பச்சைக் குதிரை ஏறும் பாஜக!
ஏறத்தாழ
ஒரு வருடமாகிவிட்டது கோமளவல்லித் தாயாரின் அரசு பதவியேற்று!
எழுபத்தைந்து
நாட்கள் அப்போலோ வாசலில் அனாதையாக உலாத்திக்கொண்டிருந்த அரசு யந்திரம், தற்போது அம்மாவோடு ஜீவ சமாதி அடைந்துவிட்டது!
இடைப்பட்ட
காலத்தில் முத்தான மூன்று முதல்வர்கள், இரண்டு “ஏறத்தாழ முதல்வர்கள்”!
உயிரோடு
இருக்கும் மாநில அரசுகளையே மென்று துப்பிவிடும் வல்லமை படைத்த மத்திய அரசு, இந்த இறந்த அரசை எதற்கு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது?
காரணம்
இருக்கிறது!
தமிழகத்தின்
இரண்டு ஆளுமைகளில் ஒன்று இல்லாமலே போய்விட்டது, இன்னொன்று செயல்பட இயலாத நிலையில்!
முகம்
பார்த்து அழக்கூட ஆளில்லாத சவலைப்பிள்ளையாய் தமிழகம்!
இந்த
அசாதாரணமான வெற்றிடம் எப்போதும் கிடைத்து விடாது!
வாராது வந்த
மாமணியாய்
வாய்த்த
இந்த
அற்புதமான
வாய்ப்பை
ஏனோதானோ
என்று
சின்ன
லாபங்களுக்காக
இழந்துவிட
அவ்வளவு
முட்டாள்களில்லை
செயல்
வீரர்
அமித்ஷா
அவர்களும்,
சொல்லின் செல்வர்
நரேந்திர
மோடி
அவர்களும்!
இரண்டு
கழகங்களும் தலை தூக்க முடியாமல் ஒரே அடியாக அடிக்கவே மோடி மஸ்தானின் தளபதிகள் வியூகம் வகுத்துக்கொண்டிருக்கிறார்கள்
என்று தோன்றுகிறது!
ஈழ வியாபாரிகளும்,
மரம்
வெட்டிப்போராளிகளும்
இத்தனை
நாள்
ஒட்டுண்ணிகளாக
கழகங்களை
உறிஞ்சிக்
கொழுத்துவிட்டு,
இன்று
திருட்டு
திராவிடம்
என்று
பேசுவதும்,
மருத்துவர்
கிருஷ்ணசாமி
ஐயா
அவர்கள்
வெளிப்படையாக
பாஜவுக்கு
துதி
பாடுவதும்
காரணமின்றி
நடப்பவையல்ல!
ஏற்கனவே,
மூளை சலவை செய்வதில் மாபெரும் சாதனை செய்திருக்கும் நம் ஊடக வியாபாரிகள் இன்னொருபக்கம்!
இன்று
உண்மை என்பது, ஊடகங்கள் நாம் என்ன பார்க்கவேண்டும் என்று நினைக்கிறார்களோ அது மட்டும்தான்!
நேற்று
பேருண்மை என்று தாங்கள் ஓயாமல் சாதித்ததை இன்று தலைகீழாக மாற்றிப்பேச கூசுவதே இல்லை நம் ஊடகங்கள்!
எஜமான்
கையிலிருக்கும் ரொட்டித்துண்டு நகரும் பக்கமெல்லாம் தலை திருப்பும் நாய்களாக ஊடகங்கள் மாறி யுகங்களாகிவிட்டன!
அவையும்
தங்களுக்கு இட்ட பணியை செவ்வனே செய்துவிட்டு, நாங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண்களல்ல, நான்கு கால் ஜீவன்கள் என்று மண்டியிட்டுக் கிடக்கின்றன!
இது
போதாதா, மோடி மஸ்தான்களுக்கு?
குஜராத்தில்
பாலாறும் தேனாறும் ஓடுவதாய்ச் சொல்லிச் சொல்லியே, மோடி என்னும் பலூனை ஊதிப் பெருக்கவைத்தன ஊடகங்கள்!
டீமானிடைசேஷன்
என்ற ஒற்றை மருந்து நாட்டின் எல்லா வியாதிகளையும் குணப்படுத்தும் சர்வரோக நிவாரணி என்று நம்பவைத்த ஊடகங்கள், இன்று நக்ஸல்களுக்கும், தீவிரவாதிகளுக்கும், ஊழல்வாதிகளுக்கும் கட்டுக்கட்டாய் புது நோட்டுக்கள் எங்கிருந்து கிடைத்தன என்பதுகுறித்து எந்தக் கேள்வியும் கேட்கவில்லை!
