ஜெ
மரணம் பற்றி விசாரணை தேவையா?
இது குறித்து
நமது
நிருபர்
பல
அதிமுக
தலைவர்களையும்,
அதன்
கிளைக்கழக
நிறுவனரையும்
எடுத்த
சிறப்புப்
பேட்டிகளின்
சிறு
தொகுப்பு!
முதலில் முன்னாள் முதல்வர் பணிவு செல்வம் அவர்கள்!
நிரு:
வணக்கம் திரு பன்னீர் செல்வம் அவர்களே!
ப செ: வணக்கம்!
நிரு:
ஜெயலலிதா மரணம் குறித்து...
ப செ: நானே அதுபற்றி ஜனாதிபதி வரை சந்தித்து மனு கொடுத்திருக்கிறேன்!
நிரு:
உங்களுக்கு என்ன சந்தேகம்?
ப செ: முதலில் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இறந்துவிட்டார் என்பதே சந்தேகத்துக்குரியது!
நேற்றுக்கூட சமாதிக்கு உரையாட வரச்சொல்லி அழைத்தார்!
பிறகு ஏன் அவரைப் புதைத்தார்கள்?
அதுதான் என் சந்தேகமே!
மாண்புமிகு அம்மா அவர்கள் பூரண உடல்நலத்துடன் இருக்கும்போதே புதைக்கப்பட்டுவிட்டார் என்பதுதான் என் ஐயம்!
நிரு:
ஆனால், அவர் மருத்துவமனையில் இருந்தபோதும் நீங்கள்தானே முதல்வராக இருந்தீர்கள்?
ப செ: அப்போது எனக்கு எந்தக் கேள்வியும் எழவில்லை!
மாநில நிர்வாகம் குறித்தும், மக்கள் நலம் குறித்தும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்துவிட்டதால் மாண்புமிகு அம்மா பற்றி எனக்கு எந்த ஐயமும் வரவில்லை!
மாநில நிர்வாகம் குறித்தும், மக்கள் நலம் குறித்தும் ஆழ்ந்த சிந்தனையில் இருந்துவிட்டதால் மாண்புமிகு அம்மா பற்றி எனக்கு எந்த ஐயமும் வரவில்லை!
நிரு:
அப்போது அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சைகள் பற்றி நீங்கள் ஏதும் விசாரித்தீர்களா?
ப செ: எதற்கு விசாரிக்கவேண்டும்?
ஒரு முதல்வருக்கு வேறு கடமைகள் இல்லையா என்ன?
ஒரு முதல்வருக்கு வேறு கடமைகள் இல்லையா என்ன?
நிரு:
அவர் இறந்துவிட்டார் என்று அறிவித்தபோதும் நீங்கள் அப்போலோவில்தானே இருந்தீர்கள்? அப்போது உங்களுக்கு ஏன் அழுகையோ சந்தேகமோ வரவில்லை?
ப செ: மன்னிக்கவும்!
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்கள் நலனைப்பற்றியே எப்போதும் எங்களுக்கு போதித்து வந்தார்!
அவர் வழியில் மந்திரிசபை அமைக்கும் வேலையில் அந்த நள்ளிரவில் தீவிர நடவடிக்கையில் இருந்தபோது மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இறந்துவிட்டார் என்பது என் சிந்தைக்கு எட்டவில்லை!
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்கள் நலனைப்பற்றியே எப்போதும் எங்களுக்கு போதித்து வந்தார்!
அவர் வழியில் மந்திரிசபை அமைக்கும் வேலையில் அந்த நள்ளிரவில் தீவிர நடவடிக்கையில் இருந்தபோது மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் இறந்துவிட்டார் என்பது என் சிந்தைக்கு எட்டவில்லை!
நிரு:
அதன்பிறகு முதல்வராக இருந்தபோது ஏன் உங்களுக்கு ஜெ மரணம் பற்றி
விசாரிக்கத் தோன்றவில்லை?
ப செ: என்னேரமும் மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எங்களோடு இருப்பதுபோல் உணர்ந்ததால் அவர் இறந்தது எனக்கு உறைக்கவில்லை என்பதே உண்மை!
நிரு:
பிறகு எப்போது உங்களுக்கு அவர் சாவில் இருக்கும் மர்மம் புரிய ஆரம்பித்தது?
ப செ: பதவியை இழந்து இரண்டு நாட்கள் மக்கள் கவலை இல்லாதிருந்தபோது, மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களை சந்திக்க நினைத்தபோதுதான், அவர் இறந்துவிட்டார் என்று சொன்னார்கள்!
மிகுந்த அதிர்ச்சியோடு அவர் சமாதிக்கு ஓடினேன்!
அப்போது அவர் ஆவியோடு பேசியபோதுதான் எனக்கு அவர் சாவிலும் சிகிச்சையிலும் இருந்த மர்மங்கள் பற்றி சந்தேகம் வந்தது!
அப்போது அவர் ஆவியோடு பேசியபோதுதான் எனக்கு அவர் சாவிலும் சிகிச்சையிலும் இருந்த மர்மங்கள் பற்றி சந்தேகம் வந்தது!
நிரு:
நீங்கள் ஏன் ஜெ ஆத்மாவிடமே என்ன
நடந்தது என்று கேட்டிருக்கக்கூடாது?
ப செ: மன்னிக்கவும்!
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்கள் நினைவாகவே இருந்துவிட்டதால், தனக்கு என்ன நடந்தது என்று அவருக்கு நினைவே இல்லை!
மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் மக்கள் நினைவாகவே இருந்துவிட்டதால், தனக்கு என்ன நடந்தது என்று அவருக்கு நினைவே இல்லை!
நிரு:
இப்போது உங்களை அவமானப்படுத்திவிட்டார்கள் என்று பேசும் நீங்கள் அப்போது
ராஜாஜி ஹாலில், ஓய் ஓபி என்று அத்தனைபேர் பார்க்க அதட்டப்பட்டபோது ஏன் கோபப்படவில்லை?
ப செ: மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எனக்கு அளித்த முதல்வர் பதவி என்னை உணர்ச்சிவசப்படாமல் தடுத்துவிட்டது!
நிரு:
விசாரணை குறித்து உங்கள் இறுதி நிலைப்பாடு என்ன?
ப செ: எதிலும் இறுதி என்ற ஒன்று இல்லை!
நாளையே என்னை மீண்டும் முதல்வர் ஆக்கிவிட்டாரெனில், மாண்புமிகு தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் தலைமையில் நாட்டைக் காப்பாற்றும் பணியில் ஈடுபடுவேன்!
நிரு:
அப்போது விசாரணை?
ப செ: அது எதற்கு தேவையில்லாமல்?
மக்கள் வரிப்பணத்தை
வீணாக்கக்கூடாது என்பது மாண்புமிகு தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் கொள்கை!
நிரு:
உங்களை அப்போது அவமதிக்க மாட்டார்களா?
ப செ: அப்போது அவர்கள் மாநில முதல்வரைத்தான் அவமதிப்பார்களே ஒழிய, தன்மானம் மிக்க இந்தப் பன்னீர் செல்வத்தை அல்ல!
நிரு:
சசிகலா உங்களை மீண்டும் பதவியேற்க அழைத்தால்?
ப செ: மன்னிக்கவும்!
எனக்கு சசிகலா யாரென்றே தெரியாது!
எனக்கு சசிகலா யாரென்றே தெரியாது!
பதவி கொடுத்தால் மாண்புமிகு தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் காலில் விழுந்து வணங்குவது என் கடமை!
இப்போது சசிகலா என்பவரைப்பற்றி நான் பேச விரும்பவில்லை!
நிரு:
விசாரணை நடத்தப்படவேண்டும் என்பது குறித்து உங்கள் உறுதியான நிலைப்பாடு என்ன?
ப செ: எதிலும் வளைந்துகொடுத்துப் போவதுதான் வாழ்க்கை!
பணம், பதவி இவை இரண்டு தவிர வேறு விஷயங்கள் எதுவுமே வாழ்வில் உறுதியானவை அல்ல என்பது மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்கள் எங்களுக்குக் கற்றுத்தந்த வாழ்க்கை நெறி!
மாண்புமிகு தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் எனக்கு மீண்டும் முதல்வர் பதவி அளிக்கும்வரை மாண்புமிகு புரட்சித்தலைவி அம்மா அவர்களின் மறைவில் மர்மம் நீடிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை!
நிரு:
இவ்வளவு தெளிவாக உங்கள் கொள்கையை விளக்கியமைக்கு நன்றி!
ப செ: எல்லாம் மாண்புமிகு தியாகத்தலைவி சின்னம்மா அவர்கள் மனம் மாறுவதில் இருக்கிறது!
நன்றி!
அடுத்து, தமிழக இந்நாள் முதல்வர் அவர்கள்!
