கோவையில் பரபரப்பு!
மரத்தில் மோதிக்கவிழ்ந்து கிடந்த காரில் மர்மமான முறையில் இறந்து கிடந்த ஆணும் பெண்ணும்!
செப் 16. நடுத்தர வயதுடைய ஒரு ஆணும் பெண்ணும் ஈச்சனாரி அருகே விபத்துக்குள்ளான காரிலிருந்து சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டனர்!
ஆணின் தலையில் குண்டு பாய்ந்திருக்க பெண்ணின் கழுத்து நெறிக்கப்பட்டிருந்தது!
விசாரணையில் அவர்கள் இருவரும் கோவையைச் சேர்ந்த ரவி மற்றும் சௌம்யா என்று தெரியவந்தது!
நேற்று மாலை அவிநாசி சாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சௌமியாவின் மகளுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற இருந்த நிலையில் நள்ளிரவில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருவரும் இறந்து கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!
முதல்கட்ட விசாரணையில் ரவியும் சௌமியாவும் கல்லூரியில் ஒன்றாய் படித்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது!
இது கள்ளக்காதல் காரணமாக நடந்த கொலையா என்று போலீஸ் விசாரணை மேற்கொண்டுள்ளதாக நமது சிறப்பு நிபுணர் கூறுகிறார்!
"நம்மையெல்லாம்
இத்தனை நாள் எப்படி ஏமாற்றியிருக்கிறார் இந்த ஆள்!" ரவியின் மகள் குமுறி அழ, அழக்கூட தோன்றாமல் வெறித்த பார்வையோடு உட்கார்ந்திருந்தார் ரவியின் மனைவி!
நேற்றுக்கூட
ஆபீஸ் வேலையா வெளிய போறேன். வர லேட்டாகும்ன்னு சொல்லிட்டுப்போன
மனுஷன் இப்படிப் பிணமா வந்ததோட இப்படி ஒரு கெட்ட பேரோட வந்திருக்கிறாரே!
முந்தைய நாள்
மாலை!
ஊருக்கு
ஒதுக்குப்புறமான அந்த நட்சத்திர ஓட்டலில் வழக்கமான கூட்டத்தோடு அந்த நிச்சயதார்த்த கூட்டமும்!
ரிஷு வெட்ஸ்
கீர்த்தி
என்ற ஃப்ளெக்ஸில் வாசலில் சிரித்துக்கொண்டிருந்த பெண்ணும் பையனும் மாலையோடு நின்றிருக்க, அப்போதுதான் வர ஆரம்பித்த ஒரு
சின்னக் கூட்டம்!
வேகமாக
வந்து நின்றது அந்தக் காரும் ஜீப்பும்!
நிற்குமுன்பே
ஏழெட்டுப்பேர் வேகமாக இறங்கினார்கள்!
திடுதிடுவென்று
இறங்கி ரெஸ்டாரண்டை நோக்கிப்போன அவர்களின் நடையிலேயே அசாத்திய வேகம்!
சத்தியமாக
அவர்கள் காஃபி குடிக்க வரவில்லை என்று குழந்தை கூடச் சொல்லிவிடும்!
குறுகுறுவென்று
வாசலையே பார்த்துக்கொண்டு தங்களுக்குள் ஏதோ பேசிக்கொண்டிருந்த கொரியர்கள் ஐந்துபேர் திடுக்கிட்டு எழுந்து நகர முற்பட, அணைத்தாற்போல் சூழ்ந்து நின்றார்கள் வந்தவர்கள்!
எப்படி
என்ன என்று சுதாரிக்குமுன் அந்தக் கொரியர்கள் கையில் தலா ஒரு பிஸ்டல் முளைத்திருந்தது!
சோடா
உடைப்பதுபோல் ஒரு சின்ன சத்தம்!
உள்ளே
வந்தவர்களில் தலைவன் போல் உயரமாக இருந்த ரவி கையிலிருந்த ஹட்சன் ஹெச் 9 ஒரு சப்பை மூக்கனின் நெற்றியில் துளைத்து வெளியேற, ரத்தப்பொட்டு ஒழுக நனைந்த காகிதமாகச் சரிந்தான்!
"புட்
டவுன் தி கன்ஸ்!" சீறலாய்
வந்தது ரவியின் குரல்!
திகைத்துக்
கூச்சலிட்டு சிதறிய கல்யாண ரிசப்ஷன் கோஷ்டியிலிருந்து ஆச்சர்யமாய் ஒலித்தது ஒரு குரல்! ரவி??
ஏற்கனவே
வெளுத்த முகம் மேலும் வெளுக்க, கையிலிருந்த துப்பாக்கிகளை தரையில் எறிந்தார்கள் கொரியர்கள்!
கூட
வந்த ஒருவர் அந்தத் துப்பாக்கிகளைப் பொறுக்க, மறுபடி ரவி "எங்கே மற்ற ஆயுதங்களும் சரக்கும்?"
"சரக்கு?
எங்களுக்கு அப்படி எதுவும் தெரியாது!"
"லிசன்!
எனக்கு உங்களோடு விளையாட விருப்பமும் இல்லை, சமயமும்
இல்லை!
சரியாகப்
பத்து எண்ணுவேன்! அதற்குள் பதில் வராவிட்டால், உங்களில் இன்னொருவன் மூளையும் சிதறும்!"
"நான்தான்
இல்லை என்கிறேனே"
ஒன்று,
இரணடு ... சலனமே இல்லாமல் எண்ண ஆரம்பித்தான் ரவி!
சரியாகப்
பத்து எண்ணி முடித்ததும், இன்னொரு சோடா, இன்னொரு அலறல்!
"இப்போது
சொல்லுங்கள்!"
மீதி
மூன்றுபேருக்கும் உதறல் எடுத்தது வெளிப்படையாகத் தெரிந்தது!
"உனக்கு
ஐந்து வரைதான்!
ஒன்று,
இரண்டு .."
"சொல்லிவிடுகிறேன்".
அவசரமாக
வந்தது அடுத்தவன் குரல்!
"ரூம்
நம்பர் 247".
:அது
நல்ல பையனுக்கு அழகு!”
“பாஸ்கர்,
அவனை இழுத்துப்போ! குமார், நீயும் கூடப்போ!
ஏதாவது
முரண்டு பண்ணினால், யோசிக்காமல் சுட்டுவிடுங்கள்!”
அவர்கள்
அவனை இழுத்து நகர, மற்றவ இருவரையும் அங்கேயே மண்டிபோட்டு உட்கார வைத்தார்கள்!
சரியாக
இரண்டு நிமிடம்!
மொத்த
கும்பலும் ஓரமாக ஒதுங்கி அரண்டுபோய் நிற்க, அவர்கள் அங்கு இல்லவே இல்லை என்பதுபோல் விறைப்பாக நின்றுகொண்டிருந்தார்கள் காரில் வந்தவர்கள்!
மேலிருந்து
குரல் கேட்டது!
'சார்,
இங்கே எல்லாமே இருக்கு!"
இரண்டாவது
மாடி நடைபாதையை அண்ணாந்து பார்த்த ரவி கையைக் காட்ட, இருவரும் ஒரே சமயத்தில் சுட, அங்கிருந்து அலறி விழுந்து சிதறினான் அந்த மூன்றாமவன்!
மண்டியிட்டிருந்த
இருவரும் பதறி ஏழ முயல, நான்கு
துப்பாக்கிகள் சீற அவர்களும் பிணமாய்ச் சரிந்தனர்!
மொத்தமே
ஐந்து நிமிடங்கள் கூட முடிவதற்குள் ஐந்துபேரும் ரத்தச் சிதறலாகக் கிடக்க விழி பிதுங்க நின்ற கல்யாண கோஷ்டியை நோக்கி அதட்டலாக வந்தது ரவியின் குரல்!
“யாரும்
பயப்பட வேண்டாம்! நாங்கள் உள்ளே வரும்போதே, எங்கள் போர்ட்டபிள் ஜாமரால் உங்கள் மொபைல்கள் செயலிழந்திருக்கும். மேலும் எந்த ஒரு எலெக்ட்ரானிக் பொருளும் இயங்கியிருக்காது!
எதற்கும்
உங்கள் மொபைல்கள் அத்தனையையும் வரிசையில் வந்து எங்களிடம் சோதனைக்குக் கொடுங்கள்! நடந்த எதையும் பதிவு செய்திருந்தால் அதை அழித்துவிட்டு தந்துவிடுவோம்!