டீமானிடைசேஷனுக்குப்
பிறகுதானே ஆர்கே நகரில் வெள்ளம் போல் பாய்ந்தது கள்ளப்பணம்? எங்கிருந்து வந்தது இத்தனை பணம்?
எல்லை
தாண்டிய பயங்கரவாதம், நக்ஸல் தீவிரவாதம் இவற்றுக்கு சாவு மணி அடித்துவிட்டதாய் பணமதிப்பு நீக்கத்தைக் கொண்டாடிய ஊடகங்கள், சமீபகால எல்லைதாண்டிய நிகழ்வுகளின்போதும், நக்ஸல் தாக்குதலின்போதும் பாகுபலி வசூலை போற்றிப்பாடிக்கொண்டிருந்தன!
நேற்றுக்கூட
ஒரு ராணுவ வீரர் கடத்திச் சென்று சுடப்பட்டிருக்கிறார்! - செய்தித்தாளின் கடைசி பக்கத்தில் ஒரு மூலையில்!
அம்மா
ஆட்சியில் ஊழலே நடக்காததுபோல் நவதுவாரங்களையும் மூடிக்கொண்டிருந்த ஊடகங்கள், அவர் காலடியில்
கிடந்த அடிமைகளில் இன்று மத்திய அரசு யாரைச் சுட்டிக்காட்டுகிறதோ, அவரை பிறவி ஊழல்வாதி என்று தூற்றுகின்றன - மறக்காமல் நேற்றுத் தூற்றியவரை மறைத்து நின்றபடி!
அம்மா
மறைவுக்குப்பின் சின்னம்மாவின் பாதத்தை தலையில் தாங்கி நடந்த ஐயா ஓபிஎஸ் நான்கே மணிநேரத்தில் நீதி கேட்டுப் போராடும் அப்பாவிப் போராளியானார்!
காந்திக்குப்
பிறகோ, காந்தியை விடவோ உத்தமராக அவரை உயர்த்திப் பிடித்தன ஊடகங்கள்!
மன்னார்குடி
மாஃபியாவுக்கு சற்றும் குறையாத பணிவு செல்வத்தின் குடும்பம் பற்றி வாயே திறக்கவில்லை!
தாங்கள்
நினைத்த ஜாலத்தை செய்யமுடியாத பணிவு செல்வம் மோடி போலொரு வாய்ச்சொல் வீரர் என்பதை தாமதமாக உணர்ந்த மத்திய அரசு, இன்று இன்னொரு கருப்பு ஆட்டிற்கு வலை வீசியிருக்கிறது!
அது
கழுத்தை வாகாய் நீட்டினால், சேகர் ரெட்டி, பணிவு செல்வத்தின் கூட்டணிக் கதை ஊடகங்களில் அலசப்படலாம்.
இல்லையேல்,
விஜயபாஸ்கர் மட்டுமே வில்லனாகச் சித்தரிக்கப்படும் நாடகம் இன்னும் சிலநாள் தொடரலாம்!
எப்படியோ,
அதுவரை ரெய்டுகளும் அறிக்கைகளும் மாறிமாறி இருதரப்பு அடிமைகளுக்கும் மலமிளக்கி மாத்திரைகளாகத் தொடரும்!
இரண்டு
அடிமைக்கூட்டத்தில் எது தங்கள் நிபந்தனைகளை முற்றாக ஏற்கிறதோ, அதற்கு மக்கள் மன்றத்தில் அனுதாபமும் ஆதரவும் கிடைக்க சிபிஐ என்னும் "தற்சார்பு அமைப்பை" முற்றாக உபயோகித்துக்கொள்ளும் மரபுகளை மீறாத மாமன்னர் மோடி அரசு!
தான்
வலை விரிக்கும் இரண்டு உச்ச நட்சத்திரங்களில் எது கிடைத்தாலும், மொத்த அதிமுக அடிமைகளையும் ஊழல்வாதி என்று இனம் காட்டி ஒழிக்கும்!
இல்லையேல்,
இணக்கம் காட்டும் ஒரு அடிமைக்கூட்டம், முடிந்தால்
இரட்டை இலையோடு தொகுதிப் பங்கீட்டில் பெரும்
பங்குடன் தாமரை யைத் தலைமேல் தாங்கித் தேர்தலை சந்திக்கும்,
அல்லது
தாமரை நிழலில் இரட்டை மின்விளக்கோ, தொப்பியோ தொடர்ந்துவரும்!
அப்போதுதான்,
மோடியின் பழைய நண்பர், உத்தமர் அயன்லேடி யாரால் கொல்லப்பட்டார் அல்லது தானாக முன்வந்து மரணமடைந்தார் என்பது வெளிச்சத்துக்கு வரும்!
சரி,
திமுகவை என்ன செய்ய?
இருக்கவே இருக்கிறது
2ஜி!
இதோ,
வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்புக்குத் தயாராய்!
சொத்துக்
குவிப்பு வழக்கின் தீர்ப்பு போல், சிபிஐ நீதிமன்றத் தீர்ப்பும் “காலமறிந்து” வெளியிடப்படும்!
எப்படியும்
தள்ளுபடி செய்யப்பட்டே தீரவேண்டிய வழக்கு அது என்பதை வழக்கின் போக்கை அறிந்தோர் அறிவர்!
எப்படி
ஒரு குமாரசாமித்தனமான தீர்ப்பை மத்திய அரசு வாங்கினாலும், அப்பீலில் காணாமல் போய்விடும் என்பது திமுகவுக்கும் தெரியும்!
ஆனால், அதில்
நெருடும்
ஒரு
முள்
- தயாளு
அம்மாள்!
அவரும்
குற்றவாளி என்றே தீர்ப்பளிக்கப்பட்டு, உடல்நிலை மற்றும் வயது காரணமாக சட்ட வரம்புக்கு உட்பட்டு, ஒருநாள் மட்டும் நீதிமன்றத்தில் சிறை வைக்கப்பட்டாலே போதும்!
ஏற்கனவே,
ஊடகங்கள் தேவைக்கு மேலாகவே மூளைச்சலவை செய்ததில்,
யார் எங்கு,
என்ன
கொலை,
கொள்ளை,
திருட்டு,
ஊழல்
என்று
எதைச்
செய்தாலும்,
“கருணாநிதி
செய்யாததா”
என்று சப்பைக்கட்டு
கட்ட
இன்றைய
பெரும்பான்மை
இளைஞர்கள்
ரெடி!
சர்க்காரியா
கமிஷன் பற்றிய அரைகுறைப் புரிதல் போதும் கருணாநிதிதான் ஊழல் என்பதையே கண்டுபிடித்தவர் என்று முத்திரை குத்த!
அதற்குப்பின்
வந்த ரே கமிஷன் என்பது
என்னவென்றே ஊடகங்களுக்கு நினைவில்லை என்பதால் இளைஞர்களுக்கு தெரியவே வாய்ப்பில்லை!
இன்றைய
மனநிலையில், கனிமொழி வீட்டு கார் ட்ரைவர்தான் மல்லையாவின் பினாமி என்றாலோ, தாவூத் இப்ராஹீமும், பின்லேடனும் கருணாநிதிக்குப் பிறந்தவர்கள் என்றாலோ கண்ணை மூடிக்கொண்டு நம்புமளவுக்கு மக்களின் மூளை, ஊடகச் சிற்பிகளால் செதுக்கி
வடிவமைக்கப் பட்டிருக்கிறது!
எனவே,
அப்படி
ஒரு புதுப்பிக்கப்பட்ட ஊழல் முத்திரையை 2ஜி தீர்ப்பில் வழங்கி
திமுகவை முடமாக்கியபின்,
செத்துப்போனதால்
புனிதரான தங்கத்தாரகையும்,
நாடாளுமன்றத்தில்
பேசுவதைமட்டும் கவனமாகத் தவிர்த்துவிட்டு முட்டுச்சந்திலெல்லாம் கர்ஜிக்கும் குஜராத் சிங்கமும்
பதாகைகளில்
மின்ன, இரட்டை இலையோடு அல்லது அது இல்லாமல் வேறு சின்னத்தில் அடிமைகள் தலைமேல் தாங்கி நிற்க,
இந்தமுறை ஆட்சியைப் பிடிக்குமளவு இல்லாவிட்டாலும்,
அடிமை அரசை ஆட்டிவைக்குமளவு பலத்தோடு தாமரை தமிழக சட்ட
மன்றத்தில்
மலரும்!
இதற்கு
பொன்னாரின் பேட்டிகளும், ஜோதிடத்தில், குறி சொல்வதில் நிகரற்ற மருத்துவர் தமிழிசையின் கணிப்புகளுமே ஆதார சாட்சி!
அதன்பின் என்ன நடக்கும் என்பதற்கு சிறு முன்னோட்டம்தான் சாந்தோம் சர்ச் சிவன்கோவில் என்பதும், ஜும்மா மசூதி ஏதோ இன்னொரு கோவில் என்பதும்!
கல்தோன்றி மண்தோன்று
முன்தோன்றியதாய்
பழம்பெருமை
பேசித்
திரியும்
தமிழினம்
என்ன செய்யும்?
சாராயம் குடிக்க ஆயிரம் ரூபாய் வாங்கிக்கொண்டு வாக்குகளை விற்றுப்போய் ஐபிஎல் பார்க்கும் அல்லது நடிகர்களுக்குக் கோவில் கட்டிக்
காவடி தூக்கும்!
No comments:
Post a comment