புதன், 31 மே, 2017

சமந்தாவுக்கு நன்றி!

சமந்தாவால் தீர்ந்த சந்தேகம்!


ஆஸ்பத்திரில பிறக்கும் குழந்தைகள் விஷயத்தில் ஆயிரத்தில் ஒன்றில் ஒரு சதவிகிதம் சின்ன சந்தேகம் இருக்கும்
"குழந்தை மாறிடுச்சோன்னு!"

கடவுள் இருக்காறா இல்லையான்ற மாதிரி இது ஒரு சாதகமான சந்தேகம்!

நம்ம பண்ற எல்லா மொள்ளமாரித்தனத்துக்கும் அல்லைலயே மிதி வாங்கும்போது,
வக்காளி இந்தப்பாழாப்போன கடவுள் இருக்கானா இல்லையா!” ன்னு மடை மாத்திவிடற ஒரு சவுகர்யத்துக்காகவே நான்லாம் சாகறவரைக்கும் ஆத்திகனாகவே இருந்துடுவேன்!

அது மாதிரிதான் இதுவும்!

ரொம்ப அடாவடி பண்ணும்போது,
நம்ம ஜீன் இப்படி இருக்காது, ஆஸ்பத்திரில கொழந்தை மாறியிருக்கும்!”ன்னு ஒரு ஆறுதல்!

அதிலும் ரெண்டுபேர் வம்சத்திலும் தேடினாலும் கிடைக்காத சில நல்ல குணங்கள் பிள்ளைகளிடம் தெரியும்போது ரகசியமா அந்த சந்தேகம் வந்தே தீரும்!

சமீபத்துல கடவுள்களின் சொந்த தேசத்தில்வயநாடு போயிருந்தப்ப, குருவா ஐலாண்ட் போங்க! அது பூலோக சொர்க்கம்” அப்படினாங்க!


ஒருமணிக்கு சொர்க்கத்தைப் பூட்டிடுவாங்கன்னு எட்டு மணிக்கே போனா,
ஒரே திருவிழா கூட்டம்
சேட்டன் மாரும், சேச்சிமா .. ஷ்!அன்னம்மா கதை சொன்னதிலிருந்தே காமாந்தகான்னு பார்க்கறாங்க! சேச்சிகளுமா, ஒரு கிலோமீட்டருக்கு நிக்குது கூட்டம்!

உள்ளூர் கும்பல் போதாதுன்னு, சேட்டுக வேற, பெரிய பெரிய வண்டீல லொடுலோடா வந்து இறங்கிருக்குதுக!

சரின்னு கூட வந்தவங்கள க்யூ வால்ல ஒட்டவெச்சுட்டு, டிக்கெட் எடுக்கப்போனா அங்கேயும் ஒரு அன்னம்மா!

பொம்பளை இருக்கற கௌண்ட்டர்ல வெறுமே டிக்கெட் வாங்கிட்டுப்போனா மனசு கேட்காதே!

சேச்சி, ஏன் இவ்வித இத்தர கூட்டம்?”

“எத்தற டிக்கெட்?”

அதுக்குமேல நமக்கு மலையாளம் உதவாது,

பதினாறு!”

“மனசிலாயோ, அதே கூட்டம்!”
இதுபோல ஒவ்வொரு ஆளும் ஒரு ஊரைக் கூட்டி வன்னு!”

மூ..க்கிட்டு க்யூல வைத்து சேர்ந்தா, பின்னாடி ஒரு சேட்டுக்கும்பல்!


நேரம் ஆகஆக நெரிசல்ல பின்னாடி நின்ன சேட்டு சொர்க்கம் முதுகோடு அழுத்தமா ஒட்டிக்கிட்டு நிக்க, இது உண்மையிலேயே பூலோக சொர்க்கம்தான்னு 
ரெட்டை உறுதியாச்சு!

பாவம், அந்தப்பொண்ணுக்கும் உறுத்தியிருக்கும்போல!

நான் ஏதோ, அது ஒட்டி நிற்கறதுல அவஸ்த்தைப் படறதா,  தப்பா புரிஞ்சுக்கிட்டு
 “Sorry, the people behind are pushing hard” ன்னு சொல்ல

இதுதான்டா சாக்கு நம்ம இங்கிலீஸ் புலமையைக்காட்ட அப்படின்னு ரெபிடெக்ஸில் மனப்பாடம் செஞ்சதால தெரிஞ்ச ஒரே sentence,
“Oh, it is my pleasure” ன்னு 
(சரியாத்தானே) 
சொல்ல,
ஏதோ ஸ்பெல்லிங் மிஸ்டேக் போல!
ஹிந்தி படிக்காதது எவ்வளவு நல்லதுன்னு அப்பத்தான் புரிஞ்சது!

அது ஏதோ, பத்மாஸ், ஸாலா” ன்னு சொன்னது ஒண்ணுமே புரியாம தேமேன்னு இளிச்சுக்கிட்டு நின்னதைப் பார்த்து, மறுபடியும் அதே ஸாரி சொல்லிடுச்சு பாவம்!

விடுங்க,
சமந்தாவுக்கு வருவோம்!

அந்த இடத்தில் பாலித்தீன் பைகளுக்கு ஸ்ட்ரிக்ட் தடா!

கையில் ஏதாவது பிளாஸ்டிக் கேரிபேக் வெச்சிருந்தா, அதுல ஒரு ஸ்டிக்கர் ஓட்டிட்டு, இருபது ரூபாய் வாங்கிக்கறாங்க!

நாம தீவுக்குள்ள போட்ல போயிட்டு திரும்பிவந்து அந்த ஸ்டிக்கர் ஒட்டின பேக்கை காண்பித்தால் திரும்ப அந்த இருபது ரூபாயை கொடுத்துவிடுகிறார்கள்!

உள்ளே பிளாஸ்டிக் குப்பையை விட்டு வராமலிருக்க அந்த ஏற்பாடு!

எத்தனை பிளாஸ்டிக் பொருள் வைத்திருக்கிறோமோ, அத்தனை ஸ்டிக்கர், அத்தனை இருபது ரூபாய்!

அப்போதான் மகர் திருவாய் மலர்ந்தார், என் ஒரு பர்சண்ட் சந்தேகமும் தீர்ந்துபோற மாதிரி!

“நல்லவேளை, சமந்தாவை கூட்டிக்கிட்டு வந்தா எத்தனை ஸ்டிக்கர் ஓட்டணுமோ!”

கடவுள் சத்தியாயமா, ஆஸ்பத்திரில கொழந்தை மாறலை!

கன்ஃபார்ம்ட்!

என் பதின்மூனு வருஷ சந்தேகத்தைத் தீர்த்துவெச்ச சமந்தாவுக்கு 
நன்றி! நன்றி! நன்றி!கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக