அகர முதல எழுத்தெல்லாம் தகர சிலேட்டில் எழுதிப்பழகிய போதே குறள் என்னைக் கவர்ந்துவிட்டது என்று கரடியெல்லாம் விட விரும்பவில்லை!
பொழுது போகாத ஒரு அசுப வேளையில் ட்விட்டர் என்று ஒரு நேரக்கொல்லி இருப்பது கண்டு உள் நுழைந்தபோதுகூட குறள்பால் ஒன்றும் காதல் பெருக்கெடுக்கவில்லை!
எல்லாவற்றையும் தலைகீழாகவே செய்து பழகிய புத்தி, ஏதோ ஒருநாள் விளையாட்டாக, ஆயிரத்து முந்நூற்று முப்பதாவது குறளுக்கு பொருள் எழுத முயன்ற நேரம் அப்படியான நேரம்போல!
பலாப்பிசினாய் பிடித்துக்கொண்டது பழக்கம்!
தினம் ஒரு குறளுக்கு ஒற்றை ட்வீட்டில் குறளும், என் புரிதலும் என்று எழுதத் தொடங்கியது, இதோ, காமத்துப்பால் கடந்து, அறத்துப்பால் முடிவதில் வந்து நிற்கிறது!
வள்ளுவன் எவ்வளவு தீர்க்கதரிசி பாருங்கள்! முதலில் காமம் முடியும், பின் அறம் தீரும், பொருள் மட்டும்தான் நீண்ட நாள் தொடர்ந்து வரும் என்று புரிந்தே பிரித்துக்கொண்டு எழுதியிருக்கிறார் என்று ஜல்லியடிக்க மனம் வரவில்லை!
வள்ளுவன் ஒருவன்தானா, இல்லை பலரா? வள்ளுவர் என்ன மதம்? அது என்ன ஆயிரத்து முந்நூற்று முப்பது ? அதில் ஏதாவது குறியீடு உள்ளதா? இப்படியெல்லாம் ஆராய அறிவும் இல்லை, பொறுமையும் இல்லை!
ஆனால், தினம் ஒரு குறள் என்ற பழக்கம், ஏதோ ஒருவகையில் நிச்சயம் ஒரு சின்ன ஒழுக்கத்தைக் கற்பித்திருக்கிறது!
சில குறள்கள் என் கொள்ளுப்பேரன் காலத்திலும் இதே வீரியத்தோடு சிலாகிக்கப்படும் என்ற ஒரு ஜோதிடம் மட்டும் உறுதியாகச் சொல்லமுடியும்!
சிலநேரங்களில் எழுத்து சிக்கனம் என் புரிதலை செதுக்கியிருக்கலாம்!
ஆனால், விரிவான உரை எழுத்துமளவு பண்டிதம் பெற இந்த ஆயுளில் முயலும் எண்ணம் இல்லை! ஏதோ, இதைத் தொகுத்துப் பகிர்வதில் ஒரு திருப்தி!
நாள் தவறாமல் இதையும் படித்து கடமையாக ஆர்டியும் செய்துவந்த சகோதரி வன யட்சி @SolitaryReaper_ க்கு என் வந்தனங்கள்!
அவருக்கு ஆயிரத்து முந்நூற்று முப்பது பொற்காசுகளை அஸ்ஸாம் காடுகளில் புதையலாக இறை அருளட்டும்!
நேரம் கிடைக்கும்போது இந்தத் தொகுப்பைப் படிக்கும் அனைவருக்கும் ஜக்கம்மா அருளால் அடுத்த பத்து நாட்களுக்குள் ஒரு நல்ல சேதி வரும்!
பொருட்பாலில் இன்னும் மீதமிருக்கும் முந்நூற்று இருபது குறளும் முடிக்கும்வரை எனக்கு ஆயுளைக் கொடுக்க சக வாகன ஓட்டிகளுக்கு ஈசன் புத்தியும் பொறுமையும் கொடுக்கட்டும்!
கெட்ட வார்த்தை கலவாத விமர்சனங்கள் மட்டும் வரவேற்கப்படும் என்ற கடைசி தகவலோடு....
1. கடவுள்
வாழ்த்து
1.அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
எழுத்துக்கள் தொடங்குவது அகரத்தில். உலகம் தொடங்குவது அன்னை, தந்தை எனும் தெய்வத்தில்!
2.கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
தூய்மையான அறிவு வடிவான இறைவனடி பணிந்து தொழாவிடில், கற்ற கல்வியால் என்ன பயன்?
3.மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
தம் மனமெனும் மலரில் வாழும் இறைவன் திருவடி நினைப்பவர் இவ்வுலகில் நீடூழி வாழ்வர்.
4.வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
விருப்பு வெறுப்பற்ற இறைவனடி பணிந்து நடப்போரைத் துன்பங்கள் நெருங்குவதில்லை
5.இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு
இறைவனின் மெய்ப்புகழ் நாடுவோரை நன்மை தீமை இரு வினைகளும் பாதிக்காது.
6.பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
ஐம்புலன் அடக்கி, பொய்யில்லா ஒழுக்கத்தோடு வாழ்பவர் நீண்ட புகழ் அடைவர்.
7.தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
இணையில்லா இறைவன் திருவடி பற்றுவோர் தவிர, பிறர் தம் மனக்கவலை தீராது.
8.அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
அறக்கடலாகிய இறைவன் திருவடி சேராத மற்றோர் பிறவிக்கடலைக் கடத்தல் கடினம்.
9.கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
இறைவன் திருவடி வணங்காத தலைகள் இயங்காத ஐம்புலன்போல் உடலோடு இருந்தும் பயனற்றவை
10.பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
இறைவன் திருவடி பற்றுவோர் பிறவிக்கடலைக் கடப்பர். மற்றோர் அதில் மூழ்கி உழல்வர்.
2. வான்சிறப்பு
11.வானின் றுலகம் வழங்கி வருதலால்
தானமிழ்தம் என்றுணரற் பாற்று
உலகம் வாழ்வதே பருவத்தில் பொழியும் மழையால்.எனவே, மழை அமுதமெனப் போற்றப்படுகிறது.
12.துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை
உணவை விளைவிக்க உதவுவது மட்டுமன்றி, தானே உணவாகவும் விளங்குவது மழை.
13.விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி
கடல்நீர் சூழ இருந்தாலும், மழை பொய்த்தால் உயிர்கள் பசியில் வாடும்.
14.ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்
வாரி வழங்கும் மழை வளம் குன்றினால் உழவர்கள் ஏர் பூட்டி உழுது பயன் ஏதுமில்லை.
15.கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை
கெடுப்பதும், வளம்குன்றிக் கெட்டவருக்குப் பெய்து கொடுப்பதும் மழை.
16.விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண் பரிது
வான்மழை வீழாதுபோனால், புவியில் பசும் புல்லும் துளிர்க்கக் காணமுடியாது.
17.நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்
கடல்நீர் மேகமாகி மீண்டும் மழையாகப் பெய்யாவிடில் கடலும் வற்றிப்போகும்.
18.சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு
வானம் பொய்க்குமானால், வானுறையும் தெய்வத்துக்கே, பூஜை ஏது,திருவிழாதான் ஏது?
19.தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
வானம் வழங்கா தெனின்
மழை பெய்யாவிடில் உலகில் பிறர்க்கான தானமும், தனக்கான தவமும் கெட்டுப்போகும்.
20.நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
வானின் றமையா தொழுக்கு
மழை நீரின்றிப் போனால் உலகில் வாழமுடியாமல் ஒழுக்கமும் கூடக் குறைந்துபோகும்.
3. நீத்தார்
பெருமை
21.ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு
ஒழுக்கத்தில் உயர்ந்த பற்றற்வர்கள் பெருமையை உயர்ந்தவை என்று நூல்கள் கூறும்
22.
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று
பற்றற்றவர் பெருமை எண்ணில் அளப்பது,உலகில் இறந்தவரை எண்ணமுயல்வதற்குசமம்.
23.
இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு
நன்மை தீமை இரண்டும் ஆய்ந்தறிந்து நல்லறம்புரிபவர் பெருமை இந்த உலகில் உயர்ந்தது.
24.
உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து
அறிவென்ற ஆயுதத்தால் ஐம்புலனும் அடக்குபவன், துறவுக்கு விதையாவான்
25.
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
இந்திரனே சாலுங் கரி
ஐம்புலன் அடக்கி ஆள்பவர்தம் வல்லமைக்கு வானோர் தலைவன் இந்திரனே சான்றாவான்
26.
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
அரிதான செயல்களைச் செய்துமுடிப்பவரே உயர்ந்தவர்.அதை முயலாதவர் என்றும் சிறியவரே.
27.
சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்கே உலகு
ஐம்புலன்களின் ஆற்றலைப் புரிந்து, அவற்றை அடக்கி ஆள்பவனுக்கு இந்த உலகமே வசமாகும்
28.
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
மொழிவன்மை உடைய சான்றோர்கள் பெருமையை, உலகில் நிலைத்திருக்கும் அவர் மறைமொழி காட்டும்
29.
குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது
நல்ல குணம்என்ற மலையேறி நிற்கும் உயர்ந்தவர் கொண்ட கோபம் நீண்டநேரம் இருக்காது
30.
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான்
எல்லா உயிர்களிடத்தும் சம அன்பும் கருணையும் கொண்டவரே அந்தணர் ஆவார்.
4. அறன்
வலியுறுத்தல்
31.
சிறப்பீனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு
சிறப்பும் செல்வமும் தரும் நல்லறத்தைவிட உயிர்களுக்கு வேறெது நன்மை தரும்?
32.
அறத்தினூஉங் காக்கமும் இல்லை அதனை
மறத்தலின் ஊங்கில்லை கேடு
அறம் செய்வதுபோல் நன்மையுமில்லை, அறம் செய்யாது விடுவதுபோல் ஒரு தீமையுமில்லை
33.
ஒல்லும் வகையான அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாஞ் செயல்
எங்கு சென்றாலும் அங்கெல்லாம் அறவழி வாழ்வதே மிகச்சிறந்த வாழ்க்கை முறையாகும்.
34.
மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற
மனதில் குற்றம் இல்லாதிருப்பதே உண்மையான அறம். மற்றவை அடுத்தவருக்காகப் போடும் வேடங்களே.
35.
அழுக்கா றவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்ற தறம்
பொறாமை, பேராசை, கோபம், தீயசொற்களெனும் நான்கையும் களைந்து வாழ்வதே அறமாகும்.
36.
அன்றறிவாம் என்னா தறஞ்செய்க மற்றது
பொன்றுங்கால் பொன்றாத் துணை
நாளை எனத் தள்ளாமல் இன்றே அறம் செய்க!அது நம் இறப்பிலும் துணையாய்க் கூடவரும்
37.
அறத்தா றிதுவென வேண்டா சிவிகை
பொறுத்தானோ டூர்ந்தான் இடை
அறவழி நடப்பவன் பல்லக்கில் செல்வான் தீயவழி செல்பவன் அதைத் தோள்சுமந்து துன்புறுவான்
38.
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல்
ஒருநாளும் இடைவிடாது செய்யும் அறம் வாழ்க்கைப் பாதை அமைக்கும் கல்லாகும்
39.
அறத்தான் வருவதே இன்பமற் றெல்லாம்
புறத்த புகழும் இல
அறவழி நடத்தையால் வருவதே உண்மையான இன்பம். மற்ற வழிகளில் இன்பமோ புகழோ ஏதுமில்லை
40.
செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி
அறம் செய்வது வாழ்வின் நோக்கமாக்கிப் பழிக்கத் தக்கவை தவிர்ப்பது புகழைச் சேர்க்கும்.
5. இல்வாழ்க்கை
41.
இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை
பெற்றவர், மனைவி, குழந்தைகளுக்குத் துணையாய் இருப்பதே நல்வாழ்க்கை அறம்.
42.
துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை
துறவிகள், பசித்தோர்,புகலிடமற்றோருக்குத் துணையாவான் இல்லறவாசி.
43.
தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தா றோம்பல் தலை
மூதாதையர், கடவுள், விருந்தினர், உறவு, தனக்கான கடமைகளை செய்வதறம்
44.
பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல
பாவம் செய்யாது பொருள் சேர்த்து, பகிர்ந்துண்டவர் பரம்பரை அழிவதில்லை.
45.
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது
அன்போடும் நல்ல அறத்தோடும் வாழ்வதே பண்போடும் நல்ல பயனோடும் வாழும் இல்வாழ்க்கை.
46.
அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
போஒய்ப் பெறுவ தெவன்
அறநெறியில் வாழும் இல்வாழ்க்கை தரும் பயனை தவநெறி வாழ்வுகூடத் தராது.
47.
இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை
அறத்தோடு இல்வாழ்வை வாழ்பவன் நல்வாழ்வை முயலும் மற்றோரைவிட சிறந்தவனாவான்
48.
ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து
அறவழி நடந்து பிறரையும் அவ்வழி நடத்தும் இல்லறம் துறவினும் உயர்ந்தது.
49.
அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று
பிறர் பழிக்காதவாறு வாழும் இல்வாழ்க்கையே நல்ல அற வாழ்க்கையாகும்.
50.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்
உலகில் அறநெறி தவறாது வாழ்பவன் வானில் வாழும் தெய்வத்துக்கு இணையாவான்
6. வாழ்க்கைத் துணைநலம்
6. வாழ்க்கைத் துணைநலம்
51.
மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை
நல்ல பண்புகளோடு கணவனின் வருவாய்க்கு ஏற்ப வாழ்பவளே சிறந்த மனைவி.
52.
மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
எனைமாட்சித் தாயினும் இல்
பண்புள்ள மனைவி அமையாத இல்லறம் வேறு என்ன சிறப்பு பெற்றாலும் பயனில்லை
53.
இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை
நற்பண்புள்ள மனைவி உடையவனுக்கு இல்லாததே இல்லை அப்படி அமையாதவனுக்கோ எதுவுமே இல்லை
54. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
திண்மைஉண் டாகப் பெறின்
கற்பெனும் மன உறுதி பெற்ற பெண்ணைவிடப் பெருமைக்குரிய பரிசு கணவனுக்கு வேறேது?
55. தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை
கணவனை சக கடவுளென அன்போடு மதிக்கும் மனைவி, பெய் என்று ஆணையிட மழை பொழியும்.
56.
தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்
கற்போடு தன்னையும் கணவனையும் காத்து, குலப்பெருமையும் காப்பவள் பெண்.
57.
சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
நிறைகாக்கும் காப்பே தலை
மனக்கட்டுப்பாட்டோடு வாழும் பெண்களைக் காவல் வைத்துக் காக்க வேண்டாமே.
58.
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு
பண்பான கணவனோடு கடமைதவறாது வாழும் பெண்கள் வாழுமிடம் சொர்க்கமாகும்
59.
புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை
நல்ல மனைவி அமையாதவன் பழிபேசுவோர் முன் தலை நிமிர்ந்து நடக்கமுடியாது
60.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
நல்ல பண்புள்ள மனைவி இல்லறத்துக்கு அழகு, நன்மக்கள், அதற்கு அணிகலன்.
61.
பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பே றல்ல பிற
நான் அறிந்தவரை நல்ல அறிவுள்ள குழந்தைகளைவிட இல்லறத்தில் சிறந்த பெருமை ஏதுமில்லை
62.
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்
பழியில்லாத பண்புள்ள மக்களைப் பெற்றவனை ஏழு பிறவியிலும் துன்பங்கள் தீண்டாது
63. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தந்தம் வினையான் வரும்
நம் பிள்ளைகள் உண்மையில் செல்வங்களாவது அவர்களின் பண்பான செயல்களால் மட்டுமே.
64.
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்
தன் குழந்தை பிஞ்சுக்கைகளை விட்டு அலைந்த கூழ் தேவாமிர்தத்தைவிட மிக இனிய சுவையானது.
65.
மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு
தம் குழந்தைகளை அரவணைத்தல் உடலுக்கும், மழலை கேட்டல் செவிக்கும் இன்பம்
66. குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்
தம் குழந்தைகளின் மழலைச்சொல் கேளாதவரே குழல், யாழ் இசைகளே இனிமையென்று கூறுவர்.
67.
தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்
தந்தை மகனுக்குச் செய்யும் உதவி, கற்றோர்சபையில் முன்னிற்குமாறு கல்விபெறச்செய்வதே
68.
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க் கெல்லாம் இனிது
பெற்றோரைவிட பிள்ளைகள் அறிவாளியாக இருப்பதே உலகம் முழுதும்விரும்பப்படும்
69.
ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன்
எனக்கேட்ட தாய்
தன் மகனை ஒழுக்கமானவன் என ஊர் புகழ,பெற்றபொழுதினும் அதிகம் மகிழ்வாள் அன்னை
70.
மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்லெனும் சொல்
இவனைப் பெற என்ன தவம் செய்தானோ எனப் புகழப்படுவதே, தந்தைக்கு மகனின் உதவி
8. அன்புடைமை
71.
அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
புண்கணீர் பூசல் தரும்
அன்பை அடைக்கத் தாழ்ப்பாள் இல்லை அன்பர் துன்பம் காண அது கண்ணீராய் வெளிப்படும்
72.
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
அன்பில்லாதவர் எல்லாமே தமக்கென்பர். அன்புடையோர் தனதும் பிறருக்கென்பர்
73.
அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
என்போ டியைந்த தொடர்பு
அன்போடு இணைந்த நற்செயலே, நம் உடலோடு உயிரை நிறைவாக இணைத்து வைக்கும்
74. அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
நன்பென்னும் நாடாச் சிறப்பு
அன்பு அனைவர்மீதும் பற்றுக்கொள்ள வைக்கும். அது நட்பென்னும் சிறப்பும் பெறும்.
75.
அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு
அன்புடன் வாழ்பவர்க்கே இவ்வுலகில் என்றும் இன்பமான வாழ்க்கை அமையும்
76.
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை
அறத்திற்கு மட்டுமன்றி வீரத்துக்கும் அன்பே துணை என்பதை அறிவுடையோர் அறிவர்.
77.
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்
எலும்பில்லாப் புழுவை வெயில் வருத்துவதுபோல் அன்பில்லாது வாழும் மனிதனை அறம் கொல்லும்.
78.
அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
வற்றல் மரந்தளிர்த் தற்று
மனதில் அன்பில்லாதவருடன் வாழ்வது பாலைவனத்தில் பயிர் துளிர்ப்பதைப் போல!
79.
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துருப் பன்பி லவர்க்கு
உள்ளத்தை அழகாக்கும் அன்பில்லாதவர்க்கு புற உறுப்பு அழகால் என்ன பயன்?
80. அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
என்புதோல் போர்த்த உடம்பு
அன்புடன் வாழ்வதே உயிரோடிருப்பது. அது இல்லாதது வெறும் தோல் போர்த்த உடல்.
81.
இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு
பொருள் சேர்த்து வாழும் இல்வாழ்க்கை விருந்தினரைப் போற்றி வாழ்வதற்கே
82.
விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று
அமுதமானாலும் விருந்தினரை வெளியிருத்தி தனித்து உண்பது பண்பாகாது
83.
வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுத்தல் இன்று
விருந்தினரைத் தினம்தோறும் பேணுபவர் வாழ்க்கை துன்பத்தால் கெடுவதில்லை
84.
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந் தோம்புவான் இல்
விருந்தினரை முகம்மலர்ந்து உபசரிப்பவர் வீட்டில் திருமகள் வாசம் செய்வாள்
85.
வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்
விருந்தினர் உண்டபின்எஞ்சியதைஉண்டு வாழ்பவன்நிலத்தில் விதைக்கவேவேண்டாம்
86.
செல்விருந் தோம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு
வந்த விருந்தைப் பேணி,வருவோரைவரவேற்பவன் தேவர்களின் விருந்தினன்
87.
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்
விருந்தினரைப் பேணுதல் பலனை அளக்க முடியாத வேள்வியைப்போல் உயர்வானது
88.
பரிந்தோம்பிப் பற்றற்றோம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்
சேர்த்த செல்வம் இழந்தபின் விருந்தினரைப்பேண அது உதவாமைக்கு வருந்துவர்
89.
உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு
விருந்தினரைப் பேணாதவன் எத்தனை செல்வந்தனாயினும் வறியவனாகவே கருதப்படுவான்
90.
மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து
முகம் சுருங்கி வரவேற்க முகர வாடும் அனிச்சம்போல விருந்தினர் வருந்துவர்
10.இனியவை கூறல்
91.
இன்சொலால் ஈரம் அளைஇப் படிறிலவாம்
செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்
அன்பில் பிறந்து வஞ்சகமின்றி நேர்மையோடு வரும் சொல்லே இன்சொல் எனப்படும்.
92.
அகன்அமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்
மலர்ந்த முகத்தோடு இனிமையாய்ப் பேசுவது மனம்குளிர்ந்து தானம் கொடுப்பதைவிட நன்று
93.
முகத்தான் அமர்ந்தினிது நோக்கி அகத்தானாம்
இன்சொ லினதே அறம்
முகம் மலரப் பார்த்து உள்ளம் மலர உண்மையோடு இனிமையாகப் பேசுவதே நல்லறமாகும்.
94. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு
அனைவரோடும் இனிமையாய்ப் பேசுபவரை துன்பம் தரும் வறுமை நெருங்காது.
95. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற
பணிவையும் இனிய சொல்லையும்விட ஒருவனுக்கு சிறந்த அணிகலன் ஏதுமில்லை.
96.
அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை
நாடி
இனிய சொலின்
நலம் தரும் இனிய சொற்களை உளமாற உணர்ந்து சொன்னால், தீயன அழிந்து வாழ்வில் நன்மை
பெருகும்.
97.
நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று
பண்பின் தலைப்பிரியாச் சொல்
பிறருக்கு நன்மைதரும் பண்பான சொற்கள், சொல்பவருக்கு இன்பமும் நலமும் தரும்.
98.
சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும்
இம்மையும்
இன்பம் தரும்
சிறுமையற்ற இன்சொல் ஒருவனுக்கு வாழும்போதும், மறு பிறப்பிலும் இன்பமே தரும்.
99. இன்சொல்
இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
வன்சொல்
வழங்கு வது
இனிமையான சொல் இன்பம் தருவது கண்டும் துன்பம் தரும் கடுஞ்சொல்லை ஏன் பேச வேண்டும்?
100.
இனிய உளவாக இன்னாத கூறல்
கனிஇருப்பக்
காய்கவர்ந் தற்று
இனியசொல்லை விட்டு கடுஞ்சொல் பேசுதல் இனிக்கும் கனியைவிட்டு கசப்புக்காயை உண்பதுபோல்
11.செய்ந்நன்றியறிதல்
101.
செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும்
வானகமும்
ஆற்றல் அரிது
நாம் ஏதும் செய்யாதபோதும், ஒருவர் தாமே செய்யும் உதவிக்கு ஈரேழ் உலகும் ஈடாகாது.
102.
காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின்
மாணப் பெரிது
தேவைப்பட்ட நேரத்தில் ஒருவர் செய்த உதவி சிறிதானாலும் இந்த உலகைவிடப் பெரியது
103.
பயன்தூக்கார் செய்த உதவி நயன்தூக்கின்
நன்மை
கடலின் பெரிது
அடையும் பலனை எண்ணி உதவாமல் அன்பால் செய்த உதவியின் சிறப்பு கடலைவிட உயர்வானது
104.
தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்
கொள்வர்
பயன்தெரி வார்
தினையளவு சிறிய உதவியையும் பயனடைபவர் பனையளவு பெரிதாய்ப் பாராட்டி மகிழ்வர்
105.
உதவி வரைத்தன் றுதவி உதவி
செயப்பட்டார்
சால்பின் வரைத்து
பெறுபவரின் பண்பைப் பொருத்தே செய்யப்பட்ட உதவியின் பெருமையும் அறியப்படும்
106.
மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள்
துப்பாயார் நட்பு
துன்பத்தில் துணை நின்ற அன்பையும் தூய்மையாளர் உறவையும் என்றும் இழக்கக்கூடாது.
107. எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு
தன் துயர் துடைத்தவர் நட்பை ஏழ்பிறப்பிலும் நினைத்துப்
போற்றுவர் பெரியோர்.
108.
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
பிறர் நமக்குச் செய்த உதவியை எப்போதும் மறவாமல் அவர் செய்த தீமையை உடனே மறப்பது அறம்
109.
கொன்றன்ன இன்னா செயினும் அவர்செய்த
ஒன்றுநன் றுள்ளக் கெடும்
கொல்வதுபோல் ஒருவர் தீமை செயினும் அவர் முன்பு செய்த நன்மை அதை மறக்கச்செய்யும்
110.
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி
கொன்ற மகற்கு
எதை மறந்தோருக்கும் வாழ்வுண்டு, செய்த நன்றி மறந்தவருக்கு இல்லை.
12, நடுவு நிலைமை
111.
தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
பாற்பட்
டொழுகப் பெறின்
வேண்டியவர் வேண்டாதவர் என்ற சார்பின்றி நடுநிலை நின்று நியாயத்தை உரைப்பதே அறம்.
112.
செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
எச்சத்திற்
கேமாப் புடைத்து
நீதி வழுவாதவன் செல்வம் என்றும் அழியாமல் அவன் தலைமுறைக்கும் பலன் தரும்.
113.
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே
யொழிய விடல்
நடுநிலை தவறுதல் நன்மையே தந்தாலும் அவ்வாறான எண்ணத்தை அப்போதே ஒழித்துவிட வேண்டும்.
114. தக்கார் தகவிலர் என்ப தவரவர்
எச்சத்தாற் காணப் படும்
ஒருவர் நடுநிலைதவறாதவரா என்பது அவர் காலத்திற்குப்பின்
நிலைக்கும் புகழால் அறியப்படும்
115.
கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
கோடாமை
சான்றோர்க் கணி
தீதும் நன்றும் எது வந்தாலும் நீதி தவறாத நேர்மையே சான்றோர்க்கு அழகு.
116.
கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
நடுவொரீஇ
அல்ல செயின்
நடுநிலை தவறலாம் என்ற எண்ணம் வந்தாலே தான் கெடும் காலம் வந்ததென்று அறியலாம்.
117.
கெடுவாக வையா துலகம் நடுவாக
நன்றிக்கண்
தங்கியான் தாழ்வு
நடுநிலை தவறாததால் ஒருவன் வறுமையுற்றால் அதை உலகம் தாழ்வுற்றதாக எண்ணிப் பழிக்காது
118.
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
கோடாமை
சான்றோர்க் கணி
எப்புறமும்
சாயாது தராசுமுள்போல் நடுநிலை நிற்பது சான்றோருக்கு அழகு
119.
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம்
இன்மை பெறின்
உள்ளம் ஒரு சார்பாக இல்லாவிடில் சொல்லும் சார்பற்று மொத்தமும் நடுநிலைப்படும்
120.
வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும்
தமபோல் செயின்
பிறர் பொருளையும் தனதுபோல் காத்து நேர்மையோடு வியாபாரம் செய்வது வணிக நெறி.
13. நினைந்தவர் புலம்பல்
121.
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள்
உய்த்து விடும்
அடக்கம் தேவர்களுக்கு இணையாய் வாழவைக்கும். அடங்காமை துன்ப இருளில் தள்ளிவிடும்
122.
காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங்
கில்லை உயிர்க்கு
அடக்கத்தை பெருஞ்செல்வம்போல் காக்கவேண்டும்! அதைவிட சிறந்த செல்வம் வேறில்லை.
123.
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்
தாற்றின்
அடங்கப் பெறின்
அறிவோடு அடக்கமும் உள்ளவன் பண்பு எல்லோராலும் உணர்ந்து பாராட்டப்படும்.
124.
நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
மலையினும்
மாணப் பெரிது
தன் நிலையறிந்து நேர்மை தவறாமல் அடக்கத்தோடிருப்பவன் நிலை மலையை விட உயர்ந்தது
125. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
செல்வர்க்கே செல்வம் தகைத்து
பணிவுடைமை எல்லோருக்கும் சிறப்பு, செல்வத்தோடு பணிவு இன்னொரு
செல்வம்
126.
ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும்
ஏமாப் புடைத்து
ஆமை ஓட்டுக்குள் ஒடுங்குவதுபோல் ஐம்புலனையும் அடக்குபவன் சிறந்து வாழ்வான்
127.
யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
சோகாப்பர்
சொல்லிழுக்குப் பட்டு
எதை அடக்காவிடிலும் நாவடக்கம் தேவை. அன்றேல் நம் சொல்லே துன்பம் தரும்.
128. ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
நன்றாகா தாகி விடும்
சொல்வதில் ஒருசொல் தீமை பயப்பதாயின் மொத்த வார்த்தைகளும்
தீயதாய் மாறிவிடும்.
129. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
நாவினாற் சுட்ட வடு
தீ சுட்ட காயம்கூட ஆறி வடுவாகும் ஆனால் வார்த்தையால் சுட்ட
காயம் மனதில் ஆறவே ஆறாது
130.
கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
அறம்பார்க்கும்
ஆற்றின் நுழைந்து
கற்ற,சினமற்ற பணிவுடையோனை அடைய அறம் அவன்வழியில் காத்திருக்கும்
14. ஒழுக்கம் உடைமை
131.
ஒழுக்கம் விழுப்பந் தரலான் ஒழுக்கம்
உயிரினும்
ஓம்பப் படும்
ஒருவனுக்கு எப்போதும் உயர்வைத் தரும் ஒழுக்கம் அவன் உயிரைவிட உயர்ந்ததாகும்.
132.
புரிந்தோம்பிக் காக்க ஒழுக்கந் தெரிந்தோம்பித்
தேரினும்
அஃதே துணை
ஒழுக்கமே சிறந்த துணை என்பதால் எத்தனை இடர் வரினும் அதைக் காக்கவேண்டும்
133.
ஒழுக்க முடைமை குடிமை இழுக்கம்
இழிந்த
பிறப்பாய் விடும்
ஒழுக்கமுள்ளவனே உயர்ந்த குடிமகன். ஒழுக்கமற்றவன் எக்குடிப் பிறப்பினும் தாழ்ந்தவனே.
134.
மறப்பினும் ஒத்துக் கொளலாகும் பார்ப்பான்
பிறப்பொழுக்கங்
குன்றக் கெடும்
கற்றதை மறப்பதினும் ஒழுக்கம் தவறின் குலப்பெருமை குன்றித் தாழும்.
135.
அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க
மிலான்கண் உயர்வு
பொறாமைக்காரனுக்கு செல்வமும் ஒழுக்கமற்றவனுக்கு உயர்வும் என்றுமே கிட்டாது.
136.
ஒழுக்கத்தி னொல்கார் உரவோர் இழுக்கத்தின்
ஏதம்
படுபாக் கறிந்து
ஒழுக்கம் தவறுவதால் வரும் தாழ்வை உணர்ந்த சான்றோர் என்றும் அதைச் செய்யார்.
137. ஒழுக்கத்தி னெய்துவர் மேன்மை இழுக்கத்தின்
எய்துவ ரெய்தாப் பழி
ஒழுக்கத்தால் உயர்வும் அது தவறுவதால் தீராத அவமானமும்
பழியும் வந்துசேரும்.
138. நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கந் தீயொழுக்கம்
என்றும் இடும்பை தரும்
நல்லொழுக்கம் வாழ்வில் நன்மையும் தீய பழக்கம் என்றும்
துயரமும் தரும்
139. ஒழுக்க முடையவர்க் கொல்லாவே தீய
வழுக்கியும்
வாயாற் சொலல்
தவறியும் தீய சொற்களைச் வாயால் சொல்லாதிருப்பதே ஒழுக்கமுடையோரின் இனிய பண்பாகும்
140. உலகத்தோ டொட்ட ஒழுகல் பலகற்றுங்
கல்லா ரறிவிலா தார்
உலகம் போற்றும் உயரிய ஒழுக்கத்தோடு வாழாதவர் எத்தனை நூல்களைக்
கற்றவரானாலும் கல்லாதவரே.
15. பிறனில் விழையாமை
141. பிறன்பொருளான் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்
தறம்பொருள் கண்டார்க ணில்
பிறன் மனைவியை விரும்பும் அறியாமை அறநூல்களை உணர்ந்து
கற்றவனுக்கு இராது
142.
அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை
நின்றாரிற்
பேதையா ரில்
பிறன்மனைவியை அடைய நினப்பவர்கள் அனைத்து அறங்களையும் விட்ட கடைநிலை மனிதர்கள்.
143.
விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை
புரிந்தொழுகு வார்
தன்னை நம்பியவன் மனைவியைத் தவறாய் அடைய நினைப்பவன் பிணத்துக்கு ஒப்பாவான்.
144.
எனைத்துணைய ராயினும் என்னாந் தினைத்துணையும்
தேரான்
பிறனில் புகல்
பிழையென்று சற்றும் நினையாமல் பிறன் மனைவிமேல் ஆசை வைப்பவன் அறிவு வீண்.
145. எளிதென இல்லிறப்பா னெய்துமெஞ் ஞான்றும்
விளியாது
நிற்கும் பழி
எளிதாக அடைய எண்ணி பிறன் மனைவியை அணுகுபவன் காலத்துக்கும் அழியாப் பழியடைவான்
146. பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண்
பிறன் மனைவியை அடைய நினைப்பவனை பகை, பாவம், பயம், பழிச்சொல்
இவை என்றும் விலகாது
147.
அறனியலான் இல்வாழ்வா னென்பான் பிறனியலான்
பெண்மை
நயவா தவன்
அடுத்தவன் மனைவியை தவறான நோக்கத்தில் நாடாதவனே குன்றாத அறவழி வாழ்க்கை வாழ்பவன்
148. பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்
கரனென்றோ ஆன்ற வொழுக்கு
பிறன் மனைவியை இச்சையோடு நோக்காமை நல்லறம் மட்டுமன்றி
உயர்ந்த ஒழுக்கமுமாகும்
149. நலக்குரியார் யாரெனின் நமநீர் வைப்பின்
பிறர்க்குரியாள் தோள்தோயா தார்
பிறன் மனைவியைத் தீண்டாதவரே கடல்சூழ் உலகில் நலமுற வாழத்
தக்கவர்.
150.
அறன்வரையா னல்ல செயினும் பிறன்வரையாள்
பெண்மை
நயவாமை நன்று
பிறன் மனைவியைத் தவறாக அடைய நினைப்பது அறவழி நடக்காதிருப்பதைவிட மிகத் தீங்கானது
16. பொறையுடைமை
151. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை
தன்னைத் தோண்டுபவரையும் தாங்கும் நிலம்போலத் தூற்றுவோரையும்
மதித்தல் பண்பு
152.
பொறுத்த லிறப்பினை யென்றும் அதனை
மறத்த
லதனினும் நன்று
பிறர் செய்த பெரும் தீங்கைப் பொறுத்துக்கொள்வதைவிட மன்னித்து மறத்தல் மிகச்சிறந்தது
153.
இன்மையு ளின்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை
மடவார்ப் பொறை
பெரும் வறுமை விருந்தினரைப் பேண இயலாமை பெரும் வலிமை அறிவிலார் செயல் பொறுத்தல்
154.
நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி
யொழுகப் படும்
நிறைவானவராய் போற்றப்பட பொறுமையுடையவராய் இருத்தலே முழு முதல் தகுதியாகும்
155.
ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப்
பொன்போற் பொதிந்து
தனக்குத் தீமை செய்தவனையும் தண்டிக்காமல் பொறுமை காப்பவரை உலகம் போற்றும்
பொன்றுந்
துணையும் புகழ்
தண்டிப்பவருக்கு அன்று ஒருநாள் இன்பம் மன்னிப்பவருக்கோ இறவாப் புகழ்
157.
திறனல்ல தற்பிறர் செய்யினும் நோநொந்
தறனல்ல
செய்யாமை நன்று
பிறர் தமக்குத் தீமை செய்த வருத்தத்தில் பழிவாங்க தீமை செய்யாதவரே உயர்ந்தவர்
158. மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாந்தந்
தகுதியான் வென்று விடல்
ஆணவத்தால் நமக்குத் தீமை செய்பவரையும் நாம் தளராத பொறுமையால்
வெல்லமுடியும்
159.
துறந்தாரின் தூய்மை யுடையார் இறந்தார்வாய்
இன்னாச்சொல்
நோற்கிற் பவர்
முறையற்றுத் தீயசொல் பேசுவோரைப் பொறுமையோடு சகிப்போர் துறவிக்கு நிகர்
160.
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொ
னோற்பாரிற் பின்
கடுஞ்சொல்லைப் பொறுத்துக்கொள்பவர் உண்ணாமல் தவமிருப்பவரினும் உயர்ந்தவர்
17. அழுக்காறாமை
161. ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத்
தழுக்கா றிலாத இயல்பு
உள்ளத்தில் பொறாமையில்லாக் குணமே ஒருவனுக்கு மிகப் பெரிய
ஒழுக்க நெறியாகும்.
162. விழுப்பேற்றின் அஃதொப்ப தில்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்
யார்மீதும் பொறாமை கொள்ளாத மனமே ஒருவன் பெறக்கூடிய பெரும் செல்வம்
163. அறனாக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம் பேணா
தழுக்கறுப் பான்
பிறன் உயர்வுக்குப் பொறாமைப் படுபவன் தனக்கான உயர்வையும்
அதனால் இழப்பான்
164. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்
ஏதம் படுபாக் கறிந்து
பொறாமையின் விளைவு துன்பமே என்பதை அறிந்தே நல்லோர் அதைத்
தவிர்ப்பர்
165. அழுக்கா றுடையார்க் கதுசாலும் ஒன்னார்
வழுக்கியுங் கேடீன் பது
பொறாமை கொண்டவனை அழிக்கப் பகை வேண்டாம் பொறாமையே அவனை
முற்றாக அழித்துவிடும்
166. கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம்
உண்பதூஉ மின்றிக் கெடும்
ஒருவன் பெறும் உதவி கண்டு பொறாமை கொள்பவன் சுற்றத்தோடு வறுமையடைவான்
167. அவ்வித் தழுக்கா றுடையானைச் செய்யவள்
தவ்வையைக் காட்டி விடும்
பொறாமை கொண்டவனை ஶ்ரீதேவி வெறுத்துத் தன் தமக்கை மூதேவியிடம் அனுப்பிவிடுவாள்
168. அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்
தீயுழி உய்த்து விடும்
பொறாமை எனும் தீமை தனைக் கொண்டவனைச் செல்வத்தை இழந்து
தீயவழி நடக்கச் செய்யும்
169. அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
கேடும் நினைக்கப் படும்
பொறாமை கொண்டவன் இன்புற்றிருப்பதும் பொறாமையற்றவன் துன்பமடைவதும் ஆச்சர்யமே
170. அழுக்கற் றகன்றாரும் இல்லையஃ தில்லார்
பெருக்கத்தில் தீர்ந்தாரு மில்
பொறாமை கொண்டு உயர்ந்தவரும் அது இன்மையால் தாழ்ந்தவரும்
உலகில் இல்லை
18. வெஃகாமை
171. நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடிபொன்றிக்
குற்றமும் ஆங்கே தரும்
அநீதியாக அடுத்தவர் பொருளை அடைய நினைத்தால் அவன் குடி
கெட்டுப் பழி வரும்
172. படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்
நடுவன்மை நாணு பவர்
நீதிக்கு அஞ்சுபவர்கள் பிறர்பொருளை பறிக்கும் பழி தரும் செயல்களைச் செய்யமாட்டார்கள்
173. சிற்றின்பம் வெஃகி யறனல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்
அறநெறி வாழ்வின் இன்பம் உணர்ந்தவர் எந்நாளும் பிறருக்குத் தீமை செய்ய அஞ்சுவர்
174. இலமென்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற
புன்மையில் காட்சி யவர்
புலனடக்கமுள்ள உயர் குணத்தோர் வறுமையிலும் பிறர் பொருளைக்
கவர எண்ணமாட்டார்
175. அஃகி யகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்
வெஃகி வெறிய செயின்
பிறர் பொருளை அறநெறி தவறிக் கவரநினைப்பவர் எத்தனை அறிவு
பெற்றிருந்தும் என்ன பயன்?
176. அருள்வெஃகி யாற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்
பொல்லாத சூழக் கெடும்
அறநெறி வாழ்பவன் பிறர்பொருளைப் பிழையாய் கவர நினைத்தால் அழிந்துபோவான்
177. வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்
மாண்டற் கரிதாம் பயன்
பிறர் பொருளைக்
கவர்ந்து வளமுற நினைத்தால் அந்த வளம் யாதொரு பலனுமின்றிப்போகும்
178. அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்
தன் செல்வம் குறையக்கூடாதென நினைப்பவன் பிறர் பொருளை அடைய எண்ணமாட்டான்
179. அறனறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேருந்
திறனறிந் தாங்கே திரு
பிறர்பொருளை விரும்பா அறிவுடையோருக்கு திறமைக்கேற்ற செல்வம் விரும்பிச் சேரும்
180. இறலீனும்
எண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை யென்னுஞ் செருக்கு
பிறர்
பொருளைக் கவர எண்ணுதல் அழிவையும் அவ்வாறு எண்ணாமை புகழையும் தரும்
19. புறங்கூறாமை
181. அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது
அறநெறியில் வாழமுடியாவிட்டாலும் பிறரைப் பற்றி அவதூறு
சொல்லாமல் வாழ்தல் மிக இனிது
182. அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை
இல்லாதபோது புறம் பேசிவிட்டு, நேரில் புகழ்வது அறமில்லாதன
செய்தலைவிடப் பெரிய தீங்கு
183. புறங்கூறிப்
பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும்
ஆக்கந் தரும்
பிறரைப்
புறம்கூறிப் பொய்யனாய் வாழ்வதைவிட இறந்துபோவதே பெருமைக்குரியது
184. கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்
முகத்துக்கு நேராக கடுமையாகப் பேசலாம் ஆனால் மறைவில் புறம்
கூறல் பிழை
185. அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்
புறம்
பேசும் தன்மையைக் கொண்டே ஒருவன் அறவழி நில்லாதவன் என்பதறியலாம்
186. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்
பிறர் இல்லாதபோது புறம்பேசித் திரிபவன் குறைகளை ஊரே அறிந்து
பழித்துப் பேசும்
187. பகச்சொல்லிக்
கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல்
தேற்றா தவர்
இனிதாய்ப்
பழகி நட்பு பேணத் தெரியாதோர் புறம்பேசி உள்ள உறவையும் இழப்பர்
188. துன்னியார் குற்றமுந் தூற்றும்
மரபினர்
என்னைகொல்
ஏதிலார் மாட்டு
நெருங்கியவரையே
அவர் இல்லாதபோது தூற்றுபவர் அயலாரை எப்படிப் பழி பேசுவர்!
189. அறனோக்கி
யாற்றுங்கொல் வையம் புறநோக்கிப்
புன்சொ லுரைப்பான்
புறை
அருகே
இல்லாதோரைப் புறம்பேசித் திரிவோரையும் அறம் கருதிச் சுமக்கிறது பூமி
190. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு
பிறர்
தவறுகளைப் புறம் பேசுமுன் தன் பிழைகளை உணர வாழ்வு இனிதாகும்
20. பயனில சொல்லாமை
191. பல்லார்
முனியப் பயனில சொல்லுவான்
எல்லோரும் எள்ளப் படும்
பலரும்
வெறுக்கும்படி பயனற்ற சொற்களைப் பேசித் திரிபவனை அனைவருமே இகழ்வார்கள்
192. பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கட் செய்தலிற் றீது
பலர்முன் பயனில்லாத சொற்களைப் பேசுவது நண்பருக்குத் தீங்கு
செய்வதைவிடக் கொடியது
193. நயனில
னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை
ஒருவன்
பயனற்றவற்றை விரிவாகப் பேசிக்கொண்டிருப்பதே அவன் பயனற்றவன் என்பதைச் சொல்லும்
194. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து
பயனில்லாத பண்பற்ற சொற்களைப் பேசுவதே ஒருவனை நற்குணமற்றவனாக்கிவிடும்
195. சீர்மை
சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்
இனிய
குணமுடையோர் பயனற்ற வார்த்தைகள் பேசினால் அவரது பேரும் புகழும் அகன்றுவிடும்
196. பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்
பயனற்ற
சொற்களையே எப்போதும் சொல்லித் திரிபவனை மனிதன் என்பதைவிட வீணானவன் என்பதே தகும்
197. நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று
இனிமையற்ற சொற்களைக்கூடச் சொல்லலாம் - ஆனால் பயனற்றவை
சொல்வது அறிஞர்க்கு அழகல்ல.