தேசப்
பாதுகாப்பு கருதி இங்கு நடந்த எதையும் வெளியே பகிர வேண்டாம்! அப்படி யாராவது உளறியதாகத் தெரிந்தால் விளைவுகள் மோசமாக இருக்கும்!
கமான்
லைன் அப் வித் யுவர் மொபைல்ஸ் இந்த ஹாண்ட்!”
சொல்லிவிட்டு,
தான் வைத்திருந்த சாட்டிலைட் ஃபோனில்,
"ஹலோ டாக்டர் ராமகிருஷ்ணன்? இங்கு ஐந்து கொரிய வியாபாரிகள் தங்களுக்குள் நடந்த சண்டையில் ஒருவருக்கொருவர் சுட்டுக்கொண்டு இறந்து போனார்கள்! அப்படித்தான் சொல்லப்போகிறது அடுத்த இரண்டு மணி நேரத்தில் நீங்கள் தரப்போகும் ஆடப்ஸி ரிப்போர்ட்!"
மறுமுனை
பதிலை கேட்டவன் குரல் அழுத்தமாய் ஒலித்தது! "சாரி டாக்டர் எனக்கு உபதேசங்கள் பிடிக்காது!
என்
வரை உயிரின் மதிப்பு ஒழுக்கத்தை வைத்தே! நன்றி!"
ஃபோனை
பாக்கெட்டில் போட்டுக்கொண்டு திரும்பிய ரவியின் கன்னத்தில் சுள்ளென்று விழுந்தது அந்த அறை!
கல்யாணப்பெண்ணின்
தாய் சௌம்யா!
கூட
வந்தவர்கள் அனிச்சையாய் பாக்கெட்டில் கை விட, ரவி
அவர்களை கையசைத்து அமர்த்தினான்!
"சௌமி,
நீ எங்கே இங்கே?"
"நடிக்காதே
ரவி, ஒரு காலத்தில் நான் உன்னைக் காதலித்தது உண்மைதான்! அதற்காக என் கல்யாணத்தில் வந்து அத்தனை கலாட்டா பண்ணினாய்!
ஒருவழியாக
இத்தனை வருடமும் உன் முகத்தில்கூட விழிக்காமல் நிம்மதியாக இருந்தேன்! எங்கிருந்தோ வந்தாய் இத்தனை காலம் கழித்து, என் மகள் கல்யாணத்திலும் இடைஞ்சல் செய்ய!
நான்
உனக்கு என்ன பாவம் செய்தேன்?"
இங்கே
பார் சௌமி, இது உன் வீட்டு விசேஷம் என்று எனக்குத் தெரியாது!
அப்படியே
இருந்தாலும், நான் அதில் ஏதும் தலையிடவில்லையே?
இதோ,
இன்னும் பத்து நிமிடத்தில் நாங்கள் கிளம்பிவிடுவோம், அதற்குள் ஆம்புலன்ஸ் வந்து இந்த இடம் சுத்தமாகிவிடும்!
நிறுத்து
ரவி, ஐந்து பிணம் வரிசையாய் விழுந்த இடத்தில் எப்படி ஒரு நல்ல காரியம் செய்யமுடியும்?
மாப்பிள்ளை
வீட்டுக்காரர்கள் காலில் விழுந்தாலும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் எனக்கும் மனசு ஒப்பவில்லை!
எப்படி
குருவி சுடுவதைப்போல ஐந்துபேரை சுட முடிகிறது உன்னால்? அதுவும் எந்த ஒரு எதிர்ப்பும் காட்டாதபோது?
படித்த
காலத்தில் இருந்த அரக்க குணம் இன்னும் உனக்கு மாறவில்லை!
நிதானமாக
அவளைப் பார்த்த ரவியின் கண்களில் அனல் பறந்தது!
நான்
ஒன்றும் அப்பாவி பொதுமக்களைக் கொள்ளவில்லை!
ரெடிமேட்
துணி வியாபாரி என்ற போர்வையில் ஆயுதங்களும், போதைப் பொருளும் கடத்துபவனைத்தான் சுட்டேன்!
அதற்கு
சட்டம் இருக்கிறது ரவி, எடுத்தவுடன் சுடும் அதிகாரத்தை உனக்கு யார் கொடுத்தது!
போ,
சௌமி, போய் உன் பெண் கல்யாண வேலையைப்பார், முடித்துவிட்டு வீட்டுக்குப்போய் சீரியல் பார்!
உனக்கு
இதெல்லாம் புரியாது!
இல்லை
ரவி! கல்யாணம் நின்றது நின்றதுதான்!
இதை
நான் சும்மா விடப்போவதில்லை!
நீ
என்னைக் கொன்றாலும் சரி! இப்போதே மனித உரிமை ஆணையத்துக்குப் போய் இங்கு நடந்ததெல்லாம் ஒரு புகாராய் எழுதித் தரப்போகிறேன்!
ஒரு
நிமிடம் தீர்க்கமாய் அவளை உற்றுப்பார்த்தான் ரவி!
நீ
எந்தக் காலத்திலும் என்னைப்புரிந்துகொள்ளப் போவதில்லை சௌமி!
இப்போது
உனக்கு என்ன வேண்டும்?
பதில்!
அவ்வளவுதானே,
வா என்கூட! ஒரு சின்ன ட்ரைவ் போய்வரலாம்!
உனக்கு
எல்லா பதிலும் நான் சொல்கிறேன்!
பாய்ஸ்,
நீங்கள் வேலையை முடியுங்கள், நான் என் முன்னாள் காதலியோடு ஒரு சின்ன ஊர்வலம் போய்வருகிறேன்!
சொல்லியவாறே
அவளை ஏறத்தாழ இழுத்துக்கொண்டுபோய்
காரில் தள்ளி தானும் உட்கார்ந்தான்!
சீறிக்
கிளம்பியது கார்!
இரண்டே
நிமிடங்களில் பைபாஸ் ஏறியதும் வலதுபுறம் திருப்பியவாறே சொன்னான் ரவி!
இப்போது
சொல்!
நான்
சொல்ல ஏதுமில்லை ரவி. ஏன் இப்படிக் கொலைவெறி பிடித்த மிருகம்போல் அலைகிறாய்?
நீ
யார், என்ன செய்கிறாய், உன் வேலை என்ன எதுவும் எனக்குத் தெரியாது, தெரியவும் தேவை இல்லை!
ஆனால்
இவ்வளவு இரக்கமற்றுப் போய் அலைகிறாயே, ஏன்?
ஓரமாக
வண்டியை நிறுத்திய ரவி கேட்டான்
அவ்வளவுதானா?
இன்னும் ஏதாவது இருக்கிறதா?
நான்
யார்? இது ஏறத்தாழ இருபது வருடங்களாக என் மனைவி கேட்கும் கேள்வி!
அவளுக்கும்,
என்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நான் ஒரு தனியார் நிறுவன அதிகாரி! அவ்வளவே!
இந்த
வேலைக்கு நான் தேர்வானபோதே முதல் நிபந்தனை, நான் சாகும்வரை, நான் என்ன வேலையில் இருக்கிறேன் என்பதை யாருக்கும் சொல்லக்கூடாது என்பதே!
என்னவோ,
இன்று உன்னிடம் சொல்லத் தோன்றுகிறது!
என்வரையில்
இன்னும் என் உயிரில் உன் பெயர் எழுதியிருப்பதும் ஒரு காரணம்!
அந்த
மென்மையான கல்லூரிக்காதல் நிறைவேறியிருந்தால், நானும் எல்லோரையும் போல் அரசு வேலையோ, தனியார் வேலையோ பார்த்து அல்லது கோவையில் பத்து வீட்டுக்கு ஒன்று என்றிருக்கும் ஃபேப்ரிகேஷன் யூனிட் ஒன்று வைத்து தொழிலதிபர் என்றோ வாழ்ந்திருக்கலாம்!
ஊழல்,
லஞ்சம், கயமை இவைதான் நம் வாழும் முறை என்று எல்லோரையும் போல் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ்ந்திருக்கலாம்!
நீ
ஏனோ என்னைப் புரிந்துகொள்ளாமல் பாதியில் நிராகரித்தாய்.
