நினைவுகளில்
நிலைத்துவிட்ட
நெருக்கடிநிலை!
நள்ளிரவு
ஒரு மணி!
படுக்கையறையிலிருந்து
அம்மாவின் கூக்குரல்.
“ரவி,
அப்பாவை வந்து பார்!”
ஹாலில்
படுத்திருந்த ரவி, சுதாரித்து ஓடிப்போய் பார்த்தபோது, அவசரமாக பாத்ரூமுக்குள் ஓடி மறைந்த அப்பாவின் முதுகு மட்டும்தான் தெரிந்தது!
“என்னம்மா
ஆச்சு?”
“தெரியலை!
தூக்கத்தில்
திடீர்ன்னு எழுந்தவர் அவங்க வந்துட்டாங்க, சீக்கிரம் கிளம்புன்னு சொல்லிட்டு பாத்ரூமுக்கு ஓடறார்!”
என்ன,
ஏது என்று புரிவதற்குள், கதவைத் திறந்து வந்த அப்பாவின் முகம் பேயறைந்ததுபோல் வெளிறியிருந்தது!
“என்னப்பா
ஆச்சு?”
“உனக்கு சத்தம்
கேட்கலையா?
அவங்க
வந்துட்டாங்க!
“
“யாருங்கப்பா?”
“போலீஸ்! “
“அவங்க
எதுக்கு வர்றாங்க?”
“என்னை அரெஸ்ட்
பண்ண!”
“அப்பா,
ஏதாவது கனவு கண்டீங்களா?”
“நீ படிச்சவன்தானே,
போலீஸ்
வந்திருச்சுன்னு
சொல்றேன்,
கேள்வி
கேட்டுக்கிட்டு
நிக்கறே?
நான் பின்னாடி
சுவர்
ஏறிக்குதிச்சு
வேலூருக்கு
ஓடிப்போய்டறேன்!”
“எண்பது
வயசுக்கு சுவரேறிக் குதிக்கவெல்லாம் முடியாது.
படுங்க,
காலைல பேசிக்கலாம்!
“நீங்க
என்ன கொலையா செஞ்சுட்டீங்க, உங்களை ஏன் போலீஸ் தேடிவரப்போகுது?”
“நான் அந்தக்
கட்சிக்காரன்னு
தேடறாங்க!”
“அதெல்லாம்
ஒன்னும் இல்லப்பா, போய் ப்படுங்க!”
“வீட்டை சுத்தி
போலீஸ்
இருக்கு,
ஜார்ஜ் கோயமுத்தூர்ல
இல்லைன்னு
இப்போ
என்னைத்
தேடறாங்க!”
அந்தப் பெயரைக் கேட்டதும்தான் ஓரளவுக்கு கதை வசனம் புரிந்தது ரவிக்கு!
அதன்பின்
அவரை ஆசுவாசப்படுத்தி தூங்கச்செய்ய ரெண்டு மணி ஆயிடுச்சு!
அதுவரைக்கும்
குறுகுறுன்னு முழிச்சுக்கிட்டிருந்த சிவா மெதுவா கேட்டான்
“தாத்தாக்கு என்னப்பா
ஆச்சு?”
என்ன
சொல்ல,
எண்பது வயதைக்
கடந்த
மூளை
சில
சமயங்களில்
கடந்த
காலத்தில்
எங்கோ
போய்
நிலைகொண்டுவிடுகிறது!
“இப்போ
அவர் நாற்பது வருஷம் பின்னாடி போய்ட்டாரு!”
“அப்போ போலீஸ்
அவரைத்
துரத்துச்சாப்பா?”
“ம்,
அவரை இல்லை, வேற ஒருத்தரை!
காலைல
கதை சொல்றேன், இப்போ தூங்கு!”
பிள்ளைகள்
கதை கேட்க மறப்பதில்லை.
காலைல
காஃபி கப்போட உட்கார்ந்ததுமே வந்துட்டான்!
“சொல்லுப்பா,
என்ன
ஆச்சு?”
12 ஜூன் 1975.
இந்திய
நீதித்துறை தன் மாண்பை நிரூபித்த ஒரு நாள்!
இந்திராவின்
வெற்றி செல்லாது என்று அறிவிக்கக்கோரி அலஹாபாத் உயர்நீதி மன்றத்தில் ராஜ் நாராயணன் தொடுத்த வழக்கில்,
யாரும்
எதிர்பாராத வகையில், நீதிபதி சின்ஹா
இந்திராகாந்தியை குற்றவாளியாக அறிவித்து அவரது வெற்றி செல்லாது எனவும்
அவர்
மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீ்க்கப்படவேண்டும் எனவும் அறிவித்தார்.