198. அரும்பய
னாயும் அறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்
அரிய
செயல் செய்யும் ஆற்றல் உள்ளோர் பயனில்லாத சொற்களை எந்நாளும் பேசமாட்டார்கள்
199. பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்
மயக்கமில்லாத் தெளிந்த அறிவுடையோர் பயனற்ற சொல்லை மறந்தும்
சொல்லார்
200. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்
தேவையற்ற
சொற்களை விடுத்து, பயனளிக்கக்கூடியசொற்களையே சொல்லுதல் நன்மை தரும்
21. தீவினையச்சம்
201. தீவினையார்
அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை யென்னுஞ்
செறுக்கு
நலமே விளையுமென்றாலும்
தீயன செய்ய நல்லோர் அஞ்சுவர் ஆனால் தீயோர் அஞ்சார்
202. தீயவை தீய பயத்தலால் தீயவை
தீயினும் அஞ்சப் படும்
தீய
செயல்கள் தீய விளைவையே தருவதால் அதை தீயைத் தொடாமல் தவிர்ப்பதுபோல் தவிர்க்கவேண்டும்
203. அறிவினு ளெல்லாந் தலையென்ப தீய
செறுவார்க்குஞ்
செய்யா விடல்
தமக்குக் கேடு செய்தவர்க்கும்
தீங்கே செய்யாதிருப்பது உயர்ந்த அறிவின் அடையாளம்
204. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழுஞ்
சூழ்ந்தவன் கேடு
பிறருக்குக் கெடுதல்
செய்யக் கனவில் எண்ணினாலும் தர்மம் அவனை அழித்துவிடும்
205. இலனென்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றுப் பெயர்த்து
வறுமையைப்
போக்கிக்கொள்ளத் தீமை செய்தால் மேலும் வறுமையில்தான் வாட நேரிடும்
206. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா
தான்
தனக்குத் துன்பம் வரக்கூடாது
என்று நினைப்பவன் பிறருக்கு அதை செய்யக்கூடாது
207. எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென் றடும்
எந்தப்
பகையிலிருந்தும் தப்பலாம் தீமை செய்ததால் வந்த பகைக்குத் தப்பமுடியாது
208. தீயவை
செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைந்
தற்று
நிழல் மறையாது காலடியில்
இருப்பதுபோல் தீயவை செய்தவருக்கு அழிவு காத்திருக்கும்
209. தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்
துன்னற்க தீவினைப் பால்
தன்
நலம் கருதுபவன் பிறருக்குச் சிறுதுன்பம் தரும் செயலையும் செய்யமாட்டான்
210. அருங்கேடன்
என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான்
எனின்
தவறான வழியில் சென்று
பிறருக்குத் தீமை செய்யாதவனே கேடற்றவன் என்று அறியப்படுவான்
22. ஒப்புரவறிதல்
211. கைம்மாறு
வேண்டா கடப்பாடு மாரிமாட்
டென்னாற்றுங்
கொல்லோ உலகு
எந்தப் பிரதிபலனும் எதிர்பாராது
பொழியும் மழை போன்றது சிலர் செய்யும் உதவி
212. தாளாற்றித்
தந்த பொருளெல்லாந் தக்கார்க்கு
வேளாண்மை
செய்தற் பொருட்டு
நல்லோர் முயன்று ஈட்டும்
பொருளெல்லாம் தகுதியுள்ளவருக்கு உதவவே ஆகும்
213. புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே
ஒப்புறவின் நல்ல பிற
இயலாதோருக்கு
உதவுவதைவிட சிறந்த பண்பு வேறெதுவும் இவ்வுலகிலும் தேவருலகிலும் இல்லை
214. ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்
இயலாதவர்க்கு
உதவும் இரக்கமுள்ளவரைத் தவிர பிறர் இறந்தவராகவே கருதப்படுவர்
215.
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன்
திரு
பொதுநலன்
பேணும் அறிவுடையோன் செல்வம் நீர் நிறைந்த குளம்போல் ஊரார் அனைவருக்கும் உதவும்.
216. பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்
இரக்கமுள்ளவரிடம்
சேரும் செல்வம் ஊர்நடுவே கனிமரம் பழுத்ததுபோல் பயன் தரும்
217. மருந்தாகித்
தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை
யான்கண் படின்
இரக்கமுள்ளவன் செல்வம்
எல்லாபாகமும் மருந்தாகும் நல்ல மரம்போலப் பலன்தரும்
218. இடனில்
பருவத்தும் ஒப்புரவிற் கொல்கார்
கடனறி காட்சி
யவர்
கொடுக்க ஏதுமற்ற காலத்தும்
பிறருக்கு உதவும் கடமை மறக்கமாட்டார்கள் இரக்கமுடையோர்
219. நயனுடையான்
நல்கூர்ந்தா னாதல் செயும்நீர
செய்யா தமைகலா
வாறு
இயலாதோருக்கு மனதார உதவுவோர்
அது முடியாது போகையில் வறுமையுற்றதாய் வருந்துவர்
220. ஒப்புரவி
னால்வருங் கேடெனின் அஃதொருவன்
விற்றுக்கோள்
தக்க துடைத்து
பிறருக்கு உதவுவதால்
கேடு வரும் எனில் அதைத் தன்னை விற்றும் வாங்கலாம்
23. ஈகை
221. வறியார்க்கொன்
றீவதே ஈகைமற் றெல்லாங்
குறியெதிர்ப்பை
நீர துடைத்து
இல்லாதவருக்கு வழங்குவதே
கொடை மற்றோருக்குக் கொடுப்பது பிரதிபலன் கருதியே
222. நல்லா
றெனினுங் கொளல்தீது மேலுலகம்
இல்லெனினும்
ஈதலே நன்று
நல்வழியிலும் பெறல் தீது.தானம்
செய்தால் மோட்சம் கிட்டாதெனிலும் கொடுத்தலே நன்று
223. இலனென்னும் எவ்வம் உரையாமை ஈதல்
குலனுடையான் கண்ணே யுள
தன்
வறுமையை பிறர் அறியாது மறைத்து இல்லாதோருக்கு உதவுதல் நற்குடிப் பிறந்தவர் பண்பு
224. ஒத்த தறிவான் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள்
வைக்கப் படும்
உழைக்க இயலாதோருக்கு
உதவுபவரே உயிர் வாழ்பவர். மற்றோர் பிணத்துக்கு நிகர்
225. ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்
பசியடக்கி
விரதம் இருப்பதினும் பெரிய தவம் பசித்தோருக்கு உணவிட்டுக் காத்தல்
226. அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான்
பொருள்வைப் புழி
இல்லாதோர் பசி தீர்ப்பதே
வருங்கால நலனுக்கு நம் பொருளைச் சேர்த்துவைக்குமிடம்
227. பாத்தூண்
மரீஇ யவனைப் பசியென்னுந்
தீப்பிணி
தீண்ட லரிது
பகிர்ந்துண்ணும் வழக்கம்
உள்ளவனை பசியென்னும் நோய் எந்தக்காலத்திலும் அணுகுவதில்லை
228. ஈத்துவக்கும்
இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும்
வன்க ணவர்
பிறருக்கு வழங்காது காத்த
செல்வம் இழந்த கொடியோர் ஈகை இன்பம் அறியார்
229. இரத்தலின்
இன்னாது மன்ற நிரப்பிய
தாமே தமிய
ருணல்
பிறருக்குக் கொடுத்தால்
குறையுமே என்று தானே உண்பது பிச்சையெடுத்து வாழ்வதைவிடக் கொடியது
230. சாதலின்
இன்னாத தில்லை இனிததூஉம்
ஈத லியையாக்
கடை
வறியோருக்கு ஏதும் கொடுக்க
இயலாத நிலையில் ஏற்படும் மனவருத்தம் சாவைவிடக்கொடிய துயரமானது
24. புகழ்
231. ஈத லிசைபட வாழ்தல் அதுவல்ல
தூதிய மில்லை
உயிர்க்கு
இல்லாதவர்க்குக் கொடுப்பதும்,
பெரும்புகழோடு வாழ்வதுமே மனித வாழ்வுக்கு அர்த்தம் தருபவை
232. உரைப்பாரு
ரைப்பவை யெல்லாம் இரப்பார்க்கொன்
றீவார்மேல்
நிற்கும் புகழ்
எல்லாப் போற்றுதலும்
இல்லாதோருக்கு உதவுபவர் புகழைப்போற்றுவதே ஆகும்
233. ஒன்றா
உலகத் துயர்ந்த புகழல்லாற்
பொன்றாது
நிற்பதொன் றில்
நிகரற்றும் அழிவற்றும்
என்றும் நிலைத்துநிற்பது புகழன்றி வேறெதுவும் இல்லை
234. நிலவரை
நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது
புத்தே ளுலகு
திறமையுள்ளோரைவிட நல்லன
செய்து புகழோடு வாழ்பவரை மூவுலகும் புகழ்ந்து போற்றும்
235. நத்தம்போல்
கேடும் உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க்
கல்லால் அரிது
துயரிலும் புகழோடு வாழ்வதும்
இறந்தும் அதைக் காப்பதும் மேலோருக்கே உரியது
236. தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று
எந்தத்துறையிலும்
வெற்றிபெறும் முனைப்பில்லாதவர் அதில் ஈடுபடாதிருப்பதே நல்லது
237. புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை
நோவ தெவன்
புகழோடு வாழும் திறமையற்றோர்
அதற்குத் தம்மை நோகாது குறை சொல்வோரை நோவதில் என்ன பலன்?
