மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்!
பொதுவாகவே
தொலைக்காட்சி எனக்குக் கொஞ்சம் தொல்லைக்காட்சி!
பின்னிரவிலிருந்து
நள்ளிரவு வரை ராஜா பாடல்களும் பழைய பாடல்களும் பார்ப்பது தவிர என்றைக்கேனும் செய்திகளோ, டென்னிஸ், கிரிக்கெட்டோ! மற்றபடி அந்தப் பக்கமே திரும்புவதில்லை!
கமலஹாசன்
என்ற ஒரு மந்திரச் சொல்லோடு ஆரம்பித்ததால் பிக்பாஸ் துவக்கநாளில் பார்த்தேன்!
இதுவரை
கமலஹாசன் அவ்வளவு செயற்கையாக நடித்து நான் பார்த்ததில்லை!
அதிலும்
அந்த "யா பேபி!"
பாவமாக
இருந்தது அந்த முதல்நாளில் பார்த்த கமலின் நகைச்சுவை முயற்சிகள்!
முதன்
முதலில் அவர் விளம்பரத்தில் வந்து அடிவயிற்றிலிருந்து “பீப்புள்ஸ் போத்தீஸ்”
என்று உறுமியபோது
ஜீரணிக்கக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது!
எத்தனை
கோடிகள் கொட்டிக்கொடுத்தாலும் விளம்பரத்தில் நடிப்பதில்லை என்ற வேறு இரண்டு நடிகர்களின் நிலைப்பாடும் அதற்கு அவர்கள் சொன்ன நம்பகமான காரணங்களும் மனதில் உறுத்தினாலும்,
ஹெச்
ஐ வி பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளுக்குத் தன் விளம்பர
நடிப்பின் வருமானம் எல்லாவற்றையும் வழங்கப்போவதாக அவர் சொன்னதால், ஏற்றுக்கொள்ள முடிந்தது!
இப்போது
ஆடித் தள்ளுபடிக்கு வேறு விளக்கம்!
இதுவும்
அந்தக் குழந்தைகளுக்குத்தானே போகப்போகிறது!
(கொடுத்திருப்பார்தானே,
சமீப
நாட்களாக
இவ்வளவு
சுத்தமாகவும்
சத்தமாகவும்
அறம்
பேசுபவர்
தான்
சொன்னபடி
கொடுக்காமலா
இருந்திருப்பார்?)
அதை
விடுங்கள்!
இந்த
பிக்பாஸ் ஏனோ என்னை முதல்நாளே ஈர்க்கவில்லை! (கமல் இருந்தும்)!
அதிலும்,
அன்று ஜூலி தலைப்பாகை கட்டிக்கொண்டு ஆடிவந்து சொன்ன காரணம் குமட்டியது!
அதன்பின்
இணையம், குறிப்பாக ட்விட்டர், பிக்பாஸ்,
ஓவியா என்று ஓயாமல் அலறிக்கொண்டிருக்க, அப்படி என்னதான் நடக்கிறது என்ற ஆர்வத்தில் இரண்டு நாள் முன்பு மீண்டும் கொஞ்சநேரம் பார்த்தேன்!
என்
புரிதலில் பிழை இல்லை எனில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி,
நூறு நாட்கள்
ஒரு
வீட்டில்
சிலர்
வெளி
உலகத்தொடர்பு
சிறிதும்
இன்றி
நேரம்,
காலம்
எதுவுமே
அறியாமல்
வாழ்ந்து
ஏற்படும்
உளவியல்
அழுத்தங்களை
மீறி
வெல்வது
என்பதுதானே?
ஆனால்,
நான் பார்த்த அன்று வெளி ஆட்கள் வந்து கபடி விளையாடிக்கொண்டிருந்தார்கள்!
நிகழ்ச்சியைத்
தொகுத்து வழங்கும் உலகநாயகன், விஜய் டிவியின் கபடி ஒளிபரப்பை பிரபலப்படுத்த மேற்கொண்ட இந்த அடிப்படை விதிமுறை மீறலை இன்றுவரை கண்டுகொள்ளவில்லை என்பது ஒரு சின்ன அதிர்ச்சி!
தன் வளர்ச்சிக்காக
விஜய்
டீவி
எந்த
நிலைக்கும்
இறங்குவது
புதிதில்லை!
ஆனால்,
அறத்தின்பால் ஆழ்ந்த பற்றும், நேர்மையை உரக்கப் போதிக்கும் பண்பும் கொண்ட உலகநாயகன், இந்த விதிமீறலையும் காணாததுபோல் காசுக்காகக் கடந்துபோவார் என்பது கொஞ்சம் அதிர்ச்சி!
ஒரு
சாதாரண தொலைகாட்சி நிகழ்ச்சியின் விதி மீறலையே காசுக்காக மழுப்பும் இவர், அரசியல் செய்வோரின் விதி மீறல்களுக்கு சீறுவது நகை முரண்!
நாளை, எல்லோரும்
கூறுவதுபோல்
இவர்
அரசியலுக்கு
வந்தால்,
(தான் அரசியலுக்கு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே வந்துவிட்டதாக இப்போது ஒரு புது விளக்கம் தந்திருக்கிறார்!) இதுபோல்
எத்தனை
சமரசங்களைச்
செய்துகொள்வார்?
பொதுவாக,
தமிழகத்தில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது புதிதில்லை!
குறிப்பாக,
எம்ஜியாரும் சிவாஜியும், தாங்கள் வளரும்போதே அரசியலில் தீவிர ஈடுபாட்டோடு, தங்களுக்குப்பிடித்த தலைவர்களோடோ, கோட்பாடுகளோடோ உறுதியாகப் பயணித்தார்கள்!
இதில்,
திரைக்கு வெளியே நடிப்பதில் அவ்வளவு சமர்த்தில்லாத நடிகர் திலகம் விலகிக்கொள்ள, மக்கள் திலகம் நாடாண்டது வரலாறு!
அவர்
அரசியலுக்கு இழுத்துவந்த தன்னோடு இணைந்து நடித்த கதாநாயகிகளில், ஜெயலலிதா மட்டும் சில காரணங்களால் தாக்குப்பிடித்ததோடு, எம்ஜியாரையே
தூக்கி சாப்பிட்டதும் தமிழகத்தின் அடுத்த சாபம்!
அதற்குப்பின்,
ஒரு படத்தில் ஒற்றை சீனில், திரை ஓரத்தில் தலை காட்டிய ஒவ்வொரு நடிகனும், தன்னை நாடாளப் பிறந்தவன் என்றே கற்பனை செய்துகொண்டு வாழ ஆரம்பித்தார்கள்!
மார்க்கெட்
இழந்த நடிகர்களின் புகலிடமானது அரசியல்!
இதில்
வித்தியாசமாய், சாலை விரிவாக்கத்துக்காக (இழப்பீடு கொடுத்து) தன் கல்யாண மண்டபத்தை இடித்துவிட்டார்கள் என்று கட்சி ஆரம்பித்தவர் ஒருவர்!
நல்லவேளையாக,
அவர் குடும்பத்தாரின் ஆதிக்கம், தமிழகத்தைக் காப்பாற்றியது!
இன்னொருவர்,
இருபத்தைந்து ஆண்டுகளாக ஆண்டவன் உத்தரவுக்காகக் காத்துக்கொண்டிருக்கிறார்!
ஆனால்,
ஒரு அறிவுஜீவி என்று தன்னை முன்னிறுத்திக்கொள்ளப் பெரிதும் மெனக்கெடும் கமல், இதிலிருந்தெல்லாம் கொஞ்சம் விலகியே இருந்தார்!
ஆனால்
சமீப காலங்களாக இவரது அரசியல் விமர்சனங்கள் புருவம் உயர்த்த வைக்கின்றன!
இத்தனை
நாட்களாக வராத அறச்சீற்றம் இப்போது வருவது பிழை இல்லை. ஆனால், அதற்கு அவர் தேர்ந்தெடுத்துக்கொண்ட காலகட்டமும், அதற்கு மீடியாவின் ஒளிவெள்ளமும் இதன்பின் இன்னொரு மறைமுக செயல்திட்டம் இருக்குமோ என்று யோசிக்கவைக்கிறது!
சில
மாதங்களுக்குமுன், ஊரூராக, தற்செயலாகவோ, தேடிச்சென்றோ, போய் பொன் ராதாகிருஷ்ணனுக்கு சால்வை போர்த்திவந்தார்!
அதன்பிறகே இவரின் சமுதாயப் பொறுப்புணர்ச்சி பீறிட்டுத் தெறிக்கிறது!
இன்று,
எடப்பாடியாரின் பொற்கால ஆட்சியின் செயல்பாடுகள் (???) மக்கள் மனதில் ஒரு பெரும் வெறுப்பை ஏற்படுத்தியிருப்பதும், ஒரு கவர்ச்சிகரமான தலைமை இல்லாமல் அதிமுக சிதறிப்போய் தடுமாறிக்கொண்டிருப்பதும் யாருக்கு சாதகம்?
பிரதான
எதிர்க்கட்சியான திமுகவுக்கும் அதன் செயல் தலைவருக்கும்!
இது
உறுத்தவேண்டியவர்களுக்கு
உறுத்தியிருக்கிறது!
ஸ்டாலினின்
சரமாரி சட்டமன்ற சாடல்கள், பத்திரிக்கை பேட்டிகள் மீடியா வெளிச்சம் பெறுவதும், இந்த செயல்படாத அரசின் பிழைகள் திமுகவுக்கு சாதகமாவதும் யாருக்கோ பிடிக்கவில்லை!
ஆதாரத்தோடு
ஸ்டாலின் கேட்கும் கேள்விகளின் பலன் அவருக்குப் போய் சேர்ந்துவிடுமோ என்ற பதட்டத்தில் அத்தனை வெளிச்சத்தையும் திசை திருப்ப ஒரு பிரபலமான முகம் அவர்களுக்குத் தேவைப்பட்டது!
வழக்கம்போல்
பாபா போர் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று போய்விட்டார்!
அவர்களுக்கு
இப்போது கை கொடுக்கிறார் கமலஹாசன் என்ற ஐயம் எழுவது பிழையில்லை என்பதுபோல், இன்று மீடியாக்கள் கமலஹாசனை முன்னிறுத்துகின்றன!
அதிமுகவை
கேள்வி கேட்பதில் திமுக சுணங்குவதுபோலொரு மாயையை உருவாக்க,
கேள்வி
கேட்க வேறொருவன் பிறந்துவிட்டான் என்ற மாயையை உருவாக்க,
அந்த
பிக்பாஸ் கொடுக்கும் அசைன்மெண்ட்டை திறம்பட நடித்துவருகிறார் கமலஹாசன்!
நாளை
தேர்தல் வரும்போது, அதிமுக தங்கள் காலடி நாய்க்குட்டி என்ற நிலையில், திமுகவின் விஸ்வரூபத்தை திசைதிருப்பவும் மழுப்பவும் தன்னை உபயோகித்துக்கொள்கிறார்கள் என்பதை உணராதவர் அல்ல கமலஹாசன்!
அரசியல்
சதுரங்கத்தில் தனக்கு சிப்பாய் வேடமா, ராஜா வேடமா, அந்த வேடத்துக்கு என்ன விலை தனக்குக் கிடைக்கும், அதற்கு தான் கொடுக்க வேண்டிய விலை என்ன என்பதை அறியாதவரல்ல உலகநாயகன்!
அவர்
மற்ற நடிகர்களைப்போல் அரைகுறை அல்ல! 'அனைத்தும் அறிந்த'
"ஆண்டவர்!"
எல்லாமே
ஒருநாள் வெளிச்சத்துக்கு வரும்!
அப்போது
யாரும் ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது!
அதுவரை
பிக்பாஸின் ஆட்டம் தொடரட்டும்!!