ஆதவன் ஆட்டோமேஷன்ஸ்!
“இமேஜ்
ப்ராசஸிங் டெக்னாலஜி பத்தி நான் என்ன சொல்லி உனக்குப் புரியவைக்கட்டும்?”
“எனக்குப்
புரியவே வேண்டாம் ரமேஷ், எனக்குத் தெரியவேண்டியது ஒன்னே ஒன்னுதான்!
எங்க அப்பா வாங்கித் தந்த வேலைக்கு நீ போவியா மாட்டாயா!”
“ப்ளீஸ்
ப்ளீஸ் ராஜி, நான் சொல்றதைக் கொஞ்சம் காது கொடுத்துக் கேளு!”
“போதும்ங்கற
அளவுக்கு கேட்டாச்சு ரமேஷ்!”
“நான்
கிளம்பறேன்!
இன்னும்
ரெண்டு நாள் உனக்கு டைம்!
நீயே
முடிவு செஞ்சு போன் பண்ணி சொல்லு!
பை!”
மணலைத்
தட்டிவிட்டுக்கொண்டு கிளம்பியேவிட்டாள்!
வெகுநேரம்
கடலை வெறித்துக்கொண்டு உட்கார்ந்திருந்த ரமேஷ், ஒரு போலீஸ்காரர் வந்து அதட்டியபிறகே நேரத்தைப் பார்த்தான்!
மணி
பதினொன்று!
சுற்றிவர
ஜன நடமாட்டமே இல்லாமல் தூரத்து லைட் வெளிச்சம் எட்டாத இருட்டில் தன்னந்தனியனாக உட்கார்ந்திருக்கிறான்!
இப்படித்தான்
இனி கடைசிவரை உட்கார்ந்திருக்கப்போகிறேன்
போல என்று நினைத்துக்கொண்டே, அதட்டிய காவலருக்கு ஒரு நன்றியைச் சொல்லிவிட்டு மெதுவாக கரைக்கு நடந்தான்!
அஷ்டலட்சுமி
கோவில் கோபுர விளக்கும் பெசண்ட் நகர் சர்ச் சிலுவையும் இங்கிருந்து பார்க்கும்போது ஒன்றுக்குள் ஒன்றாகத் தெரிந்ததை இதழ்க்கடைப் புன்னகையோடு ரசித்துக்கொண்டே, அடையாறு வரை நடந்தே போவது என்று தீர்மானித்தான்!
ரூமுக்குப்போய்
மட்டும் என்ன செய்யப்போகிறேன்!
ராஜியின்
கோபமும் வருத்தமும்தான் நியாபகத்துக்கு வந்து கொல்லும்!
ஏன்
இந்தப்பெண்கள் இப்படி இருக்கிறார்கள்!
காதலிக்கும்வரை
காதலின் நியாயங்கள்!
கல்யாணம்
என்று வரும்போது அப்பாவின் நியாயங்கள்!
இப்போது
செக்யூரிட்டி செக்யூரிட்டி என்று ஆளாய்ப் பறக்கும் ராஜி, காதலிக்க ஆரம்பித்தபோது என்னவெல்லாம் பேசினாள்!
“உன்னைப்போல்
ஒரு இண்டலெக்சுவலுக்கு இந்த ஊர் லாயக்கில்லை. நான் உன்னோடு என்றைக்கும் இருப்பேன்!”
இப்போது
கல்யாணம் என்ற பேச்சு வந்ததுமே செக்யூரிட்டி முக்கியம்!
இத்தனைக்கும்
அவள் வாங்கிக்கொண்டிருக்கும் சம்பளம் இருவரும் நிம்மதியாக வாழப்போதும்!
இல்லாவிட்டால்,
இந்த ப்ரோடோ டைப் மெஷின் செய்து முடித்து, என் இலக்கை அடைந்தபின் ஏன் கல்யாணம் செய்துகொள்ளக் கூடாது!
உடனே
கல்யாணம் செய்து கொள்ளாவிட்டால் என்ன குடி முழுகிவிடும்?
மனசு
மாறிவிடுமாம்!