238. வசையென்ப
வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ
விடின்
தனக்குப் பிறகும் நிற்கும்
புகழைச் சேர்க்காத வாழ்வு வீணென்பர் அறிவுடையோர்
239. வசையிலா
வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த
நிலம்
உயிர்போன்ற புகழில்லா
வாழ்வு வாழ்வோரை சுமக்கும் பூமி விளைச்சலற்ற நிலமாகிப் போகும்
240. வசையொழிய
வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே
வாழா தவர்
பழியின்றிப் புகழோடு
வாழ்வதே வாழ்க்கை. அதில்லாது வாழும் வாழ்வு பயனற்று வீணானது
25. அருளுடைமை
241. அருட்செல்வஞ்
செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார்
கண்ணு முள
இழிந்தோரிடமும் பொருளிருக்கும்
உயர்ந்தோரிடமோ அருட்செல்வமிருக்கும்
242. நல்லாற்றான் நாடி யருளாள்க பல்லாற்றால்
தேரினும்
அஃதே துணை
எல்லாவழிகளிலும் ஆராய்ந்து
அருள்வழி நேர்மையாக வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை நெறி
243. அருள்சேர்ந்த
நெஞ்சினார்க் கில்லை இருள்சேர்ந்த
இன்னா உலகம்
புகல்
அருளோடு சிந்தித்து வாழ்பவர்
அறியாமை எனும் துன்ப இருளில் சிக்கமாட்டார்
244. மன்னுயி
ரோம்பி அருளாள்வார்க் கில்லென்ப
தன்னுயி ரஞ்சும்
வினை
பிற உயிர்களை அன்போடு
காத்து வாழ்வோருக்கு தன்னுயிர் பற்றிய பயம் வருவதில்லை
245. அல்லல்
அருளாள்வார்க் கில்லை வளிவழங்கு
மல்லன்மா
ஞாலங் கரி
அன்புடையோரை துன்பம்
நெருங்காதென்பதற்கு காற்றுண்டு வாழும் இப் பூவுலகே சாட்சி
246. பொருள்நீங்கிப்
பொச்சாந்தா ரென்பர் அருள்நீங்கி
அல்லவை செய்தொழுகு
வார்
அன்பின்றித் தீமைசெய்து
வாழ்பவர் கடமை மறந்து பொருளற்று வாடுவர்
247. அருளில்லார்க்
கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்
கிவ்வுலகம்
இல்லாகி யாங்கு
பொருளற்றோனுக்கு இன்பம்
இல்லாமை போல் அன்பற்றவனுக்கு புகழில்லை
248. பொருளற்றார்
பூப்ப ரொருகால் அருளற்றார்
அற்றார்மற்
றாதல் அரிது
பொருளை இழந்தால் திரும்பப்
பெறலாம் ஆனால் கருணை மனதை இழந்தால் இழந்ததுதான்
249. தெருளாதான்
மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்
அருளாதான்
செய்யும் அறம்
அன்பில்லாதவன் செய்யும்
தர்மம், ஞானமற்றவன் ஒரு நூலை ஆராய்வதனை ஒத்தது
250. வலியார்முன்
தன்னை நினைக்காதான் தன்னின்
மெலியார்மேற்
செல்லு மிடத்து
எளியோரை துன்புறுத்த
எண்ணுகையில் வலியோர்முன் தன்நிலை நினைக்கவேண்டும்
26. புலால் மறுத்தல்
251. தன்னூன்
பெருக்கற்குத் தான்பிறி தூனுண்பான்
எங்ஙனம் ஆளும்
அருள்
தன் உடல் நலம் பெருக்க
பிற உயிர் கொன்று உண்பவன் கருணையோடிருப்பது அரிது
252. பொருளாட்சி
போற்றாதார்க் கில்லை அருளாட்சி
ஆங்கில்லை
ஊன்றின் பவர்க்கு
பொருளைக் காக்காதார்
பொருளுடையாரில்லை புலால் உண்போர் அருளாளரில்லை
253. படைகொண்டார்
நெஞ்சம்போல் நன்றூக்கா தொன்றன்
உடல்சுவை
யுண்டார் மனம்
கத்திஎடுத்தவன் இரக்கம்
கொள்ளாமைபோல் புலால் உண்பவன் கருணைகொள்வது அரிது
254. அருளல்ல
தியாதெனிற் கொல்லாமை கோறல்
பொருளல்ல
தவ்வூன் தினல்
அன்பென்பது கொல்லாமை
உயிர்க்கொலை இரக்கமற்றது கொன்று அதை உண்பது அறமில்லாத செயல்
255. உண்ணாமை
யுள்ள துயிர்நிலை ஊனுண்ண
அண்ணாத்தல்
செய்யா தளறு
புலால் மறுப்பால் உயிர்கள்
வாழ்கின்றன. புதைகுழிகூட மனம் விரும்பி உயிருண்பதில்லை
256. தினற்பொருட்டால்
கொல்லா துலகெனின் யாரும்
விலைப்பொருட்டால்
ஊன்றருவா ரில்
புலால் உண்ண கொலைசெய்வோர்
இல்லாவிடில் விற்போரும் இருக்கமாட்டார்கள்
257. உண்ணாமை
வேண்டும் புலாஅல் பிரிதொன்றன்
புண்ண துணர்வார்ப்
பெரின்
மாமிசம் இன்னொரு உயிரின்
உடற்புண் என்பதை உணர்ந்தவர்கள் அதை உண்ணமாட்டார்கள்
258. செயிரின்
தலைப்பிரிந்த காட்சியா ருண்ணார்
உயிரின் தலைப்பிரிந்த
ஊன்
பிழையில்லா அறிவுடையோன்
ஒரு உயிரைக் கொன்று அதன் இறைச்சியை உண்ணமாட்டான்
259. அவிசொரிந்
தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத்
துண்ணாமை நன்று
யாகம் வளர்த்து வழிபடுவதைவிட
ஒரு உயிரைக் கொன்று உண்ணாதிருப்பது புனிதமானது
260. கொல்லான்
புலாலை மறுத்தானைக் கைகூப்பி
எல்லா உயிருந்
தொழும்
உயிர்க்கொலை செய்து உண்ணாதவனை
உலக உயிர்களெல்லாம்
கை கூப்பி வணங்கிப் போற்றும்
27. தவம்
261. உற்றநோய்
நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
அற்றே தவத்திற்
குரு
துன்பத்தில் கலங்காமலும்
பிறருக்குத் தீங்கு செய்யாமலும் வாழ்வதே தவமாகும்
262. தவமுந்
தவமுடையார்க் காகும் அவமதனை
அஃதிலார்
மேற்கொள் வது
ஒழுக்கமும் மனஉறுதியும்
இல்லாதவர் தவவாழ்வை மேற்கொள்ள விழைவது வீண் முயற்சியாகும்
263. துறந்தார்க்குத்
துப்புரவு வேண்டி மறந்தார்கொன்
மற்றை யவர்கள்
தவம்
துறவிகளுக்கு உதவுவதே
போதுமென்று, சுய ஒழுக்கத்தை விட்டுவிடக்கூடாது
264. ஒன்னார்த்
தெறலும் உவந்தாரை யாக்கலும்
எண்ணின் தவத்தான்
வரும்
மன ஒருமை இருந்தால் நொடியில்
பகைவரை அழிக்கவும் நண்பரைக் காக்கவும் முடியும்
265. வேண்டிய வேண்டியாங் கெய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்
மன உறுதியோடு
முயன்றால் விரும்பியது விருப்பப்படி கைகூடும் எனவே முயற்சி நல்லது
266. தவஞ்செய்வார்
தங்கருமஞ் செய்வார்மற் றல்லார் அவஞ்செய்வார் ஆசையுட் பட்டு
மனஒருமை உளோரே கடமை செய்து
வாழ்வர் மற்றோர் ஆசை வசத்தில் வீழ்வர்
267. சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந்
துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
புடமிட ஒளிவீசும் பொன்
போல் துன்பத்தில் கலங்காத தவ வாழ்வு ஒளிவீசும்
268. தன்னுயிர் தானறப் பெற்றானை
ஏனைய
மன்னுயி ரெல்லாந் தொழும்
தான், தன்னுயிர் எனும்
அகந்தையும் பற்றும் துறந்தவனை பிற உயிர்களெல்லாம் வணங்கும்
269. கூற்றங்
குதித்தலுங் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட்
டவர்க்கு
மன ஒருமையால்
வெல்லும் வலிமை பெற்றவனிடம் சாவும் பயந்து தோற்று ஓடும்
270. இலர்பல
ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர்
நோலா தவர்
ஆற்றல் உள்ளோர் சிலரும்
இலாதார் பலரும் இருக்கக் காரணம் மன ஒருமை உள்ளோர் குறைவு என்பதே
28. கூடா ஒழுக்கம்
271. வஞ்ச மனத்தான் படிற்றொழுக்கம் பூதங்கள்
ஐந்தும் அகத்தே நகும்
உத்தம
வேட வஞ்சகன் நடத்தை கண்டு அவன் உள்ளிருக்கும் பஞ்சபூதங்களும் நகைக்கும்
272. வானுயர் தோற்றம் எவன்செய்யுந் தன்னெஞ்சத்
தானறி குற்றப் படின்
மனம்
குற்றமென்று சொல்வதைச் செய்பவன் எந்த உயர்நிலையில் இருந்தும் என்ன பலன்
273. வலியில்
நிலைமையான் வல்லுருவம் பெற்றம்
புலியின்தோல்
போர்த்துமேய்ந் தற்று
மனவலிமை அற்றவன் தவம்
புலித்தோல் போர்த்த பசு புல் மேய்தல்போல
274. தவமறைந்
தல்லவை செய்தல் புதல்மறைந்து
வேட்டுவன்
புள்சிமிழ்த் தற்று
மேலானோர் கீழானவை செய்தல்
மறைந்திருந்து வேடன் பொறி வைப்பதற்கு ஒப்பானது
275. பற்றற்றேம்
என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்
றேதம் பலவுந்
தரும்
பற்றில்லாதவர் போல் ஏமாற்றித்
திரிவோர் செய்தவை நினைத்து வருந்த நேரும்
276. நெஞ்சின்
துறவார் துறந்தார்போல் வஞ்சித்து
வாழ்வாரின்
வன்கணா ரில்
பற்றினைத் துறக்காமல்
துறவி வேடம் போடுவோரைவிட இரக்கமற்றோர் யாருமில்லை
277. புறங்குன்றி
கண்டனைய ரேனும் அகங்குன்றி
மூக்கிற்
கரியா ருடைத்து
வெளியே குன்றிமணிபோல்
சிவந்தும் உள்ளம் அதன் முனைபோல் கறுத்தும் உளோர் பலர்
278. மனத்தது
மாசாக மாண்டார்நீ ராடி
மறைந்தொழுகு
மாந்தர் பலர்
நீரில் மூழ்கி கண்மறைவாவதுபோல்
புனித வேடத்தில் மனக் கபடம் மறைத்து வாழ்வோர் பலர்
279. கணைகொடியது
யாழ்கோடு செவ்விதாங் கனை
வினைபடு பாலாற்
கொளல்
நேரான அம்பு கொடியது,
வளைந்தாலும் யாழின் இசை இனிது –உருவம் வைத்து எடைபோடல் தவறு
280. மழித்தலும்
நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து
விடின்
உலகம் வெறுக்கும் செயல்களைக்
கைவிட்டபின் மொட்டையோ தாடியோ துறவுவேடம் தேவையில்லை
29. கள்ளாமை
281. எள்ளாமை
வேண்டுவா னென்பான் எனைத்தொன்றுங் கள்ளாமை காக்கதன் நெஞ்சு
பிறர் பொருளைக் களவாடும்
தீய எண்ணமற்றவனே இகழ்ச்சி அடையாமல் வாழ முடியும்
282. உள்ளத்தால்
உள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தால்
கள்வே மெனல்
பிறர்பொருளை அவர் அறியாது
களவாடி அடைய மனதால் நினைப்பதே பெரும் குற்றமாகும்
283. களவினா
லாகிய ஆக்கம் அளவிறந்
தாவது போலக்
கெடும்
திருடிச்சேர்க்கும் செல்வம்
பெருகுவதுபோல் தோன்றினாலும் இருப்பதையும் அழித்துப் போய்விடும்
284. களவின்கண்
கன்றிய காதல் விளைவின்கண்
வீயா விழுமந்
தரும்
பிறர் பொருளைக் களவாடுவதில்
ஏற்படும் விருப்பம் அது நிறைவேறிய பிறகு துயரமே தரும்
285. அருள்கருதி
அன்புடைய ராதல் பொருள்கருதிப்
பொச்சாப்புப்
பார்ப்பார்க ணில்
களவாட எண்ணிப் பழகுவோர்
அன்பும் அருளும் கொண்டிருக்க மாட்டார்கள்
286. அளவின்கண்
நின்றொழுக லாற்றார் களவின்கண்
கன்றிய காத
லவர்
ஆடம்பரமின்றி எல்லைக்கு
உட்பட்டு வாழாதோரே பிறர்பொருளைக் களவாடும் பேராசை கொள்வர்
287. களவென்னுங்
காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்க
ணில்
அளவறிந்து அதன்படி வாழ்வோருக்கு
பிறர்பொருளைக் களவாடும் எண்ணம் என்றுமே வராது
288. அளவறிந்தார்
நெஞ்சத் தறம்போல நிற்குங்
களவறிந்தார்
நெஞ்சில் கரவு
அளவோடு வாழ்வோர் நெஞ்சில்
அறமும் களவு செய்வோர் நெஞ்சில் வஞ்சமும் வாழும்
289. அளவல்ல
செய்தாங்கே வீவர் களவல்ல
மற்றைய தேற்றா
தவர்
பிறர் பொருளைக் களவாடுதல்
தவிர தொழிலேதும் அறியாதோர் அடாத அந்தச் செயலாலே அழிந்துபோவர்
290. கள்வார்க்குத்
தள்ளும் உயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே
ளுலகு
கள்வரை அவர் உயிரே வெறுத்து
ஒதுங்கும் நல்லோர் புகழோ நிலைத்து வாழும்
30. வாய்மை
291. வாய்மை
எனப்படுவ துயாதெனின் யாதொன்றுந்
தீமை யிலாத
சொலல்
பிறருக்கு சிறிதளவும்
தீமை ஏற்படுத்தாத சொல்லைச் சொல்வதே பேருண்மை எனப்படும்
292. பொய்மையும்
வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு
மெனின்
யாருக்கும் பிழையற்ற
நன்மை தருமானால் பொய் சொல்வதும் வாய்மையென்றே கருதப்படும்
293. தன்நெஞ்
சறிவது பொய்யற்க பொய்த்தபின்
தன்நெஞ்சே
தன்னைச் சுடும்
மனம் பொய்யென்று உரைப்பதை
துணிந்து சொன்னால் மனசாட்சியே அவனை தண்டிக்கும்
294. உள்ளத்தாற்
பொய்யா தொழுகின் உலகத்தார்
உள்ளத்து
ளெல்லாம் உளன்
மனதால்கூட பொய்பேச எண்ணாதவன்
உலகத்தார் உள்ளமெல்லாம் உயர்ந்து இனிதே வாழ்வான்
295. மனத்தொடு
வாய்மை மொழியின் தனத்தொடு
தானஞ்செய்
வாரின் தலை
எந்நாளும் மனப்பூர்வமாக
உண்மையே பேசுபவர் தவமும் தானமும் செய்வோரைவிட உயர்ந்தவர்
296. பொய்யாமை
யன்ன புகழில்லை எய்யாமை
எல்லா அறமுந்
தரும்
பொய் சொல்லாது வாழும்
வாழ்வு நல்ல புகழ் தருவதோடு நாம் அறியாமலே எல்லா வளமும் தரும்
297. பொய்யாமை
பொய்யாமை ஆற்றின் அறம்பிற
செய்யாமை
செய்யாமை நன்று
பொய்யே சொல்லாமல் வாழ
முடிந்தவன் பிற அறங்களைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை
298. புறந்தூய்மை
நீரா னமையும் அகந்தூய்மை
வாய்மையால்
காணப் படும்
நீராடுவதால் உடல் சுத்தமாகும்
எப்போதும் உண்மையே பேச உள்ளம் தூய்மையாகும்
299. எல்லா
விளக்கும் விளக்கல்ல சான்றோர்க்குப்
பொய்யா விளக்கே
விளக்கு
புறஇருள் போக்கும் தீபத்தைவிட
மன இருள் போக்கும் பொய்யாமையே சிறந்த தீபம்
300. யாமெய்யாக்
கண்டவற்று ளில்லை எனைத்தொன்றும் வாய்மையின் நல்ல பிற
மிகச்சிறந்தது என்று
சொல்ல வாய்மையைவிட உலகில் உயர்ந்த பண்பு வேறேதுமில்லை
31. வெகுளாமை
301. செல்லிடத்துக்
காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் காக்கினென் காவாக்கா லென்
உயர்ந்தோரைவிட, தாழ்ந்தோரிடம்
சினம் கொள்ளாதிருப்பதே உயர்வு
302. செல்லா
இடத்துச் சினந்தீது செல்லிடத்தும்
இல்லதனின்
தீய பிற
வலியவரிடமோ எளியவரிடமோ
கோபம் கொள்ளுதல் என்றும் தீமையையே பலனாய் உருவாக்கும்
303. மறத்தல்
வெகுளியை யார்மாட்டுந் தீய
பிறத்தல்
அதனான் வரும்
தீமை விளையக் காரணமே
கோபம்தான் எனவே யாரிடமும் கோபம் கொள்ளாதிருப்பது மிக நல்லது
304. நகையும்
உவகையுங் கொல்லுஞ் சினத்தின்
பகையும் உளவோ
பிற
முக மலர்ச்சி, மன மகிழ்ச்சி
இரண்டையும் கொல்லும் சினத்தைவிட மனிதனின் பெரிய பகை ஏது
305. தன்னைத்தான்
காக்கின் சினங்காக்க காவாக்கால் தன்னையே கொல்லுஞ் சினம்
கொண்டவரையே அழிக்கும்
சினத்தைக் கொள்ளாமல் ஒழிப்பதே சிறந்த தற்காப்பு
306. சினமென்னுஞ்
சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
ஏமப் புணையைச்
சுடும்
கொண்டவரை மட்டுமல்லாது
கூடத் துணையிருப்போரையும் கொல்லும் நெருப்பு சினம்
307. சினத்தைப்
பொருளென்று கொண்டவன் கேடு நிலத்தறைந்தான் கைபிழையா தற்று
தரையை அறைந்த கையே வலிப்பதுபோல்,
சினம், கொண்டவனையே வலியுறச் செய்யும்
308. இணரெரி
தோய்வன்ன இன்னா செயினும்
புணரின் வெகுளாமை
நன்று
தீயால் சுடுவதுபோல் தீமை
செய்தவர் மீதும் பகைமை கொண்டு சினம் கொள்ளாத் தன்மை நன்று
309. உள்ளிய
தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால்
உள்ளான் வெகுளி
யெனின்
உள்ளத்தாலும் சினம் கொள்ளாதவனுக்கு
நினைத்தவை யாவும் தடையின்றி நிறைவேறும்
310. இறந்தார்
இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார்
துறந்தார் துணை
அடங்கா சினம் கொண்டோர்
இறந்தவருக்கும் கோபத்தைத் துறந்தவர் துறவிக்கும் நிகர்
32. இன்னா செய்யாமை
311. சிறப்பீனுஞ்
செல்வம் பெரினும் பிறர்க்கின்னா
செய்யாமை
மாசற்றார் கோள்
பெரும்செல்வம் கிட்டினாலும்
பிறருக்குத் தீமை செய்யாமை தூயவர் கொள்கை
312. கறுத்தின்னா
செய்தவக் கண்ணும் மறுத்தின்னா
செய்யாமை
மாசற்றார் கோள்
கோபத்தில் ஒருவன் தீங்கு
செய்தாலும் தூயவர் பதிலுக்குத் தீமை செய்யார்
313. செய்யாமற்
சென்றார்க்கும் இன்னாத செய்தபின்
உய்யா விழுமந்
தரும்
விலகியிருப்போருக்கும்
தீமை செய்வோருக்கு வரும் துயரம் தாளமுடியாதிருக்கும்
314. இன்னாசெய்
தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயஞ் செய்து
விடல்
தீமை செய்தோரை தண்டிக்க
சிறந்த வழி அவர் வெட்கும்படி அவருக்கு நன்மை செய்து விலகுதலே
315. அறிவினான்
ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போற்
போற்றாக் கடை
பிற உயிர்களின் துன்பத்தைத்
தனதுபோல் எண்ணிக் காக்காதவர் அறிவால் என்ன பலன்?
316. இன்னா
எனத்தா னுணர்ந்தவை துன்னாமை
வேண்டும்
பிறன்கட் செயல்
துன்பமெனத் தான் அனுபவித்து
உணர்ந்தவற்றை பிறருக்கு செய்யாதிருத்தல் வேண்டும்
317. எனைத்தானும்
எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம் மாணாசெய் யாமை தலை
எப்போதும் எவருக்கும்
சிறிதளவும் மனதாலும் தீமைசெய்ய எண்ணாததே உயர் பண்பு
318. தன்னுயிர்க் கின்னாமை தானறிவான்
என்கொலோ மன்னுயிர்க் கின்னா செயல்
துன்பத்தை தாம் அனுபவித்து
உணர்ந்தவர் அதைப் பிறருக்கு செய்யமாட்டார்கள்
319. பிறர்க்கின்னா
முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல்
தாமே வரும்
பிறருக்கு மனமறிந்து
செய்யும் தீமை உடனே பல மடங்காக திரும்பத் தேடி வரும்
320. நோயெல்லா
நோய்செய்தார் மேலவா நோய்செய்யார் நோயின்மை வேண்டு பவர்
தீமை செய்வோருக்குத்
தீமையே வருமாதலால் நன்மை வேண்டுவோர் தீமை செய்யமாட்டார்
33. கொல்லாமை
321. அறவினை
யாதெனின் கொல்லாமை கோறல்
பிறவினை எல்லாந்
தரும்
பிற உயிரைக் கொல்லாமை
மிக உயரிய அறம். உயிர்க்கொலை தீயவை அனைத்தையும் கொண்டு தரும்
322. பகுத்துண்டு
பல்லுயி ரோம்புதல் நூலோர்
தொகுத்தவற்று
ளெல்லாந் தலை
இருப்பதைப் பகிர்ந்துண்டு
உயிர்களைக் காத்து வாழ்தல் தலைசிறந்த அறமாகும்
323. ஒன்றாக
நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப்
பொய்யாமை நன்று
மிக உயரிய அறம் என்பது
உயிர்க்கொலை செய்யாமை. அதற்கு அடுத்த நிலை பொய் சொல்லாமை.
324. நல்லா
றெனப்படுவ தியாதெனின் யாதொன்றுங் கொல்லாமை சூழும் நெறி
எந்த உயிரையும் கொலை
செய்யாத நெறியைப் பின்பற்றுவதே வாழ்வின் மிக உயரிய அறம்
325. நிலையஞ்சி
நீத்தாரு ளெல்லாங் கொலையஞ்சிக் கொல்லாமை சூழ்வான் தலை
உலகை வெறுத்துத் துறவு
பூண்டோரைவிட உயிர்க்கொலை மறுத்து வாழ்வோர் உயர்ந்தோர்
326. கொல்லாமை
மேற்கொண் டொழுகுவான் வாழ்நாள்மேல் செல்லா துயிருண்ணுங் கூற்று
உயிர்க்கொலை செய்தல்
தவிர்த்து வாழ்வோர் உயிரை பறிக்க மரணமே அஞ்சும்
327. தன்னுயிர்
நீப்பினுஞ் செய்யற்க தான்பிறி
தின்னுயிர்
நீக்கும் வினை
தன் உயிர் போவதாயிருப்பினும்
அதைத் தடுக்க வேறு உயிரைக் கொல்லாமை உயர்வு
328. நன்றாகும்
ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக் கொன்றாகும் ஆக்கங் கடை
ஒரு உயிர்க்கொலையால்
பெரியநன்மை வரினும் சான்றோர் அதை இழிவென மறுப்பர்
329. கொலைவினைய
ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா
ரகத்து
கொலைத்தொழிலோர் அதன்
தீமையை அறியாராயினும் சான்றோர் அவரைத் தாழ்வாகவே நினைப்பர்
330. உயிருடம்பின்
நீக்கியா ரென்ப செயிருடம்பின்
செல்லாத்தீ
வாழ்க்கை யவர்
முன்பு பல கொலைகளைச்
செய்தோர், வறுமை, நோயில் வாடுவர் என்பர் சான்றோர்
34. நிலையாமை
331. நில்லாத
வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை
கடை
இவ்வுலகில் நிலையற்றவற்றை
நிரந்தரம் என்று நினைத்து உழலும் அறிவின்மை மிகக் கீழானது
332. கூத்தாட்
டவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்
போக்கும்
அருவிளிந் தற்று
சிறுகசிறுக சேரும் கூட்டம்
கூத்து முடிய கலைவதுபோல் செல்வமும் நீங்கும்
333. அற்கா
இயல்பிற்றுச் செல்வம் அதுபெற்றால்
அற்குப ஆங்கே
செயல்
செல்வத்தின் நிலையாமை
உணர்ந்து அதை வைத்து என்றும் நிலையான நன்மை செய்வது நன்று
334. நாளென
ஒன்றுபோற் காட்டி உயிரீரும்
வாள துணர்வார்ப்
பெறின்
ஒவ்வொரு நாளும் மீதி
ஆயுளை அறுத்துக் குறைக்கும் கத்தி போல் என்பதை அறிஞர் அறிவர்
335. நாச்செற்று
விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று
செய்யாப் படும்
வாழ்வின் நிலையாமை உணர்ந்து
நல்லவற்றை மிக விரைந்து செய்ய வேண்டும்
336. நெருந
லுளனொருவன் இன்றில்லை என்னும்
பெருமை யுடைத்திவ்
வுலகு
நேற்று வாழ்ந்தவன் இன்றில்லா
நிலையிலும் நில்லாது இயங்குவது இவ்வுலகின் பெருமை
337. ஒருபொழுதும்
வாழ்வ தறியார் கருதுப
கோடியு மல்ல
பல
ஒருமுறைகூட வாழ்வின்
நிலையற்ற தன்மையைப்பற்றி சிந்திக்காதோர் கோடி ஆசைகளை மனதில் கொள்வர்
338. குடம்பை
தனித்தொழியப் புள்பறந் தற்றே
உடம்போ டுயிரிடை
நட்பு
உடம்புக்கும் உயிருக்குமான
உறவு பறவைக்கும் அது இருந்த முட்டைக்குமானதைப் போல்
339. உறங்குவது
போலுஞ் சாக்கா டுறங்கி
விழிப்பது
போலும் பிறப்பு
உறங்கி விழிப்பதுபோல
பிறப்பும் உறங்கிப்போவதுபோல் இறப்புமாய் நிலையிலாதது வாழ்வு
340. புக்கி லமைந்தின்று கொல்லோ
உடம்பினுள்
துச்சி லிருந்த உயிர்க்கு
உடம்பினுள் ஒளிந்திருக்கும்
உயிருக்கு உடலை விட்டால் வேறு புகலிடம் இல்லை
35. துறவு
341. யாதனின்
யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின்
அலன்
ஒருவன் எதன்மீது ஆசையைத்
துறந்து விலகுகிறானோ அதனால் அவனுக்கு மீண்டும் தொல்லை வராது
342. வேண்டினுண்
டாகத் துறக்க துறந்தபின்
ஈண்டியற்
பால பல
பற்றற்று உலகின் சிற்றின்பம்
அனைத்தையும் துறந்தவர் பெறும் இன்பங்கள் ஈடு இணை அற்றவை
343. அடல்வேண்டும்
ஐந்தன் புலத்தை விடல்வேண்டும்
வேண்டிய வெல்லாம்
ஒருங்கு
ஐம்புலன் அடக்கி அவை
விரும்புவது யாவும் விட்டொழித்தலே உண்மைத் துறவு
344. இயல்பாகும்
நோன்பிற்கொன் றின்மை உடைமை
மயலாகும்
மற்றும் பெயர்த்து
உடைமைகளே அற்றிருப்பதுதான்
துறவு. உடைமை மேலும் ஆசை எனும் மயக்கம் தரும்
345. மற்றுந்
தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்கல்
உற்றார்க்
குடம்பும் மிகை
துறவறம் பூண்டோருக்கு
உடம்பே சுமை. பிறகு வேறு பொருள் மீது பற்றெதற்கு
346. யானென
தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்
குயர்ந்த
உலகம் புகும்
தான், தனது என்ற பற்றைத்
துறந்தவன் தேவர்களுக்கும் எட்டாத உயர்வை அடைவான்
347. பற்றி
விடாஅ இடும்பைகள் பற்றினைப்
பற்றி விடாஅ
தவர்க்கு
ஆசைகளை விட மனமின்றிச்
சுமப்பவனை எந்நாளும் துன்பங்களும் விடாமல் பற்றிக்கொள்ளும்
348. தலைப்பட்டார்
தீரத் துறந்தார் மயங்கி
வலைப்பட்டார்
மற்றை யவர்
ஆசையை முற்றும் துறந்தவரே
உயர்ந்த துறவி மற்றோர் அறியாமை வலையில் அகப்பட்டோர்
349. பற்றற்ற
கண்ணே பிறப்பறுக்கும் மற்று
நிலையாமை
காணப் படும்
ஆசைகளை முழுமையாய் விட்டபின்பே
பிறவிச்சங்கிலி அறும் அன்றேல் அது மேலும் தொடரும்
350. பற்றுக
பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று
விடற்கு
ஆசைகள் அற்ற துறவின்
மீது கொள்ளும் ஆசையே உலக ஆசைகளிலிருந்து நம்மைக் காக்கும்
36. மெய்யுணர்தல்
351. பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
மருளானாம் மாணாப் பிறப்பு
பொய்யானதை உண்மை என மனமாற நம்புவோருக்கு துயர்மிகு வாழ்வே இறுதியில் கிட்டும்
352. இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு
குழப்பம் விலக்கி உண்மையை உணர்வோருக்கு அறியாமை நீங்கி இன்பநிலை கைகூடும்
353. ஐயத்தின் நீங்கித் தெளிந்தார்க்கு வையத்தின்
வான நணிய துடைத்து
சந்தேகம் நீங்கித் தெளிந்த நல்ல அறிவுடையோருக்கு பூமியோடு வானமும் வசப்படும்
354. ஐயுணர் வெய்தியக் கண்ணும் பயமின்றே
மெய்யுணர் வில்லா தவர்க்கு
உண்மையை ஆராய்ந்து உணரமுடியாதோர் பெற்ற புலனடக்கதால் எந்த ஒரு பயனும் இல்லை
355. எப்பொரு ளெத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு
வெளித்தோற்றத்தை வைத்து மதிப்பிடாமல் உள்ளுரையும் உண்மையை உணர்வதே அறிவு
356. கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர்
மற்றீண்டு வாரா நெறி
மெய்ப்பொருளைக் கற்று உணர்ந்தோர் மீண்டும் ஆசைப் பொறியில் அகப்படமாட்டார்
357. ஓர்த்துள்ளம் உள்ள துணரின் ஒருதலையாப்
பேர்த்துள்ள வேண்டா பிறப்பு
உண்மையை ஆராய்ந்து உணர்ந்தோர் இன்னொரு பிறப்பு உள்ளதென்று எண்ணமாட்டார்
358. பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னுஞ்
செம்பொருள் காண்ப தறிவு
பிறவித்துன்பம் நீங்க அறியாமை இருள் அகற்றி மெய்ப்பொருள் காண்பது அறிவு
359. சார்புணர்ந்து சார்பு கெடவொழுகின் மற்றழித்துச்
சார்தரா சார்தரு நோய்
துன்பத்திற்கு காரணமானவை மீதான பற்றை விலக்கினால் துன்பம் நமை சேராது
360. காமம் வெகுளி மயக்கம் இவைமூன்றன்
நாமங் கெடக்கெடு நோய்
விருப்பு வெறுப்பு அறியாமை இம்மூன்றுக்கும் இடம் தராதவனை துன்பம் நெருங்காது விலகும்
37. அவா அறுத்தல்
361. அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந்
தவாஅப் பிறப்பீனும் வித்து
எல்லா உயிருக்கும் எந்தப் பருவத்தும் தோன்றி வளரும் துன்பத்தின் விதை ஆசை
362. வேண்டுங்கால் வேண்டும் பிறவாமை மற்றது
வேண்டாமை வேண்ட வரும்
மீண்டும் பிறவா வரம் வேண்டுமெனில் பற்றற்ற வாழ்வு நெறியை
கடைப்பிடிக்க வேண்டும்
363. வேண்டாமை யன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை
ஆண்டும் அஃதொப்ப தில்
ஆசைகளற்று இருப்பதைவிட சிறந்த செல்வம் பூமியில் மட்டுமன்றி
வேறு எங்குமே இல்லை
364. தூஉய்மை என்ப தவாவின்மை மற்றது
வாஅய்மை வேண்ட வரும்
தூய்மை என்பது பேராசை அற்ற நிலை. அது வாய்மையே வழியென
நாடுவோருக்கு மட்டுமே வாய்க்கும்
365. அற்றவ ரென்பார் அவாவற்றார் மற்றையார்
அற்றாக அற்ற திலர்
ஆசைகள் அனைத்தையும் விட்டோரே துறவி. பற்றை முற்றும்
துறக்காத துறவிகள் அரைகுறைகளே
366. அஞ்சுவ தோறும் அரணே ஒருவனை
வஞ்சிப்ப தோரும் அவா
மனிதனை ஏமாற்றி வீணில் கெடுப்பது ஆசையே. எனவே ஆசைக்கு
அஞ்சி அடிமையாகாது வாழ்வதே நல்லறம்
367. அவாவினை ஆற்ற அறுப்பின் தவாவினை
தான்வேண்டு மாற்றான் வரும்
பேராசையை அறவே ஒழித்தவன் வாழ்வு தான் விரும்பியபடி இனிமையாய்
மாற வழி பிறக்கும்
368. அவாவில்லார்க் கில்லாகுந் துன்பமஃ துண்டேல்
தவாஅது மேன்மேல் வரும்
பேராசை அற்றோரை துன்பம் அணுகாது. பேராசை உளோரை மேன்மேலும்
துன்பம் தொடரும்
369. இன்பம் இடையறா தீண்டும் அவாவென்னுந்
துன்பத்துள் துன்பங் கெடின்
துன்பம் தரக்கூடிய பேராசையை விட்டொழித்தால் தடையில்லா
இன்பம் வாய்க்கும்
370. ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும்
என்றும் தீரா இயல்பான ஆசையை நீக்கி வாழும் நிலையே தடையில்லா
இன்பம் இயல்பாய்த் தரும்
38. ஊழ்
371. ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள்
போகூழால் தோன்று மடி
பொருள் சேரும் காலத்து சோர்விலா ஊக்கமும் அழியும் காலத்து
சோம்பலும் ஏற்படும்
372. பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூ ழுற்றக் கடை
தாழ்வு வரும் காலத்தில் அறிவு மங்கும் உயர்வு வரும்போது
அறிவு சுடர்விட்டு ஒளிரும்
373. நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன்
உண்மை யறிவே மிகும்
நல்லறிவு தரும் நூல் பல கற்றாலும் தாழ்வு வரும் காலத்து
அறிவு இயல்பாய் மழுங்கும்
374. இருவே றுலகத் தியற்கை திருவேறு
தெள்ளிய ராதலும் வேறு
இயற்கை நியதி ஒருவரை செல்வந்தராகவோ அன்றி அறிஞராகவோ
வார்த்தெடுக்கும் அறிவைத் தரும்
375. நல்லவை யெல்லாஅந்
தீயவாந் தீயவும்
நல்லவாஞ் செல்வஞ் செயற்கு
செல்வம் தேடுகையில் சூழல் நன்றாயின் நன்மையையும், அன்றேல்
தீமையும் விளையும்
376. பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம
நமதில்லாதது எப்படியும் விட்டுவிலகும் நமதாயின் என்றுமே
நம்மோடு நிலைத்து நிற்கும்
377. வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
தொகுத்தார்க்குந் துய்த்த லரிது
முறையற்று வாழின் கோடிப்பொருள் சேர்த்தாலும் அனுபவிக்க
முடியாது அழியும்
378. துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால
ஊட்டா கழியு மெனின்
துன்பங்களை அனுபவித்து வெல்லும் உறுதியே பொருள் இல்லாதோரை
துறவு பூணாது காக்கும்
379. நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால்
அல்லற் படுவ தெவன்
நன்மை வருகையில் மகிழ்ந்து கொண்டாடுவதும் தீமை வருகையில்
கலங்குவதும் ஏன்?
380. ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று