மேலும்
ஆறு ஆண்டுகளுக்கு எந்தத் தேர்தலிலும் போட்டியிடக் கூடாதெனத் தடை விதித்தார்.
“குன்ஹாவுக்கு
இந்த
சின்ஹாதான்
முன்னோடி
போல!”
“அட,
இது எனக்குத் தோணலையே!
இந்திய ஜனநாயக
வரலாற்றில்,
ஜனநாயக
மாண்புகளை
மதிக்காத
இரண்டு
பெண்
ஆளுமைகளை
தண்டித்த
இரண்டு
பேரில்,
ஒருவர் சின்ஹா,
அடுத்தவர்
குன்ஹா!
விடு!
கதைக்கு
வருவோம்!”
எந்த விஷயத்திற்கும் தவறான எதிர்வினை ஆற்றுவதிலும், ஜெயாவுக்கு முன்னோடி நேருவின் மகள்!
அப்போதும் தன்
வழக்கம்போல்
அதையே
செய்தார்.
அப்போதுதான்
முடிவடைந்த பாகிஸ்தானிய போர்,
எண்ணெய்
நெருக்கடி
போன்ற
காரணங்களினால்,
நாடு பொருளாதார
நெருக்கடியில்
இருப்பதாகவும்
இந்தச்
சமயத்தில்
அரசு
பணியாளர்களின்
போராட்டங்கள்
ஜனநாயகத்தை
நிலை
குலைய
வைக்கும்.
எனவே,
நெருக்கடி
நிலைமையை
அமல்
படுத்துமாறு
குடியரசு
தலைவருக்கு
இந்திரா
காந்தி
கடிதம்
ஒன்றை
எழுதினார்.
ரப்பர் ஸ்டாம்ப்
குடியரசுத்தலைவர்
பக்ருதின்
அலி
அகமத்
அதை
அப்படியே
ஏற்று,
ஜூன் 26, 1975 அன்று
நெருக்கடி
நிலையை
பிரகடனப்படுத்தினார்.
இந்திய
அரசியலமைப்பின் தேவைக்கேற்ப,
குடியரசுத்தலைவரின்
ஒப்புதலின்படி
நெருக்கடி
நிலை ஒவ்வொரு 6 மாதக் காலத்திற்குப் பிறகு நீட்டிக்கப்பட்டு
1977 இல் தேர்தலை
சந்திக்கும் வரை தொடர்ந்தது.
25 ஜூன் 1975 – 21 மார்ச் 1977
சுதந்திர
இந்திய வரலாற்றில் கருப்பாய்ப் படிந்த கறை!
அத்து
மீறிய அராஜகம் நாடு முழுவதும் கட்டவிழ்த்து விடப்பட்டது!
எதிர்க்கட்சித்
தலைவர்களெல்லாம் தேடித் தேடிக் கைது செய்யப்பட்டனர்!
மொரார்ஜி,
வாஜ்பாய், கிருபளானி, அத்வானி போன்ற தலைவர்களெல்லாம் சிறைப்பட்ட நிலையில்,
இளம்
துருக்கியர்கள் என்று அப்போது அழைக்கப்பட்ட ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், மது தந்தவதே போன்றோர் தலைமறைவானார்கள்!
முன்னூறு
வருட அடிமை வாழ்வுக்குப் பழகிப்போயிருந்த பல மாநில அரசுகள்
தலையாட்டிப் பிழைத்துக்கொள்ள,
அப்போதும் திமிறி
நின்றது
தமிழகம்!
கலைஞர்
ஆற்றலின் உச்சத்தில் இருந்த நேரம்!
தலைமறைவாக
இருந்த சில வட இந்தியத் தலைவர்கள்
தமிழகத்தில் தஞ்சம் புகுந்தனர்!
முரசொலியில்
இந்திரா காந்தியை ஹிட்லராக வர்ணித்து கார்ட்டூன் போடப்பட்டது.
தமிழகத்தில்
இருக்கும் எல்லா பத்திரிகைகளும் தி.மு.க.
அரசுக்கு எதிராக எழுதுமாறு ஊக்குவிக்கப்பட்டன.
1976 பிப்ரவரி ஒன்றாம் தேதி
தி.மு.க.
அரசு
கலைக்கப்பட்டது.
ஸ்டாலின்
உள்பட
தி.மு.க.வினர்
மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில்
நடந்த கொடூரமான தாக்குதலில் ஸ்டாலினைக் காக்கக் குறுக்கே பாய்ந்த சிட்டிபாபு அடித்தே கொல்லப்பட்டார்!
இந்த
நிலையிலும் தைரியமாக ஜனநாயகப் படுகொலைக்கு எதிராக ஓயாது போராடியது திமுக!
கட்சிக்காரர்களும்
தலைவர்களும் தீவிர சிஐடி கண்காணிப்பில் இருக்க, கட்சி சாராத சில அபிமானிகள் தன்னிச்சையாக உதவ முன்வந்தனர்!
அப்போது
ஒரு நாள்,
குமாரபாளையம்
அரசுப்பள்ளி ஆசிரியரான சுப்ரமணியத்தை தேடி வந்தார் அவரது நண்பர் துரை!
அப்பா
அருகில் உட்கார்ந்திருந்த சிறுவன் ரவியை வீட்டுக்குள் அனுப்பிவிட்டு இருவரும் தணிந்த குரலில் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்!
ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ்
என்ற வித்தியாசமான பெயர் பேச்சில் சிலதடவை அடிபட்டது! கோவை,
பேரூர்
என்று சில சொற்களும்!
“நான்
சொன்னது நியாபகம் இருக்கட்டும் துரை, இப்போதைக்கு ஏற்காடுதான் பாதுகாப்பான இடம்!”
“நீ
பேசாமல் பைக்கிலேயே கூட்டிவந்துவிடு.
முடிந்தவரைக்கும்
கிராமங்களில் புகுந்து வா!
இங்கிருந்து
பஸ்ஸில் போவது நல்லது!
மலைப்பாதையில்
பைக்கிலோ, காரிலோ போவது போலீசில் வலிந்துபோய் சிக்குவது போலாகிவிடும்!”
சில
மணிநேரங்கள் கடந்து அப்பா கிளம்பும்போது ரவி கேட்டான்!
“அப்பா,
நானும் ஏற்காடு வரவா?”
கொஞ்சம்
திடுக்கிட்டாற்போல் அவனைப்பார்த்த சுப்பிரமணியம், சின்ன யோசனைக்குப் பின் சொன்னார்!
“அதுவும்
நல்லதுக்குதான்!
புறப்படு,
போகலாம்!”
"படிக்கற பையனை
..." அம்மா
இழுத்ததற்கு ஒரு முறைப்புதான் பதில்!
சைக்கிளில்
போகும்போது ரவி கேட்டான் "எதுக்குப்பா ஏற்காடு போறோம்?"
“இதோ
பார், நாம ஏற்காடு போகலை! இன்னொன்னு, இதைப்பற்றி யார் கிட்டேயும் மூச்சுவிடக்கூடாது!”
சைக்கிளை
துரை டைலர் கடையில் நிறுத்திவிட்டு, சேலம் பஸ்ஸில் ஏறி, போகும்போது, வட்டமலை ஸ்டாப்பிங்கில் யாரோ
ஒருவர், அழுக்கு வேட்டியும் முண்டாசுமாக கை காட்டினார்.
தோளில்
ஒரு அழுக்குப் பை! பக்கத்தில் துரை!
பஸ்
மேட்டில் திணறிக்கொண்டு நிற்க, முண்டாசுக்காரர் மட்டும் ஏறி, பஸ்ஸை முழுதாக ஒரு நோட்டம் விட்டுவிட்டு நேராக வந்து அப்பா பக்கத்து சீட்டில் உட்கார்ந்தார்!
நல்ல உயரம்,
பட்டை
பிரேம்
கண்ணாடி!
முகத்தில்
கொஞ்சம் வலியத் தீட்டிய கறை.
அப்பா
அவருக்கு மட்டும் கேட்கும்படி ஆங்கிலத்தில் சொன்னார், “கண்ணாடியை கழட்டிடுங்க!”
சிரித்துக்கொன்டே
மென்மையான குரலில் கேட்டார், "உங்களுக்கும் ஹிந்தி தெரியாதா?"
"நீங்க திணிக்காமல்
இருந்திருந்தால்
படித்திருப்போம்!”
“சரி,
அதைப்படிக்காததில் யாருக்கு நஷ்டம்?"
"எங்களுக்கு ஏதும்
இல்லை!
இப்போ நீங்கள்தான்
எங்களிடம்
தஞ்சமாக
வந்திருக்கிறீர்கள்.
எனவே,
நீங்கள்
தமிழ்
படித்திருக்க
வேண்டும்!"