ரவி,
காலேஜிலேயே உன் முரட்டுத்தனம் யாருக்குமே பிடிக்காது. நான் அத்தனை சொல்லியும் நீ உன் போக்கை
மாற்றிக்கொள்ள மறுத்ததுதான் நம் பிரிவுக்கு காரணம் என்று உனக்கு உண்மையிலேயே புரியவில்லையா?
எது
முரட்டுத்தனம் சௌமி?
நம் கண்ணெதிரே
நடக்கும் அக்கிரமங்களை காணாததுபோல் கடக்கும் கோழைத்தனம்தான் நீங்கள் எல்லோரும் சொல்லும் நல்லதனம் என்றால் அது எப்போதும் எனக்கு அமையாதது நல்லது!
எனிவே,
நீ என்னை நிராகரித்ததும் ஒரு வகையில் நல்லதே.
அதே
வேகத்தோடு இந்த மத்திய அரசின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் உளவுத்துறையில் வேலைக்கு சேர்ந்தேன்!
நாட்டின்
அமைதிக்கும் இறையாண்மைக்கும் கேடு செய்பவர்களை தேடித்தேடி அழிக்கும் உன்னதமான வேலை!
அவர்களை
கைது செய்யலாமே ரவி, கொல்வது எந்தவகையில் தர்மம்?
தர்மத்துக்கு
கலியுகத்தில் அர்த்தங்கள் வேறு சௌமி!
இப்போது
நான் கொன்ற ஐந்து பேர் வெறும் அம்பின் நுனிகள் மட்டும்தான்!
இது
ஒரு உலகளாவிய, பில்லியன், ட்ரில்லியன் டாலர்கள் கொட்டிக்குவிக்கும் பிசினெஸ்!
யார்
செத்தாலும், எந்த நாடு அழிந்தாலும் இந்த கும்பலுக்கு கவலை இல்லை! நாள் தோறும் நாடு நாடாக ஆயுதங்களும் போதைப் பொருள்களும் கோடிக்கணக்கில் வேகவேகமாக கைமாறிக்கொண்டிருக்கிறது!
உலகத்தையே
கபளீகரம் செய்யத் துடிக்கும் இந்த மாபெரும் எரிமலையின் ஒரு சிறு பொறிதான் இன்று நான் அழித்தது!
இந்தியாவின்
பல நகரங்களில் விரக்தியுற்ற இளைஞர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு போதைப்பொருள்களை விநியோகித்து, ஆயுதங்களைக் கொடுத்து தீவிரவாதம் தூண்டுவது அவர்களின் குறிக்கோள்!
இருபது
வருடம் முன்பு அத்வானி வருகையின்போது வெடித்த குண்டு, இன்றுவரை இந்த நகரை வளர விடவில்லை!
தீபாவளியை
ஒட்டி பல இடங்களில் கலவரம்
தூண்டவும் குண்டு வெடிக்கவும் இவர்கள் திட்டமிட்டிருப்பது தெரிந்துதான் இன்று சுற்றி வளைத்தோம்.
இவர்களை
உயிரோடு கைது செய்வது, நாங்களே தீவிரவாதத்துக்கு விசா எடுத்துக் கொடுப்பதுபோல்!
நம்
கேடுகெட்ட அதிகாரிகளையும் அரசியல் வியாதிகளையும் இவர்கள் எப்போதோ விலைக்கு வாங்கிவிட்டார்கள்!
இவர்களை
போலீஸ் ஸ்டேஷனில் விட்டுவிட்டு நான் வீடு போவதற்குள் இவர்கள் வெளியே வந்து கூட்டத்தில் கலந்திருப்பார்கள்!
ரவி,
இந்த கலவரத்தில் நீயும் சுடப்பட வாய்ப்பிருக்கிறது உனக்குப் புரியவில்லையா?
கத்தி
எடுத்தவனுக்கு காத்தியால்தான் சாவு சௌமி!
ஆனால், இது என் நாட்டுக்கான களப்பலி!
அப்படி
ஏதாவது ஆனால் உன் குடும்பம்?
இந்த
வேலையில் நான் நன்றி, பாதுகாப்பு இப்படி எதையுமே எதிர்பார்க்கமுடியாது!
எப்படியும்
எனக்கு குண்டடிபட்டோ, கத்திக்குத்து வாங்கியோ, வாகனம் மோதி அறைத்தோதான் மரணம் நேரும்!
அப்போதும்
அரசாங்கம் என் பிள்ளைகளிடம்கூட உண்மை சொல்லாது! சாதிச்சண்டை, கள்ளக்காதல் இப்படி ஏதோ ஒன்றில் நான் கொல்லப்பட்டதாகத்தான் கடைசிவரை நிறுவப்படும்!
அரசு
கொடுக்கும் நிதி உதவியும், என் இன்சூரன்ஸ் தொகை, கிரேஜுடி என்ற பெயரில்தான் அவர்களைச் சேரும்! என் இறப்புக்குப்பின் அவர்களுக்கு தேவைக்குமேல் பணம் கொடுப்பதை அரசாங்கம் பார்த்துக்கொள்ளும்.
ஆனால்
ரவி, உன் பெயர்?
மேலும்,
இத்தனை பேர் மத்தியில் நீங்கள் செய்ததை, அந்தக் கூட்டத்துக்கு யாரும் அடையாளம் காட்ட மாட்டார்கள் என்று என்ன நிச்சயம் ரவி?
உண்மை!
வழக்கமாக நாங்கள் இதை ஊருக்கு வெளியே மடக்கி செய்வது வழக்கம்! இன்று அவர்கள் தப்பிவிடும் சாத்தியம் இருந்ததால் இப்படி ஊரறிய செய்யவேண்டியிருந்தது!
என்ன
செய்ய! சமயங்களில் இதுபோல் ரிஸ்க் தவிர்க்க முடியாததாகிவிடுகிறது!
இன்னும்
எத்தனை நாளைக்கு இந்த வேலை ரவி?
எப்போது
உனக்கு ரிட்டயர்மெண்ட்?
இப்போதே
என் ரிஃப்ளெக்ஸ் குறைவது உரைக்க ஆரம்பித்துவிட்டது சௌமி!
இன்னும்
ஒரு ஏழெட்டு ஆப்பரேஷனுக்குப் பிறகு ஊர்ப்பக்கம் போய் அமைதியாக விவசாயம் செய்துகொண்டு சாவுக்குக் காத்திருக்கவேண்டியதுதான்!
அடுத்தது
என்ன ரவி?
இதை
நான் உனக்கு மட்டுமல்லாது யாருக்குமே சொல்லக்கூடாது சௌமி!
ஆனாலும்,
நீ என்பதால் சொல்கிறேன்!
ஒரு
பெண் தீவிரவாதி கோவையில் இவர்களை இயக்கிக்கொண்டிருப்பதாய் ஊர்ஜிதமான தகவல்.
அவளை
வளைப்பதும் அழிப்பதும்!
கண்டுபிடித்துவிட்டீர்களா?
இன்னும்
இல்லை சௌமி! இதுவரை அவள் பற்றி எந்த தடயமும் சிக்கவில்லை!
எங்களைப்போல்
அவளும் குடும்பம், குட்டி என்று செட்டிலாகியிருப்பது சாத்தியம்! கண்டுபிடிக்க நாளாகலாம், ஆனால் விரைவில்!
ஜாக்கிரதை
ரவி, சொல்லியவாறே அவன் கையை மெல்ல அழுத்தினாள் சௌமி!
என்னை
என் வீட்டில் இறக்கி விட்டுவிடு ரவி!
ஈச்சனாரி
அருகேதான் வீடு, இப்படி கற்பகம் வழியாகப் போய்விடலாம்!
வண்டி
வேகமெடுத்து, கற்பகம் தாண்டி, ஆளரவமற்ற இருள் சாலையில் விரைந்தபோது, ரவி நெற்றிப்பொட்டில் அதை உணர்ந்தான்!
பழக்கப்பட்ட உலோகக்
குளுமை!
கூடவே
சாரி ரவி என்ற சௌமியின் குரல்!
குண்டு பாயவும்,
அவள் கழுத்தை கொத்தாய் ரவி அழுத்தவும்,
தாறுமாறாய் பாய்ந்த கார் மரத்தில் மோதிக் கவிழவும்
இந்த வரியை நீங்கள் படிக்க ஆன நேரத்தில்
பாதிதான் ஆனது!
No comments:
Post a comment