுன், என்றாவது யோசியுங்கள், திரைக்குப்பின் இருக்கும் நிழல் உருவங்கள் புலனாகத் தொடங்கும்!
இல்லாவிட்டால்,
நாளை பழனிச்சாமியின் மகன் தினகரனின் மகளுக்கு பினாமியாக ஆளுவதையும் உங்களை ஒப்புக்கொள்ளவைத்து,
உங்கள் மீதும் கலைஞர் மீதுமான தங்கள் வஞ்சகத்தைத் தீர்த்துக்கொள்ளுவார்கள்
ஆத்திரம் கொண்ட சில குதர்க்க சூத்திரதாரிகள்!
No comments:
Post a comment