சத்தமாகச்
சிரித்தவரிடம் அப்பா சொன்னார்,
"ரொம்பப் பேசவேண்டாம்,
உங்கள்
உடைக்கு
ஆங்கிலம்
ஒத்துவரவில்லை".
"இங்கு காற்றிலும்
காதுகள்
உலாவும்!"
புன்னகைத்தவர்
கண்மூடித் தூங்கிப்போனார்.
சேலம்
கொண்டலாம்பட்டியில் இறங்கி, மெதுவாக சாப்பிட்டுவிட்டு, வேறு பஸ் பிடித்து பஸ்ஸ்டாண்ட்!
தூக்கம்
கண்ணைச் சுழற்ற, ரவி பஸ்ஸிலிருந்து இறங்கும்போது அப்பாவின் இன்னொரு நண்பர் குமரேசன் நின்றிருந்தார்!
“குமரேசா,
ரவியை உங்க வீட்டுக்கு கூட்டிக்கிட்டுப்போ.
மேலே
எல்லாம் ஏற்பாடு செஞ்சாச்சா?”
“ம், அம்மாபேட்டை
இறக்கத்தில்
ஒரு
வீட்டில்
தங்க
ஏற்பாடு
செய்திருக்கிறோம்!”
“தெரியும்.
சுந்தரிடம் நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன்!”
ஏற்காடு
பஸ்ஸில் அப்பாவோடு ஓடிப்போய் ஏறுமுன், அந்தக் கண்ணாடிக்காரர் பையிலிருந்து ஒரு சாக்லேட் எடுத்து ரவியிடம் நீட்ட, அப்பா தலையசைத்ததும் ஆவலாய் வாங்கிக்கொண்டான்!
அப்பா
வந்து சேர மறுநாள் மாலை ஆகிவிட்டது!
வந்தவர்,
குமரேசனிடம்,
“அவருக்கு வேறு இடம் ஏற்பாடு செய்துவிட்டேன். கொஞ்சநாளைக்கு அங்கிருக்கட்டும்!”
சொல்லிக்கொண்டே
படுத்த வேகத்தில் தூங்கிப்போனார்!
அத்தனை அசதி!
மலைப்பாதையில்
பதினைந்து
கிலோமீட்டர்
நடந்தே
போயிருக்கிறார்கள்
என்பது
பிறகுதான்
தெரிந்தது!
ஒருவாரம்
கழித்து, துக்ளக்கில் வந்திருந்த ஒரு ஃபோட்டோவைப் பார்த்த ரவி, “அப்பா, இவர்தானே அன்னைக்கு பஸ்ஸில்…” என்று ஆரம்பித்தவன், அப்பாவின் முறைப்பில் அடங்கிப்போனான்!
ஒருவழியாக
எமெர்ஜென்சி அராஜகங்கள் ஓய்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரம், துரை வீட்டுக்கு வந்திருந்தார்!
“மணி,
இந்த உதவி செஞ்சது யாருன்னு கட்சில என்னைக் கேட்கிறார்கள். தலைவரே விசாரிச்சு உன்னைக் கூட்டிக்கிட்டு வரச் சொன்னாராம்!
நீ,
யாருகிட்டேயும் உன்னைப்பற்றி சொல்லக்கூடாதுன்னு சொன்னதால நான் சொல்லலை!
என்ன
பண்ணட்டும்?”
“இல்லை துரை,
இதில்
என்
பங்களிப்பு
யாருக்கும்
தெரியவேண்டாம்!
இது என்
சுய
திருப்திக்காக,
என்
நாட்டுக்கு
என்
மனசாட்சிப்படி
செஞ்சது!
இது அப்படியே
போகட்டும்!”
“சரி,
இதையாவது வாங்கிக்க”, சொல்லிக்கொண்டே,
பையிலிருந்து ஐந்து நூறு ரூபாய்க் கட்டுகளை எடுத்தார்!
ஐம்பதாயிரம், அன்றைக்கு
மிக
மிகப்
பெரிய
தொகை!
“துரை,
இது காசுக்காகச் செஞ்சதில்லை!
இது
பெத்த தாய்க்கு புடவை எடுத்துக் கொடுத்ததற்கு கைநீட்டிக் காசு வாங்கறதுக்கு சமம்!
உங்க
அரசியல் புத்தியை என்கிட்டே காட்டவேண்டாம்!
மரியாதையா
எடுத்துக்கிட்டு கிளம்பு!”
“யோவ்,
இது டெல்லியிலிருந்து வந்தது!