யாருக்கு,
அவங்க அப்பாவுக்கு!
ஷிட்!
தெருவோரக்
கல்லை உதைத்ததில் கால் வலித்தது!
காதல்
என்ற பெயரில் ஆண்களை பைத்தியம் ஆக்கிக்கொண்டிருக்கிறார்கள்
பெண்கள்!
காதலுக்கு
எதையாவது இழந்தேதான் ஆகணுமா?
இது
என்ன இழவெடுத்த லாஜிக்?
இன்றைக்கு
தூங்கினாற்போலத்தான்!
நாளைக்கு
அந்த ஜெர்மன்காரன் வேறு பத்துமணிக்கு ஒரு டிஸ்கஷனுக்கு வரச்சொல்லியிருக்கிறான்!
அந்த
அகாலத்தில் ஏதோஒரு ஐடி கம்பெனி வண்டி வந்து நான்குபேரை உதிர்த்துவிட்டுப் போனது!
இவர்களுக்கு
என்ன குறைந்துபோனது?
நான்
ஏன் இப்படி ஒரு சிக்கலில்லாத வாழ்க்கையை மறுதலித்து சுயமாக ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று பிடிவாதமாக இருக்கிறேன்!
தொழில்
முனைவோர், தொழிலதிபர் இதெல்லாம் பிறப்பைவைத்து மட்டும்தானா?
எத்தனை
அறிவிருந்தாலும், எங்கோ ஒரு கம்பெனியில் கோடிங் ஷீட்டையும் மானிட்டரையும் வெறித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டு மாசமானால் அவன் படியளப்பதை வாங்கிக்கொண்டு வருவதுதான் சோ கால்டு இன்டெலிஜெண்ஸ்!
இதற்கு
புத்திசாலித்தனம் எதற்கு?
படிக்கிற
காலத்திலிருந்தே ரமேஷ் இப்படித்தான்!
ரோபோடிக்ஸ்,
இமேஜ் ப்ராசஸிங் இரண்டுமே அவனுக்கு உயிர்!
மற்றவர்கள்
எல்லோரும் ரெடிமேட் ப்ராஜெக்ட், சீனியர்கள் ப்ராஜெக்ட் என்று வாங்கி ஒப்பேற்றியபோது, பத்து நாள் இரவும் பகலும் லேப் மட்டுமே கதி என்று கிடந்து, ப்ரிசிசன் வெல்டிங் ரூமில் ஒரு ரோபோடிக் வெல்டிங் மெஷின் செய்தபோது அத்தனைபேர் முன்னாலும் முத்தம் கொடுத்துப் பாராட்டியவள்தான் ராஜி!
இந்த
ஒரு வருட வேலை, அதில் அவளுக்கு மாதமானால் வரும் சம்பளம் இவை இப்போது அவள் பார்வையையே மாற்றியிருக்கிறது!
போதாக்குறைக்கு
வயசாகிறது என்ற வீட்டு ப்ரெஷர் வேறு!
சரி,
முதலில் ரூமுக்குப்போய் நாளைக்கு மீட்டிங்குக்கு ஏதாவது ஒப்பேற்றுவோம்!
மறுநாள்,
சரியாக பேச்சுவார்த்தை முக்கியமான கட்டத்தில், ஃபோன்
அடித்தது!
ராஜி!
எடுக்கவில்லை!
கால்
மீ என்று ஒரு மெஸேஜ் மட்டும்!
மாலையாகிவிட்டது
ஃபோன் செய்ய!
என்ன
முடிவு செஞ்சிருக்கே?
அதட்டலாக
வந்தது குரல்!
காலையிலிருந்து
நடந்த பேச்சுவார்த்தை சுமுகமாக முடியாத வருத்தம், இன்னும் இன்னும் என்று பேராமீட்டர் ஏற்றிக்கொண்டே போகும் பேரிங் கம்பெனிக்காரன் பிடிவாதம்!
இதுவரை
இறைத்த இருபத்தைந்து லட்சத்தையும் விழுங்கிவிட்டு, கல்லுளி மங்கன் மாதிரி பிடிவாதம் செய்யும் மெஷின்,
எத்தனை முறை திருத்தி எழுதினாலும் வேலை செய்யாத சாஃட்வேர்
எல்லாம் சேர்ந்து அழுத்தத்தில் வெடித்தேவிட்டான்!
“உங்கப்பன்
சொல்றவனைக் கட்டிக்கோ! அதைச் சொல்லத்தான் கால் பண்ணினேன்!”
இரண்டுபேரும்
ஒரே நேரத்தில் ஃபோனை துண்டித்தார்கள்!
அடுத்த
ரெண்டுநாள், தன் சின்ன ஒர்க்ஷாப்பை விட்டு வெளியே வராமல் பழியாகக் கிடந்தான் ரமேஷ்!
ஒருவழியாக
சாஃட்வேர் ஒத்துழைத்து, கொரியாவிலிருந்து வரவழைத்த கேமரா சரியான கோணத்தில் உட்கார, மிஷின் நூறு சதவிகிதம் சொன்னதைக் கேட்டது!
தலைகால்
புரியாத சந்தோஷத்தில் ராஜிக்கு ஃபோன் செய்ய,
நம்பர் நாட் ரீச்சபிள்!
அடுத்த
வாரம் முழுக்க ஜெர்மன்காரன் மிஷினை ஆயிரம் முறை பரிசோதித்துவிட்டு, வாயெல்லாம் பல்லாக கை குலுக்க, சந்தோஷத்தில்
உறைந்துபோனான் ரமேஷ்!
சடங்குகள்
எல்லாம் முடிந்து, அறுபது மிஷினுக்கு ஆர்டர் கையெழுத்தானபோதுதான் ஒரு வாரமாக ராஜியோடு பேசாதது உறைத்தது!
வண்டியை
எடுத்துக்கொண்டு நேரே அவள் ஆஃபீசுக்குப் போனால், லீவ் என்று சொன்னார்கள்!
ஃபோனும்
கிடைக்காமல் வீட்டுக்குப்போனால், வீடு களைகட்டியிருந்தது!
ஹால்
நிறைய ஆட்கள்!
ராஜியைப்
பெண் பார்க்க வந்திருக்கிறார்கள்!
மாப்பிள்ளைக்கு
விப்ரோவில் வருடம் கால் கோடி சம்பளம்!
அதற்குமேல்
அவன் பேசிய எதுவும் ராஜி காதில் விழவே இல்லை!
“ராஜி,
ப்ளீஸ் சொல்றதைக் கேள்!
SKF ஜெர்மனி இதுவரை வெளியாரிடமிருந்து குவாலிட்டி கண்ட்ரோல் மெஷின் வாங்கியதே இல்லை!
இப்போது
அறுபது மெஷின்!
கிட்டத்தட்ட ஆறுகோடி ரூபாய் ஆர்டர்!”
இறுக்கமாகக்
கேட்டாள் ராஜி
“வாழ்த்துக்கள்
ரமேஷ்! எப்போ பணம் வரும்?”
“ஏன்ன
ராஜி இப்படி கேட்கிறாய்! இனிதான் இந்த ஆர்டரை TDBயில் சப்மிட் செய்து லோன் வாங்கவேண்டும்!”
“:ஓ!
லேன் கொடுப்பார்களா?”
கேள்வியில் தொனித்த கிண்டலிலும் இளக்காரத்திலும் சுருங்கிப்போனான்!
"தெரியாது!"
“அப்போ,
நீ உன் உதவாக்கரை கனவுகளை துரத்து ரமேஷ்!
நான் என் வாழ்க்கையைப் பார்க்கணும்!
“ராஜி,
ப்ளீஸ்! நமக்குப் பிறக்கப்போற குழந்தைக்கு ஆதவன் என்று பெயர் வைக்கலாம் என்ற உன் ஆசைப்படிதானே, கம்பெனிக்கு ஆதவன் ஆட்டோமேஷன்ஸ் என்று பெயரே வைத்தேன்!
ராஜி!
எனக்காக இன்னும் ஒரு வருடம் காத்திருக்கமுடியாதா?”
“இல்லை
ரமேஷ், உன் பிடிவாதம் எனக்குத் தெரியும்!
ஒரு வருடமல்ல, நூறு வருடமானாலும், நீ நினைப்பது நடக்கப்போவதில்லை!
இப்போதே
ஊரைச் சுற்றிக் கடன்!
உனக்கே தெரியும்! உன் பேரைச் சொன்னாலே நம்ம நண்பர்கள் எல்லோரும் ஓடுகிறார்கள்!”
“ராஜி,
அது பழைய கதை!
இப்போது
SKF அப்ரூவ் பண்ணியிருக்கிறது என்று தெரிந்தாலே எல்லோரும் ஆர்டர் தருவார்கள்!
மேலும், இது ஒரு ஆரம்பம்தான்!
இந்த
மிஷினில் சில அடிப்படைகளை வைத்துக்கொண்டு, பாராமீட்டர்களை மாற்றினால் ஏறத்தாழ எல்லா இண்டஸ்ட்ரியிலும் உபயோகிக்கலாம்!
ஆட்டோமேட்டட்
குவாலிட்டி கண்ட்ரோல் எத்தனை பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும் தெரியுமா?
இதை கடைக்கோடி, ஆப்பிள் போன்ற பழங்களின் தரத்தை சோதனை செய்து ரகம் பிரிக்கும்வரை எளிமைப்படுத்த முடியும்!
இன்று
உலகிலேயே இதை சாதித்தது நம் நிறுவனம்தான் ராஜி!”
“நிறுவனமா,
அது எது?”
“என்ன
ராஜி, ஆதவன் ஆட்டோமேஷன்ஸ்!”
"சாரி
ரமேஷ்! எனக்கு இதைக் கேட்டுக் கேட்டுப் புளித்துப் போய்விட்டது!
இந்த
எமோஷனல் அபத்தங்கள் எனக்கு ஒத்துவராது!"
"நான்
என் பிள்ளைக்கு ஆதவன் என்று பெயர் வைக்கப்போவதில்லை!"
"குருப்ரசாத்துக்கு
கடவுள் நம்பிக்கை அதிகம்! எங்கள் பிள்ளைக்கு ஏதாவது பெருமாள் பெயர்தான் வைப்போம்!"
"வரும்
எட்டாம் தேதி கல்யாணம்!
நீங்க அவசியம் வரணும்ன்னு இல்லை! உங்க வேலைகளை பாருங்கள்!
ஆல் தி பெஸ்ட்!"
அன்றைக்கு
பீச்சில் எழுந்துபோன அதே வேகத்தில் எழுந்து
போயே போய்விட்டாள்!
அதன்பிறகு
அவன் ராஜியைப் பார்க்கவே இல்லை!
சரியாக மூன்று
வருடம்!
பெங்களூரில்
சமாளிக்கமுடியவில்லை என்று சென்னையில் வேலை தேடிப்போன குருப்ரசாத் உற்சாகமாக ஃபோன் செய்தான்!
“ராஜி,
எனக்கு வேலை கிடைத்துவிட்டது!
நீலாங்கரையில்
ஒரு எக்ஸ்போர்ட் யூனிட்!
நாலெட்ஜ்
பேஸ்ட் டெஸ்டிங் மெஷின் உற்பத்தி நிறுவனம்!
உலக
அளவில் மோனோபோலி!
சாஃப்ட்வேரில்
மட்டும் இருநூறு பேர்!”
“என்ன
சம்பளம்?”
“மாதம்
மூணு லட்சம்!”
“எப்போ
ஜாயின் பண்ணனும்?”
“இன்னைக்கே
பண்ணிட்டேன்! எம்டியைப் பார்க்க வெயிட்டிங்!”
“க்ரேட்
குரு!”
“கேட்க மறந்துட்டேனே!
கம்பெனி பேர்
என்ன?”
"ஆதவன் ஆட்டோமேஷன்ஸ்!"
No comments:
Post a comment