பெரியாரும்
இணையமும் என்றுதான் முதலில் எழுதத் தோன்றியது!
கடந்த
சிலநாள் கூத்துக்கள் “பகுத்தறிவும் இணையமும்” என்பதே
சரி என்று எண்ண வைத்துவிட்டன!
எனக்கு
டிவி என்பது இரவு 9 -10 ஜெயா ப்ளஸ்ஸும்,
10 - 12 சன்
ம்யூசிக், மெகா, வசந்த், ஜெயா ப்ளஸ் மற்றும் சன் லைஃப் காம்போவும்தான்!
இதில்
இடையே விளம்பரம் வந்தால் பதறி மாற்றிவிடுவதால், சில விளம்பரங்கள் என் கண்ணில் படுவதே இல்லை!
சமீபத்தில்
அப்பா அம்மா ஊரிலிருந்து வந்தபோது, காலை வேளையில் அப்பா சத்தமாய் பார்க்கும் பட்டிமன்றம், செய்தி சேனல்களில் அந்த விளம்பரம் காண நேர்ந்தது!
“Community Matrimony!”
இது
நிச்சயம் இணையம் பற்றித் தெரிந்த இளைஞர்களைக் குறிவைத்துத்தான் என்பதில் சந்தேகமே இல்லை!
அவர்களின் வெற்றி
சொல்லும்
விஷயம்,
படித்த இளைஞர்களிடையே
ஜாதி
இன்னும்
ஆழமாகத்தான்
வேரூன்றி
இருக்கிறது
என்பது!
சமீபத்தில்
ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் நகைக்கடன் வாங்கப்போனேன்!
வழக்கம்போல்
நீட்டிய இடத்திலெல்லாம் படித்தே பார்க்காமல் கையெழுத்துப்போட்டுவிட்டு, ஃபாரத்தை நீட்டும்போது மேனேஜர் அழைக்க அவர் எழுந்துபோனார்!
அந்த
ஒரு நிமிட அவகாசத்தில் அந்த ஃபார்மைப் படித்தால், அதில் முதல் இரு கேள்விகள்
1. நீங்கள்
தாழ்த்தப்பட்ட/
பிற்படுத்தப்பட்ட/
பழங்குடி
வகுப்பினரா?
ஆம் எனில்,
எந்த
ஜாதி?
2. சிறுபான்மை
மதத்தைச்
சேர்ந்தவரா?
ஆம் எனில்
எந்த
மதம்?
எனக்குத்
தெரிந்தவரை, வங்கி வட்டியில் யாருக்கும் எந்த சலுகையும் இருப்பதாய்த் தெரியவில்லை!
பிறகு
எதற்கு இந்தக் கேள்விகள்?
இந்த
லட்சணத்தில் இருக்கிறது நம் சாதி ஒழிப்பு!
சாதி,
மதவாரி இடுகாடுகளும், மயானங்களும் இன்னும் முழுமையாக நடைமுறையில்!
இது
இணையத்துக்கு வெளியே என்று வைத்துக்கொண்டாலும்,
இணையத்தில்
மட்டும் என்ன வாழுகிறது?
கடந்த
இரு நாட்களாக இளையராஜாவின் ஜாதி படும்பாடு அனைவருக்குமே தெரியும்!
இதன் காரணி, இசையமைப்பாளரின்
வழக்கறிஞர்,
ராயல்டி
கேட்டு,
நிகழ்ச்சி
அமைப்பாளருக்கு
அனுப்பிய
நோட்டீஸ்!
பொதுவாக
இதுபோன்ற நோட்டீஸ்களின் நகல் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் அனுப்பப்படுவது சட்ட நடைமுறை!
இதுவே, வேறு
அமைப்பாளருக்குப்
போயிருந்தால்,
அந்த
பெருந்தன்மையான
பாடகர்
இதைக்
காணாது
கடந்திருப்பார்.
ஏனெனில், ராயல்டி
கேட்டு
இரண்டு
வருடம்
முன்பே
உண்ணாவிரதம் இருந்தவர்
அவர்!
இளையராஜாவைவிட
நன்கு படித்த, உயர்குடிப்
பிறந்த அவருக்கு
சட்ட நடைமுறைகள் நன்றாகவே தெரியும்!
ஆனால், அமைப்பாளர்
தன்
மகன்
என்பதால்,
பதில்
நோட்டீஸ்
அனுப்பாமல்
திட்டமிட்டு
முகநூலில்
பொங்கித்
தள்ளிவிட்டார்!
அவருக்குத்
தெரியும் எங்கு அடித்தால் எதைப்பெறலாம் என்று!
நிகழ்ச்சி ஏற்பாடு
செய்தவர்களிடம்
பேசி
நியாயமான
ராயல்டி
வாங்கித்
தருகிறேன்
என்று
அவர்
சொல்லியிருக்கலாம்!
அதுதான் பெருந்தன்மை!
அப்படிச் செய்திருந்தால்
இளையராஜாவின்
ஜாதிப்புத்தி
வெளியே
தெரிந்திருக்காதே?
அவர்,
“எனக்கு ராயல்டி என்ற வார்த்தையே தெரியாது, நல்லவேளை நான் மற்ற இசையமைப்பாளர்களுக்கு பாடியிருக்கிறேன், இனி இளையராஜா பாடலை பாடவே மாட்டேன், என்னிடமே ராயல்டி கேட்பதா, எனக்கு உரிமை இல்லையா” என்று சென்டிமெண்டலாக கதறி அழுகிறார்!
அவர்
பிள்ளை அப்பா 38000 பாடல்களை இளையராஜா இல்லாமலே பாடியிருக்கிறார், வெறும் 2000 பாடல்கள்தான்
இளையராஜா இசையில் என்று புள்ளிவிபரங்களை அள்ளிவிடுகிறார்!
வெறும் ஐந்து
சதவிகிதமே
அவர்
கணக்குப்படி
ராஜா
இசையில்!
எனில், ஒரு மேடை நிகழ்ச்சியில், பாலு ஐயா அவர்கள் இருபது பாடல் பாடினால், அதில் ஒன்று மட்டும் இளையராஜா பாடல் பாடினால் போதும்!
அப்படிச் சொல்லித்தானே டிக்கெட் விற்றிருப்பார்கள்!
இல்லை என்பதால்தான்
சட்டத்தை விட்டுவிட்டு, இணையத்தில் முறையீடு!
இணையத்திற்கு
இதற்குமேல் என்ன வேண்டும்?
சம்பாதித்தது போதாதா,
இவரெல்லாம் பக்திமானா,
நல்ல ஜாதியில் பிறந்திருந்தால்தானே எங்களைப்போல் நல்ல புத்தி வரும்
என்று
பொங்கித் தீர்த்தார்கள்!
நல்லவேளை ஒரு
பெண்
ஹெலிகாப்டரில்
வந்து
ராஜாவைக்
காப்பாற்றினார்!
பாடலின்
மூலம் (Origin) எங்கு
உதிக்கிறதோ, அவர்தான் அதற்கு உயிர் தருகிறார்!
பாடலை,
பாடிய பாடகர் இல்லாமல் யார் வேண்டுமானாலும் பாடலாம், அல்லது வெறும் இசைக்கருவிகளோடு, பாடலின் ஜீவன் கெடாமல் இசைக்கலாம்!
எனவேதான்,
இசையமைப்பாளருக்கு அதில் சிறப்பு உரிமை!
இந்தக்
காப்புரிமை எல்லாத் துறைகளிலும் இருக்கிறது!
அவ்வளவு ஏன்,
இசைத்துறையில்
பக்கா கார்ப்பரேட் முறையில் தன் முதல் பாடல்
முதற்கொண்டு காப்புரிமை வசூலிக்கும் இசையமைப்பாளர்களுக்கு சத்தம்போடாமல் கப்பம் காட்டுகிறார் இன்று அழுது புலம்பும் உத்தமர்!
பிறகு
ஏன் ராஜாவுக்கு மட்டும், அவர்
கேட்கட்டும் என்று விட்டுவிடுகிறார்?
இதைக் கேட்பது
பகுத்தறிவல்ல!
குழு மனப்பான்மையோடு
போட்டுத்
தாக்குவதுதான்
பகுத்தறிவு!
நினைத்தது
நடந்தபிறகு, அந்தப் பெருந்தன்மைக்காரர் ஒரு அறிக்கை விடுகிறார்!
“இளையராஜா அசவுரியமாக உணரக்கூடாது!”
அவ்வளவுதான்!
சொல்லிவிட்டார்!
எல்லா
அசிங்கத்தையும் இறைத்தது போதும்!
போகலாம்!
என்று
நடுநிலைமைகள் நாட்டாமையோடு பிரச்னை முடிந்தது.
சுபம்!
இந்த அசவுகரியத்தை
ஏற்படுத்தியது
யார்
என்று
கேட்பது
பெருந்தன்மையாகாது!
அடித்தோமா, வாங்கிக்கொண்டு மூடிக்கொண்டு போ!
நின்று ஜாதிப்புத்தியை காண்பிக்காதே என்று விரட்டிவிடுவார்கள் மேன்மக்கள்!
இது
இளையராஜாவுக்கு மட்டும் நேர்ந்ததல்ல!
இணையத்தில்
சிலநாள் முன்பு ஒரு உரையாடல்!
வெளிநாட்டில்
மலையாளிகள் ஒருவரை ஒருவர் பார்த்தால், அறிமுகம் இல்லாவிட்டால்கூட நின்று பேசிவிட்டுப் போகிறார்கள்!
நம்
ஆட்கள் அறிமுகம் இருந்தால்கூட காணாமல் கடந்து போய்விடுகிறார்கள் என்று ஒரு கான்வோ!
இது
உண்மையும்கூட!
நம்
ஆட்களுக்கு ஏனோ அப்படி ஒரு மனப்பாங்கு!
ஒருவேளை
ஏதாவது உதவி என்று வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பெருந்தன்மை
ஒரு காரணமாக இருக்கலாம்!
ஆனால்,
அந்த உரையாடலில் ஒரு அற்புதமான காரணம் சொல்லப்பட்டது!
“சற்றே ஏறிவந்த தலித்துகள், தாங்கள் உயர் சாதி ஆகிவிட்டதுபோலொரு போலி பாவனை!”
தலித்
மட்டும்தான் அப்படியா?
அவர்களை மட்டும் குறிப்பிட்டு ஏன் சொல்லவேண்டும்,
மற்ற
சாதிக்காரர்களெல்லாம்
கட்டிப்பிடித்து உருள்கிறார்களா என்று யாரும் கேட்கவில்லை!
கேட்க
மாட்டார்கள்! வசவு
யார் வாங்குவது?
இங்குதான்
பெரியார் அற்புதமாக இவர்களுக்குக் கை கொடுக்கிறார்!
வவேசு அய்யர்
குருகுலத்தில்,
இரண்டு
உயர்சாதி
மாணவர்களுக்குத்
தனி
இடத்தில்
வைத்து
உணவு
வழங்கியதில்,
ராமசாமி
நாயக்கருக்குள்
இருந்த
பெரியார்
வெளியே
வந்தார்!
சமூக
ஏற்றத்தாழ்வு, பெண்ணடிமை, ஆண்டான் அடிமை மனப்பாங்கு இவற்றுக்கெல்லாம் யார் காரணம் என்று பார்க்க,
பிராமணர்களும், அவர்கள்
வகுத்த
வேதங்களும்,
அவர்கள்
வகுத்த
கடவுள்
வழிபாட்டு
முறைகளும்
காரணம்
என்பது
புரிய,
முதலில், இதற்கு
அடிப்படை
கடவுள்
என்ற
கட்டமைப்பே
என்று,
கடவுள் இல்லை! கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி! என்று
அதிரடியாய் ஆரம்பித்தார்!
அது
மட்டும்தான் பலன்தரும் அணுகுமுறை!
அவரது
இலக்கு, கடவுள் ஒழிப்பல்ல,
கடவுள் பெயரைச்
சொல்லி
மனிதனை
மனிதன்
அடிமைப்படுத்துவதும்,
கீழ்மைப்
படுத்துவதும்
ஒழியவேண்டும்!
சடங்கு, சாஸ்திரம்
சம்பிரதாயம் இவற்றைக்காட்டி, பெண்ணை
வெறும்
போகப்பொருள்
என்றும்,
கற்பு,
விதவை
என்ற
போலி
நாடகங்கள்
மூலம்
அவள்
ஆணுக்கு
அடிமை
என்றும் வைத்திருந்த
நிலை
மாறவேண்டும்!
இவைதான்!
கடவுள்
மறுப்பு அதற்கு ஒரு சாதனம்!
அன்று பிராமணனும்,
பிராமணீயமும்
ஒரே
இடத்தில்
இருந்தன!
எனவே,
பெரியார் கடவுளோடு பிராமணனையும் எதிர்த்தார்!
ஆனால்,
தனிப்பட்ட முறையில் பிராமணனுக்கு பெரியார் எதிரி அல்ல!
தன்
வாழ்வில் ஒரு முக்கியமான முடிவை எடுக்கும்போதும், அவர் பெரிதும் மதித்த தன் உயிர் நண்பரையே அபிப்ராயம் கேட்டார்!