நீ
செஞ்ச உதவிக்கு ஜனதா கட்சி சார்பில்!”
“எங்கிருந்து
வந்தாலும் ஒரே பதில்தான்!
இன்னொருதடவை நீ
காசைத்
தூக்கிக்கிட்டு
வந்தாலோ,
இந்த
வேலையை
நான்தான்
செஞ்சேன்னு
யார்
கிட்டயேயாவது
சொன்னாலோ,
அதுதான்
என்
முகத்துல
நீ
கடைசியா
முழிக்கறதா
இருக்கும்!”
அப்பாவோட
கோபம் நண்பர்கள் வட்டத்தில் பிரசித்தம்!
துரை,
அதன்பிறகு அதைப்பற்றிப் பேசவே இல்லை!
அடுத்த
வாரமே, வேலையை ராஜினாமா செய்த அப்பா, வீட்டையும் பிடிவாதமாக வேறு இடத்துக்கு மாற்றிக்கொண்டார்!
கடைசிவரை அந்த
உதவி
செய்தது
யார்
என்பது
கட்சியில்
துரைக்கு
மட்டுமே
தெரிந்த
ரகசியமானது
தேர்தலில்
வென்று அமைச்சரான ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், ஏற்காட்டை மறக்கமுடியாமல் அங்கே சின்னதாக ஒரு இடம் வாங்கிப் போட்டதோடு, எப்படியோ அப்பாவையும் தேடித் கண்டுபிடித்தேவிட்டார்!
வேறு வழியே
இல்லாமல்
டெல்லிக்கு கிளம்பிப்போன அப்பா,
பிரதமர்
மொரார்ஜியின்
அணைப்பில்
ஒரே
ஒரு
ஃபோட்டோ
மட்டுமே
ஞாபகார்த்தமாக
கொண்டுவந்தார்!
காலச்
சுழற்சியில் ரவி கல்லூரியில் படிக்கும்போது, முதல்வராக
இருந்த கலைஞர், ஒருமுறை
ஒரு நெருங்கிய நண்பர் வீட்டுத் திருமணத்துக்கு குமாரபாளையம் வந்தவர், அந்த ஊரில் நெருக்கடி நிலையின்போது உதவிய அந்தக் கட்சி
சாராத
நபரைப்பற்றிப் பெருமிதமாகப் பேசியதோடு,
உண்மையான வருத்தத்தோடு அவரைக் கண்டுபிடிக்க முடியாததைச் சொல்ல, அந்த நண்பர், பக்கத்தில் நின்ற அப்பாவிடம்,
“
என்ன, சுப்பிரமணியம், உங்களுக்கு யாரையாவது தெரியுமா? யாராக இருக்கும்?”
சலனமே
இல்லாது அப்பா சொன்னார்
“எனக்குத் தெரியாதுங்க! எனக்கு அரசியலில் அவ்வளவு பழக்கம் இல்லை!”
எல்லாவற்றையும்
கேட்டுக்கொண்டிருந்த ரவி, வீட்டுக்கு
வந்ததும் அப்பாகிட்டே
“ஏப்பா சொல்லல? சொல்லியிருந்தா கண்டிப்பா கலைஞர் ஏதாவது செஞ்சிருப்பார்”
“எல்லாத்தையும்
பலன்
எதிர்பார்த்து
செய்யக்கூடாது
ரவி,
பெத்த தாய்
தகப்பனுக்கு
பிள்ளைகள்
செய்வது
கடமை!
அது மாதிரி
நாட்டுக்கு
நம்மால்
ஆனதைச்
செய்வதும்!
நாடு சுதந்திரம்
வாங்கும்போது
எனக்கு
உன்
வயசு!
அப்போதும் நாங்கள்
என்ன
செஞ்சோம்ன்னு
நான்
மறந்துட்டேன்!
இப்போ, இந்த
சுதந்திரப்
போராட்டத்திலேயும்
என்னோட
சின்னப்
பங்கை
நான்
மறந்துட்டேன்!
நீயும் மறந்துடு!”
எல்லோருமே மறந்துதான் போனோம், நேற்று இரவு அவர் மீண்டும் அதைச் சொல்லும்வரை!
அப்பாதான் மறக்கவில்லை!
இத்தனை வருடம் கழித்து முதுமை அதை மன ஆழத்திலிருந்து இழுத்து வந்திருக்கிறது!
கண்டிப்பாக நியாபகசக்தியில் புலியான கலைஞரும் இன்னும் இதை மறந்திருக்கமாட்டார்!
No comments:
Post a comment