நிரு:
வணக்கம் முதல்வர் அவர்களே!
எ.ப. வணக்கம், எங்கே சுதாகரன் ஐயா வந்திருக்கிறாரா?
நிரு:
இல்லை. நீங்கள்தானே முதல்வர். உங்களைத்தான் முதல்வர் என்று அழைத்தேன்!
எ.ப. மன்னிக்கவும்! இன்றைக்கு மாற்றிவிடுவார்கள் என்று யாரோ சொன்னார்கள்! அதுதான் கொஞ்சம் குழம்பிவிட்டேன்!
கேளுங்கள்! நான்தான் முதல்வர்! மாண்புமிகு தர்மதேவதை சின்னம்மா அவர்கள் ஆணைப்படி பதில் சொல்கிறேன்!
நிரு:
ஜெ மரணத்தில் மர்மம் இருப்பதாக..
எ.ப. யாருங்க அது ஜெ?
நிரு:
ஐயா, என்ன இப்படிக் கேட்கிறீர்கள்?
செல்வி
ஜெயலலிதா! முன்னாள் முதல்வர்!
எ.ப. ஓ! போயஸ் கார்டனில், எங்கள் மாண்புமிகு தர்மதேவதை சின்னம்மா அவர்களுடன் இருந்தாரே அவரா? அவர்தான் செத்துட்டாரே?
நிரு: அவர்
சாவில் மர்மம் இருப்பதாக எல்லோரும் சொல்கிறார்களே?
எ.ப. அது மாண்புமிகு தர்மதேவதை சின்னம்மா அவர்களின் புகழைக் கெடுக்க சதி!
அவர் நன்றாக பந்து விளையாடிக்கொண்டு, உப்புமா சாப்பிட்டுக்கொண்டு ஜாலியாக இருந்தார்! வீட்டுக்குப் போகச் சொன்னதும், மனமில்லாமல் மூச்சை நிறுத்திக்கொண்டார்! அவ்வளவுதான்!
நிரு: எதை
வைத்து அப்படிச் சொல்கிறீர்கள்?
எ.ப. நீங்கள் திண்டுக்கல் சீனிவாசனைக் கேட்டுப்பாருங்கள்!
அவரை சீனிவாசன் என்று கூப்பிட்டுக் கொஞ்சியிருக்கிறார்!
எடப்பாடி எங்கிருக்கிறது என்று விளையாட்டாகக் கேட்டிருக்கிறார்!
நிரு: பிறகு
எப்படி இறந்தார்?
எ.ப. அவர் மாண்புமிகு தர்மதேவதை சின்னம்மா அவர்களின் பெயரைக் கெடுக்க, தானாக இறந்துபோனார்!
இருக்கும்வரை வருமானத்துக்குமேல் சொத்து சேர்த்து மாண்புமிகு தர்மதேவதை சின்னம்மா அவர்களுக்கே தெரியாமல் அவர்மீதும், மாண்புமிகு அவர்கள் உறவினர்கள் மீது சொத்து வாங்கியிருக்கிறார்!
திரை மறைவில் இருந்து நாட்டு மக்களுக்காக உழைத்துக்கொண்டிருந்த மாண்புமிகு தர்மதேவதை சின்னம்மா அவர்களுக்குத் தெரியாமலே இதெல்லாம் நடந்திருக்கிறது!
இப்போது அவர் செய்த தவறுகளுக்காக மாண்புமிகு தர்மதேவதை சின்னம்மா அவர்கள் தண்டனை அனுபவிக்கிறார்!
நியாயப்படி அதற்குத்தான் விசாரணைக் கமிஷன் அமைக்கவேண்டும்!
நிரு: அப்போது,
ஜெ மரணத்தில் மர்மம் இல்லை?
எ.ப. இல்லவே இல்லை! உலகமே பார்க்கும்படி எடுத்துக் கொண்டுபோய் புதைத்துவிட்டோம்!
அதில் சந்தேகம் இருந்தால் தோண்டிப்பார்த்துக்கொள்ளுங்கள்!
நிரு: இதுதான்
உங்கள் கருத்தா?
எ.ப. ஐயோ, எனக்கென்று கருத்தே இல்லை!
இது மாண்புமிகு தர்மதேவதை சின்னம்மா அவர்களின் ஆணைப்படியான கருத்து!
நிரு: நன்றி!
அடுத்து, “எம்ஜியார் அம்மா தீபா பேரவை” நிறுவனத் தலைவர் குட்டியம்மா தீபா அவர்கள்!
நிரு:
வணக்கம் மேடம்!
தீபா:
அதை நீங்கதான் சொல்லணும்!
சாரி, பழக்கதோஷம்!
வணக்கம்!
கேளுங்க!
நிரு:
ஜெயலலிதா
சாவில் மர்மம் இருப்பதாகவும், விசாரணைக்கமிஷன் வேண்டும் என்றும் சொல்கிறார்களே?
தீபா:
ஆம் அப்படித்தான் சொல்கிறார்கள்!
நிரு:
அதற்கு
உங்கள் கருத்து என்ன?
தீபா:
அதை நீங்கள்தான் சொல்லவேண்டும்!
நிரு:
உங்கள்
அத்தை சாவு பற்றி கேட்கிறேன்!
தீபா:
கேளுங்கள்!
நிரு:
இல்லை,
அது பற்றி உங்கள் கருத்து என்ன?
தீபா:
நான்தான் முன்பே சொல்லிவிட்டேனே?
நிரு: என்னது?
தீபா:
அதை நீங்கள்தான் சொல்லவேண்டும்!
நிரு:
நான்
உங்கள் கருத்தைக் கேட்டேன் மேடம்!
தீபா:
அதுதான், அதை நீங்கள்தான் சொல்லவேண்டும்!
நிரு:
அது
சரி!
உங்கள்
கட்சி பற்றி கேட்கலாமா?
தீபா: கேளுங்கள்! எல்லாவற்றுக்கும் பதில் சொல்கிறேன்!
நிரு:
உங்கள்
கட்சிக்கு யார் பெயர் வைத்தது?
தீபா: ஏன்? நான்தான்!
எல்லோரும், எம்ஜியார், அத்தை, என் பெயரை வை என்றார்கள்! நான் உண்மையில் எம்ஜியார் அத்தை தீபா பேரவை என்றுதான் பெயர் வைத்தேன்!
நிரு:
பிறகு
அத்தையை ஏன் அம்மா என்று மாற்றினீர்கள்?
தீபா: அதை நீங்கள்தான் சொல்லவேண்டும்!
நிரு:
உங்கள்
கட்சி கொள்கை என்ன?
தீபா: அத்தை வழியில் கட்சியை வழிநடத்துவேன்!
நிரு:
அத்தை
ஊழல் செய்தார் என்கின்றனரே, அந்த வழியிலா?
தீபா: அதை நீங்கள்தான் சொல்ல வேண்டும்!
தீபா: அதை நீங்கள்தான் சொல்லவேண்டும்!
நிரு: வேறு
ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?
தீபா: என்னை அழிக்க நினைக்கிறார்கள்!
நிரு:
யார்?
தீபா: அதை நீங்கள்தான் சொல்லவேண்டும்!
நிரு:
கடவுளே,
வேறு ஏதாவது?
தீபா: எனக்குத் தூக்கம் வருகிறது!
நிரு:
அப்பாடா
இதை மட்டுமாவது நீங்களே சொன்னீர்களே!
நன்றி!
தெறித்து ஓடிவரும்போது
நிருபரை
வழிமறித்தார்
தீபன்!
நிரு:
சரி
நீங்களாவது சொல்லுங்கள்! உங்கள் அத்தை சாவில் மர்மம் இருப்பதாகச் சொல்கிறார்களே?
தீபன்:
அது எனக்குத் தெரியாது!
சசி எனக்கு அம்மா மாதிரி!
தினகரன் எங்கள் குடும்பத்தைச் சேராதவர்! அவரை பொதுச் செயலாளராக ஏற்கமுடியாது!
பன்னீர்செல்வம் கட்சிக்குத் திரும்பவேண்டும்!
நிரு:
உங்கள்
அத்தை சாவில் ...,
தீபன்:
ஆமாம்!
அத்தை செத்துவிட்டார்!
போயஸ் கார்டன் வீடு, எனக்கும் தீபாவுக்கும்தான் சொந்தம்!
நிரு:
உங்கள்
அத்தை சாவில் மர்மம்...
தீபன்: அபராதம் நானே கட்டுவேன்!
பன்னீர் கட்சிக்கு வரவேண்டும்!
தீபா செய்வது சரியல்ல!
சசி எனக்கு அம்மா மாதிரி!
கடைசியாக வந்த
செய்தி!
தலை தெறிக்க ஓடிய நமது நிருபர் கீழ்ப்பாக்கத்தில் தன்னைத்தானே அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துக்கொண்டார்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக