“இவ்வளவு
அவசரமா எனக்கு கல்யாணம் பண்ணி என்னம்மா சாதிக்கப்போறீங்க?
நான்
படிக்கணும்மா ப்ளீஸ்!”
“உங்கப்பா
பிடிவாதம் உனக்குத் தெரியாதா? சும்மா தொணதொணன்னு அனத்திக்கிட்டிருக்காம போய்ப் படுடி!
கல்யாணத்துக்கு
இன்னும் ரெண்டு நாள்தான் இருக்குது!”
“அம்மா,
எனக்கு இன்னும் பதினெட்டு வயசு ஆகலம்மா!”
“போடி
கூறு கெட்டவளே! உன் வயசுல எனக்கு நீ பொறந்தாச்சு!”
இந்த
அம்மாகிட்ட பேசி பிரயோஜனம் இல்லை!
அவளுக்கு
அப்பா சொல்றதுதான் வேதவாக்கு! அவர் உட்காரச் சொன்னா படுக்கிற அடிமை!
பள்ளிக்கூடம்
விட்டு வரும்போது ரமேஷ் கிட்ட பேசிக்கிட்டு வந்ததுக்கு மாடு மாதிரி அடிச்சுட்டு, மறுநாளே அத்தைமகன் சங்கருக்கு நிச்சயம் பண்ணிட்டாரு!
சத்தியமா
எனக்கும் ரமேசுக்கும் காதல் கீதல் ஒரு இழவும் இல்லைன்னு எத்தனை கெஞ்சியும் மசியலை முரட்டு ஜென்மம்!
இந்த
வீட்டில் அவர் வெச்சதுதான் சட்டமா இருக்கணும்!
அது
சரியோ, தப்போ, அவர் ஒரு முடிவு எடுத்தா எல்லோரும் கட்டுப்படணும்! அவ்வளவுதான்!
ப்ளஸ்
டூ படிக்கற பொண்ணு பட்டப்பகல்ல பக்கத்து வீட்டுப் பையன், அதுவும் க்ளாஸ் மேட் கூடப் பேசினா அது காதல் வசனமாத்தான் இருக்கணுமா? பாட சம்பந்தமா இருக்காதா?
கல்யாண
ஏற்பாடுகளை செஞ்சுக்கிட்டிருந்த அண்ணன் மணிகிட்ட அப்பாவோட பேசுண்ணான்னு கெஞ்சுனதுதான் மிச்சம்!
என்ஜினீயரிங்
படிக்கிறான்னு பேருதான்!
அப்பாவைக்
கண்டா டவுசரோட கழிஞ்சிருவான்! அவனாவது அப்பாகிட்ட பேசறதாவது!
பாத்ரூம்
கதவைத் தாழ் போட்டுக்கிட்டு நாலஞ்சுமுறை அழத்தான் முடிஞ்சது மஞ்சுவுக்கு!
அந்த
சங்கர் முகத்தைப் பார்த்தாலே குமட்டிக்கிட்டு வரும் மஞ்சுவுக்கு! என்னேரமும் சிகரெட்டு! ராவானா குடி!
உள்ளூர்ல
ஃபைனான்ஸ்! சேர்க்கை சரியில்லாத தறுதலை!
அப்பாவுக்குத்
தங்கச்சி மகன்! சொத்து பத்து எக்கச்சக்கம்! அது ஒரு தகுதி போதாதா ஆம்பளைக்கு!
படிப்பு
எட்டாவது தாண்டல!
கணக்கு
வாத்தியார் மண்டைல கல்லைத் தூக்கி எறிஞ்சுட்டு வந்ததோட படிப்புக்கு முழுக்கு! நாள் முழுக்க சோக்காலிகளோட அரட்டை! சாயங்காலம் சரக்கு! இது போதாதா வாழ!
என்ன
புலம்பி என்ன, கல்யாணம் சொன்ன தேதிக்கு கச்சிதமா முடிஞ்சது.
அப்பா
கால்ல விழுந்து ஆசீர்வாதம்கூட வாங்க மனசு வராம சும்மா குனிஞ்சு நிமிர்ந்தா!
முகூர்த்தம்
முடிஞ்ச அன்னைக்கே, சாந்திகல்யாணம்!
பதினேழு
வயசுல, நல்லவிதமான சேர்க்கை இருக்கற பொண்ணுக்கு என்ன தெரியுமோ, அதுமட்டும்தான் தெரியும் மஞ்சுவுக்கு!
சினிமாவுல
வர்ற மொத ராத்திரி எல்லாம் பார்த்து, ஏதோ மென்மையான ஆரம்பம் இருக்கும்ன்னு உள்ளெ நுழைஞ்சவளை முதலில் வரவேற்றது சிகரெட் நெடி!
என்ன,
ஏதுன்னு சுதாரிக்கறதுக்குள்ள, கட்டில்மேல கிடந்தா!
ஐயோ!
இது எனக்கு வேண்டாமே! மனசு வலிக்க கையெடுத்துக் கும்பிட்டவளை காதுகொடுத்துக் கேட்க உள்ளே போன சரக்கும், பார்த்த மலையாள பிட்டுப் படங்களும், ஒரு வாரமா ஃப்ரண்ட்க எல்லாம் ஏத்திவிட்டதும் அனுமதிக்கல!
ஒரு
மூன்றாம்தர கற்பழிப்புக் காட்சியைப்போலத்தான் முடிந்தது அந்த முதல் உறவு!
சாராய
நாத்தமும், சிகரெட் நாத்தமும் குடலைப் பிடுங்கியது போதாதென்று, இவ்வளவு பெரிய வன்முறைக்கு கொஞ்சமும் தயாராக இல்லை மஞ்சு!
வேர்வை
வடிய பக்கத்துல மாடு மாதிரி குறட்டைவிட்டுக்கிட்டு தூங்குன சங்கரைப் பார்க்கப் பார்க்க அழுகை குமுறிக்கிட்டு வந்தது!
இப்படி
ஒரு வன்முறையா குடித்தனம்? இதற்குத்தானா கல்யாணம்? இதுவா புனிதம்? ஒரே ஒரு நிமிஷம் அவள் முகத்தைக்கூட பார்க்கலை அந்த முரடன்!
பசித்த
நாய் கறித்துண்டை குதறுவதுமாதிரி குதறிட்டு இப்படி குறட்டைவிட்டுத் தூங்க எப்படித்தான் மனசு வருதோ!
திகைப்பு
மாறாமல், நடந்ததே புரியாமல் குமுறிக்குமுறி அழுதவள் எப்போ தூங்கினாள்ன்னே தெரியல!
திடீர்ன்னு
இத்தனை நாள் வெயிலே படாம பொத்திவெச்ச
இடத்தில் யாரோ பிடித்து அழுத்துவது தெரிந்து எழுவதற்குள் மறுபடியும் அவள் மேல கிடந்தான் சங்கர்!
ஐயோன்னு
கூவினவளை வாயைப்பார்த்து ஒரு அறை!
அடுத்த
ஐந்து நிமிடம் இன்னொருமுறை நரகம்!
முடிஞ்சதும்,
அவன் எந்திருச்சு பாத்ரூம்க்குள்ள போக, வாரிச் சுருட்டிக்கிட்டு அம்மாகிட்ட ஓடினாள்!
அப்போதுதான்
குளிச்சு முடிச்சு வந்த அம்மா இவளோட அலங்கோலம் பார்த்து நிம்மதியா சிரிச்சா!
"ஏண்டி,
பித்தானை போட்டுக்கிட்டு வரக்கூடாது?"
கட்டிப்பிடிச்சு
ஓன்னு அழுத மகளைப் பதட்டத்தோட உலுக்கினாள்!
“என்னடி
ஆச்சு? ஏன் அழறே?”
“அம்மா
எனக்கு இது வேண்டாம்மா!”
“போடி
இவளே! முதல்ல அப்படித்தான் இருக்கும்! ரெண்டு நாளைக்கு அப்புறம், நீயே போய் கதவைத் தாழ் போட்டுக்குவே!”
சொல்லிவிட்டு
நடந்த அம்மாவை நம்பமுடியாமல் வெறித்துப் பார்த்தாள் மஞ்சு!
பாத்ரூமில்
ஷவரைத் திறந்துவிட்டு அடியில் நின்றவளுக்கு அப்படி ஒரு அழுகை!
அழுது
ஓய்ந்தபிறகுதான் உடம்பு வலி தெரிய ஆரம்பித்தது! கண்ட இடத்தில் கன்னிப்போய் தண்ணீர் பட எரிந்தது!
ஐயோ
கடவுளே என்றிருந்தது!
ராத்திரி
நெருங்க நெருங்க கைகால் எல்லாம் வெடவெடன்னு நடுங்க ஆரம்பிச்சுடுச்சு!
சாப்பாடு
முடிஞ்சு, அம்மா பின்னாடியே சுத்திக்கிட்டுத் திரிஞ்சா!
என்ன
செஞ்சு என்ன, பத்து மணிக்கு அம்மாவே ரூமுக்குள்ள இழுத்துக்கிட்டுப் போய் விட்டுட்டுப் போய்ட்டா!
"ஏண்டி
இவ்வளவு நேரம்?"
சாராயத்தில்
நனைந்து வந்தது சங்கர் குரல்!
"எனக்கு
பயமா இருக்கு! இன்னைக்கு வேண்டாமே!"
"பயமா?
இதைப்பாரு, பயம் போய்டும்"
விகாரமாகச் சிரித்து அவன் காட்டியதைப் பார்க்க, ஜில்லிட்டுப்போனாள் மஞ்சு!
நேற்று
நடந்தது எவ்வளவோ மேல் என்பதுபோல் இருந்தது சங்கர் நடவடிக்கை!
அவன்
செய்யச் சொன்னதைக் கேட்டதும் அருவெறுப்பில் பதறிப்போனாள்!
மறுக்க
மறுக்க அவனுக்கு வெறி கூடிக்கொண்டே போனது!
மூர்க்கமாக
அவள் முடியைப்பிடித்து இழுத்தவன் இரண்டு கன்னத்திலும் மாறி மாறி அறைய, பயமும் அருவெறுப்புமாக அவன் சொன்னதையெல்லாம் செய்து முடித்தபின்பே விட்டான்!
பாத்ரூமில்
குடலைப் புரட்டிக்கொண்டு வந்த வாந்தியை எடுக்கக்கூட உடம்பில் தெம்பில்லை!
சுருண்டு
படுத்துக் கிடந்து நாலு மணிக்கே கதவைத் திறந்துகொண்டு அம்மாவிடம் ஓடினாள்!
"அம்மா!
என்னால முடியலம்மா! அசிங்கம் அசிங்கமா செய்ய சொல்றான்மா! என்னை ஏம்மா இப்படி கொடுமைப்படுத்தறீங்க!"
ஒரு
நிமிஷம் மகளை உறுத்துப்பார்த்த அம்மா, அடக்க முடியாமல் அவளைக் கட்டிக்கொண்டு கதறினாள்!
"என்ன
செய்யறதுடீ பொம்பளையா பொறந்துட்டோமே!
அவனுக
சொல்றபடி நடந்துக்கறதுதவிர நமக்கு வேறே என்ன வழி!"
"அப்பா
இப்படியாம்மா நடந்துக்கறார்?"
எதுவும்
பேசாமல், ஜாக்கெட்டை விலக்கிக் காட்டினாள் அம்மா!
பார்த்த
மஞ்சுவுக்கு உச்சந்தலையில் தீயை வாரிக்கொட்டியதுபோல இருந்தது!
அம்மா
மார் முழுக்க சிகரெட் சூடு!
"அந்த
ஆள் வக்கிரத்துக்கு நான் ஒத்துக்கலைன்னா சூடு வெச்சே, என்னை இணங்க வைப்பான்! இது நம்ம தலையெழுத்துடீ!"
பேச்சடைத்துப்
போனது மஞ்சுவுக்கு!
இன்னைக்கு
மூணாவது நாள்! இந்த வீட்டிலேயே இவ்வளவு வக்கிரமா நடந்துக்கறவன், அஞ்சாவது நாள் அவன் வீட்டுக்குப் போனால் என்ன செய்வானோ!
கற்பனை
செய்யவே பயமாக இருந்தது மஞ்சுவுக்கு!
நேரம்
யாருக்காக தாமதிக்கும்!
ராத்திரி
வந்தது!
ஜடம்போல
படுக்கையறைக்கு வந்தாள் மஞ்சு!
இன்னைக்கு
என்ன கொடுமையோ!
நினைத்த
மாதிரிதான் நடந்தது!
"இன்னைக்கு
வேற ஒன்னு சொல்லித்தரப்போறேன், சட்டையைக் கழட்டு!"
சொல்லிக்கிட்டே
ஈன்னு இளிச்சான் சங்கர்!
திகைச்சுப்போய்
நின்னவளை, சுவரோரம் தள்ளிக்கிட்டுப் போனவன், அவள் மேல் கையை வைத்தான்!
"உன்னைவிட
உங்க அம்மாவுக்கு கும்முன்னு இருக்குது!
உங்கப்பன்,
ம்ம்ம் .."
சொல்லிக்கிட்டே
அவன் கைவைத்தபோது, ஜன்னலில் இருந்த டேபிள் டாப் கிரைண்டரின் கல் கண்ணில் பட்டது!
கைக்கு
வாட்டமாகக் கிடைச்சதை பின்னால் கையைக் கொண்டுபோய் எடுத்தவள், அவன் சுதாரிக்குமுன் ஓங்கி மண்டையிலே போட்டாள்!
"இது உனக்கு!"
அடுத்த
அடி இன்னும் பலமாக விழுந்தது!
"இது என்
அப்பனுக்கு!"
"இது உன்னை
மாதிரி
எல்லா
ஆம்பிள்ளைக்கும்!"
கை
ஓயும்வரை அடித்தவள், நிதானமாகக் கதவைத் திறந்து வெளியே வந்தாள்!
அடுத்தநாள்
பத்திரிக்கைகளில் …
திருமணம் முடிந்த மூன்றாவது நாளில் அழகாய் இல்லை என்று கணவனை அம்மிக்கல்லால் அடித்துக்கொன்ற மனைவி!