அவர்
இறந்தபோது, தள்ளாத நிலையிலும் சக்கரவண்டியில் வந்து இறுதி மரியாதை செலுத்தினார்!
அப்போது
அவர் பிராமணர் என்று பார்க்கவில்லை!
மிகப்பெரிய பக்திமானான
வாரியாரிடமும்,
குன்றக்குடி
அடிகளாரிடமும்
பெரியார்
கொண்டிருந்த
நட்பும்
மரியாதையும்
உலகறிந்தது!
பகுத்தறிவுவாதியும்
தீவிரக் கடவுள் மறுப்பாளருமான தந்தை பெரியார் மற்றும் பழுத்த ஆன்மீகவாதியான குன்றக்குடி அடிகளார் இருவரும் 1950 களில் ஜாதி ஒழிப்புக் களத்தில் இணைந்தே
பணிபுரிந்தனர்.
அவரை,
பக்திமான் என்று பெரியார் வெறுக்கவில்லை!
அவர்
இலக்கு முழுமையாக அவருக்குத் தெரிந்துதான் இருந்தது!
ஆனால்,
இணையத்தில், சிலுக்கு சுமிதா, நயன்தாரா, எம்மாவாட்ஸன் இவர்களோடு, கைதட்டல் வாங்கவும், பிம்பம் கட்டமைத்துக்கொள்ளவும் பெரியாரையும் பயன்படுத்திக்கொள்வோருக்குத்தான்
வேறு இலக்குகள் இருந்தன!
பெரியாரின்
கொள்கைகள் என்ன என்பது விவாதிக்கப்பட்டால்,
பெண்களை முலை அளவை வைத்து வர்ணிக்கமுடியாது,
எங்கு எது நடந்தாலும் காரணத்தைப் பார்க்காமல் பார்ப்பானைத் திட்ட முடியாது,
தலித்துக்கு தலைகனம், ராஜாவுக்கு சாதிப்புத்தி
என்று பேசமுடியாது!
இவர்கள்
நடிகைகளை உபயோகிக்கும் அதே அளவில்தான் பெரியாரையும் உபயோகிப்பார்கள்!
அதுதான்
இவர்களின் உச்சகட்டப் புரிதல்!
மீறிக்கேட்டால்,
இருக்கவே இருக்கிறது சகதி வார்த்தைகள்!
பெரியார் காலத்தில்
ஒரு
பிராமணன்!
இன்று பல
வடிவில் பிராமணர்கள்!
ஒரு
சின்ன உதாரணம்!
பெருமாள்
முருகன்!
அதே
ஊரில் ஒரு விஷ்ணுபிரியா!
இன்னும்
உடுமலை, தர்மபுரியில் சங்கரும், இளவரசனும்!
இதெல்லாம்
புது பிராமணர்கள் யாகத்தில் கொடுத்த பலி!
பிராமணன்
தன் வீட்டு மாடியை தன் சாதிக்காரனுக்குத்தான் வாடகைக்கு விடுவேன் என்பதில் ஒரு சின்ன லாஜிக்காவது இருக்கிறது!
அசைவ உணவுப்பழக்கம்
ஒவ்வாமை
என்று!
ஆனால்,
இன்றைய ஆதிக்க சாதிக்காரன், தனி வீட்டைக்கூட தன் சாதிக்காரனுக்குத்தான் வாடகைக்குத் தருவேன் என்பதில் சாதிவெறி
தவிர
வேறு
காரணம்
இருக்கிறதா?
கோவையில்,
சாதியை பெயரிலேயே பெருமையோடு வைத்திருக்கும் ஒரு கல்லூரியில், முதல் மதிப்பெண்ணை வேறு சாதிப்பெண்ணுக்குப் போட்டதைக் கண்டித்து, கல்லூரி முதல்வருக்கு நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது சாதிவெறி அல்லவா?
பெரியார்
அதிர்ஷ்டசாலி!
பிராமணனையும்,
பிராமணீயத்தையும் ஒரே இடத்தில் சந்தித்தார்!
இந்த
புது பிராமணீய வாதிகள் பயங்கரமானவர்கள்!
காலாவதியான
பிராமண எதிர்ப்பும், சந்தடி சாக்கில் தலித் மீது வெறுப்பும் அணையாமல் பார்த்துக்கொண்டு குளிர் காய்பவர்கள்!
மதம்
எல்லோரையும் மதம் பிடிக்க வைப்பதில்லை!
மதமும் கடவுளும்
பலரையும்
நெறிப்படுத்தவே
செய்கிறது!
மேலிருந்து
ஒருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்
என்ற “மூடநம்பிக்கை” பலரை ஒழுக்கத்தோடு இருக்கவைக்கிறது!
கடவுள்
இல்லவே இல்லை என்ற “பகுத்தறிவு” தரும் தைரியம்
கோடிகளில் கொள்ளையடிக்கவும் வைக்கிறது சிலரை!
கடவுள்
மறுப்பாளனாக இருந்து சாதிவெறி பிடித்தவர்களும், சாதி வெறியில் பெற்ற மகனை,மகளைக் கொலை செய்பவர்களும் இருக்கும் இந்த காலகட்டத்தில் பெரியார் இல்லாமல் போனது நம் துரதிர்ஷ்டம், அவர்களின் அதிர்ஷ்டம்!
இதில்,
பெரியாரின் நேரடி வாரிசு என்று தன்னைச் சொல்லிக்கொள்பவரே விதி விலக்கல்ல!
தெருப்பெயர்களில்
சாதியை தார் பூசி அளிக்கும் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது,
சிக்கய்ய
நாயக்கர் கல்லூரியில் ஒரு விழாவில், கல்லூரிப்பெயரில் சாதி இருக்கிறதே என்று கேட்ட மாணவனுக்கு அதன் ட்ரஸ்டியான அவர் சொன்ன பதில், “வெளியே வந்து
கேளுடா
பார்ப்போம்!”
என்றதுதான்!
அன்றைக்கு
அந்த யாதவரிடமிருந்து அந்த மாணவனைக் காப்பாற்ற நாங்கள் பட்ட சிரமம் இன்றும் மறக்கவில்லை!
மோடி,
புரட்சித் தலைவி அம்மா, கலைஞர், சீமான், மருத்துவர் ஐயா, ஏன் ஜீவிபிரகாஸுக்கும் இருப்பதுபோல்
பெரியாருக்கும் ரசிகர் மன்றம் ஆரம்பித்திருக்கிறார்கள் இணையத்தில்!
கமல்
பேசுவது புரியவில்லை என்று சொல்வது பெருமை!
அதைவிடப்
பெருமை, பெரியாரை
நான்
மட்டும்தான்
புரிந்துவைத்திருக்கிறேன்
என்பது!
கேட்டால்,
பெரியார் பிள்ளையாரையும் ராமனையும்தான் செருப்பால் அடித்தார், நாட்டார் தெய்வங்களை அல்ல என்று, பெரியாரின் சாதி மறுப்பிலும் சாதியைத் திணிக்கிறார்கள்!
எனில்,
நாட்டார் தெய்வ வழிபாட்டை பெரியார் ஆதரிக்கிறாரா என்றால்,
“அவர் அதை
ஆதரிக்கவும்
இல்லை,
மறுக்கவும்
இல்லை”
என்று ஒரு மழுப்பலான பதில்!
அப்படியானால்,
பெரியாரின் இறை மறுப்பு என்பது இவர்களின் கூற்றுப்படி முழுமையற்ற வேஷமா?
முழுமையாக
இறையை மறுக்காமல், சில கடவுள்களை மட்டும்தான் பெரியார் எதிர்த்தார் என்பதன் அர்த்தம் என்ன?
அந்தக் கடவுள்களை
பெரியார்
மறுக்கவில்லை,
அந்தக்
கடவுள்களை
வணங்குபவர்
சாதி
வேறுபாடு
பார்ப்பதில்லை
என்று
அர்த்தமா?
எங்கே,
கொங்கு மண்டலத்தில் அந்த சாதியினருக்கு “பாத்தியப்பட்ட” நாட்டார் தெய்வக் கோவிலுக்குள் ஒரு தலித்தை அழைத்துச் சென்றுவிட்டு உயிரோடு வந்துவிடுங்கள் பார்ப்போம்?
எனில், இந்த
ஆதிக்க
சாதி
வெறிக்கு
பெரியார்
எதிரி
இல்லையா?
இதை
ஆதரிக்கவும்
இல்லை,
கண்டும்
காணாமல்
போய்விடுங்கள்
என்று
பெரியார்
சொன்னாரா?
உங்கள்
வசதிக்கு நீட்டிக்கொள்ளவும் மழித்துக்கொள்ளவும் பெரியாரின் தாடி மயிரல்ல அவர் கொள்கை!
ஆதிக்க மனோபாவம் எங்கு இருந்தாலும் அதை எதிர்த்தார் பெரியார்!
இன்றைக்கு பிழைப்புக்காக
பிராமணன்
போல்
பொய்
வேடமிட்டுத்
திரிவதால்
வரும்
குற்ற
உணர்ச்சியை
மழுங்கடிக்க
பிராமணனை
அசிங்கமாகத்
திட்டுவதற்கும்,
அதேவேளையில்
தலித்துகளை
சமயம்
பார்த்து
அடிப்பதற்கும்
பெரியாரை
உபயோகிக்காதீர்கள்!
இந்தப்
போலிகள் தரும் தரவுகள் எப்படி என்றால், லவ் என்ற வார்த்தையை அன்பு என்று நீங்கள் சொன்னால், புணர்ச்சி என்று நிரூபிக்கக் கையாளும் பொருள் தேர்வு!
தரவுகளை நீங்கள்
தேடுங்கள்!
தெளிவு பிறக்கும்!
அடுத்தவர் தனக்கு
சாதகமான
லேபிள்
ஒட்டித்தரும்
தரவுகளை
அப்படியே
நம்பி,
அவர்களை
அறிஞர்களாக்கி
நீங்கள்
முட்டாளாகாதீர்கள்!
பி கு:
இத்துடன்
இந்தப் பதிவை முடித்துக்கொள்ளவே நினைத்தேன்!
ஆனால்,
இன்னொரு பிரச்னையும் இங்கு சூடாக வலம் வந்தது!
அதைத்
தொடாது போனால் இது முழுமை பெறாது என்று பட்டது!
பெரியார் மணியம்மை
விவாகம்
பற்றியது
அது!
அது,
சரி என்று வாதம் செய்தவர்கள் சொன்னது,
1. ராமன்
ஏகபத்தினி விரதன் அல்ல.
2. ராமன்
தசரதனுக்குப் பிறந்தவனல்ல.
3. மணியம்மையை
யாரும் கட்டாயப்படுத்தவில்லை, அவர் விரும்பியே பெரியாரை மணந்தார்.
4. அப்போதைய
வாரிசு உரிமைச் சட்டம் அப்படி!
ராமனை விரட்டிவிட்டு,
பெரியாரை
கர்ப்பக்கிரஹத்தில்
வைப்பதை
பெரியாரே
விரும்பமாட்டார்!
அவரும்
மனிதர்தான்! அவர் தவறிய இடங்களில் இதுவும் ஒன்று!
அவ்வளவே!
இதற்கு முட்டுக்கொடுக்க ராமனை இழுத்தால், அது பெரியாரளவு ராமனும் உண்மை என்று நீங்களே ஒப்புக்கொள்வது!
கட்டாயப்படுத்தவில்லை
என்பது எல்லா இடத்தும் பெண்ணடிமை விஷயத்தில் பொருந்தும்!
பிழையைப்
புரியவைத்திருக்கவேண்டுமே
அன்றி, ஆதரிப்பது பகுத்தறிவல்ல!
தத்தெடுக்கப்பட்டவருக்கு
சட்டம் எந்த உரிமையையும் அந்தக்காலத்தும் மறுக்கவில்லை!
1949ஆம் வருடம் ஜுன் மாதம் 9ஆம் தேதி பெரியார்
- மணியம்மை திருமணம் நடைபெற்றது.
அண்ணாவின்
வார்த்தைகளில்,
“பெரியாரை இயக்கத்தின் தலைவராக மட்டும் கொண்டிருக்கவில்லை. குடும்ப தலைவரென,
வாழ்வுக்கு வழிகாட்டியென,
மானத்தை மீட்டுத்தரும் மகான் என,
அடிமை ஒழிக்கும் வீரரென
மரியாதையுடனும் அன்புடனும் பேணி வந்தோம்.
‘பொருந்தாத் திருமணம் நாட்டுக்கோர் சாபக்கேடு’ என அவர் ஆயிரமாயிரம் மேடைகளில் முழங்கினார்.
இப்படிப்பட்ட அறிவுரை புகட்டியவர், 26 வயதுள்ள பெண்ணை பதிவுத் திருமணம் செய்து கொள்கிறார் என்றால் கண்ணீரைக் காணிக்கையாக தருவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?”
இப்படித் தயங்காது உண்மையைப் பேசியதுதான் அண்ணாவின் பகுத்தறிவு!
நன்றி!