வெள்ளி, 10 பிப்ரவரி, 2017

Happy Valentines Day Darling!
"Happy Valentines Day Darling" என்று பின்னாலிருந்து கட்டிக்கொண்டு கொஞ்சிய ரவியை,
"காலங்கார்த்தால குளிக்காம வந்து ஈஷிக்காதீங்கன்னு எத்தனை தடவை சொல்றது" என பொய்யாய்க் கடிந்துகொண்டு விலகிய கிருத்திகா முகத்தில் அத்தனை பெருமிதம்!

இருக்காதா பின்னே! எத்தனை எதிர்ப்புகள் , எத்தனை சண்டை, எத்தனை பிரிவுகளுக்குப்பின் நடந்த கல்யாணம்!

கல்யாணம் ஆகி இத்தனை நாளாகியும் உள்ளூறும் பிரியம் கொஞ்சமும் குறையாமல் இப்படி ஒட்டிக்கொள்ளும் கணவன் கிடைப்பது எத்தனை வரம்!

ஆனால், இன்னும் பள்ளிக்கூடப் பையன் மாதிரிதான்!

கொஞ்சம் சிரித்துப்பேசினால், இன்னைக்கு லீவு போட்டு வீட்டில் உட்கார்ந்துவிடும்! 

இன்னைக்கு ஏதோ போர்ட் மீட்டிங் இருக்குன்னு நேற்றே சொல்லியிருந்தான் ரவி!
அதனால் எப்படியாவது கிளப்பி அனுப்பியாகணும்!

"போங்க! போய் மரியாதையா குளிச்சிட்டு வந்து கிளம்புங்க! இன்னைக்கு ஏகப்பட்ட  வேலை கிடக்கு!"

"சரி வாடி! இன்னைக்கு சேர்ந்தே குளிப்போம்! வேலண்டைன் டே ஸ்பெசல்!"
"போடா பொறுக்கி!"
சிரித்துக்கொண்டே குளிக்கப்போனான் ரவி!

அவசர அவசரமாய் சாப்பிட்டுவிட்டு, ஆகாயதீலத்தில் சட்டையும், க்ரே கலர் சூட்டுமாய்க் கிளம்பியவனை கண்ணகலப் பார்த்தாள் கிருத்திகா!
இப்பவும் ஜம்முன்னுதான் இருக்கிறான் ராஸ்கல்! ராத்திரி சுத்திப்போடணும்!

"ஆஃபீஸ்ல அந்த ஷைலஜாகிட்ட இன்னைக்கு எக்ஸ்ட்ராவா வழிஞ்சே, இழுத்துவச்சு அறுத்துடுவேன்!"

"நல்லவேளை நியாபகப்படுத்தினே! இன்னைக்கு வேலண்டைன் கிஃப்ட் வேண்டாம், கிஸ்தான் வேணும்ன்னா! அந்த மௌத்ஃப்ரெஷனரை எடு!"

முறைத்தவளை கன்னத்தில் முத்திவிட்டு காரை எடுத்துக்கொண்டு, நேரே ஆஃபீஸ்!

எதிர்ப்பட்ட ஷைலஜாவைப் பார்த்தவன், "You look stunningly elegant darling in this saree!"

போங்க பாஸ்! இதை உள்ளே அந்த அக்கவுண்டன்ட் பரமேஸ்வரிகிட்ட சொல்லுங்க!

"சேச்சே! அவளுக்கு வேற phrase- Lavishingly beautiful!"
கண்ணடித்துவிட்டு நேரே போர்ட் ரூம்!

ஒருவழியாக மீட்டிங் முடிந்து ரூமுக்கு வந்தபோது பொக்கேவும், கீர்த்திலாலிலிருந்து வந்த வைர மோதிரமுமாக உள்ளே நுழைந்த ஷைலஜா, "I envy your wife sir! I might've been your valentine!"

"ஆமாம்! I missed you by a whisker! நீ கொஞ்சம் முன்னாடி வந்திருக்கணும்!
இப்பவும் ஒன்னும் தப்பில்லை! இன்னைக்கு நைட் குன்னூர் ரிசாட்டுக்குத்தான் போறோம்!
சரின்னு சொல்லு, பக்கத்து ரூமை புக் பண்ணிடலாம்- கனெக்டிங் டோரோடு!"

இருங்க, நான் என் ஹஸ்பெண்டைக் கேட்டு சொல்றேன்!

புன்னகைத்தவாறே வீட்டுக்குப் போய் பொக்கேவையும் மோதிரத்தையும் நீட்ட, சுரத்தில்லாமல் வாங்கிக்கொண்டாள் கிருத்திகா!

ஏய், என்ன ஆச்சு? கிளம்பலையா குன்னூருக்கு?

மதி ஃபோன் பண்ணினா! உங்களை உடனே கூப்பிடச் சொன்னா!

இப்போ அமெரிக்கால நடு ஜாமம்டி!

பரவால்லை!

ஏதோ சீரியஸ்!

ஃபோன் ரெண்டாவது ரிங்கிலேயே எடுக்கப்பட, எதிர்முனையில் மது!
ஹாய் டார்லிங்! என்ன விஷயம்? நாங்க வேலண்டைன் நைட் கொண்டாட குன்னூர் கோயிங்! பத்து வார்த்தைக்குள்ள உன் பிரச்னையைச் சொல்லு!

நான் இங்கே வில்லியம்ஸ்ன்னு ஒரு பையனை லவ் பண்றேன்!

அவன் ப்ரொஃபைல் முழுக்க, வீடியோவோட உனக்கு மெயில் பண்றேன்!

நாளைக்கு பார்த்துட்டு சொல்லு! ஏதாவது சொதப்புனே, கொலை செஞ்சுடுவேன்!
முக்கியமா என் அப்பனையும் உன் பெண்டாட்டியையும் கன்வின்ஸ் பண்ணவேண்டியது உன் பொறுப்பு!
இப்போ குன்னூர் கெளம்பு!

சொல்ல மறந்துட்டேனே!

"Happy Valentines Day Grandpa!"கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக